Latest Updates
-
சௌசௌ வாங்குனா இப்படி கிரேவி செய்யுங்க, சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
எலிவால் மாதிரி இருக்கும் முடியை அடர்த்தியாக்கணுமா? அப்ப முட்டையை இப்படி யூஸ் பண்ணுங்க.. -
வாழும் நாஸ்ட்ராடமஸ் கணிப்பு படி 2026-ல் இந்த இடத்தில் ஆபத்தான போர் நடக்கப்போகுதாம் - எந்த நாடு போர் நடத்தப்போக -
சனி மங்கள யோகத்தால் செப்டம்பர் வரை இந்த 3 ராசிக்காரங்க பிரச்சனை மேல் பிரச்சனைய சந்திப்பாங்க.. உஷார்.. -
செட்டிநாடு கத்திரிக்காய் உருளை கோசுமல்லி ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டக்கரான சைடிஷா இருக்கும் -
முட்டைக்கோஸை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க.. -
இந்த 4 ராசிக்காரர்கள் ஒரே நேரத்தில் பல வேலைகளை சரியாக செய்யும் திறமைசாலிகளாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
எச்சரிக்கை! உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப அசால்ட்டா இருக்காதீங்க.. -
ஹிரோஷிமா-நாகசாகியில் வெடித்த அணுகுண்டில் எத்தனை பேர் இறந்தார்கள்? உயிர் பிழைத்தவர்கள் நிலை என்னவானது தெரியுமா? -
18 ஆண்டுகளுக்கு பின் சிம்ம ராசியில் இணையும் சூரியன்-கேது: இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது
தந்திரங்களின் சக்கரவர்த்தியான சாணக்கியர் வஞ்சகத்தால் எப்படி கொல்லப்பட்டார் தெரியுமா?
சந்திரகுப்தரை அரியணையில் அமரவைத்த சாணக்கியர் தன் அறிவாற்றல் மூலம் புகழை மட்டும் சேர்த்து கொள்ளவில்லை. மாறாக எண்ணற்ற எதிரிகளையும் சேர்த்து கொண்டார்.
பண்டைய இந்தியாவின் முக்கியமான அறிஞர்களில் ஒருவர் சாணக்கியர் ஆவார். பொருளாதாரம், அரசியல், தத்துவவியல் என பல துறைகளில் நிபுணத்துவம் பெற்ற சாணக்கியரின் சாதுர்யம்தான் மௌரிய பேரரசை நிறுவியது. மௌரிய பேரரசை நிறுவயதுடன் அதன் ராஜகுருவாக இருந்து அதன் வளர்ச்சிக்கும் உதவியாய் இருந்தார் சாணக்கியர்.

சந்திரகுப்தரை அரியணையில் அமரவைத்த சாணக்கியர் தன் அறிவாற்றல் மூலம் புகழை மட்டும் சேர்த்து கொள்ளவில்லை, மாறாக எண்ணற்ற எதிரிகளையும் சேர்த்து கொண்டார். சாணக்கியரின் மரணம் என்பது பல மர்மங்கள் நிறைந்த ஒன்றாகும். இந்த பதிவில் சாணக்கியர் எப்படி மரணமடைந்தார் என்றார் பார்க்கலாம்.

சாணக்கியரின் எதிரிகள்
சாணக்கியர் தன் நீண்ட வாழ்க்கை பயணத்தில் மௌரிய ராஜ்யத்திற்கு மட்டும் எதிரிகளை சம்பாதிக்கவில்லை தனக்கும் பல தனிப்பட்ட எதிரிகளை சம்பாதித்து இருக்கிறோம் என நன்கு அறிந்திருந்தார். மேலும் ராஜ்ஜியத்தில் மட்டுமின்றி தனக்கும் வெளிநாடுகளிலும் எதிரிகள் இருந்ததை அவர் நன்கு அறிவார்.

சரியான நேரத்திற்காக காத்திருந்தார்
தன்னுடைய எதிரிகள் தன் மரணத்திற்காக காத்திருக்கிறார்கள் என்று அவர் நன்கு அறிவார். ஆனால் தன்னுடைய மரணம் மௌரிய ராஜ்ஜியத்தின் மேல் ஆசை கொண்டிருக்கும் பலரின் மனதிலும் சந்தோஷ அலைகளை உண்டாக்கும் என உணர்ந்த சாணக்கியர் சரியான நேரத்தில் மரணத்தை எதிர்கொள்ள தயாராக இருந்தார். சாணக்கியரின் மரணத்தை பற்றிய ஆதாரங்கள் எதுவும் இல்லை. ஆனால் மௌரியர்களின் குறிப்புப்படி அவரின் மரணத்தை சுற்றிசில மர்மங்கள் இருக்கிறது.

முதல் மர்மம்
சாணக்கியர் சந்திரகுப்த மௌரியரின் ராஜகுருவாக மட்டும் இல்லாமல் அவரின் ஆரோக்கியத்தை கவனித்து கொள்பவராகவும் இருந்தார். சந்திரகுப்த மௌரியரின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க அவரின் உணவில் சிறிது விஷம் கலப்பதை அவர் வழக்கமாக கொண்டிருந்தார்.

