For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கிரகணம் முடியும் நேரத்தில் கர்ப்பிணி பெண்கள் என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக்கூடாது?

சூரிய கிரகண தினத்தில் கர்ப்பிணி பெண்கள் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன, ஏன் என்பது பற்றி இந்த தொகுப்பில் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

|

பொதுவாக கிரகண நாள், சுப காரியங்களைச் செய்வதற்கு பொருத்தமற்றதாகக் கருதப்படுகிறது. இவை "சுதக் கல்" நேரத்திலிருந்தே தவிர்க்கப்பட வேண்டும். "சுதக் கல்" என்பது சந்திர கிரகணத்திற்கு ஒன்பது மணி நேரத்திற்கு முன்போ அல்லது சூரிய கிரகணத்திற்கு இருபத்தி நான்கு மணி நேரத்திற்கு முன்போ தொடங்கும் நேரத்தைக் குறிக்கிறது.

Pregnant

சில நல்ல விஷயங்களுக்கு இந்தக் காலகட்டம் மிகவும் பொருத்தமற்றதாகக் கருதப்படுகிறது. இந்நேரத்தில், கர்ப்பிணிப் பெண்கள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். அவர்கள் கீழுள்ள சில விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மனதில் கொள்ள வேண்டிய விஷயங்கள்

மனதில் கொள்ள வேண்டிய விஷயங்கள்

கிரகணத்தின் போது வெளியே செல்ல வேண்டாம்:

கர்ப்பிணிப் பெண்கள் கிரகணத்தின் போது வெளியே செல்லக்கூடாது. இது கருவை நேரடியாக பாதிக்கும் என்று நம்பப்படுகிறது. இதன் காரணமாக குழந்தை அவரது உடலில் சிவப்பு அடையாளங்களுடன் பிறக்கிறது மற்றும் அந்த அடையாளங்கள் நிரந்தரமானவை என்றும் கூறப்படுகிறது.

கூர்மையான

கூர்மையான

கிரகணத்தின் போது கூர்மையான முனைகள் கொண்ட பொருள்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்

கர்ப்பிணிப் பெண்கள் கத்தி, ஊசி மற்றும் கத்தரிக்கோல் போன்ற கூர்மையான முனைகள் கொண்ட பொருட்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். உண்மையில், கர்ப்பிணிப் பெண்கள் மட்டுமல்ல, அவளுடைய கணவரும் இந்த பொருட்களைப் பயன்படுத்துவதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்று வேதங்கள் கூறுகின்றன. கிரகணத்தின் போது இந்தப் பொருட்களைப் பயன்படுத்துவது குழந்தையின் உடல் பாகங்களைப் பாதிக்காலம்.

உணவு வேண்டாம்:

உணவு வேண்டாம்:

கிரகண நேரத்தில் சமைத்த உணவை கர்ப்பிணிப் பெண்கள் உட்கொள்ளக்கூடாது. ஏனென்றால், கிரகணத்தின் தீங்கு விளைவிக்கும் கதிர்கள் உணவை மாசுபடுத்துகின்றன, எனவே இது குழந்தையின் ஆரோக்கியத்தை எதிர்மறையாக பாதிக்கும். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அவள் "சுதக் கல்" காலத்தில் உணவைச் சாப்பிட வேண்டியிருந்தால், அதில் துளசி இலைகளை சேர்த்த பின்னரே உட்கொள்ள வேண்டும். கிரகணம் முடிந்ததும் துளசி இலைகளை அகற்றலாம். இவ்வாறு செய்வது கிரகணத்திற்குப் பிறகும் உணவைப் பாதுகாப்பாக வைத்திருக்கிறது.

கிரகணத்திற்குப் பிறகு குளிக்கவும்

கிரகணத்திற்குப் பிறகு குளிக்கவும்

கிரகணம் முடிந்தவுடன் கர்ப்பிணிப் பெண்கள் குளிக்க வேண்டும் என்று நம்பப்படுகிறது, இல்லையெனில் குழந்தை தோல் தொடர்பான நோய்களால் பாதிக்கப்படக்கூடும்.

தூங்குவதைத் தவிர்க்கவும்:

தூங்குவதைத் தவிர்க்கவும்:

கர்ப்பிணிப் பெண்கள் கிரகணத்தின் போது தூங்கக்கூடாது, இது மீண்டும் குழந்தைக்கு கடுமையான பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். ஒருவர் தூங்கும்போது எதிர்மறை ஆற்றல் வேகமாக அவரைப் பாதிக்கும் என்று நம்பப்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Precautions Pregnant Women Need To Take On Solar Eclipse Day and Why

The solar eclipse on 6 January 2019 will be the first eclipse of the year, and one of the five such celestial events to be witnessed throughout the year.
Story first published: Tuesday, July 2, 2019, 18:17 [IST]
Desktop Bottom Promotion