Just In
- 16 min ago
காரமான... பெப்பர் மட்டன் வறுவல்
- 46 min ago
இந்த ராசிக்காரங்க துரோகம் செய்ய கொஞ்சம்கூட தயங்க மாட்டாங்களாம்... உஷாரா இருங்க இவங்ககிட்ட...!
- 2 hrs ago
கொத்து கொத்தா முடி கொட்டுதா? அதை தடுக்க இந்த வழிகளை ட்ரை பண்ணுங்க...
- 3 hrs ago
வலது பக்க வயிறு வலிக்குதா? என்ன பிரச்சனை இருந்தா அங்க வலிக்கும் தெரியுமா?
Don't Miss
- News
ராணுவ ரகசியத்தையெல்லாம் சர்வ சாதாரணமாக விவாதித்த அர்னாப்.. அதிர வைக்கும் மோசடி.. பயங்கர ஆதாரம்!
- Automobiles
பெங்களூர் கொண்டு வரப்பட்டார் சி.எஸ்.சந்தோஷ்... உடல்நிலையில் லேசான முன்னேற்றம்!
- Finance
முகேஷ் அம்பானி சம்பந்திக்கு அடித்த ஜாக்பாட்.. DHFL-ஐ கைப்பற்றும் பிராமல் குரூப் ரூ.37,250 கோடி டீல்!
- Movies
ரத்தப் புற்றுநோய்.. சிகிச்சைப் பெற்று வந்த அறிமுக ஹீரோ.. பட ரிலீசுக்கு முன்பே உயிரிழந்த பரிதாபம்!
- Sports
என்ன இது? இதற்கு மன்னிப்பே இல்லை.. சீனியர் வீரர் மாதிரியா நடந்துக்குறீங்க.. வசமாக சிக்கிய ரோஹித்!
- Education
உள்ளூரிலேயே தமிழக அரசு வேலை ரெடி! விண்ணப்பிக்கலாம் வாங்க!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஜூலை மாதத்தில் பிறந்தவர்கள் உண்மையில் எப்படிப்பட்டவர்கள் தெரியுமா?
ஜூலை மாதத்தில் பிறந்தவர்களுக்கென சில தனிப்பட்ட குணங்கள் உள்ளது, இவை உங்களுக்கு மிகவும் சுவாரஸ்யமானதாக இருக்கும். அதேசமயம் இவர்களின் சில குணங்கள் வேடிக்கையானதாகவும் இருக்கும். வாழ்க்கை மீதான அவர்களின் அணுகுமுறை எப்பொழுதும் அன்பை அடிப்படையாக கொண்டிருக்கும்.
மற்றவர்களை எப்படி நடத்த வேண்டும், எப்படி மதிப்பிட வேண்டும் என்று இவர்கள் நன்கு அறிவார்கள். மனிதனாக பிறந்த அனைவரிடமும் நல்ல குணங்களும், கெட்ட குணங்களும் கலந்துதான் இருக்கும். இந்த பதிவில் ஜூலை மாதத்தில் பிறந்தவர்களின் நல்ல குணங்கள் மற்றும் கெட்ட குணங்கள் என்னென்ன என்று பார்க்கலாம்.

திட்டமிடக்கூடியவர்கள்
ஜூலை மாதத்தில் பிறந்தவர்கள் கடின உழைப்புக்கு ஒருபோதும் அஞ்சமாட்டார்கள். கடின உழைப்பாளியாக இருந்தாலும் திட்டமிடுவதில் இவர்கள் சிறந்து விளங்குவார்கள். செய்ய வேண்டிய அனைத்து காரியங்களையும் திட்டமிட்டே இவர்கள் செய்வார்கள். இவர்கள் எதையும் சொன்ன நேரத்தில் செய்து முடிக்க கூடியவர்கள் அதனால் எப்பொழுதும் பாராட்டை பெறுபவர்களாக இருப்பார்கள். மற்றவர்களுக்கு ஒரு முன்மாதிரியாய் இவர்கள் இருப்பார்கள்.

