Just In
- 1 hr ago
தலைசுற்ற வைக்கும் உலகின் சில விசித்திரமான பாரம்பரிய புத்தாண்டு கொண்டாட்டங்கள்... சிரிக்காதீங்க...!
- 6 hrs ago
இந்த ராசிக்காரங்களுக்கு குருபகவான் முழு யோகங்களையும் வாரி வழங்குவார் தெரியுமா?
- 18 hrs ago
வாஸ்துவின் படி உங்கள் புத்தாண்டு காலண்டரை இந்த திசையில வைச்சுறாதீங்க...இல்லனா பிரச்சினைதான்...!
- 18 hrs ago
ஆண்களே… உங்கள் ஆண்குறியில் ஏற்படும் பிரச்சனைகள் என்னென்ன தெரியுமா?...தீர்வுகளை தெரிந்துகொள்ளுங்கள்…!
Don't Miss
- Sports
அனுஷ்காவிற்கு ஸ்பெஷல் கிப்ட்.. மறக்க முடியாத திருமண நாள்.. விராட் கோலி செம ஹேப்பி!
- Movies
ரஜினி ரகுவரன்.. நேத்து ஆன்டணிக்கு.. இன்று பாட்ஷாவுக்குப் பிறந்த நாள்!
- News
திமுகவில் இருந்து பழ. கருப்பையா விலகல்- கார்ப்பரேட் நிறுவனமாக செயல்படுவதாக குற்றச்சாட்டு!
- Automobiles
பாஜக-வை வீழ்த்திய உத்தவ்.. பதறிபோய் இந்தியா ஓடி வந்த உலக பணக்காரர் ரிச்சர்ட்... எதற்காக தெரியுமா..?
- Technology
டாப் 10 2019: பாகிஸ்தானில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட பிரபலங்கள்
- Education
8, 10-வது தேர்ச்சியா? தருமபுரி அரசு பள்ளியில் சத்துணவு அமைப்பாளர் வேலை!
- Finance
நான் செய்த மிகப்பெரிய தவறு இதுதான்.. உண்மையை உடைந்த ஆனந்த் மஹிந்திரா..!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
கிருஷ்ணருக்கும் துரதிர்ஷ்டத்தின் எண்ணான 8 க்கும் உள்ள ரகசிய தொடர்புகள் என்ன தெரியுமா?
உலகத்தை காப்பாற்றி தர்மத்தை நிலைநாட்டுவதே மகாவிஷ்ணுவின் பணியாகும். அதற்காகத்தான் பூமியில் அதர்மம் அதிகரிக்கும் போதெல்லாம் அதனை அழித்து பூமியை ரட்சிக்க மகாவிஷ்ணு பல அவதாரங்களை எடுத்தார். விஷ்ணுவின் ஒவ்வொரு அவதாரத்திலும் உலக நன்மைக்காக பல வாதங்கள் செய்யப்பட்டது என்பது மறுக்கமுடியாத உண்மையாகும்.
மஹாவிஷ்ணுவின் அவதாரத்தில் அனைவருக்கும் பிடித்த அவதாரம் என்றால் அது கிருஷ்ணர் அவதாரம்தான். பூமியின் பாரத்தை குறைக்கவும், அதர்மத்தை அழிக்கவும் கிருஷ்ணராய் பிறந்து அவர் நிகழ்த்திய அற்புதங்கள் எண்ணற்றவை. கிருஷ்ண அவதாரத்தில் நாம் பலரும் கவனிக்காத ஒரு அம்சங்கள் நிறைய உள்ளன. அதில் ஒரு அம்சத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.

எண் 8
பொதுவாக எண் 8 ஆனது துரதிர்ஷ்டமான எண்ணாக கருதப்படுகிறது. வீடோ, வண்டியோ ஏன் செல்போன் எண் கூட 8 ல் முடிந்து விடக்கூடாது என்று எண்ணுபவர்கள் பலர் இருக்கிறார்கள். ஆனால் உண்மையில் 8 ஆம் எண் என்பது துரதிர்ஷ்டமான எண் கிடையாது என்பதே உண்மை. 8 ஆம் எண்ணின் வடிவம் முடிவிலியை குறிப்பதாகும். 8 என்பது முடிவிலா அன்பு, முடிவிலா மகிழ்ச்சி போன்றவற்றின் அடையாளமாகும். நீங்கள் நன்கு கவனித்து பார்த்தால் கிருஷ்ணருக்கும், 8 ஆம் எண்ணுக்கும் பல சுவாரஸ்யமான தொடர்புகள் இருக்கும். அந்த தொடர்புகள் என்னென்ன என்று மேற்கொண்டு பார்க்கலாம்.

