Latest Updates
-
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
5 மாத கருவை வெளியே எடுத்து அறுவை சிகிச்சை செய்தபின் மீண்டும் தாயின் வயிற்றுக்குள் வைத்த மருத்துவர்கள
5 மாத கருவை வெளியே எடுத்து அறுவை சிகிச்சை செய்தபின் மீண்டும் தாயின் வயிற்றுக்குள் வைத்த மருத்துவர்கள் செய்த சாதனையைப் பற்றி தான் இங்கே விரிவாக விளக்கப் போகிறோம். அது பற்றிய ஒரு விரிவான தொகுப்பு தான் இ
அறிவியலில் தினம் ஒரு அதிசயம் நடந்தபடி உள்ளது. இந்த நிலையில் பிறக்காத குழந்தைக்கு அறுவை சிகிச்சை நடந்ததை உங்களால் நம்ப முடியுமா? ஆம், தாயின் கருவில் இருந்து குழந்தையை வெளியில் எடுத்து அதற்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இதனை நமது பாஷையில் சொல்லப் போனால் "இது ஒரு மெடிகல் மிராக்கில்" ஆகும்.

இதன் வெற்றிக்கு பிறகு, மருத்துவ வரலாற்றில் இந்த வழக்கு ஒரு முக்கிய நிகழ்வாக கருதப்படுகிறது. அறிவியலும் தொழில் நுட்பமும் எந்த அளவிற்கு வளர்ச்சி கண்டுள்ளது என்பதைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள இந்த பதிவைத் தொடர்ந்து படியுங்கள்.

பிறப்புக் குறைபாடு
26 வயது பெண்மணி ஒருவர் கருவுற்றிருந்தார். அந்த சந்தோஷத்தை முழுமையாக அனுபவிப்பதற்குள் அவருக்கு ஒரு துயரமான செய்தி காத்திருந்தது. அதவது கருவில் உள்ள குழந்தைக்கு ஸ்பைனா பிஃபிடா என்னும் பாதிப்பு இருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்தனர். ஸ்பைனா பிஃபிடா என்பது முதுகு தண்டுவடத்தை சுற்றியுள்ள முதுகெலும்பு மற்றும் சவ்வுகளின் முழுமை பெறாத ஒரு பிறப்புக் குறைபாடாகும்.

என்ன பிரச்சினை?
20 வாரங்களில் செய்யக் கூடிய வழக்கமான ஸகேனில் கருவில் உள்ள குழந்தையின் தலை சரியான அளவில் இல்லாமல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் ஸ்பைனா பிஃபிடா பாதிப்பின் காரணமாக, குழந்தை நடப்பதில் பாதிப்பு ஏற்படலாம் என்பதும் கண்டறியப்பட்டது. இதனால் மருத்துவர்கள், இந்த தம்பதிக்கு கருக்கலைப்பை பரிந்துரைத்தனர்.

கருப்பை அறுவை சிகிச்சை பரிந்துரை
கருக்கலைப்பை பெற்றோர் ஏற்றுக் கொள்ளாத நிலையில், மருத்துவர்கள் கருப்பை அறுவை சிகிச்சை என்னும் புதிய சிகிச்சையைப் பற்றி கூறினர். இந்த வகை சிகிச்சையில் குழந்தை பிறப்பதற்கு முன்னரே, குழந்தையின் பிரச்னையை சரி செய்வது என்று கூறினார். அதாவது, குழந்தையை தாயின் கருப்பையில் இருந்து வெளியில் எடுத்து, அந்த குழந்தையின் முதுகுத்தண்டு பிரச்னையை சரி செய்து, மீண்டு தாயின் கருவில் வைப்பது தான் இந்த சிகிச்சை. இந்த சிகிச்சை மூலம் குழந்தை சாராசரி வாழ்க்கையை வாழ இயலும்.

குழந்தை மறுபடி கருவில் சேர்ப்பு
தாயின் கர்ப்ப காலம் முடிய எதுவாக, அறுவை சிகிச்சைக்கு பின்னர், குழந்தை மீண்டும் தாயின் கருப்பைக்குள் வைக்கப்படும். இந்த அறுவை சிகிச்சை வெற்றி அடைந்ததை முன்னிட்டு, மருத்துவர்கள், இந்த வகை அறுவை சிகிச்சையை பரிந்துரைக்கின்றனர். பொதுவாக இது போன்ற பிறப்புக் குறைபாடுகள் கண்டறியப்படும்போது , 80% பேருக்கு கருக்கலைப்பு பரிந்துரைக்கப்படுகிறது. இதற்கு மாற்றாக, மேலே கூறிய சிகிச்சையை மேற்கொள்வதால் குழந்தைக்கு பாதிப்பு ஏற்படாது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். இந்த பதிவு பற்றி உங்கள் கருத்துகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.



Click it and Unblock the Notifications