For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கடக ராசியில் பிறந்தவர்களை ஏன் ஆபத்தானவர்கள் என்று கூறுகிறார்கள் தெரியுமா?

கடக ராசியை பொறுத்தவரை கடக ராசியில் பிறந்தவர்ள் வசீகரமானவர்களாக இருப்பார்கள், மற்றவர்கள் மீது அதிக அக்கறையும், என்னும் கொண்டவர்களாக இருப்பார்கள்.

|

ஜோதிட சாஸ்திரத்தின் படி ஒருவரின் தலைவிதியை நிர்ணயிப்பதில் அவர்கள் பிறந்த ராசி முக்கியமான இடத்தை வகிக்கிறது. ஒருவர் பிறந்த ராசியினை கொண்டே அவரின் குணநலன்கள், செயல்பாடுகள் இருக்கும் என்பது பல நூற்றாண்டுகளாக நம் மக்களிடையே இருக்கும் நம்பிக்கையாகும்.

Negative Traits of Cancer Born People

கடக ராசியை பொறுத்தவரை கடக ராசியில் பிறந்தவர்ள் வசீகரமானவர்களாக இருப்பார்கள், மற்றவர்கள் மீது அதிக அக்கறையும், என்னும் கொண்டவர்களாக இருப்பார்கள். எவ்வளவுதான் நல்ல குணங்கள் இருந்தாலும் கடக ராசியில் பிறந்தவர்களிடம் சில தீய குணங்களும் இருக்கத்தான் செய்கிறது. இந்த பதிவில் கடக ராசியில் பிறந்தவர்களின் தீய குணங்கள் என்னென்ன என்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சீற்றமிக்கவர்கள்

சீற்றமிக்கவர்கள்

கடக ராசியில் பிறந்தவர்களை பொறுத்தவரை இவர்கள் ஒருவர் தங்களை எப்படி நடத்துகிறார்களோ அப்படியேதான் அவர்களை நடத்துவார்கள். மற்றவர்கள் தங்களை முகத்திற்கு நேராக விமர்சனம் செய்தால் கூட அவர்கள் கவலைப்படமாட்டார்கள். இவர்கள் தங்கள் மனதிற்குள் தீரா உட்பகையை வளர்த்து கொள்வார்கள். இவர்கள் மற்றவர்கள் செய்த தவறை மன்னிக்கலாம் ஆனால் அவர்கள் செய்ததை மறக்க மாட்டார்கள்.

மாறும் மனநிலை

மாறும் மனநிலை

சந்திரனால் ஆட்சி செய்யப்படும் ராசி என்பதால் இவர்கள் மிகவும் உணர்ச்சிவப்படக்கூடிய ராசியாக இருப்பார்கள். இவர்களின் பெரிய பிரச்சினையே அடிக்கடி மாறும் இவர்களின் மனநிலைதான். சுற்றியிருக்கும் சூழ்நிலை மற்றும் சுற்றிருப்பவர்களை பொறுத்து இவர்களின் மனநிலை தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கும். சிரித்து கொண்டிருக்கும் கடக ராசிக்காரர்கள் திடீரென கோபப்படுவதையோ அல்லது அழுவதையோ நீங்கள் அதிகம் பார்க்கலாம். சில நொடிகளில் இவர்களின் மனநிலையை இவர்களால் மாற்றிக்கொள்ள இயலும். மற்றவர்கள் இவர்களிடம் நெருங்கி பழகாமல் போக காரணமே இதுதான், இவர்கள் தங்களை சுற்றி ஒரு சுவர் எழுப்பி கொள்வார்கள் அதற்குள் யாரையும் அனுமதிக்கவும் மாட்டார்கள்.

திடீரென தூரமாக சென்றுவிடுவார்கள்

திடீரென தூரமாக சென்றுவிடுவார்கள்

இவர்களின் மாறும் மனநிலையால் இவர்கள் மற்றவர்களை எளிதில் அலட்சியப்படுத்த தொடங்கிவிடுவார்கள். இது அவர்களின் மோசமான பக்கங்களில் ஒன்றாகும். சிலசமயம் இவர்கள் தங்களை தாங்களே இந்த உலகிலிருந்து தூரமாய் வைத்துக்கொள்வார்கள். கடக ராசிக்காரர்கள் உங்களின் தொடர்பு எல்லைக்கே வெளியே சென்று விட்டால் வருத்தப்படாதீர்கள் அவர்களாகவே மீண்டும் வருவார்கள். தங்களை தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும் என்று இவர்கள் நினைத்து விட்டால் இவர்களை யாராலும் நெருங்க முடியாது. அவர்கள் இப்படி விலக காரணம் அவர்கள் மனதில் ஏற்பட்ட காயமாக இருக்கலாம். இவர்களின் கூச்சசுபாவம் நம்மை குழப்புவதாக இருக்கலாம். அவர்களுக்கு நம்மை பிடிக்காதது போல நமக்கு தோன்றலாம் ஆனால் உண்மை அதுவாக இருக்காது.