அவதாரம்
விஷ்ணு மொத்தம் பத்து அவதாரங்களை எடுப்பார் என்று விஷ்ணு புராணம் கூறுகிறது. அதில் பெரும்பாலானோருக்கு பிடித்த அவதாரமான கிருஷ்ண அவதாரம்தான் எட்டாவது அவதாரம் ஆகும். எட்டுக்கும், கிருஷ்ணருக்குமான தொடர்பு இங்கிருந்தே தொடங்கிவிட்டது.

பிறப்பு
கிருஷ்ணர் பிறப்பதற்கு முன்பாகவே கம்சனிடம் அசரீரி கூறியது என்னவெனில் தேவகிக்கும், வாசுதேவருக்கும் பிறக்கும் எட்டாவது குழந்தைதான் கம்சனின் உயிரை பறிக்கும் என்பதாகும். பிறக்கும் போதே எட்டாம் எண்ணுடன் தொடர்புடன்தான் பிறந்தார் கிருஷ்ணர்.
MOST READ: இச்சாதாரி நாகங்கள் வாழ்ந்தது உண்மையா? இச்சாதாரி நாகம் பற்றிய வியக்கவைக்கும் ரகசியங்கள்...

பிறந்தநாள்
கிருஷ்ணர் எப்படி தேவகிக்கும், வாசுதேவருக்கும் எட்டாவது மகனாக பிறந்தாரோ அதேபோல கிருஷ்ண பக்ஷ தொடங்கிய எட்டாவது நாளில்தான் பிறந்தார். இது மட்டுமின்றி எட்டு கிருஷ்ணரின் வாழ்க்கையுடன் பல வழிகளில் தொடர்பு கொண்டது.

மனைவிகள்
கிருஷ்ணருக்கு கோபியர்களையும் சேர்த்து மொத்தம் 16008 மனைவிகள் இருந்தனர். ஆனால் அவர் தன்னுடைய ராணிகளாக ஏற்றுக்கொண்டது ருக்மிணி, சத்யபாமா, ஜாம்பவதி, களின்டி, மித்ரவிந்தா, நாகனஜிதி, பத்ரா மற்றும் லக்ஷ்மணா என்னும் 8 பெண்களைத்தான். இவர்கள்தான் கிருஷ்ணரின் அஷ்டபார்யாக்கள் என்று அழைக்கப்பட்டார்கள்.

கோபியர்கள்
கிருஷ்ணரின் வாழ்க்கையில் கோபியர்கள் மிகவும் முக்கியமானவர்கள். கிருஷ்ணர் நரகாசுரனை அழித்து அவனிடம் சிக்கியிருந்த அனைத்து கோபியர்களையும் மீட்டார் . இதில் சுவாரசியம் என்னவென்றால் அவர் மீட்ட கோபியர்களின் எண்ணிக்கை 16100 ஆகும். அதன் கூட்டுத்தொகையை என்னவென்று பார்த்தால் 1+6+1+0+0= 8.

பகவத்கீதை
குருஷேத்திர போர் தொடங்கிய போது கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு கூறிய வாழ்க்கை இரகசியங்களே பகவத்கீதை என்னும் மாபெரும் நூலாக மாறியது. இதில் நான்காம் அத்தியாயத்தில் 8 வது ஸ்லோகம் திரும்ப திரும்ப மகாபாரதத்தில் வரும். அது " பரீத்ராணாய சாதுனாம் வினைசேஷாய தஸ்க்ரித்தாம் தர்ம சமஸ்தபணர்த்தாய சம்வவாமி யுகே யுகே " என்பதாகும். இதன் அர்த்தம் என்னவெனில் " நல்லவர்களை பாதுகாக்கவும், அதர்மத்தை அழிக்கவும், தர்மத்தை நிலைநாட்டவும் நான் அனைத்து யுகத்திலும் பிறப்பேன் " என்பதுதான்.
MOST READ: தலையணை வைக்காமல் தூங்கினால் உங்கள் உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் தெரியுமா?

ஆயுட்காலம்
கிருஷ்ணர் பல யுகங்களாய் வாழ்ந்து வந்தாலும் மனிதராய் பிறந்த ஒவ்வொரு அவதாரத்திலும் அவர் இறக்கத்தான் செய்தார். அதன்படி கிருஷ்ண அவதாரத்தில் அவர் 125 ஆண்டுகள் வாழ்ந்ததாக கூறப்படுகிறது. இதன் கூட்டுத்தொகையை பார்த்தால் கூட 1+2+5=8 தான். எனவே எட்டாம் எண்ணை துரதிஷ்டமான எண்ணாக பார்க்காதீர்கள். அது விஷ்ணுவின் ஆசீர்வாதமாக கூட இருக்கலாம்.