Latest Updates
-
பிஜ்னோரில் நடந்த கொடூரம்! லிவ்-இன் உறவில் இந்த அறிகுறிகள் தெரிந்தால் உஷார், இல்லையென்றால் ஆபத்து! -
கோடையில் பால் போன்ற சருமம் வேண்டுமா? அப்ப இந்த மைதா ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மே 8 முதல் இந்த 3 ராசிக்காரர்களின் செல்வம் டபுள் ஆகப்போகுது! -
வீட்டில் இந்த 4 செடிகள் இருந்தா போதும்… புழுதிப் புயலையும் தாண்டி அதிர்ஷ்டம் தேடி வரும்! -
கேரட்டும், மாங்காயும் இருந்தா.. இப்படி செஞ்சு பாருங்க.. எல்லாத்துக்குமே டக்கரா இருக்கும்.. -
கப்பர் யோக காலத்தில் பணத்தை இழக்காதீங்க! இந்த 5 வாஸ்து மாற்றங்கள் செழிப்பை அள்ளித்தரும்! -
Mathi Meen Benefits: அடிக்கடி மத்தி மீன் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளை பட்டியலிட்ட டாக்டர் தினேஷ்! -
May 2026 Monthly Numerology: உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. மே மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
கொளுத்தும் வெயிலில் உடல் எடையைக் குறைக்க உதவும் 3 விதமான கூழ் ரெசிபிக்கள் - எப்படி செய்யணும் தெரியுமா? -
இன்றைய ராசிபலன் 02 மே 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு பொறுமையை சோதிக்கும் நாளாக இருக்குமாம்
வாஸ்துவின் படி குழந்தைகளின் அறையில் செய்யும் இந்த எளிய மாற்றங்கள் அவர்களுக்கு வெற்றியை பெற்றுத்தரும்
குழந்தைகளின் வளமான எதிர்காலம்தான் அனைத்து பெற்றோர்களின் கனவாக இருக்கும். அதற்கு வாஸ்து சாஸ்திரம் உதவக்கூடும்.
வாஸ்து சாஸ்திரம் பல்லாயிரம் ஆண்டுகளாக இந்தியாவில் கடைபிடிக்கப்பட்டு வரும் ஒரு கட்டடக்கலை நடைமுறையாகும். வீட்டில் இருக்கும் வாசற்படி தொடங்கி படுக்கையறை வரை அனைத்திற்கும் எப்படி கட்ட வேண்டும், எந்த திசையில் இருந்தால் நல்லது ஏற்படும், எந்த திசையில் இருப்பது ஆபத்து என அனைத்து வாஸ்து சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.

குழந்தைகளின் வளமான எதிர்காலம்தான் அனைத்து பெற்றோர்களின் கனவாக இருக்கும். அதற்கு வாஸ்து சாஸ்திரம் உதவக்கூடும். குழந்தைகளின் அறையில் நீங்கள் செய்யும் சில மாற்றங்கள் அவர்களுக்கு படிப்பின் மீதான ஆர்வத்தை அதிகரித்து அவர்களின் வளமான வாழ்க்கைக்கு வழிவகுக்கும் என்று வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. இந்த பதிவில் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு செய்ய வேண்டிய வாஸ்து மாற்றங்கள் என்னென்ன என்று பார்க்கலாம்.

படிக்கும் அறையின் திசை
குழந்தைகளின் படிக்கும் அறை எப்பொழுதும் கிழக்கு, வடக்கு அல்லது வடகிழக்கு திசையில் இருக்க வேண்டும் . இது அவர்களின் புரிந்து கொள்ளும் தன்மையை அதிகரிக்கிறது. படிக்கும் அறையின் கதவானது இந்த திசைகளில் ஏதாவது ஒரு திசையில் இருக்க வேண்டும்.

படிப்பு அறையில் செய்யக்கூடாதவை
படிக்கும் அறை எப்பொழுதும் கழிவறைக்கு கீழாகவோ அல்லது பீம்க்கு கீழேயோ இருக்கக்கூடாது. படிக்கும் நேரத்தில் புத்தகத்தின் மீது கண்ணாடியின் நிழல் விழும்படி இருக்கக்கூடாது. இது குழந்தைகளின் மீது அதிக அழுத்தத்தை ஏற்படுத்தும்.

