Latest Updates
-
மசாலா கோதுமை தோசையும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 06 மே 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் தேடிவருமாம் -
ராகு-சந்திர சேர்க்கையால் உருவாகும் கிரகண யோகம்: மே 10 முதல் இந்த 3 ராசிக்காரங்க உஷாரா இருக்கணும்.. -
வெயிலால் எரியும் சருமத்தை கூலாக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை தினமும் நைட் போடுங்க.. -
இன்ஸ்டாகிராம் 'போலி லவ் குரு' கும்பல் வேட்டை: தம்பதிகளுக்கு போலீஸ் விடுத்த அதிரடி எச்சரிக்கை! -
Mothers Day 2026: வேலைக்கு செல்லும் அம்மாக்களுக்கான சில ஆரோக்கிய டிப்ஸ்! -
இன்ஸ்டாகிராம் ஜோதிடர் பெயரில் பகீர் மோசடி! ஆன்மீக வலை விரித்து பெண்களை மிரட்டிய கொடூரம்! -
மொறுமொறுப்பான.. சோயா பாப்கார்ன் - எப்படி செய்றதுன்னு பாத்து செய்யுங்க.. குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க.. -
குரு-சுக்கிர சேர்க்கையால் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: மே 14 முதல் இந்த 3 ராசிகளுக்கு பண வரவு அதிகரிக்கும்! -
கொளுத்தும் கோடையில் கற்றாழை வெச்சு.. இப்படி ஒருவாட்டி குழம்பு செய்யுங்க.. மீன் குழம்பு மாதிரி இருக்கும்..
இந்த 5 ராசியில பிறந்தவங்க எப்பவும் எரிச்சலூட்டுற மாறியே நடந்துக்குவாங்க..உங்க ராசி இல்லையே..!
நம்மை சுற்றியிருப்பவர்களின் குணங்கள் எப்பொழுதும் நமது மகிழ்ச்சியின் மீது தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் சுற்றியிருப்பவர்கள் எரிச்சலூட்டுபவர்களாக இருந்தால் நமது மகிழ்ச்சி நிச்சயம் பாதிக்கப்படும்.
நாம் அனைவருக்குமே மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ வேண்டும் என்ற ஆசை இருக்கத்தான் செய்யும். அந்த ஆசை நியாயமானதும் கூட. மகிழ்ச்சியான வாழ்க்கை என்பது எப்பொழுதும் நமது கைகளில் மட்டுமில்லை நம்மை சுற்றியிருப்பவர்களின் கையிலும் இருக்கிறது.

நம்மை சுற்றியிருப்பவர்களின் குணங்கள் எப்பொழுதும் நமது மகிழ்ச்சியின் மீது தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் சுற்றியிருப்பவர்கள் எரிச்சலூட்டுபவர்களாக இருந்தால் நமது மகிழ்ச்சி நிச்சயம் பாதிக்கப்படும். ஆனால் அவர்கள் முற்றிலும் தீமையானவர்களா என்பதையும் நாம் யோசித்து பார்க்க வேண்டும். இந்த பதிவில் உங்களை எரிச்சலூட்டும் ராசிக்காரர்கள் யார் யாரென்று பார்க்கலாம்.

மகரம்
மகர ராசிக்காரர்கள் எப்பொழுதும் எதார்த்தம் மற்றும் செயல்திறன் மீது அதிக நம்பிக்கை கொண்டவர்கள். ஆனால் மற்றவரகளை காயப்படுத்த அவர்கள் ஒருபோதும் யோசிக்க மாட்டார்கள். அவர்களுக்கு நீண்ட கால பயனை தரும் முடிவுகளே மிகவும் முக்கியமாகும், எனவே உற்பத்திக்காகவும், பாதுகாப்புக்காகவும் இவர்கள் மற்றவர்கள் காயப்படும் படியும், எரிச்சலூட்டும் படியும் நடந்து கொள்வார்கள். அதனை சீரியஸாக எடுத்து கொள்ளாதீர்கள். ஏனெனில் இவர்கள் உங்களின் எந்த சூழ்நிலையிலும் உடனிருக்கும் நம்பிக்கைக்குரியவர்கள்.

சிம்மம்
மற்றவர்களின் கவனத்தை ஈர்க்காமல் இவர்களால் வாழ முடியாது, ஆனால் அதற்கு காரணம் அவர்களின் சுயநலம்தான். உண்மையில் சொல்லப்போனால் இவர்கள் மகிழ்ச்சியாய் இருப்பதற்கு மற்றவர்களின் பாராட்டுக்கள் மிகவும் அவசியமானதாகும். இவர்களின் இதயம் மிகப்பெரியது அதில் அனைவருக்கும் இடம் இருக்கும். இவர்கள் திருப்தி அடைந்து விட்டால் அதற்கு பிறகு மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்ற தொடங்கி விடுவார்கள். ஆனல் அதுவரை இவர்களை சமாளிப்பது எரிச்சலூட்டும் விஷயம்தான்.

துலாம்
இவர்கள் அடிக்கடி சறுக்கும் ஒரு ராசிக்காரர் ஆவார். இவர்கள் ஆழமான உணர்ச்சிகளை காட்டிலும் அழகான தோற்றத்தில் எளிதில் மயங்கி விடுவார்கள், ஆனால் அதற்கான நியாயமான காரணமும் இவர்களிடம் இருக்கும். அழகையும், ஆற்றலையும் சமநிலையில் சமாளிப்பதில் இவர்கள் வல்லவர்கள் ஆனால் அதற்காக இவர்கள் கையாளும் முறைகள் பெரும்பாலும் வெகுசிலரை தவிர மற்றவர்களை எரிச்சலடைய வைப்பதாக இருக்கும்.

கடகம்
தண்ணீர் தொடர்பான அனைத்து ராசிகளுக்கும் அவர்களின் உணர்ச்சிகள்தான் முதல் எதிரி. இவர்கள் குடும்பம் மற்றும் நண்பர்களுடன் மிகவும் நெருங்கிய உறவில் இருப்பார்கள், அவர்களுக்காக எதையும் செய்வார்கள். ஆனால் அவர்கள் மட்டுமே இவர்களிடம் இருந்து உதவியை எதிர்பார்க்க முடியும். ஏனெனில் மற்றவர்கள் மீது அக்கறை செலுத்தவோ அல்லது அவர்களின் கோரிக்கைகளை பரிசீலனை செய்யகூடவோ இவர்கள் நேரம் ஒதுக்கமாட்டார்கள்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் பல விஷயங்களை பற்றி ஆழமாக சிந்திப்பார்கள். அவர்கள் இந்த் உலகம் அழகாகவும், அமைதியாகவும் இருக்க வேண்டுமென்ற எண்ணம் கொண்டவர்கள். ஆனால் அவர்கள் பெரிய விஷயங்களை மட்டுமே கருத்தில் கொள்வார்கள். அவர்கள் மனிதர்களுடனான உறவில் ஆழ்ந்த நம்பிக்கை உடையவர்கள் ஆனால் தனிநபர் உறவுஎன்று வரும்போது இவர்கள் மிகவும் விலகியே இருப்பார்கள். இதனால் இவர்களுடன் பழக்க விரும்புபவர்களுக்கு ஏமாற்றமும், எரிச்சலும் மிஞ்சும்.



Click it and Unblock the Notifications