Latest Updates
-
Nag Panchami 2026: நாக பஞ்சமியில் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பெரிய ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
காரசாரமான சிக்கன் ஈரல் வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு சாப்பிடுங்க.. -
இந்த 7 அறிகுறிகள் அடிக்கடி தெரியுதா? அப்ப அது குடல்வால் புற்றுநோயின் அறிகுறியா இருக்கலாம்.. உஷார்.. -
ஆகஸ்ட் 19-ல் நடக்கும் குரு நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது..! -
கவுண்டம்பாளையம் சிக்கன் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. இட்லி, சாதத்துக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 16 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு மனச்சுமை அதிகரிக்கப்போகுதாம் -
புதன்-குருபகவான் இணைப்பால் சூப்பர் ஸ்டாரா ஜொலிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
கோவா ஸ்டைல் சிக்கன் மசாலா ரெசிபி - ஒருதடவை செஞ்சு பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
வார ராசிபலன் (16 August 2026 - 22 August 2026)- உங்க ராசிப்படி இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும் தெரியுமா -
காலிஃபிளவர் வாங்குனா இந்த மாதிரி வித்தியாசமா ரசம் வைச்சு பாருங்க - ஆரோக்கியமா, சூப்பரா இருக்கும்
உங்கள் வாழ்க்கையில் ஏற்படும் இந்த பிரச்சினைகளுக்கு காரணம் சனிபகவானின் மறைமுக பார்வைதான்...!
சனிபகவான் கோபப்பார்வை எப்பொழுதும் உங்கள் வாழ்க்கையில் சோதனைகளையும், தடைகளையும் உண்டாக்கும். உங்கள் வாழ்க்கையின் முன்னேற்றத்தை தடுக்கும்.
அனைத்து மக்களும் பார்த்து பயப்படும் ஒரு கடவுள் என்றால் அது சனிபகவன்தான். ஏனெனில் சனிபகவானின் பார்வை ஒருவர் மீது விழுந்து விட்டால் அவர்கள் வாழ்கையில் அனுபவிக்கும் இன்னல்களுக்கு எல்லையே இருக்காது. சனிபகவான் நமக்கு அளிக்கும் தண்டனைகள் நமது பாவங்களுக்கான தணடனைகள் என்று புராணங்கள் கூறுகிறது. சனிபகவான் அளிக்கும் சோதனைகளை கடந்து விட்டால் அவர்கள் எல்லையில்லா ஆசீர்வாதங்களை அளிப்பார்.
சனிபகவானின் கோபப்பார்வை எப்பொழுதும் உங்கள் வாழ்க்கையில் சோதனைகளையும், தடைகளையும் உண்டாக்கும். உங்கள் வாழ்க்கையின் முன்னேற்றத்தை தடுக்கும். எந்த ராசிக்கு சனிபகவான் சென்றாலும் அதனால் தங்களுக்கு ஏதாவது பிரச்சினை வருமோ என்று பயப்படாதவர்களே இருக்க முடியாது.

இந்த சூழ்நிலையில் சனிபகவான் மற்ற ராசிகளில் இருந்தாலும் அவரின் பார்வை உங்கள் மீதும் இருக்க வாய்ப்புள்ளது. அவ்வாறு இருக்கும்போது உங்கள் வாழ்க்கையில் பல பிரச்சினைகள் எழும். இந்த பதிவில் உங்கள் மீது சனிப்பார்வை உள்ளது என்பதை உணர்த்தும் செயல்கள் என்னென்ன என்று பார்க்கலாம்.

காலனியை இழந்து விட்டீர்களா?
காலணி தொலைந்தால் கெட்ட நேரம் போய்விடும் என்று கூறுவார்கள். ஆனால் உண்மையில் உங்கள் காலணியை இழந்து விட்டாலோ அல்லது அடிக்கடி பழுதானாலோ உங்கள் மீது சனியின் கோபப்பார்வை இருக்கிறது என்று அர்த்தம்.

