For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஹிட்லருக்கு போர் ஏவுகணை தயாரிக்க வேதங்கள் கொண்டு உதவிய தென்னிந்திய அறிஞர் யார் தெரியுமா?

|

உலகம் இன்று மிகசிறந்த கண்டுபிடிப்புகள் என்று கொண்டாடும் பலவும் நம் முன்னோர்களால் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே கண்டுபிடிக்கப்பட்டவைதான். இன்று உலகத்தில் இருக்கும் அனைத்து நாடுகளும் தங்களின் பெருமைகளாக கூறிக்கொள்ளும் ஆயுதங்கள் அனைத்தையும் நாம் புராணங்களிலேயே பார்க்கலாம்.

மூன்றாம் உலகப்போர் ஏற்படாமல் இருக்க காரணம் இன்று பல நாடுகளிடம் அணுகுண்டுகள் இருப்பதுதான். இப்போது போர் மூண்டால் அது சாதாரண போராக இருக்காது அணுஆயுத போராகத்தான் இருக்கும். அதனால் அழிவு என்பது அனைத்து நாடுகளுக்கும் இருக்கும். அதற்கு பயந்தே அதிகார வர்க்கம் அணுஆயுத போரை இன்னும் துவக்காமல் இருக்கிறது. இந்த அணுஆயுதங்களை பற்றியெல்லாம் நமது வேதங்களில் விரிவாக கூறப்பட்டுள்ளது. அதனை முதன் முதலாக அறிந்து பயன்படுத்தியவர் ஜெர்மனின் சர்வாதிகாரியாக இருந்த ஹிட்லர்தான்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஹிட்லர்

ஹிட்லர்

இரண்டாம் உலகப்போரின் காலக்கட்டத்தில் ஹிட்லரின் பெயர் உலகத்தையே நடுங்க செய்தது. ஒரு தனிமனிதனின் அதிகார வெறி உலகபோருக்கே காரணமாக அமைந்தது. ஹிட்லருக்கு சம்ஸ்கிருத வேதங்களின் மீதும் அதில் கூறியிருந்த ஆயுதங்கள் பற்றிய கதை மீதும் ஆர்வம் ஏற்பட்டது. இதனை சரியாக பயன்படுத்தினால் தான் மிகப்பெரும் சக்தியை அடையலாம் என்று அவர் நம்பினார்.

இந்திய அறிஞர்

இந்திய அறிஞர்

வேதங்களின் மீதான அவரின் ஆர்வம் அவரை இந்தியாவை நோக்கி ஈர்த்தது. ஏனெனில் சமஸ்கிருத வேதங்களை கற்றறிந்த அறிஞர்கள் இந்தியாவில்தான் இருந்தனர். எனவே அவர் அந்த காலகட்டத்தில் மிகவும் புகழ்பெற்ற அறிஞராய் இருந்த ஆந்திராவை சேர்ந்த பிரம்மஸ்ரீ தந்திபால விஸ்வநாத சாஸ்திரி அவர்களை நாடினர்.

வேதங்கள்

வேதங்கள்

முனிச் பல்கலைக்கழகத்தில் இருந்த ஜெர்மன் விஞ்ஞானிகள் இந்திய வேதங்களின் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தார்கள் ஆனால் அவர்களால் அதனை புரிந்து கொண்டு செயல்படுத்த முடியவில்லை. எனவே ஹிடலருக்காக வேலை செய்த அந்த விஞ்ஞானிகள் வேதங்களை படிக்கவும், யஜுர் மற்றும் அதர்வண வேதத்தை விளக்கவும் தந்திபால விஸ்வநாத சாஸ்திரியை அவர்களின் பல்கலைக்கழகத்திற்கு அழைத்தனர்.

MOST READ: கஜினி 18 முறை படை எடுத்தது தெரியும்..ஆனால் 17 முறை அவரை தடுத்தது யார்? தடுத்தது உண்மையா தெரியுமா?

ஹிட்லரின் ஆசை

ஹிட்லரின் ஆசை

ஹிட்லரின் திட்டம்தான் அவரை ஜெர்மனுக்கு அழைத்தததற்கு பின்னால் இருந்தது. சிறுவயது முதலே ஹிட்லருக்கு அதிகாரத்தின் மீது வெறி இருந்தது, நாளடைவில் அது அதிகரித்தது. அதற்காக அவர் பல மர்மமான ரகசிய செயல்களை செய்ய தொடங்கினார். ஹிட்லரின் ரகசிய சேகரிப்புகள் ஜெர்மனியின் அல்டிமா துலே என்று அழைக்கப்பட்டது. இது நாஜி படைக்கு கூட தெரியதா ஒன்றாக இருந்தது.

