Latest Updates
-
1 கப் ஜவ்வரிசி இருந்தா.. காலையில் 5 நிமிடத்தில் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 20 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பெரிய நஷ்டம் ஏற்பட வாய்ப்பிருக்காம் - ஜாக்கிரதை -
ஜூன் 23-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாருக்கு மோசமாகவும் இருக்கும்? -
சனிபகவான்-புதன் உருவாக்கும் அரிய கிரக சேர்க்கையால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் இவங்கதான் -
தக்காளி சட்னி அரைக்கும் போது இந்த ஒரு பொருளை சேர்த்து அரைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், சுவையாவும் இருக்கும் -
முகத்தில் உள்ள கருமையைப் போக்கணுமா? அப்ப கடலை மாவு வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
இன்டர்நெட் வசதியே இல்லாத உலகின் மிகவும் மோசமான நாடு எது தெரியுமா? இங்க தங்கத்தை விட இன்டர்நெட் காஸ்ட்லி -
1 கப் கோதுமை மாவு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செஞ்சு குடுங்க... -
இந்த 4 மாதத்தில் பிறந்தவர்கள் பணத்தை அலட்சியமாக தண்ணீர் போல செலவழிப்பார்களாம் - உங்க பிறந்த மாதம் என்ன? -
சிம்ம ராசிக்கு செல்லும் சுக்கிரன்: ஜூலையில் இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது...
இந்த பொருட்களை நீங்கள் பார்க்க நேர்ந்தால் தயாராக இருந்தால் உங்களுக்கு அதிர்ஷ்டம் அடிக்க போகிறது...!
அதிர்ஷ்டம் வருவதற்கு முன்பாக அது சில அறிகுறிகளை காட்டும். அதனை சரியாக புரிந்து கொண்டு சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்தினால் நாம் விரும்பும் உயரத்தை அடையலாம்.
வாழ்க்கையில் அனைவருக்குமே அதிர்ஷ்டத்துடன் வாழவேண்டும் என்ற ஆசை இல்லாமல் இருக்காது. பண விஷயத்தில் மட்டுமின்றி வாழ்க்கையின் எந்த சூழ்நிலையிலும் நமக்கு ஏதாவது தவறாக நடந்தால் நாம் முதலில் பழி போடுவது அதிர்ஷ்டத்தின் மேல்தான். அதிர்ஷ்டம் இருந்திருந்தால் என்னால் இதனை செய்திருக்க முடியும் என்று நினைக்கத்தவர்கள் யாரும் இருக்க வாய்ப்பில்லை.

வாழ்க்கையில் ஒரு கட்டத்திலாவது நமக்கு அதிர்ஷ்டம் கண்டிப்பாக வரும். அவ்வாறு கண்டிப்பாக வரும்போது அதனை நாம் சரியாக புரிந்து கொள்ள வேண்டும். அதிர்ஷ்டம் வருவதற்கு முன்பாக அது சில அறிகுறிகளை காட்டும். அதனை சரியாக புரிந்து கொண்டு சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்தினால் நாம் விரும்பும் உயரத்தை அடையலாம். அந்த அறிகுறிகள் நீங்கள் எதேர்ச்சையாக பார்க்கும் சில செயல்களாக இருக்கலாம். இந்த பதிவில் எந்தந்த செயல்கள் உங்களுக்கு அதிர்ஷ்டம் வரப்போவதை உணர்த்தும் என்று பார்க்கலாம்.

இறுதி ஊர்வலம்
இது இழந்தவர்களுக்கு சோகமானதாக இருக்கலாம் ஆனால் இந்து மத நம்பிக்கைகளின் படி பிணத்தை பார்ப்பதோ அல்லது இறுதி ஊர்வலத்தை பார்ப்பதோ அதிர்ஷ்டத்தின் அறிகுறி என்று கூறப்படுகிறது. இறுதி ஊர்வலத்தை பார்க்கும்போது கடவுளை வணங்க வேண்டும்.

கன்றுக்குட்டி பால் குடிப்பது
புதிதாக பிறந்த கன்றுக்குட்டி தன் தாயிடம் பால் குடிப்பதை பார்ப்பது என்பது அருமையான சகுனமாகும். அவ்வாறு பார்த்தால் உடனடியாக கடவுளை வேண்டிக்கொண்டு உங்களை ஆசையை மனதில் நினைத்துக் கொள்ளுங்கள். எந்த சூழ்நிலையிலும் அப்போது மாட்டை தொட முயற்சிக்காதீர்கள், தூரத்தில் இருந்து மட்டுமே பார்த்துக்கொள்ளுங்கள்.

