Just In
- 6 hrs ago
புதிதாக திருமணமான தம்பதிகள் படுக்கையறைக்கு செல்வதற்கு முன்பு என்ன செய்கிறார்கள் தெரியுமா?
- 8 hrs ago
2019 மிஸ் யுனிவர்ஸ் அழகி போட்டியில் கலந்து கொண்ட முதல் லெஸ்பியன் போட்டியாளர்!
- 10 hrs ago
கார்த்திகை தீப நாளில் சொக்கப்பனை கொளுத்துவது ஏன் தெரியுமா?
- 11 hrs ago
கார்த்திகை தீபத்தன்று வீட்டில் விளக்குகள் ஏற்றுவதால் என்ன பலன்கள் கிடைக்கும்?
Don't Miss
- News
எதிர்க்கட்சியினர் வதந்தி பரப்புகிறார்கள், சிறுபான்மையினர் பயப்படாதீர்கள்: லோக்சபாவில் அமித் ஷா உறுதி
- Finance
நல்ல லாபம் கொடுக்கும் மிட் கேப் மியூச்சுவல் ஃபண்டுகள்..!
- Sports
ஏன் இப்படி பண்றீங்க? மைதானம் முழுக்க ஒலித்த தோனி பெயர்.. கடுப்பான கோலி!
- Automobiles
"வாகன துறையில் வேலையிழப்பே கிடையாது" - சர்ச்சை பதிலை கூறிய பாஜக தலைவர் யார் தெரியுமா..?
- Movies
உண்மையான ஹீரோ சொந்த சகோதரியை காயப்படுத்தி ஏமாற்ற மாட்டான்.. அருண்விஜய் மீது பாய்ந்த வனிதா!
- Education
TNPSC Group 1: டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு!
- Technology
மொபைல்போன் வாங்கினால் 1கிலோ வெங்காயம் இலவசம்.!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
இந்த தமிழ் புத்தாண்டில் நீங்கள் கைவிட வேண்டிய பத்து விஷயங்கள் என்னென்ன தெரியுமா?
புதிய ஆண்டு பிறக்கிறது என்றாலே நமக்கு சில எதிர்காலத் திட்டங்கள் இருக்கும். அவற்றில் முதன்மையான விஷயம் என்னவென்றால், நம்மிடம் இதுவரை இருந்து வந்த ஏதேனும் சில கெட்ட விஷயங்களை இந்த புத்தாண்டில் இருந்து விட்டுவிட வேண்டும் என்று உறுதிமொழி எடுத்துக் கொள்வது தான்.
அதில் நிச்சயம் நிறைய பேருக்கு கோபத்தை விட்டு விட வேண்டும், புகைப்படிப்பது, மது அருந்துவது போன்ற பிரச்சினைகளை விட்டு விட வேண்டும் என்று உறுதிமொழி எடுப்பதுண்டு. அதுபோல சில முக்கியமான விஷயங்களை இந்த புத்தாண்டில் இருந்து நீங்கள் கைவிட வேண்டும். அவற்றைப் பற்றி இந்த பகுதியில் விரிவாகப் பார்க்கலாம்.

வெறுப்பு
நீங்கள் ஏதேனும் பொருளின் மேலோ அல்லது தனி நபரின் மேலோ வெறுப்பு இருந்தாலோ முதலில் இந்த வெறுப்பைக் கைவிட முயற்சி செய்யுங்கள். அதற்கு பதிலாக நீங்கள் விரும்புகின்ற ஏதேனும் ஒரு விஷயத்தின் மீது உங்களுடைய கவனத்தைச் செலுத்துங்கள்.
MOST READ: உலகிலேயே மிகப்பெரிய ஆணுறுப்பை கொண்டவர் இவர்தானாம்... அதுபற்றி என்ன சொல்றார் பாருங்க

கடந்த காலம்
கடந்த காலத்தில் நடந்த தேவையில்லாத விஷயங்கள் எதையும் மனதுக்குள் வைத்துக் கொள்ளாதீர்கள். அது இன்னும் மன உளைச்சலையும் கவலையையும் தரக்கூடும். அதேசமயம் கடந்த காலத்தில் நீங்கள் கற்றுக் கொண்ட பாடங்களை ஒருபோதும் மறந்துவிடக் கூடாது.

கரார் பேர்வழி
சிலர் மிகவும் கரார் பேர்வழியாக இருப்பார்கள். அது நல்லது தான். ஆனா்ல அதுவே நிறைய சமயங்களில் தேவையற்ற மன வருத்தத்தை உங்களுக்கும் மற்றவர்களுக்கும் தரக்கூடும். உறவுகளைப் பேண வேண்டும், மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் நீங்கள் நிச்சயம் உங்களுடைய கரார் பேர்வழித்தனத்தைக் கொஞ்சம் தளர்த்திக் கொள்ளத்தான் வேண்டும்.
MOST READ: தீபிகா படுகோன் உடம்பு பளபளனு இருக்க அவங்க பண்ற அந்த மசாஜ்தான் காரணமாம்... என்ன மசாஜ் அது?

