Latest Updates
-
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும் -
அக்டோபர் மாத சூரிய பெயர்ச்சி: இந்த 6 ராசிக்காரங்க அடுத்த 1 மாதம் கவனமா இருக்கணும்! -
சைக்கோவாக நடந்து கொள்ளும் 4 ஆபத்தான ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1/2 மூடி தேங்காய் இருந்தா.. இத ஒரு டைம் ட்ரை பண்ணுங்க.. 15 நாள் வரை வெச்சு சாப்பிடலாம்.. -
சிக்கனின் விலை 2.5 லட்சம், மீனின் விலை 5 லட்சம் - உலகின் காஸ்டலியான அசைவ உணவுகள் - ஷாக் ஆகாதீங்க
தன்னை அழகுபடுத்திக்க பார்லருக்கு போன பெண் பரிதாபமாக உயிரிழந்த சோகம்... என்னதான் நடந்தது?
தன்னை அழகுபடுத்திக் கொள்வதற்கான பார்லருக்குச் சென்ற ஒரு பெண்ணுக்கு உயிர் போன கொடூரத்தைப் பற்றி இங்கு பார்க்கலாம். அது பற்றிய ஒரு அருமையான தொகுப்பு தான் இது.
அழகு என்பது அழியக்கூடியது. ஆனால் இதனை பலரும் ஏற்றுக் கொள்வதில்லை. இன்று அழகாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பல தவறான முடிவுகளை எடுத்து வாழ்க்கையை சிக்கலாக்கிக் கொள்கின்றனர். இறைவனின் படைப்பில் ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்துவம் உள்ளது. அழகு உள்ளது. உங்கள் அழகு என்ன என்பதைப் புரிந்து கொண்டு ஏற்றுக் கொள்வதால், உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கிறது.

மேலும் முக்கிய விஷயங்கள் மீது கவனம் செலுத்த போதிய நேரம் கிடைக்கிறது. இதனால் உங்கள் வாழ்க்கையில் நீங்கள் அடைய நினைக்கும் வெற்றியை எளிதில் அடைய முடிகிறது. அழகின் பின்னால் ஓடிக்கொண்டிருப்பதால் நேரமும் வீணாகி, வீண் பிரச்சனைகளும் உண்டாகிறது.

உயிரிழந்த பரிதாபம்
ஒரு இளம் பெண் தன் அழகை மேம்படுத்த போடோக்ஸ் ஊசி எடுத்துக் கொண்டதால் தன் உயிரை இழந்திருக்கிறார். இந்த தகவலைப் பகிரவே இந்த பதிவு. பயத்தை உண்டாக்கும் இந்த நிகழ்வைப் பற்றி தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்..
லவ் லி டிங் என்ற இளம் பெண் 32 வயது நிரம்பியவர். இவர் சிங்கப்பூரில் வசித்து வருகிறார். ரியல் எஸ்டேட் முகவராக பணி புரிந்து வருகிறார். தனது அழகை மேம்படுத்த ஒரு அழகு நிலையத்திற்கு சென்றிருக்கிறார். சீரான உடல் அமைப்பைப் பெறவும் முக வசீகரம் பெறவும் போடோக்ஸ் ஊசி பயன்படுத்த விரும்பியிருக்கிறார்.

இது முதன் முறை அல்ல
போடோக்ஸ் ஊசியை இவர் இந்த நிகழ்வுக்கு முன்னரும் பயன்படுத்தியிருக்கிறார். மருத்துவ அறிக்கையில், இந்த ஊசியை இவர் இதற்கு முன்னரும் பயன்படுத்தியிருப்பதாகவும் இது முதமுறை அல்ல என்பது வெளியாகியுள்ளது. இவருடைய இறப்பிற்கு என்ன காரணம் என்று முதலில் மருத்துவர்களுக்கு தெரியவில்லை, பின்னர், இதய செல்யளிழப்பு தான் காரணம் என்பது தெரிய வந்துள்ளது.

கோமாவிற்கு சென்று விட்டார்
ஊசி பயன்படுத்திய அந்த நாளில் சாயங்கால வேளையில் லவ் லி டிங் கோமா நிலைக்கு சென்றுவிட்டார். அதன் பின்னர் லைப் சப்போர்டுடன் அடுத்த 5 நாட்கள் உயிர் வாழ்ந்து பின்பு இறந்து விட்டார்.

அழகு நிலையம்
மற்ற அழகு நிலையங்கள் இந்த நிகழ்வைப் பற்றி பகிர்ந்து கொண்டன. லவ் லி டிங்கின் இறப்பு செய்தி பரவியவுடன், அவர் சென்ற அழகு நிலையம் இருந்த பகுதியில் உள்ள இதே சேவையை செய்து வருகின்றன மற்ற அழகு நிலையங்கள் தங்கள் அழகு நிலையத்தில் இந்த சம்பவம் நடக்கவில்லை என்று, வியாபாரத்தைக் காப்பாற்றிக் கொள்ள தனது பேஸ்புக் பக்கங்களில் பதிவிட்டன.
ஆனால் அழகின் மீது உள்ள மோகத்தால் ஒரு உயிர் போனது போனதுதான்...
இந்த பதிவைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?? எங்களுடன் பகிர்ந்து கொள்ள மறக்க வேண்டாம்..



Click it and Unblock the Notifications