ஆமை
சீன கலாச்சாரத்தில் ஆமை மிகவும் முக்கியமான இடம் வகிக்கிறது. ஆமை நீண்ட ஆயுளை குறிக்கிறது. மேலும் இது அதிர்ஷ்டத்தையும் குறிக்கிறது. எனவே எதார்த்தமாக ஆமையை பார்ப்பது உங்களுக்கு எதிர்காலத்தில் அதிர்ஷ்டம் வரப்போவதின் அறிகுறியாகும்.

குதிரை லாடம்
சாஸ்திரங்களின் படி குதிரைலாடம் என்பது நேர்மறை சக்திகளை அதிகரிக்கும் சின்னமாகும். மேலும் இது உங்கள் வீட்டில் இருக்கும் எதிர்மறை சக்திகளே விரட்டுவதாக இருக்கும். எனவே உங்கள் வீட்டின் கதவில் குதிரை லாடம் ஒன்றை தொங்க விடுவது உங்கள் வாழ்வில் அதிர்ஷ்டத்தை ஏற்படுத்தும்.

குருவிக்கூடு
உங்கள் வீட்டில் குருவி கூடு கட்டினால் அது உங்கள் இல்லத்திற்கு விரைவில் அதிர்ஷ்டத்தை கொண்டுவரும் என்று கூறப்படுகிறது. குருவி சென்ற பிறகு கூட அந்த குருவிக்கூட்டை அழித்து விடாதீர்கள். உங்கள் அதிர்ஷ்டம் விரைவில் வெளிப்படும்.

நான்கு இதழ் கொண்ட புல்
இந்த இல்லை புனிதத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இதனை உங்கள் வீட்டில் வைப்பது உங்கள் வீட்டிற்கு பாதுகாப்பை அளிப்பதுடன் கண்திருஷ்டி போன்ற பிரச்சினைகளிடம் இருந்து உங்களை பாதுகாக்கும்.

பிறை
பிறை நிலா என்பது அதிர்ஷ்டமான ஒன்றாகும். குறிப்பாக குழந்தைகளுக்கும், அம்மாக்களுக்கும். இது அவர்களின் வாழ்க்கையில் ஏற்படும் தடங்கல்களில் இருந்தும், துரதிர்ஷ்டங்களில் இருந்தும் பாதுகாக்கும்.

எண் 7
பல கலாச்சாரங்களில் 7 என்பது புனிதமான எண்ணாக இருக்கிறது, குறிப்பாக ஜப்பானில். உங்களை நோக்கி 7 என்னும் எண் தொடர்ந்து எதேர்ச்சையாக வந்தால் உங்களை நோக்கி அதிர்ஷ்டம் வரப்போகிறது என்று அர்த்தம்.

யானை
பயணத்தின் போது யானையை பார்த்தால் உங்கள் பயணம் வெற்றிகரமானதாக இருக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. யானை முழுமுதற் கடவுளான விநாயகரின் அடையாளம் எனவும் அவரை பார்ப்பது அதிஷ்டத்தை ஏற்படுத்தும் எனவும் கூறப்படுகிறது.

பெண் பறவைகள்
பெண் பறவைகள் செல்வத்தையும், வளத்தையும் குறிப்பதாக இருக்கிறது, எனவே அவற்றை பார்த்தால் உங்களை நோக்கி அதிர்ஷ்டம் வரப்போகிறது என்று அர்த்தம். ஒருபோதும் அதனை கொன்று விடாதீர்கள். உங்கள் வீட்டில் அந்த பறவைகள் வந்தால் உங்கள் வீட்டை நோக்கி பணம் வரப்போகிறது.

வானவில்
வானவில் முடியும் இடத்தில் குழி தோண்டினால் உங்களுக்கு கை நிறைய தங்கம் கிடைக்கும் என்று கூறுவார்கள். இது மூடநம்பிக்கையாக இருக்கலாம், ஆனால் நீங்கள் வானவில்லை பார்ப்பது உங்கள் வாழ்வில் மகிழ்ச்சியும், செல்வமும் ஏற்படப்போகிறது அர்த்தம்.



Click it and Unblock the Notifications