சதித்திட்டங்கள்
மன்னருக்கு விஷம் வைத்து கொன்று விட்டு அவரின் மரணத்திற்கு பிறகு நாட்டின் மீது போர் தொடுப்பது அக்கால சதித்திட்டங்களில் ஒன்றாக இருந்தது. இதனை சாணக்கியர் நன்கு அறிந்திருந்தார், எனவே சந்திரகுப்தருக்கு விஷம் வைக்கும் வாய்ப்பை எதிரிகளுக்கு வழங்கக்கூடாது என்பதில் அவர் உறுதியாய் இருந்தார். உணவில் தொடர்ந்து விஷம் சேர்த்து கொண்டால் விஷத்தால் மரணம் ஏற்படாது என்பதற்காக அவரின் உணவில் மன்னருக்கே தெரியாமல் விஷம் கலப்பதை சாணக்கியர் செய்து வந்தார்.

விபரீதம்
ஒருநாள் சந்திரகுப்த மௌரியர் தன் உணவை கர்ப்பமாக இருந்த தன்னுடைய மனைவி துர்த்தாவிற்கு கொடுத்துவிட்டார். சந்திரகுபதர் வருவதற்குள் இந்த சம்பவம் நடந்து விட்டதால் மகாராணி உடனடியாக இறந்து விட்டார். ஏனெனில் அவருக்கு விஷத்தை தாங்கும் நோயெதிர்ப்பு சக்தி இல்லை.

பிந்துசாரனின் பிறப்பு
சாணக்கியர் கருவில் இருக்கும் குழந்தை இறப்பதை விரும்பவில்லை. மகாராணியின் உயிர் பிரிந்த பிறகு அவரின் வயிற்றை பிளந்து உள்ளேயிருந்த குழந்தையை எடுத்தார். மகாராணி உட்கொண்ட விஷத்தின் ஒருதுளி அந்த குழந்தையின் தலையில் விழுந்தது. அதனால் அந்த குழந்தைக்கு பிந்துசாரன் என்று பெயர் வைத்தார்.

பிந்துசாரன்
சந்திரகுப்தர் இறந்த பிறகு பிந்துசாரனை சாணக்கியர் வளர்த்து அரசனாக அவனை வழிநடத்தினார். பிந்துசாரனின் தாயின் இறப்பு பற்றி மற்றவர்கள் கூறி அவருக்கு தெரிவதற்கு பதில் தானே கூறிவிடலாம் என்று முடிவெடுத்த சாணக்கியர் உண்மையை பிந்துசாரனிடம் கூறினார்.

பிந்துசாரனின் வெறுப்பு
தன் தாயின் மரணத்திற்கு சாணக்யர்தான் காரணம் என்று நினைத்த பிந்துசாரன் அவர் மீது அளவற்ற கோபமும், வெறுப்பும் கொண்டான். பிந்துசாரனின் வெறுப்பால் மனமுடைந்த சாணக்கியர் அரண்மனையை விட்டு வெளியேறினார். தன் செல்வங்களை மக்களுக்கு அனைவர்க்கும் கொடுத்துவிட்டு ஒரு மரத்தின் கீழ் அமர்ந்து விட்டார். உணவும், நீரும் ஏற்க மறுத்த சாணக்கியர் சில தினங்களிலேயே இறந்து விட்டார்.

இரண்டாவது மர்மம்
புகப்பெற்ற ஜெயின் எழுத்தாளரான ஹேமச்சந்திரா தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ள படி சாணக்கியரின் மரணத்திற்கு காரணமாக இருந்தது பிந்துசாரனின் அமைச்சர்கள், சிற்றன்னை மற்றும் எதிரி நாட்டு மன்னன் ஆகியோரின் சதித்திட்டம்தான் என்று கூறுகிறார்.

மஹாமந்திரி சுபந்து
அவரின் கருத்துப்படி பிந்துசாரனின் அமைச்சர்களில் ஒருவரான மஹாமந்திரி சுபந்து சாணக்கியரை கொன்றுவிட்டு அவரின் ராஜகுரு பதவியை அடைய நினைத்தான். அதற்காக பிந்துசாரனின் சிற்றன்னை ஹலீனா மனதில் சாணக்கியர் பற்றிய வெறுப்பை வளர்க்க தொடங்கினான்.

வஞ்சகம்
ஒருமுறை பிந்துசாரன் சாணக்கியரின் செயலால் கோபமுற்றபோது அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சுபந்து பிந்துசாரனின் தாயின் மரண ரகசியத்தை அவரிடம் கூறிவிட்டான். மேலும் அது சாணக்கியர் திட்டமிட்டு செய்த செயல் என்று கூறினான். இதனை அரண்மனை வைத்தியர்கள் மூலம் உறுதி செய்துகொண்ட பிந்துசாரன் சாணக்கியரை அழைத்து அவரின் பதவி மற்றும் ராஜஅடையாளங்களை பறித்துவிட்டான். இதனால் மனமுடைந்து தனிமையில் சென்ற சாணக்கியரை ஹலீனாவும், சுபந்துவும் சேர்ந்து தீவைத்து கொன்றனர்.



Click it and Unblock the Notifications