For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மகாபாரதத்தை வீட்டில் வைத்திருப்பது குடும்பத்திற்கு நல்லதல்ல என்று கூறப்படுவது எந்த அளவிற்கு உண்மை?

இந்தியாவின் முக்கிய புத்தகங்களில் ஒன்றாக மகாபாரதம் இருந்தாலும் அதனை வீட்டில் வைக்கக்கூடாது என்ற பரவலான நம்பிக்கை மக்களிடையே உள்ளது.

|

இந்தியாவின் இருபெரும் இதிகாசங்களில் ஒன்று மகாபாரதம் ஆகும். பூமியின் பாரத்தை குறைத்து தர்மத்தை நிலைநாட்ட விஷ்ணு கிருஷ்ண அவதாரமெடுத்து பாண்டவர்களுக்கு தலைமையேற்று குருஷேத்திர போரை நடத்தி அதர்மத்தை அழித்தார். மகாபாரதத்தில் அர்ஜுனனுக்கு கிருஷ்ணர் வழங்கிய உபதேசம் பகவத்கீதை என்று அழைக்கப்படுகிறது.

Is keeping Mahabharata at home a bad omen?

இந்தியாவின் முக்கிய புத்தகங்களில் ஒன்றாக மகாபாரதம் இருந்தாலும் அதனை வீட்டில் வைக்கக்கூடாது என்ற பரவலான நம்பிக்கை மக்களிடையே உள்ளது. இந்த நம்பிக்கை ஏற்பட காரணம் என்ன? அது எந்த அளவிற்கு உண்மை என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஏன் இந்த நம்பிக்கை?

ஏன் இந்த நம்பிக்கை?

மக்களை பொறுத்தவரை மகாபாரதம் தர்மத்தை வலியுறுத்தும் நூலாக இருந்தாலும் அது போர், தந்திரம், பகை மற்றும் கொடூரம் நிறைந்த கதையாக உள்ளது. அப்படிப்பட்ட புத்தகத்தை வீட்டில் வைப்பது நமது வீட்டிலும் அது போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தி குடும்பத்தின் அமைதியை சீர்குலைக்கும் என்று நம்பப்படுகிறது.

இது உண்மையா?

இது உண்மையா?

இன்றைய மக்களிடம் இதனை கேட்டால் அவர்கள் இதனை மூடநம்பிக்கை என்றுதான் கூறுவார்கள். நீங்கள் எப்போதும் அதனைப்பற்றியே நினைத்தால் உங்கள் உங்கள் வாழ்வில் அமைதியை இழப்பீர்கள் என்று முன்னோர்கள் கூறுகிறார்கள். ஆனால் இதற்கும் எதார்த்தத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. மகாபாரதம் உண்மையில் ஒரு ஆழமான மற்றும் அழகான காவியம் ஆகும்.

போரின் சின்னம்

போரின் சின்னம்

இந்த காவியத்தை வீடுகளில் வைக்காததன் பின்னணியில் உள்ள அடிப்படை காரணம் என்னவென்றால், அது வீட்டில் குழப்பத்திற்கு வழிவகுக்கும் என்பதாகும். இந்த காவியம் தர்மம் மற்றும் அதர்மத்திற்கு இடையே நடந்த மாபெரும் போரின் அடையாளமாக இருக்கிறது. ஆனால் இதை படிப்பது குடும்ப உறுப்பினர்களிடையே பிரச்சினைகளை உண்டாக்கும் என்று கூறப்டுகிறது. ஆனால் அது உண்மையல்ல.

MOST READ:வாஸ்து சாஸ்திரத்தின் படி திருமணமாகாத ஆண்கள் தூங்கும்போது இந்த தவறுகளை ஒருபோதும் செய்யக்கூடாது...!

மகாபாரதம் புனிதமானதா?

மகாபாரதம் புனிதமானதா?

மகாபாரத்தில் இருக்கும் ஒரு சிறு பகுதிதான் உலகம் போற்றும் வாழ்க்கை நெறி தத்துவமான பகவத்கீதையாகும். பகவத்கீதையை உள்ளடக்கிய காவியமான இது எப்படி புனிதமற்றதாக இருக்க முடியும்.

மகாபாரதத்தின் சிறப்பு

மகாபாரதத்தின் சிறப்பு

மகாபாரதம் உலகின் மிகப்பெரிய காவியமாக கருதப்படுகிறது. இதில் 100,000 மேலான ஸ்லோகங்களும், 200,000 இலட்சத்திற்கும் மேலான தனிப்பட்ட வரிகளும் உள்ளது. மொத்தம் இதில் 18 இலட்சம் வார்த்தைகள் இருக்கிறது. மொத்த மகாபாரதமும் உலகின் பெரிய காவியங்களான இலியட் மற்றும் ஒடிசியை விட 10 மடங்கு பெரியதாகும்.

ஐந்தாவது வேதம்

ஐந்தாவது வேதம்

மகாபாரதம் ஐந்தாவது வேதமாக கருதப்படுகிறது, ரிக், யஜுர், சாம மற்றும் அதர்வண வேதத்தை தொடர்ந்து இது ஐந்தாவது வேதமாகும். இதனால் இதன் மகத்துவத்தை உலகமே நன்கு அறியும்.

மகாபாரதத்தின் கலாச்சார முக்கியத்துவம்

மகாபாரதத்தின் கலாச்சார முக்கியத்துவம்

இந்தியாவின் கலாச்சார கண்ணோட்டத்திலிருந்து வரும் புத்தகங்களில் மகாபாரதம் மிக முக்கியமானது. மகாபாரதம் வழங்கும் கலாச்சாரம் மற்றும் நாகரிகத்தின் உண்மையான உருவகத்தை வேறு எங்கும் காணமுடியாது. மகாபாரதத்தில் நல்ல குணங்கள் மற்றும் நடத்தைகள் சமூகத்தின் உயர்ந்த நிலையில் வைக்கப்பட்டது.

MOST READ:ஒருதலை காதலில் இருந்து உங்களுக்கு கிடைக்கும் நல்ல அனுபவங்கள் என்ன தெரியுமா?

 மகாபாரதத்தின் சமூக முக்கியத்துவம்

மகாபாரதத்தின் சமூக முக்கியத்துவம்

மகாபாரதம் சமூக அறிவியல் பற்றிய புத்தகமாகும். இது சமூக வாழ்க்கையின் அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கியது. அப்போதைய சமுதாயத்தின் நேர்த்தியான வடிவம் மிகவும் துல்லியமாக இதில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அறநெறி, வாழ்க்கைமுறைகள், கல்வி, பாலியல் மற்றும் உளவியல் பார்வைகள் தொடர்பான சமூகப் பிரச்சினைகள் அனைத்தும் மகாபாரதத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Is keeping Mahabharata at home a bad omen?

There is a widely-spread belief that you should not keep Mahabharata scripture at home.
Story first published: Monday, July 8, 2019, 11:21 [IST]
Desktop Bottom Promotion