MOST READ:உங்கள் வீட்டில் இத்தனை விநாயகர் சிலைகள் இருக்கிறதா? உங்களுக்கு பெரிய ஆபத்து ஏற்படலாம் ஜாக்கிரதை...!

பொறாமை குணம்

பொறாமை குணம்

பொறாமை குணம் அனைவருக்குள்ளும் இருப்பதுதான் ஆனால் இவர்களுக்கு அது கொஞ்சம் அதிகமாக இருக்கும். இவர்கள் ஒரு காதல் உறவில் இருக்கும்போது தன்னுடைய பாதுகாப்பற்ற உணர்வால் எப்பொழுதும் தங்கள் உறவின் மீது அதிக கவனம் செலுத்துவார்கள். இந்த அதீத கவனமே நாளடைவில் பொறாமையாக மாறும். இவர்களின் பொறாமையை இவர்கள் பல வழிகளில் வெளிப்படுத்துவார்கள். மற்றவர்களுடன் பேசும்போது கோபப்படுவது, உங்களுடன் பேசாமல் இருப்பது, தன்னை தானே வருத்திக் கொள்வது என இவர்களின் பொறாமை அதிகரித்து கொண்டே செல்லும்.

சொந்தமான உணர்வு

சொந்தமான உணர்வு

பொறாமை இருக்கும் இடத்தில் பொஸசிவ் எண்ணமும் கண்டிப்பாக இருக்கும். பொறாமையின் நீட்சியே தனக்கு மட்டுமே சொந்தம் என நினைக்கும் பொஸசிவ் குணமாகும். குறிப்பாக காதல் உறவுகளில் இவர்களின் பொஸசிவ் எண்ணம் மிகவும் அதிகமாகவே இருக்கும். மற்றவர்களால் புறக்கணிக்கப்படுவதை இவர்களால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.

தாழ்வு மனப்பான்மை

தாழ்வு மனப்பான்மை

இதனை இவர்களின் குறைபாடு என்று கூற இயலாது ஆனால் அவர்களின் மிகப்பெரிய பலவீனம் இதுதான். இவர்களுக்கு எப்பொழுதும் தோல்வியை கண்டு அதிக பயம் இருக்கும். தான் செய்யும் ஒரு காரியம் தோல்வியடையும் என்று நினைத்தால் இவர்கள் அதனை வெற்றிகரமாக முடிக்க முயலமாட்டார்கள் மாறாக அந்த வேலையையே கைவிட்டுவிடுவார்கள். இது அவர்களின் காதல் வாழ்க்கைக்கும் பொருந்தும். வெளிப்புற உந்துதல்கள் இவர்களுக்குள் மாற்றத்தை ஏற்படுத்த இயலாது, இவர்களாகவே மாறினால்தான் உண்டு.

ஒருபோதும் உண்மையான முகத்தை காட்டமாட்டார்கள்

ஒருபோதும் உண்மையான முகத்தை காட்டமாட்டார்கள்

இவர்கள் மனதில் என்ன நினைக்கிறார்கள் என்பதை ஒருபோதும் கணிக்க இயலாது. ஒரு நிமிடம் மகிழ்ச்சியாகவும், உற்சாகமாகவும் இருக்கும் இவர்கள் அடுத்த நிமிடமே சோர்வானவர்களாக மாறிவிடுவார்கள். இவர்களுடன் பழக வேண்டுமெனில் உங்களுக்கு அதிக பொறுமையும், எந்த சூழ்நிலையையும் சமாளிக்கும் ஆற்றலும் நிச்சயம் வேண்டும். இவர்களின் கூச்சசுபாவத்தால் ஒருபோதும் இவர்கள் மனம்திறந்து பேச முன்வரமாட்டார்கள். இவர்கள் இப்படி நடந்து கொள்வதால் இவர்களுடன் நெருங்கி பழகுவது என்பது அனைவருக்கும் கடினமானதாக இருக்கும்.

MOST READ:தற்கொலை செய்து கொண்டவர்களின் ஆத்மாவிற்கு மரணத்திற்கு பின் என்ன நடக்கும் தெரியுமா?

எச்சரிக்கை உணர்வு

எச்சரிக்கை உணர்வு

இவர்கள் அதிக எச்சரிக்கை உணர்வும், பயமும் கொண்டவர்களாக இருப்பார்கள். இதனாலேயே இவர்கள் எப்பொழுதும் தன் வட்டத்தை விட்டு வெளியே வரமாட்டார்கள். இவர்கள் மாற்றத்திற்கு ஒருபோதும் தயாராக இருக்கமாட்டார்கள். எந்தவொரு முடிவையும் எடுப்பதற்கு முன்னால் இவர்கள் பாதுகாப்பான முடிவை தேடுவார்கள். பயம் இவர்களின் முன்னேற்றத்திற்கு பெரிய தடங்கலாக இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Negative Traits of Cancer Born People

Cancer boen people are generllay a charming person, but still they have many negative qualities.
Desktop Bottom Promotion