For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ராகு கேது சர்ப்பகிரகங்கள்: சந்திர கிரகண நாளில் பழிவாங்கும் பாம்புகள்..

சந்திர கிரகணம் இன்று நிகழ உள்ள நிலையில் நிழல் கிரகங்களான ராகு கேது பற்றியும் பழிவாங்கும் பாம்புகள் சில சுவாரஸ்ய தகவல்களை தமிழ் போல்ட்ஸ்கை பகுதியில் படிங்க.

|

சந்திர கிரகணம், சூரிய கிரகணம் நிகழ்வதே ஒரு பழிவாங்கும் நிகழ்வு என்றே கூறுகின்றனர். சூரியன், சந்திரனை பழிவாங்க பிரம்மாவிடம் வரம் பெற்றே ராகு கேது கிரகணத்தை ஏற்படுத்துவதாக புராண கதைகள் கூறுகின்றன.

பாற்கடலை தேவர்களும், அசுரர்களும் கடைந்த போது வாசுகி என்ற பாம்புதான் உதவியது. அமிர்தம் வெளிவந்த பின்னர் விஷ்ணு மோகினி அவதாரம் எடுத்து வந்து அமிர்தத்தை தேவர்களுக்கு கொடுத்தார்.

Rahu and Ketu

விஷ்ணு கொடுத்த அமிர்தம்

சுவர்பானுவின் செயல்

தேவர்களுக்கு மட்டுமே அமிர்தத்தை கொடுத்து நமக்கு அல்வா கொடுத்தாலும் கொடுத்து விடுவார் மோகினி என்று நினைத்தார் சுவர்பானு. தேவர்போல வேடமிட்டு அமிர்தத்தை விஷ்ணுவிடம் இருந்து வாங்கி மடக்கென்று குடித்து விட்டார். இந்த செயலை சூரியனும் சந்திரனும் பார்த்து விஷ்ணுவிடம் சொன்னார்கள். ஆனாலும் விஷ்ணுவிற்கு தெரியாதா ஒரு காரணத்தோடுதான் அமிர்தத்தை குடிக்கக் கொடுத்தார்.

காட்டிக்கொடுத்த சூரியன் சந்திரன்

அமிர்தம் குடித்த சுவர்பானு

சூரியனும் சந்திரனும் மோகினியிடம் போய் நடந்த விசயங்களை போட்டுக்கொடுக்க, கோபம் கொண்ட விஷ்ணு தனது கையில் இருந்த அகப்பையால் சுவர்பானுவின் தலையில் தட்டவே தலைவேறு முண்டம் வேறாக விழுந்து இரண்டாக வெட்டுப்பார். அமிர்தம் குடித்த சுவர்பானுவிற்கு உயிர்போகவில்லை. சுவர்பானு ஒப்பந்தத்தை மீறி அமிர்தத்தை ஏமாற்றி குடித்ததால் அசுரர்களுக்கு அமிர்தம் கிடையாது என்று கூறினார். இதனால் ஏமாற்றமடைந்த அசுரர்கள் பானையை பறிக்க முயல எல்லா அமிர்தத்தையும் தேவர்களுக்கே கொடுத்து விட்டு பானையை காலி செய்து விட்டார்.

ராகு கேது உருவானார்கள்

உடல் கொடுத்த விஷ்ணு

இதற்கெல்லாம் காரணம் சுவர்பானுதான் என்று அசுரர்கள் கோபம் முழுவதும் சுவர்பானு மீது திரும்பியது. வெட்டுப்பட்டு துடித்துக்கொண்டிருந்த சுவர்பானுவை தங்களின் குலத்தில் இருந்தே விலக்கி வைத்து விட்டனர். தனது நிலையினை கூறி பிரம்மாவிடம் முறையிட்டார் சுவர்பானு. இதற்கு மாற்று ஏற்பாடு மகாவிஷ்ணுவால் மட்டுமே செய்ய முடியும் என்று கூறி கை விரித்து விட்டார் பிரம்மா. விஷ்ணுவை சரணடைந்தார் சுவர்பானு. உடனே பாம்பு உடலை மனித தலையோடு இணைத்தார் விஷ்ணு. பாம்பு தலையை மனித உடலோடு இணைத்தார்-

வரம் பெற்ற ராகு கேது

சூரிய, சந்திர கிரகணங்கள்

மனித தலையும் பாம்பு உடலும் கொண்டவர் ராகு, பாம்பு தலையும் மனித உடலும் கொண்டவர் கேது என அழைக்கப்பட்டனர். உயிர் ஒன்றாக இருந்தாலும் எதிர் எதிர் திசையில் சஞ்சரிக்கின்றனர். தங்களின் இந்த நிலைக்குக் காரணமான சூரியன், சந்திரனை பழிவாங்க பிரம்மாவிடம் தவமிருந்து வரம் பெற்றனர். ஒரு ஆண்டிற்கு நான்கு முறை சூரியன், சந்திரனின் பார்வை பூமியின் மேல் விழாமல் இருக்கும் என்ற வரத்தை கொடுத்தார். இதுவே சூரிய கிரகணம் சந்திர கிரகணம் எனப்படுகிறது. இதனைத்தான் சூரிய சந்திரனை ராகு கேது என்ற பாம்புகள் விழுங்குவதாக பாட்டி கதைகள் சொல்கின்றனர்.

பழிவாங்கும் பாம்புகள்

தனது காதலனை கொன்ற மனிதர்களை நாகங்கள் பழிவாங்குவதாக நீயா, நாகினி கதைகளில் பார்த்திருப்போம். தனது குலத்தையே அழித்தவர்களை பழிவாங்கிய பாம்பு பற்றியும், சாபத்தினால் பாம்பிடம் சிக்கிய மன்னரை பற்றியும் பல கதைகள் உள்ளன. பகவான் மொத்தம் எட்டுவித சர்ப்பங்களை உருவாக்கினார். இதில் தட்சகன் என்பவர் பரீசித்து மன்னனை கடித்து உயிரை எடுத்தார். இது முனிவரின் சாபத்தினால் நிகழ்ந்தது. 7 நாட்களில் பாம்பு கடித்து இறப்பான் என்று முனிவர் இட்ட சாபம் பழித்தது.

பழிவாங்கிய மன்னன் மகன்

நாக வேள்வியில் மடிந்த நாகங்கள்

அப்பா பரீசித்து மகாராஜாவை கொன்ற நாகத்தின் குலத்தை அழிக்க நாக வேள்வி நடத்தினார் ஜனமேஜயன். இவரது வேள்வியில் நாகங்கள் செத்து மடிந்தன. தட்சகன் தனது நண்பனான இந்திரனை வேண்டவே ஆஸ்திகர் என்ந முனிவர் ஜனமேஜயனிடம் சூழ்ச்சியாக பேசி நாக வேள்வியை தடுத்து நிறுத்தினார் இதனால் தட்சகன் மட்டுமே தப்பினான். இப்படி தொடர்ந்து மனிதர்களால் பாம்புகள் துன்பத்திற்கு ஆளாவதும், பாம்புகள் பழிவாங்குவதுமாக புராண கதைகள் தொடர்கின்றன.

English summary

Rahu and Ketu take revenge on Sun and Moon

The partial lunar eclipse will be visible from beginning to end from all places of India In this article, we will take you through a legend which explains why the Solar and the Lunar Eclipses occur.Here’s an interesting take from the point of view of Indian mythology.
Desktop Bottom Promotion