இரண்டாம் உலகப்போரின் போர் ஏவுகணைகள்

இரண்டாம் உலகப்போரின் போர் ஏவுகணைகள்

Image Courtesy

ஹிட்லர் இந்து இதிகாசங்களில் கூறப்பட்டிருந்த அஸ்திரங்களை பற்றி கேள்விப்பட்டு அதன் மீது ஆர்வத்தை வளர்த்துக்கொண்டார், மேலும் அவர் அவை வெறும் கதைகள் அல்ல என்பதில் நம்பிக்கை வைத்திருந்தார். எனவே அவர் இரண்டாம் உலகப்போர் தொடங்குவதற்கு முன்பு அந்த ஆயுதங்களை உருவாக்க முஃய்வு செய்தார்.

தந்திபால விஸ்வநாத சாஸ்திரி

தந்திபால விஸ்வநாத சாஸ்திரி

தந்திபால விஸ்வநாத சாஸ்திரி சிறுவயது முதலே தர்க்கம், வியாகர்ணம் மற்றும் மீமாம்சம் ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்றவராக இருந்தார். மேலும் யஜுர் வேதத்தின் கர்மா பாகத்திலும், அதர்வண வேதத்தின் மந்திர பிரயோகத்திலும் வல்லவராய் இருந்தார்.

முனிச் பல்கலைக்கழகத்தின் சமஸ்கிருத துறை

முனிச் பல்கலைக்கழகத்தின் சமஸ்கிருத துறை

இவரை புகழ் கடல் கடந்தும் பரவியிருந்தது. இந்த மாபெரும் அறிஞரை பற்றி கேள்விப்பட்ட ஹிட்லர் தனது விஞ்ஞானிகளை அவரை தன்னுடைய பல்கலைக்கழகத்தில் வந்து பணிபுரிய அழைப்பு விடுக்குமாறு கூறினார். 1938 ல் தந்திபால விஸ்வநாத சாஸ்திரிக்கு முனிச் பல்கலைக்கழத்தில் சம்ஸ்கிருத துறையின் உயரிய பொறுப்பு வழங்கப்பட்டது.

MOST READ: இந்த குணம் இருப்பவர்கள் ஒருபோதும் வாழ்க்கையில் பணக்காரர் ஆகமுடியாது என்று நீதி சாஸ்திரம் கூறுகிறது..

பிராங்போர்டு பல்கலைக்கழகம்

பிராங்போர்டு பல்கலைக்கழகம்

தந்திபால விஸ்வநாத சாஸ்திரியின் பங்களிப்பை கௌரவிக்கும் வகையில் இன்றும் அவரின் மிகப்பெரிய உருவப்படம் ஒன்று பிராங்போர்டு பல்கலைக்கழகம் முகப்பில் அவரை கௌரவிக்கும் விதத்தில் வைக்கப்பட்டுள்ளது.

வேத மொழிபெயர்ப்பு

வேத மொழிபெயர்ப்பு

ஹிட்லர் விஸ்வநாத சாஸ்திரியிடம் வேதங்களை மொழிபெயர்க்கவும், யஜுவ்ர் வேதத்தில் இருக்கும் மந்திரங்களை விளக்கும் படியும் கூறினார். இது அவருக்கு ஆயுத தொழில்நுட்பத்தை மேம்படுத்த ஏவுகணைகள் தயாரிப்பதன் மூலம் ஜெர்மன் படைகளின் பலத்தை அதிகரிக்கும் என்று கூறினார்.

வி-8 போர் ஏவுகணை

வி-8 போர் ஏவுகணை

இந்த வேத அறிவை கொண்டு தயாரிக்கப்பட்ட உட்கூறுகள் பல்ஸ் ஜெட் இயந்திரத்தின் முகப்பில் பொருத்தப்பட்டதாக கூறப்படுகிறது. அவை Buzz Bombs என்று அழைக்கப்பட்ட வி-8 போர் ஏவுகணைகளுக்காக வடிவமைக்கப்பட்டவையாகும்.

MOST READ: உடலுறவில் ஈடுபட்ட பிறகு ஏன் குளிக்காமல் வெளியே செல்லக்கூடாது தெரியுமா?

ஹிட்லரின் ஆர்வம்

ஹிட்லரின் ஆர்வம்

தனது ஆட்சிக்காலத்தில் ஹிட்லர் பண்டைய இந்தியா மற்றும் திபெத்தின் வேத நூல்கள் மீது அதிக ஆர்வம் செலுத்தினார். ஆர்வத்தின் மிகுதியால் இந்த பகுதிகளில் இருந்து எவ்வளவு நூல்கள் கிடைக்கிறதோ அனைத்தையும் தனது போருக்கு பயன்படுத்த திட்டமிட்டார். அவரின் உச்சக்கட்ட லட்சியமாக கல்கி அவதாரத்தின் பிறப்பிடத்தை அறிய எண்ணினார். ஆனால் அது நிறைவேறவில்லை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Indian scholar who helped to design war missiles

Do you know Hitler used ancient Vedic Knowledge to design War Missile with the help of this Indian scholar.
Story first published: Thursday, April 25, 2019, 12:11 [IST]
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more