Latest Updates
-
சிம்ம ராசியில் கேது: அடுத்து வரும் 90 நாட்கள் இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
புதன் துலாம் ராசிக்குள் செல்வதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
உருளைக்கிழங்கு முந்திரி மசாலா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - செம சைடிஷா இருக்கும் -
இதுல உங்க கையில் உள்ள இதய ரேகை எந்த டைப்-ன்னு சொல்லுங்க.. நீங்க காதலில் எப்படி-ன்னு சொல்றோம்.. -
Ganesh Chaturthi 2026: விநாயகர் சதுர்த்தி எப்போது வருகிறது? வீட்டிலேயே எப்படி விநாயகரை வழிபடுவது? -
12 ஆண்டுகள் கழித்து கடகத்தில் நிகழும் குரு-சந்திர சேர்க்கை: இந்த 4 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கும்.. -
இந்தியாவின் முதல் IAS அதிகாரி யார்? அவருடைய பெயர் என்ன தெரியுமா? அவரு யாருனு தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
2 முருங்கைக்காயை இருந்தா.. இப்படி ஒருவாட்டி பிரியாணி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
4-ல் 3 இந்திய பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு: உடலில் இரும்புச்சத்தை அதிகரிக்க சிம்பிளான 6 டிப்ஸ் இதோ! -
ஐயங்கார் ஸ்டைல் பொரிச்ச ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும்
பெண்களின் முகத்தை வைத்தே அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை கண்டறியும் ரகசியம் தெரியுமா?
இந்த உலகில் மிகவும் கடினமான சொல்லப்போனால் முடியாத காரியமென்றால் அது பெண்களை புரிந்து கொள்வதுதான்.
இந்த உலகில் மிகவும் கடினமான சொல்லப்போனால் முடியாத காரியமென்றால் அது பெண்களை புரிந்து கொள்வதுதான். பெரும்பாலான ஆண்கள் அவர்கள் விரும்பும் பெண்ணை நன்கு புரிந்து கொண்டுவிட்டோம் என்று பெருமைப்பட்டு கொள்வார்கள். ஆனால் உண்மையில் அவரகள் நினைப்பது தவறாகும். பெண்கள் என்பவர்கள் அதிசயங்களின் பிறப்பிடமாவர்கள் அவர்களை புரிந்து கொள்வது என்பது அவ்வளவு சுலபமானதல்ல.
உண்மையில் சாஸ்திரங்களை பற்றி தெரிந்தவர்களுக்கு பெண்களின் சுபாவத்தை அறிவது என்பது அவ்வளவு கடினமானதல்ல. ஏனெனில் அனைத்து கேள்விகளுக்கும் தீர்வு இருக்கும் நமது இலக்கியங்களில் பெண்களை புரிந்து கொள்ள தீர்வு இல்லாமல் இருக்குமா?.

நிச்சயம் இருக்கிறது, பெண்களை புரிந்து கொள்ளவும் அவர்களின் குணத்தை அறிந்து கொள்ளவும் அவர்களின் முகம்தான் சாவி ஆகும். அவர்கள் முகத்தில் இருக்கும் ஒவ்வொன்றும் அவர்களை பற்றி நமக்கு உணர்த்துபவையாக இருக்கும். இந்த பதிவில் பெண்களின் குணத்தை அவர்களின் முகத்தை வைத்து எப்படி கண்டறியலாம் என்று பார்க்கலாம்.

எடை போடுவது
துரதிஷ்டவசமாக இந்த உலகில் அனைவரும் மற்றவர்களால் தீர்மானிக்கப்படுகிறார்கள், அதிலும் பெண்கள் அனைவராலும் எளிதாக எடைபோட படுகிறார்கள். இது அவர்கள் சாப்பிடும் உணவு , உடுத்தும் உடை, அவர்களின் வாழ்க்கை முறை என எதை வேண்டுமென்றாலும் அடிப்படையாக கொண்டிருக்கலாம். ஆனால் பெண்களை அவர்களின் வெளித்தோற்றத்தை கொண்டு இப்படி எடைபோடுவது அவர்களை அவமானப்படுத்தும் ஒரு செயலாகும்.

பெண்ணை புரிந்து கொள்வது எப்படி?
பெண்ணை புரிந்து கொள்வது கடினம்தானே தவிர முடியாத காரியம் என்று கூற இயலாது. அதற்கு நமது இலக்கியங்களும், விஞ்ஞானமும் நமக்கு உதவியாக இருக்கும். அவை மட்டுமின்றி உங்கள் அறிவையும் நீங்கள் பயன்படுத்த வேண்டியிருக்கும்.

முக வாசிப்பு
முகம் என்பது நமது ஆளுமையின் கண்ணாடி போன்றதாகும். நீங்கள் கோபப்படும் போது அதை வெளிப்படுத்துவது உங்கள் முகம்தான், நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கும்போது அதை வெளிப்படுத்துவதும் உங்கள் முகம்தான். இவை மட்டுமின்றி உங்கள் காதல், உணர்ச்சி என அனைத்தையும் வெளிப்படுத்துவது உங்கள் முகம்தான். ஒருவரின் முகத்தை நன்கு வாசிக்க தெரிந்தாலே அவர்களை பற்றி எளிதில் அறிந்து கொள்ளலாம்.

