Just In
- 55 min ago
நாம் அதிகம் விரும்பி சாப்பிடும் இந்த உணவுகளில் எவ்வளவு கலோரி இருக்குன்னு தெரியுமா?
- 5 hrs ago
இன்றைய ராசிப்பலன் (03.03.2021): இன்று இந்த ராசிக்காரர்கள் வார்த்தைகளை கவனமாக பயன்படுத்தவும்…
- 16 hrs ago
ஆரோக்கியத்திற்காக நீங்க சாப்பிடும் இந்த நட்ஸ் வகை உங்க உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்துமாம்...ஜாக்கிரதை!
- 17 hrs ago
இந்த மந்திர வார்த்தைகள் உங்கள் திருமண வாழ்க்கையை அழகாக்குவதோடு அர்த்தமுள்ளதாகவும் மாற்றும்...!
Don't Miss
- Automobiles
டெஸ்லா மின்சார கார்கள் சீனாவில் கிடைப்பதைவிட மிக குறைந்த விலையில் கிடைக்கும்... சொன்னது யார் தெரியுமா?
- Finance
480 புள்ளிகள் உயர்வில் சென்செக்ஸ்.. தடுமாற்றத்திலிருந்து வெளியேறிய மும்பை பங்குச்சந்தை..!
- News
ஏன் சரத்குமார் இப்படி சொல்றாரு.. "அணி" உருவாகிறதாம்.. ஆனால் 3வது அணி கிடையாதாம்.. குழம்பும் கட்சிகள்
- Movies
தேர்தலும் தமிழ் சினிமாவும்...அரசியல்வாதிகளை கவனிக்க வைத்த படங்கள்
- Sports
பயப்படாதீங்க... எதுக்கு பயப்படணும்... திறமையை நம்புங்க... அணி வீரர்களுக்கு ஜோ ரூட் ஆலோசனை
- Education
ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் தேசிய நல்வாழ்வு மற்றும் குடும்பநல நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
மரணத்திற்கு பிறகு எமலோகத்தை அடைவதற்குள் உங்கள் ஆன்மா என்னென்ன கொடுமைகளை அனுபவிக்கும் தெரியுமா?
பூமியில் ஒருவர் பிறக்கும் போதே அவர்களின் மரணம் என்பது தீர்மானிக்கப்பட்ட ஒன்றாகும். மரணத்தை தவிர்ப்பது என்பது எவராலும் முடியாத ஒரு காரியமாகும். மரணத்தின் கடவுளான எமதர்மரும் அவர்களின் எமதூதர்களும்தான் உங்களின் உயிரை பூமியில் இருந்து எமஉலகத்திற்கு அழைத்து செல்பவர்களாவர். மரணத்திற்கு பிறகு சொர்க்கம், நரகம் என இரண்டு உள்ளது என்பது அனைவருக்கும் இருக்கும் நம்பிக்கையாகும்.
பூமியில் வாழ்ந்த காலத்தில் நாம் செய்த பாவம் மற்றும் புண்ணியங்களை பொறுத்துதான் நமக்கு சொர்க்கமா அல்லது நரகமா என்பது எமதர்மனின் நீதிசபையில் தீர்மானிக்கப்படும். பூமியில் நீங்கள் இறந்த நேரத்தில் இருந்து எமதர்மனின் உலகத்திற்கு செல்லும்வரை உங்கள் ஆன்மா பல துன்பங்களையும், கொடுமைகளையும் அனுவபவிக்கும். அவ்வாறு எம உலகத்திற்கு செல்லும் முன் உங்கள் ஆன்ம அனுபவிக்கும் சித்திரவதைகள் என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

கருட புராணம்
கருட புராணம் என்பது நமது மரணத்தை முன்கூட்டியே அறியவும், மரணத்திற்கு பிறகு நமது ஆன்மாவின் நிலை என்னவாகும் என்பதையும், நமது பாவங்களுக்கு எமதர்மனின் நீதிசபையில் என்ன தண்டனை கிடைக்கும் என்பதையும் நமக்கு முன்கூட்டியே உணர்த்தும் ஒரு எச்சரிக்கை மணி ஆகும். நமது ஆன்மா பற்றிய அனைத்து தகவல்களும் இந்த புத்தகத்தில் உள்ளது. அதன்படி நம் இறந்தபிறகு நம் ஆன்மாவானது எம உலகத்தை அடைவதற்குள் என்னென்ன துயரங்கள் படும் என்றும் ஆன்மாவின் பயணம் எப்படி இருக்கும் என்பதை பற்றியும் இதில் தெளிவாக கூறப்பட்டுள்ளது.

திவ்யதிருஷ்டி
கருட புராணத்தின் படி மரணம் ஒருவரை நெருங்கிவிட்டால் அவர்களே விரும்பினாலும் அவர்களால் பேச இயலாது. மரணம் நேரப்போகும் சில நிமிடங்களுக்கு முன்னால் அவர்களுக்கு திவ்யதிருஷ்டி கிடைக்கும். அதன்மூலம் அவர்கள் உலகை பற்றி நன்கு புரிந்துகொள்வார்கள். அவர்களின் உணர்வுகள் அனைத்தும் ஒவ்வொன்றாக அழியும், அவர்களால் நினைத்தாலும் அசைய இயலாது.

