For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்களின் கெட்ட நேரம் அனைத்தும் நல்ல நேரமாக மாற தூங்கும் முன் இந்த செயலை செய்தால் போதும்

|

நம் உடலுக்கு தூக்கம் என்பது மிகவும் முக்கியமானது. இது நமக்கு தேவையான ஓய்வை வழங்குவதோடு மட்டுமில்லாமல் அடுத்த நாள் வேலை செய்வதற்கான ஆற்றலையும் வழங்குகிறது. ஆனால் தூக்கத்தை பற்றி உங்களுக்கு தெரியாத ரகசியம் உள்ளது. பலருக்கும் இது தெரியாத ஒரு தகவலாகும். அதாவது தூக்கம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கூட அள்ளித்தரும்.

Secret ways to boost Good Luck while sleeping

நமது வேதங்களின் படி நாம் தூங்கும் நிலைகளில் செய்யும் சில மாற்றங்கள் நம்முடைய அதிர்ஷ்டத்தை அதிகரிக்கும். இந்த சின்ன மாற்றங்கள் அனைத்தும் தூங்கும்போதும், தூங்குவதற்கு முன்னர் மட்டுமே செய்ய வேண்டியவை. இந்த வழிகளை தூங்குவதற்கு முன் செய்வதன் மூலம் உங்கள் அதிர்ஸ்டத்தை அதிகரித்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வழி 1

வழி 1

ஒருவேளை உங்கள் படுக்கைக்கு அருகே ஒரு மேசை இருந்தால் நல்லது இல்லையெனில் ஒரு கிண்ணத்தை படுக்கைக்கு அருகில் வைத்துக்கொள்ளுங்கள். ஒரு வெண்கல கிண்ணத்தில் நீரை வைத்து அதனை மேஜையின் மீது வைத்துவிட்டு இரவு முழுவதும் தூங்குங்கள். மறுநாள் காலை அந்த நீரை நீங்கள் வளர்க்கும் செடிக்கு ஊற்றி விடுங்கள்.

வழி 2

வழி 2

வேதங்கள் கூறுவது என்னவென்றால் தூங்க செல்லும் முன் படிக்க வேண்டும் என்று கூறுகிறது. இது உங்கள் மனநிலையை அமைதியாக்குவதோடு மட்டுமில்லாமல், உங்கள் மனஅழுத்தத்தை குறைப்பதுடன் உங்கள் வாழ்க்கையில் நல்ல சக்திகளையும் வரவைக்கும். நீங்கள் படிக்கும் புத்தகம் ஆன்மீகம் தொடர்புடையதாகவோ அல்லது ஊக்கமளிப்பதாகவோ இருக்கலாம்.

வழி 3

வழி 3

தூங்குவதற்கு முன் உங்கள் பாதத்தை கழுவுவது நல்லது என்று வேதங்கள் கூறுகிறது. அதுமட்டுமின்றி உங்கள் காலை சூடான நீரால் கழுவி விட்டு பாதத்தில் தேங்காய் எண்ணெய் மற்றும் கற்பூரம் கலந்து அதனை தேய்க்கவும். இது உங்கள் நரம்புகளுக்கு புத்துணர்ச்சி அளிப்பதுடன் உங்கள் மூளையை சுறுசுறுப்பாக மாற்றும். மேலும் இது உங்களுக்கு அதிர்ஷ்டத்தை அதிகரிப்பதுடன் உங்கள் ஆன்மாவையும் வலுவாக்கும்.

வழி 4

வழி 4

தூங்குவதற்கு முன் 15 நிமிடம் நடப்பது நல்லது என வேதங்கள் கூறுகிறது. அப்படி நடக்கும்போது விஷ்ணு மந்திரத்தை கூறுங்கள். அது உங்கள் அதிர்ஷ்டத்தை அதிகரிப்பதுடன் ஆரோக்கியத்தையும் அதிகரிக்கும். மேலும் உடல் எடையையும் இரவு நேர பயிற்சிகளின் மூலம் குறைக்கலாம்.

MOST READ: ஆயுர்வேதத்தின் படி இரவு உணவை இப்படி சாப்பிடுவது உங்கள் ஆயுளை அதிகரிக்குமாம்...!

இரவு உணவுகள்

இரவு உணவுகள்

இரவு சாப்பிடும்போது அமினோ அமிலம் மற்றும் டிரிப்டோபன் அதிகமுள்ள உணவுகளை சாப்பிடுவது உங்களுக்கு நிம்மதியான தூக்கத்தை வழங்கும். இது மனஅழுத்தத்தை ஏற்படுத்தும் ஹார்மோன்களின் சுரப்பை குறைப்பதுடன் எடையை அதிகரிக்கும் கெர்லின் ஹார்மோனின் சுரப்பையும் குறைக்கிறது.

நொறுக்குத்தீனிகள்

நொறுக்குத்தீனிகள்

ஆய்வுகளின் படி பெரும்பாலும் மக்கள் அனைவரும் படுக்கையில் அமர்ந்து டிவி பார்த்துக்கொண்டே சாப்பிடுவதை விரும்புகிறார்கள். இதனால் அவர்கள் உடலில் கலோரிகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. சொல்லப்போனால் இரவு 7 மணிக்கு பிறகு திட உணவுகளை சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. இதனை தொடர்ந்து 6 வாரம் செய்தால் உங்கள் எடையில் மாற்றம் ஏற்படுவதை நீங்களே உணரலாம்.

க்ரீன் டீ

க்ரீன் டீ

க்ரீன் டீ குடிப்பது உங்களுக்கு பொதுவாகவே ஆரோக்கியத்தை வழங்கும் என்று கூறப்படுகிறது. இது உங்கள் உடலை புத்துணர்ச்சியாக்குவதுடன் நீங்கள் தூங்கும்போது இது உங்கள் உடலில் உள்ள நச்சுப்பொருட்களையும் வெளியேற்றும். எனவே தூங்குவதற்கு முன் க்ரீன் டீ குடிப்பது நல்லது.

MOST READ: இந்த 4 காரணங்களால்தான் உங்கள் திருமண வாழ்க்கை தோல்வியில் முடிகிறது என்று சாணக்கியர் கூறுகிறார்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Secret ways to boost Good Luck while sleeping

Astrology explains that with the help of simple tips or we can enhance our chances of good luck. All of these tips must be adhered at bedtime.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more