கடன், துரோகம் மற்றும் இழப்பு
உங்கள் நண்பரால் துரோகம் செய்யப்பட்டு உங்கள் வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டாலோ, கடனோடு சேர்த்து செலவுகளும் அதிகரித்தால் உங்கள் வாழ்க்கையில் சனிபகவானின் கோபப்பார்வை உள்ளது என்று புரிந்து கொள்ளுங்கள்.

கல்வியில் பிரச்சினை
நீங்கள் படித்து கொண்டிருப்பவர்களாக இருந்தால் உங்களுக்கு படிப்பில் கவனம் இல்லாமலோ அல்லது தொடர்ந்து தோல்வி அடைந்து எதிர்காலமே இல்லை போன்ற எண்ணங்கள் தோன்றினால் அது எதார்த்தமாக நடப்பது இல்லை. சனிபகவானால் உங்கள் வாழ்க்கையில் ஏற்படும் சோதனைகள் ஆகும்.

திருமண பிரச்சினைகள்
திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு சனிபகவானின் கோபப்பார்வை விழுந்து விட்டால் அவர்களின் திருமணம் தள்ளி போய்க்கொண்டே இருக்கும். பல்வேறு வடிவங்களில் உங்கள் திருமணத்திலும், குடும்பத்திலும் சிக்கல்கள் எழும்.

தீமை மீதான ஈர்ப்பு
ஒருவரின் மீது சனிபகவானின் பார்வை விழுந்து விட்டால் அவர்களின் எண்ணங்கள் மற்றும் செயல்கள் எதிர்மறை சக்திகளை நோக்கியே செல்லும். போதை பழக்கம் மற்றும் பிற சீர்கேடான செயல்களுக்கு அவர்கள் எளிதில் அடிமையாகி விடுவார்கள்.

சோம்பேறித்தனம்
ஒருவரின் ஜாதகத்தில் தவறான இடத்தில் சனிபகவான் வந்து விட்டால் அவர்கள் சோம்பேறித்தனம் அதிகம் உள்ளவர்களாகவும், வேலையை தட்டி கழிப்பவர்களாகவும் இருப்பார்கள். இதனால் அவர்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் இருக்காது.

வலி மற்றும் இழப்பு
சனிபகவான் ஆரோக்கியம் மட்டுமின்றி தோற்றத்திலும் பாதிப்புகளை ஏற்படுத்துவார். சனிபகவானின் கோபப்பார்வை உள்ளவர்கள் இளம்வயதிலேயே நரை முடி, அதீத முடி இழப்பு போன்ற பிரச்சினைகளை சந்திப்பார்கள். அவர்களுக்கு எலும்புகளில் தேய்மானம் மற்றும் வலி போன்றவையும் கூட ஏற்பட வாய்ப்புள்ளது.

அவமானங்கள்
சனிபகவானின் பார்வை உள்ளவர்கள் அதிக அவமானங்களை சந்திக்க நேரிடும். வீண்பழிகளை சுமந்தாலோ அல்லது செய்யாத தவறுக்கு தண்டனைகள் அனுபவித்தாலோ அவர்கள் மீது சனிபகவானின் கோபப்பார்வை உள்ளது என்று அர்த்தம்.

ஏழைகளை அவமதிக்காதீர்கள்
சனிபகவான் எப்பொழுதும் ஏழைகளுக்கு நன்மைகளை ஏற்படுத்துபவர். ஒருபோதும் ஏழைகளை அவமதிக்கவோ அல்லது அவர்களுக்கு தீங்கை ஏற்படுத்தவோ முயற்சிக்காதீர்கள். உங்களை சுற்றி இருக்கும் ஏழைகளால் உங்களுக்கு ஏதேனும் சிக்கல்கள் ஏற்பட்டால் அதற்கு காரணம் சனிபகவானாகத்தான் இருப்பார்.

பண இழப்பு
உங்களின் வாழ்நாள் சேமிப்பு முழுவதும் ஆரோக்கிய பிரச்சினைகளாலோ அல்லது எதிர்பாராத திடீர் செலவுகளாலோ கரைந்தால் உங்கள் மீது சனிபகவான் உச்ச கோவத்தில் இருக்கிறார் என்று அர்த்தம்.



Click it and Unblock the Notifications