உமிழ்நீர்
இந்த அசையா நிலைக்கு வந்தபிறகு மரணிக்கப்போகிறவரின் வாயில் இருந்து தொடர்ந்து உமிழ்நீர் வெளியேறிக்கொண்டே இருக்கும். தன் வாழ்க்கையில் மிகஅதிக பாவங்களை செய்த ஒருவருக்கு உடலின் கீழ் பகுதியில் இருந்து மரணம் ஏற்படும். அந்த நேரத்தில் இரண்டு எமதூதர்கள் அவர்களுக்கு மிகவும் கோரமாக காட்சியளிப்பார்கள்.

எமதூதர்கள்
எமதூதர்கள் மிகவும் கருப்பாக, சீரற்ற முக அமைப்புடன் விகாரமாகவும், நீண்ட நகங்களுடனும் காட்சியளிப்பார்கள். அந்த உருவத்தை பார்த்த பயத்தில் இறக்கப்போகிற மனிதர்களுக்கு சிறுநீர் வரும்.

ஆன்மா
எமதூதர்கள் அந்த ஆன்மாவை இருக்க கட்டி விடுவார்கள். எமலோகத்திற்கு செல்லும் வழியில் ஆன்மாவிற்கு எவ்வளவு களைப்பு ஏற்பட்டாலும் அதற்கு ஓய்வு எடுக்க அனுமதி அளிக்கப்படாது. அதுமட்டுமின்றி அந்த எமதூதர்கள் ஆன்மா அனுபவிக்க போகும் வலியை பற்றிக்கூறி அதன் பயத்தை அதிகரிப்பார்கள்.

ஆன்மாவின் அழுகை
எமலோகத்தை பற்றிய இந்த கதைகளை கேட்கும் ஆன்மா தன்னை விட்டுவிடும்படி எமதூதர்களிடம் கெஞ்சும். ஆனால் அவர்கள் ஆன்மாவிற்கு எந்தவித கருணையும் காட்டமாட்டார்கள். தன் வாழ்நாளில் செய்த பாவங்கள் அனைத்தும் ஆன்மாவிற்கு இப்பொழுது நியாபத்திற்கு வரும்.

சவுக்கடி
ஆன்மாக்களால் தரையில் நடக்க முடியாது, ஏனெனில் மணல் அவர்களுக்கு நெருப்பை கொதிக்கும். அதுமட்டுமின்றி ஒரு கொடூர பசி எப்பொழுதும் ஆன்மாக்களுக்கு இருக்கும். இந்த கொடுமைகளுடன் சேர்த்து எமதூதர்கள் சவுக்கால் அடிப்பதையும் பொறுத்துக்கொள்ள வேண்டும். ஆன்மா பலமுறை கீழே விழுந்து மீண்டும் மீண்டும் எழுந்து நடக்க தொடங்கும். ஆன்மாவின் எமலோக பயணமானது இப்படித்தான் கொடுமைகள் நிறைந்ததாக இருக்கும்.
MOST READ: உங்கள் ராசிப்படி சனிபகவானால் இந்த ஆண்டு உங்களுக்கு என்ன நடக்கப்போகிறது தெரியுமா?

எமதர்மனுடன் சந்திப்பு
எமலோகத்தை சென்று அடைந்த பின் ஆன்மா நியாயசபையில் நிறுத்திவைக்கப்படும், எமதர்மனை பார்க்கும் வரையில் அதற்கான சித்திரவதைகள் தொடர்ந்துகொண்டுதான் இருக்கும். எமதர்மனின் தீர்ப்பிற்கு பிறகு ஆன்மா அது உடல் இருக்கும் இடத்திற்கு சென்று வர அனுமதியளிக்கப்படும்.

பூமிக்கு திரும்புதல்
எமதர்மனின் தீர்ப்பிற்கு பின் ஆன்மாவானது தன் உடல் இருக்கும் இடத்திற்கு வரும். தன் இறந்த உடலை பார்த்து கதறி அழும் ஆன்மா மீணடும் உடலுக்குள் நுழைய முயலும், ஆனால் என்ன செய்தாலும் ஆன்மாவால் அது முடியாது. பின்னர் ஆன்மா மீண்டும் எமலோகத்திற்கு இழுத்துச்செல்லப்படும்.

ஆன்மா அலையும்
புனித ஆன்மாவாக இருந்தால் அது சொர்க்கத்திற்கு செல்லும். பாவம் செய்த ஆன்மாவாக இருந்தால் நரகத்திற்கு செல்லும். இறந்தவரின் குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஆன்மாவிற்காக பிரார்த்தனை செய்ய வேண்டும். இல்லையனில் தண்டனை முடிந்த ஆன்மா ஆவியாக தனிமையான இடங்களில் அலையும். ஒருவர் இறந்த 10 நாட்களுக்குள் அவருக்கு திவசம் செய்து பிண்டம் வைக்க வேண்டுமென கருட புராணம் கூறுகிறது.