பெண்ணின் முகம்
இந்த உலகில் ஆணை அதிகம் கவரும் ஒரு அதிசயம் என்றால் பெண்ணின் முகம்தான். பெண்களின் அனைத்து உணர்ச்சிகளும் அவர்களின் முகத்தில்தான் புதைந்திருக்கிறது. ஒரு பெண் பொறுமையானவரா, கோபப்பக்கூடியவரா, குறும்புத்தனமானவரா என அனைத்தையும் அந்த பெண்ணின் முகமே கண்ணாடி போல காட்டக்கூடும்.

புருவங்கள்
பெண்ணின் புருவங்களானது அடர்த்தியாகவும், சுருக்கமாகவும் இருந்தால் அந்த பெண் தான் விரும்புபவர்களுக்கு அதீத நேர்மையாக இருப்பார்கள். அது மட்டுமின்றி அந்த பெண்ணை சுற்றியிருக்கும் அனைவரும் அந்த பெண்ணை மதிப்பதோடு, கௌரவிக்கவும் செய்வார்கள். அவர்களின் வாழ்க்கையில் இருக்கும் அனைவரின் வாழ்க்கையிலும் மகிழ்ச்சியை கொண்டுவரும் தேவதையாக அவர்கள் விளங்குவார்கள்.

சாய்ந்த புருவங்கள்
சாய்ந்த புருவம் உள்ள பெண்கள் அவர்களின் எதிர்கால வாழ்க்கை மீது அதிக கவனம் செலுத்துவார்கள் அதுமட்டுமின்றி தங்கள் வாழ்க்கையில் பெரிய உயரத்தை நிச்சயம் அடைவார்கள். இவர்களின் வாழ்க்கை சிறப்பாக இருப்பதுடன் இவர்கள் கொடுத்த வாக்கையும் காப்பாற்றுபவர்களாக இருப்பார்கள். இவர்களின் உழைப்பிற்கேற்ப பதவி உயர்வு இவர்களை நோக்கி வந்து கொண்டே இருக்கும்.

மெல்லிய புருங்கள்
புருவங்கள் மிகவும் மெலிதாக இருக்கும் பெண்கள் வெளிப்படையாக பேசும் குணம் உள்ளவர்களாகவும், சுயநலம் மிக்கவர்களாகவும் இருப்பார்கள். இது அவ்வளவு தவறான காரியம் ஒன்றுமல்ல. ஆனால் இவர்கள் தங்கள் வாழ்க்கையில் முன்னேற மற்றவர்களை ஏணியாக பயன்படுத்துவார்கள் அதுதான் தவறான காரியமாகும். மேலும் குடும்பத்தினருடனான இவர்களின் உறவு அவ்வளவு ஆரோக்கியமானதாக இருக்காது.

கண்கள்
பெண்ணின் கண் ஆனது பெரியதாகவும், உருண்டையாகவும் இருந்தால் அவர்கள் இயற்கையிலேயே வேடிக்கை குணம் அதிகம் உள்ளவர்களாகவும், மற்றவர்களை மகிழ்ச்சியாக வைத்திருக்க விரும்புபவர்களாகவும் இருப்பார்கள். அதேசமயம் கொஞ்சம் சிவப்பேறிய கண்களை உடைய பெண்கள் சிறந்த அதிர்ஷ்டத்தை உடைய பெண்களாக கருதப்படுகிறார்கள்.

பிரவுன் கருவிழி
கருவிழியை பொறுத்தவரை ப்ரவுன் நிற கருவிழி இருக்கும் பெண்கள் மற்றவர்களின் மீது அக்கறை உள்ளவர்களாகவும், நம்பிக்கைக்கு உரியவர்களாகவும் கருதப்படுகிறார்கள்.அதேசமயம் க்ரே நிற கருவிழி கொண்ட பெண்கள் சுயநலம் மிக்கவர்களாகவும் தன்னுடய நலனுக்காக பிறரை உபயோகப்படுத்தி கொள்பவர்களாகவும் இருப்பார்கள்.

நெற்றி
நெற்றியை சுருக்கும்போது ஐந்து அல்லது ஆறு கோடுகள் வந்தால் அந்த பெண்கள் சுதந்திரமாக சிந்திக்க கூடியவர்களாகவும், தங்கள் முடிவுகளை தானே எடுக்க கூடியவர்களாகவும் இருப்பார்கள். அதேசமயம் அதிக கோடுகள் இல்லாதவர்கள் புத்திசாலிகளாகவும், படிப்பில் சிறந்தவர்களாகவும் விளங்குவார்கள்.

இதழ்கள்
ஒரு பெண்ணின் உதடுகளானது முழுமையாக இருந்தால் அந்த பெண் பழிவாங்கும் குணமுடையவர் ஆவார், அந்த பெண் தனக்கான விதிமுறைகளை தானே உருவாக்கி கொள்வார் தவிர சமூகத்தின் விதிமுறைகளுக்கு அடிபணியமாட்டார். தன் வாழ்வை தான்தான் வாழ வேண்டும் என்பதில் மிகவும் உறுதியாக இருப்பார்.

மெல்லிய இதழ்கள்
மெல்லிய இதழ்கள் இருக்கும் பெண்கள் தங்கள் குடும்பத்தின் மீது அதிக பற்றுடன் இருப்பார்கள் என்று கூறப்படுகிறது. இந்த பெண்கள் கடினமாக உழைக்க கூடியவர்களாகவும், தனக்கு பிடித்தவர்களை ரொம்ப ஸ்பெஷலாகவும் நடத்துவார்கள். இந்த பெண்கள் அனைவராலும் நேசிக்கப்பட கூடியவராக இருப்பார்.



Click it and Unblock the Notifications
