Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
83 வயதில் காதலியுடன் ரொமான்ஸ் பண்ணும் பெருசு... காதலிக்கு 55000 புது டிரஸ் பரிசா கொடுத்திருக்காரு
ஒரு ஆடை கூட ஒரே மாதிரி இல்லாமல் விதவிதமான 55000 ஆடைகளை தன்னுடைய காதலிக்காக பரிசாக் கொடுத்திருக்கும் ஜெர்மனிய முதியவர் பற்றித் தான் பார்க்கப் போகிறோம்.
பொதுவாக ஆண்கள் இளம் வயதில் ஒருவித வாலிப காதல் முருக்கிலும் காதலி மேல் இருக்கிற மோகத்தாலும் உனக்காக நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன், உயிரையும் கொடுப்பேன் என்றெல்லாம் டயலாக் பேசுவதைக் கேட்டிருப்போம்.
ஆனால் அதுவே திருமணமாகி சில வருடங்கள் கடந்த பின் அதே மனைவி இம்சையாகத் தெரிவாள். ஆனால் தன்னுடைய 83 வயதில் பயங்கர ரொமாண்டிக்காக காதலியுடன் என்ஜாய் பண்ண முடியுமா. அப்படி காதலிக்காக 55000 புது டிரஸ் வாங்கி பரிசாகக் கொடுத்திருக்கிறார் ஒரு முதியவர்.
இது கற்பனைக் கதையெல்லாம் இல்லைங்க. உண்மையாக நடந்த கதை.அதுவும் சமீபத்தில் தான். எங்கே, எப்போ, யாரு அந்த பெருசு என்றெல்லாம் தெரிந்து கொள்ள ஆசையா? ஆண்கள் கொஞ்சம் கடுப்பாகவும் பெண்கள் கொஞ்சம் ஆர்வத்தோடும் இதைப் படிப்பீர்கள் என்று தெரியும். எப்படியோ படிச்சு அன்பை தெரிஞ்சிக்கிட்டா சரி.

எங்கே நடந்தது
83 வயதில் ஒரு டிரஸ் கூட ஒரே மாதிரி இல்லாமல் வகை வகையாக வெரைட்டி வெரைட்டியாக நம்ம ஊர் ஆம்பிள மனைவிக்கு டிரஸ் வாங்கிக் கொடுத்தான் சொன்னா இந்த உலகம் நம்புமா? நிச்சயமாக இது நம்ம ஊர்ல நடக்கலங்க. இது ஜெர்மனியில் நடந்திருக்கும்.

யார் அந்த பெருசு
ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த 83 வயது முதியவர் அவர். இவருடைய பெயர் பால் பிராக்மேன். இவர் தன்னுடைய காதல் மனைவி ஒரு ஆடையை இரண்டு முறைக்கு மேல் அணியவே கூடாது என்று தீவிர முடிவை எடுத்தார். அதற்காக பணம் சேமித்து 55000 புதிய ஆடைகளை வாங்கிக் கொடுத்துள்ளார். அனைத்தும் விலையுயர்ந்த ஆடைகள். அனைத்தும் பொட்டிக் ஷோரூமில் டிசைன் செய்யப்பட்டவை.

எங்கே வைத்திருக்கிறார்கள்?
எவ்வளவு பெரிய வீடாக இருந்தாலும் 55000 டிசைனர் ஆடைகளை எப்படி மூமில் அடுக்கி வைத்துக் கொள்ள முடியும். வீட்டில் அவ்வளவு இடமும் இல்லை. அதனால் அவருக்கு ஒரு யோசனை தோன்றியது. தன்னுடைய வீட்டுக்கு அருகிலேயே 50 அடி நீளம் கொண்ட கண்டெய்னர் ஒன்றை வாங்கி நிற்க வைத்து அதற்குள் இவ்வளவு டிரஸ்களையும் அடுக்கி வைத்திருக்கிறார்கள்.

எப்படி மலர்ந்த காதல் தெரியுமா?
ஜெர்மனியின் அரிசோனா பகுதியில் தான் இருவரும் வசித்து வந்தனர். இவர்கள் இருவரும் ஜெர்மனியில் ஒரு நடன அரங்கில் நிகழ்ச்சி ஒன்றில் பார்வையிட கலந்து கொண்டனர். அந்த பார்ட்டியில் இரவு முழுவதும் இருவரும் நடனம் ஆடிக் கொண்டிருந்திருக்கிறார்கள். அதனால் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்திருக்கிறது. இருவரும் திருமணம் நடந்து 61 ஆண்டுகளாக கணவன் மனைவிகளாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

பிரபல ஸ்டோர்
இவர் தொடர்ந்து கவுன்களை மனைவிக்காக வாங்குவதை கவனித்து வந்த ஒரு துணிக்கடை உரிமையாளர் இவருக்காக கௌன்கள் டிசைன் செயது கொடுத்து தன்னுடைய பிசினஸை பெருக்கிக் கொண்டுள்ளார்.

மறு விற்பனை
55000 ஆடைகள் வாங்கிக் குவித்த மிஸ்டர் பால் வைக்க இடம் இல்லாததால் கிட்டதட்ட 7000 கவுன்களை மறு விற்பனை செய்து விட்டார். தற்போது 48000 கவுன்கள் தங்கள் வீட்டு பிரமாண்ட அலமாரியில் இருப்பதாகவும் அதில் 200 கவுன்கள் மிகவும் ஸ்பெஷலாகவும் இருப்பதாக அவர் தெரிவித்தார்.



Click it and Unblock the Notifications
