For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

எமனிடமிருந்து கணவனை மீட்க சாவித்ரி இருந்த காரடையான் நோன்பு... அந்த சக்திவாய்ந்த பூஜை எப்படி செய்யணும

By Mahibala
|

மாசி மாதத்தின் இறுதி நாளும் பங்குனி மாதத்தின் முதலும் இணைகின்ற சமயத்தில் மேற்கொள்ளப்படும் ஒரு நோன்பு முறை தான் இந்த காரடையான நோன்பு என்று அழைக்கப்படுவது. அதாவது மாசி மாதத்தினுடைய கடைசி நாள் இரவில் தொடங்கி பங்குனி மாத தொடக்க நாள் காலையில் இந்த நோன்பை முடிப்பார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வேறு பெயர்கள்

வேறு பெயர்கள்

இந்த காரடையான் நோன்பு பெண்கள் இருக்கக்கூடிய முக்கியமான நோன்புகளில் ஒன்று. இதை காமாட்சி நோன்பு, கௌரி நோன்பு, சாவித்ரி நோன்பு ஆிகய பல பெயர்களால் அழைப்பார்கள். அதாவது பெண்கள் கடைபிடிக்கக் கூடிய நோன்புகளிலேயே மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த முதன்மையான நோன்பு என்றால் அது காரடையான் நோன்பு தான்.

MOST READ: முடி ரொம்ப கொட்டுதா? ஷாம்புல அரை ஸ்பூன் சர்க்கரை கலந்து தேய்ங்க... முடி வளர ஆரம்பிக்கும்

ஆரம்ப - முடிவு நேரம்

ஆரம்ப - முடிவு நேரம்

அந்த வருடத்துக்கான காரடையான் நோன்பு நாளை (5.3.19) வெள்ளிக்கிழமை வருகிறது. இதில் இந்த ஆண்டு பூஜை செய்ய வேண்டிய நல்ல நேரமாக அதிகாலை 3.30 மணி முதல் 5.30 மணி வரை என்று கூறப்படுகிறது.

எப்படி வந்தது இந்த நோன்பு?

எப்படி வந்தது இந்த நோன்பு?

வனத்தில் உயிர் பெற்று எழுந்து வந்த சத்தியவானுடன் இணைந்து அவருடைய உத்தம பத்தினியான சாவித்ரி அதே காட்டிலேயே நோன்பு அனுஷ்டித்து அந்த காட்டிலேயே இருக்கின்ற மரப்பட்டைகளினுடைய சிறிய நூழிலை எடுத்து நூலாக்கி மரப்பட்டைகளை ஆடை போல கோர்த்து அணிந்து கொண்டாள். அதோடு அங்கே கிடைத்த பழங்களையும் காட்டில் கிடைத்த துவரை பருப்பையும் வைத்து செய்த அடையையும் காயத்ரி தேவிக்கு நைவேத்தியம் செய்வித்தாள்.

நம் வீட்டில் என்ன செய்யணும்?

நம் வீட்டில் என்ன செய்யணும்?

நம்முடைய வீடுகளில் காரடையான் நோன்பு இருக்கிற பொழுது, பூஜை செய்கின்ற இடத்தை நன்கு மெழுகி கோலம் போட வேண்டும்.

சிறிய தலைவாழை இலையைப் போட்டு அநடத இலையின் நுனிப் பகுதியில் வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம், மஞ்சள் சரடு (அதன் நடுவில் மஞ்சள் கிழங்குடன் சிறிது பூ வைத்து கட்ட வேண்டும்).

இலையின் நடுவில் வெல்லம் போட்டு செய்யப்பட்ட அடையும் வெண்ணெயும் படையலாக வைக்க வேண்டும். வயது முதிர்ந்த பெண்களாக இருந்தால் தங்களுடைய அந்த இலையில் அம்பாளுக்கும் ஒரு சரடு சேர்த்து இரண்டாக வைத்துக் கொள்வார்கள்.

வாழை இலை

வாழை இலை

வாழை இலை போடுகிற போது ஒற்றைப்படை என நினைத்து மூன்று இலை போடக் கூடாது. நான்கு இலையாகப் போட வேண்டும். நான்காவதாக உள்ள இலையில் வீட்டில் உள்ள ஆண்கள் சாப்பிடுவார்கள்.

MOST READ: இந்த வேர் ஒன்னு போதும்... 70 வயசானாலும் விறைப்பு தன்மையில பிரச்சினையே வராது...

மாங்கல்ய சரடு

மாங்கல்ய சரடு

நைவேத்தியம் செய்து முடித்த பின்னர் இளம் வயதில் உள்ள தெிருமணமான பெண்களுக்கு வயதில் மூத்த பெண்கள் சாமி கும்பிட்டு விட்டு அம்பிகையின் படத்திற்கு ஒரு சரடை அணிவித்த பின் இளம் பெண்களுக்குக் கட்டி விடுவார்கள். பிறகு மூத்த பெண்கள் அவர்களாக எடுத்துக் கட்டிக் கொண்டு சாமி கும்பிடுவார்கள்.

என்ன விசேஷம்?

என்ன விசேஷம்?

இந்த நாளில் பெண்கள் சரடு கட்டிக் கொண்டால் கணவன் அவர்களை விட்டு பிரியாமல் கெட்டியாக இருப்பாராம். அதாவது மாசி சரடு பாசி படரும் என்ற வாக்கும் உண்டு. அவ்வளவு பழமையானதாகவும் தீர்க்க சுமங்கலியாக இருப்பார்களாம்.

பசுவுக்கு

பசுவுக்கு

நவேத்தியமாக வைக்கப்பட்ட அடைகளை சாப்பிட்டுவிட்ட சிலவற்றை எடுத்து வைத்திருந்து அடுத்த நாள் காலையில் பசுவுக்குக் கொடுக்க வேண்டும். அடைகளை வாழை அல்லது பலா இலைகளில் தான் படைப்பது தான் விசேஷம்.

MOST READ: உங்க வீட்டு பெண்ணுக்கும் PCOD பிரச்சினை இருக்கா? உங்க கேள்விக்கு நிபுணர்கள் பதில் இதோ...

விரதம்

விரதம்

பூஜை தொடங்கி முடியும் வரை பெண்கள் எதுவும் சாப்பிடக்கூடாது. புதிதாகன விரதம் இருப்பவர்களாக இருந்தால் ஒரே ஒரு பழம் சாப்பிட்டுக் கொள்ளுங்கள். ஆனால் நிச்சயம் பால், தயிர், மோர் என எதுவும் சாப்பிடக் கூடாது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Pooja Vidhis Of Karadaiyan Nombu 2019

karadaiyan nombu also known as karadaiyan nonbu, is a popiular tamil festival. celebrated during the time of meena sankaranti. this celebration marks the end of tamil month maasi and the beginning of pangumi karadai is the name of an offering nivedyam specially prepared on this day.
Story first published: Thursday, March 14, 2019, 16:22 [IST]
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more