காமெடி பீஸ்
சிலர் தன்னை ஒரு வுடிக்கையாளனாகக் காட்டி எப்போதும் மற்றவர்களை மகிழ்விப்பவராகவே இருப்பார்கள். அதில் தவறில்லை தான். ஆனால் நம்மைப் பார்க்கும்போதெல்லாம் மற்றவர்களுக்கு நாம் ஒரு வேடிக்கையான மனிதராகத் தெரியக்கூடாது. நமக்கென்று அவர்களைப் போல எல்லா உணர்வுகளும் இருப்பதாப் புரிய வைக்க வேண்டும். அதாவது நீங்கள் எப்போதும் உங்களைக் காமெடி பீஸாகக் காட்டிக் கொள்ளாதீர்கள் என்று சொல்கிறோம்.

மட்டம் தட்டுதல்
நிறைய பேரை பார்த்திருப்போம். எதற்கெடுத்தாலும் அடுத்தவர்களை மட்டம் தட்டிக் கொண்டே இருப்பார்கள். அவர்களுக்குத் தான் எல்லாம் தெரியும் என்பது புால. அதைக்கூட மன்னித்துவிடலாம். ஏனென்றால் அது அவர்களுடைய அளவுக்கு அதிகமான தன்னம்பிக்கையைக் காட்டும். ஆனால் சிலர் தங்களைத் தாங்களே சுய மட்டம் தட்டிக் கொள்வது தன்னுடைய செயலைப் பற்றி எப்போதும் எதிர்மறையாகவே சிந்திப்பது ஆகியவை மிகவும் தவறு. அப்படிப்பட்ட ஆளாக நீங்கள் இருந்தால் தயவுசெய்து இந்த புத்தாண்டில் இருந்து அதை விட்டுவிட்டு தன்னம்பிக்கையுடன் இருங்கள்.

வெட்டிப்பேச்சு
மற்றவர்களுடன் உட்கார்ந்து கொண்டு வெட்டிப் பேச்சு பேசுவதை முதலில் கைவிடுங்கள். சிலரைப் பார்த்திருப்போம். எப்போதும் தனக்குப் பின்னால் ஒரு கூட்டத்தை வைத்துக் கொண்டு எப்போதும் அடுத்தவர்களைப் பற்றியே பேசிக் கொண்டிருப்பார்கள். அப்படி வெட்டிப்பேச்சு பேசுவதையும் தேவையில்லாமல் அடுத்தவர்களை எடை போடுவதையும் நிறுத்துங்கள்.

சுய மரியாதை
பெரியார் பிறந்த மண்ணில் வாழும் நமக்கு நிச்சயம் சுய மரியாதை இருக்க வேண்டாமா? அதனால் உங்களை இளக்காரமாக நினைப்பவர்களைத் தூக்கி எறியுங்கள். உங்களை எப்போதும் தாழ்வாக நினைக்கிறவர்கள் உங்களுடைய அருகிலோ நட்பு வட்டாரத்திலோ இருந்தால் அவர்களை முதலில் தூக்கி எறியுங்கள்.
MOST READ: இந்த மாதிரி வர்றது எதோட அறிகுறினு தெரியுமா? தெரிஞ்சிக்கங்க... இப்படி சரிபண்ணுங்க

கோபம்
இதுதான் நிறைய பேருக்கு இருக்கிற பிரச்சினை. வீட்டில் உள்ள கோபத்தை அலுவலகத்திலும் அலுவலகப் பிரச்சினையை வீட்டில் இருப்பவர்களிடமும் காட்டுவது. இந்த கோபம் உறவுகளைச் சிதைப்பது மட்டுமல்லாது மாரடைப்பு, உயர் ரத்த அழுத்தம் போன்ற பல உடல் ரீதியான பிரச்சினையையும் உண்டாக்கும். அதனால் கோபத்தைக் கைவிட்டு, அமைதியாக இருப்பது நல்லது. அமைதி தான் உங்களுடைய ஆற்றலை அதிகரிக்கும்.

ஒப்பீடு
ஒவ்வொரு மனிதனும் வேறு வேறு தான். ஒவ்வொரு மனிதனின் ஒவ்வொரு செய்கைக்குப் பின்னாலும் வெவ்வேறு சூழலியல் காரணிகள் உண்டு. அதனால் எப்போதும் உங்களை மற்றவர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் பழக்கத்தைக் கைவிடுங்கள்.
MOST READ: ஆஸ்துமா எவ்வளவு நாளில் மரணத்தை ஏற்படுத்தும்... எப்படி தடுக்கலாம்?

வருத்தம்
எதற்காகவும் வருத்தப்படுவதை நிறுத்துங்கள். வருத்தப்பட்டுக் கொண்டே இருப்பது உங்களுடைய செயல் வேகத்துக்குத் தடையாக அமையும். உடல் மற்றும் மன ரீதியாக சோர்வை உண்டாக்கி, பலவீனப்படுத்தி விடும்.