படிக்கும் அறையின் விளக்கு
குழந்தைகள் படிக்கும் அறையில் எப்பொழுதும் வெளிச்சம் இருக்க வேண்டும். ஒருவேளை அரை மங்கலாக இருந்தால் அது குழந்தைகளுக்கு படிப்பின் மீதிருக்கும் ஆர்வத்தை குறைக்கும். சூரிய ஒளியோ அல்லது செயற்கை ஒளியோ குழந்தைகள் படிக்கும் போது கண்டிப்பாக இருக்க வேண்டும். குழந்தைகளின் நிழல் புத்தகத்தின் மீது விழக்கூடாது.

கவனத்தை அதிகரிக்க
படிக்கும் போது பெரும்பாலும் கிழக்கு திசையில் அமர்ந்து படிப்பது அதிக கவனத்தை கொடுக்கும். கவனத்தை சிதற வைக்கும் திறந்த அலமாரிகள், தூண்கள், கூர்மையான பொருட்கள் போன்றவை அருகில் இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

சுத்தமாக இருக்க வேண்டும்
படிக்கும் அறையும், மேஜையும் எப்பொழுதும் சுத்தமாக இருக்க வேண்டும். படிக்க தேவையான புத்தகங்கள் மட்டுமே மேஜையின் மீது இருக்க வேண்டும். மேஜை சுவருக்கு எதிராக இல்லாதபடி பார்த்துக் கொள்ள வேண்டும். ஞானத்தின் கடவுள் சரஸ்வதியின் படத்தை அறையில் மாட்டி வைக்கவும், இது அறையில் நேர்மறை ஆற்றலை அதிகரிக்கும்.

அலங்கார பொருட்கள்
குழந்தைக்கு படிப்பதற்கு உத்வேகம் அளிக்க, ஒரு குதிரையின் படம், சூரியன் உதிப்பது, படிப்பின் கடவுள் சரஸ்வதி போன்ற படங்களை அறையில் வைக்கலாம். இதுமட்டுமின்றி குழந்தைகள் வென்ற சான்றிதழ்கள், பரிசுகளை அந்த அறையில் வைப்பது அவர்களின் உத்வேகத்தை அதிகரிக்கும். இதில் வாஸ்து மட்டுமின்றி உளவியல்ரீதியான உண்மைகளும் உள்ளது.

குழந்தையின் படுக்கையறை
குழந்தையின் அறையில் இருக்கும் பாத்ரூமின் கதவு படுக்கைக்கு நேர்எதிரில் இருக்கக்கூடாது. குளியலறை ஆற்றலை வெளியேற்றும் இடமாக கருதப்படுகிறது. படுக்கையறை சதுரம் அல்லது செவ்வக வடிவில் இருக்க வேண்டும். இது நான்கு திசைகளையும், பஞ்ச பூதங்களின் சமநிலையையும் ஏற்படுத்துகிறது.

சுவரின் நிறம்
சுவரின் நிறம் இதில் முக்கியமான பங்கை வகிக்கிறது. குழந்தைகளின் அறையின் நிறத்தை பொறுத்தவரை பச்சை அதிகம் பரிந்துரைக்கப்படும் நிறமாக இருக்கிறது. அதிக சுறுசுறுப்பாகவும், அதிகம் கோபப்படும் குழந்தைகளின் அறைக்கு நீல நிறம் பரிந்துரைக்கப்படுகிறது. அடர் நிறங்களை தவிர்ப்பது நல்லது.

நாற்காலிகள்
குழந்தைகளின் அறையில் இருக்கும் நாற்காலிகள் சுவரை ஒட்டியபடி இருக்கக்கூடாது. இதனால் அறைக்குள் வரும் நேர்மறை ஆற்றல்களில் எந்த தடையும் இருக்காது. மரத்தால் செய்யப்பட்ட கட்டில்களை உபயோகிப்பது நல்லது. படிக்கும் மேஜை குழந்தைகள் படிக்கும் போது வடகிழக்கு திசையில் இருக்க வேண்டும்.

காற்றோட்டம்
குழந்தைகளின் அறையில் காற்றோட்டம் இருக்க வேண்டியது மிகவும் அவசியமாகும். ஜன்னல்களை திறந்து வைத்திருப்பது, குறைந்த அளவாவது திறந்து வைத்திருப்பது அறைக்குள் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றும். மேலும் காற்றோட்டத்தை அதிகரிக்கும்.



Click it and Unblock the Notifications