மனநிலை மாற்றங்கள்
ஜூலை மாதத்தில் பிறந்தவர்கள் அதிகப்படியான உணர்ச்சிகரமான அத்தியாயங்களைக் கொண்டிருக்கிறார்கள், இதை நாம் மனநிலை மாற்றங்கள் என்றும் அழைக்கலாம். இவர்கள் மிகவும் தனிப்பட்ட நபராக இருப்பவர்கள், நெருக்கமானவர்களுக்கு கூட தங்கள் மனதில் இருப்பதை இவர்கள் வெளிப்படையாக கூறமாட்டார்கள். இதனால் மற்றவர்களுக்கு இவர்களிடம் நெருங்குவதோ அல்லது இவர்களை புரிந்து கொள்வதோ மிகவும் கடினமானதாக இருக்கும்.

பரிபூரணவாதிகள்
இவர்கள் கடின உழைப்பாளிகளாக இருப்பதால் தான் செய்யும் அனைத்து வேலையும் நூறு சதவீதம் சரியானதாக இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள். தான் செய்யும் அனைத்துமே சிறந்ததாக இருக்க வேண்டும் என்று விரும்பும் இவர்களின் குணம் சிலசமயம் ஆச்சரியத்தையும், சிலசமயம் எரிச்சலையும் ஏற்படுத்தும்.

எதிர்காலத்தை பற்றி சிந்திப்பவர்கள்
அனைத்தையும் திட்டமிட்டு செய்யக்கூடிய இவர்கள் தன்னுடைய எதிர்காலத்தை பற்றியும், தன்னுடைய குடும்பத்தின் எதிர்காலம் பற்றியும் எப்போதும் சிந்திக்க கூடியவர்களாக இருப்பார்கள். அவர்களுக்கு பிடித்தவர்களுக்கு மகிழ்ச்சியான மற்றும் அமைதியான வாழ்க்கையை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்று நினைப்பார்கள். இவர்கள் ரிஸ்க் எடுக்க தயங்கினாலும் வாழ்க்கையின் ஒவ்வொரு அடியையும் எச்சரிக்கையாக எடுத்து வைப்பார்கள்.

குடும்பத்தை நேசிப்பவர்கள்
ஜூலை மாதத்தில் பிறந்தவர்கள் பெரும்பாலும் கடக ராசிக்காரர்களாக இருப்பார்கள். அதிக உணர்ச்சிவசப்படக்கூடிய இவர்கள் குடும்பத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். சிலசமயம் இவர்களின் அதீத அக்கறை தவறானதாக தெரிந்தாலும் அது இவர்களின் நல்ல குணங்களில் ஒன்றுதான். இவர்களுடன் இருக்கும்போது இவர்களின் குடும்பத்தினர் மிகவும் பாதுகாப்பாக உணருவார்கள்.

இரக்க குணம் கொண்டவர்கள்
ஜூலை மாதத்தில் பிறந்தவர்கள் அன்பானவர்களாகவும், அமைதியானவர்களாகவும் இருப்பார்கள். மேலும் அனைவரையும் புரிந்து கொள்பவர்களாக இருப்பார்கள். மற்றவர்களின் உணவர்வுகளுக்கு மதிப்பு கொடுக்கும் இவர்களின் குணம் இவர்களை அதிக இரக்கமுள்ளவர்களாக மாற்றும். நெருக்கமானவர்களின் உணர்வுகள் மட்டுமின்றி புதிய நபர்களின் உணர்வுகளை கூட இவர்களால் புரிந்து கொள்ள இயலும்.

தீவிரமானவர்கள்
ஜூலை மாதத்தில் பிறந்தவர்கள் தனக்கானவர்கள் என்று வரும்போது அதிக உணர்திறன் கொண்டவர்களாக இருப்பார்கள். அனைத்தையுமே இவர்கள் கொஞ்சம் தீவிரமாகவும், தனிப்பட்டரீதியாகவும் எடுத்துக்கொள்வார்கள். இதனால் இவர்களின் இதயம் எளிதில் நொறுங்கிவிடக்கூடம். மேலும் இவர்கள் அதிலிருந்து மீண்டு வர நீண்ட காலம் எடுத்துக்கொள்வார்கள். இவர்கள் காயப்படுத்தியவர்களை மன்னித்தாலும் அதனை ஆயுள் முழுவதும் மறக்கமாட்டார்கள்.