For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இராவணனின் மரணத்திற்கு பிறகு இராமர் எப்படி அயோத்தியின் மன்னரானார் தெரியுமா?

|

இராமாயணம் என்பது இராமருக்கும், இராவணனுக்கும் இடையே நடந்த போர் மட்டுமல்ல. அதில் பல வாழ்வியல் சார்ந்த தத்துவங்களும், ரகசியங்களும் உள்ளது. ஒரு மனிதன் எப்படி வாழவேண்டும் மற்றும் எப்படி வாழக்கூடாது என்பதற்கு உதாரணமாக இராமரும், இராவணனும் விளங்கினர்.

How Lord Rama became a king of Ayodhya after Ravanas death?

நடந்த தர்மயுத்தத்தில் இராவணனின் ஆணவத்தோடு சேர்த்து அதர்மமும் இராமர் கையால் அழிக்கப்பட்டது. ஆனால் அதனுடன் இராமாயணம் முடிந்து விடவில்லை. இராவணனின் இறப்பிற்கு பிறகு பல முக்கிய சம்பவங்கள் நடந்தது. அதில் மிகவும் முக்கியமானது இராமர் அயோத்தியின் அரசராக மீண்டும் முடிசூட்டியது. இந்த சம்பவத்திற்கு பின்னால் நடந்த பல்வேறு சுவாரஸ்ய நிகழ்ச்சிகள் என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
விபீஷணன் பதவியேற்பு

விபீஷணன் பதவியேற்பு

இராவணனின் வீழ்ச்சிக்கு பிறகு இராமர் போரில் தனக்கு உதவிய இரவாணனின் சகோதரரான விபீஷணனை இலங்கையின் அரசனாக முடிசூட்டினார். இது போருக்கு முன்னரே இராமர் கொடுத்திருந்த வாக்காகும். விபீஷணனை அரியணையில் ஏற்றி தான் கொடுத்த வாக்கை இராமர் நிறைவேற்றினார்.

சீதையின் தீக்குளிப்பு

சீதையின் தீக்குளிப்பு

இராவணன் வீழ்த்தப்பட்ட செய்தி சீதைக்கு தெரிவிக்கப்பட்டது. சீதை தன் கற்புநெறியை தீக்குளித்ததன் மூலம் உலகிற்கு நிரூபித்தார். தீயிலிருந்து வெளியே வந்த சீதையின் உடல் நெருப்பையும் தாண்டி ஒளிர்ந்தது. அதற்கு காரணம் சீதையினுடைய கற்பின் மாண்புதான்.

இராமருடன் இணைதல்

இராமருடன் இணைதல்

சோதனை முடிந்த பிறகு இராமருடன் இணைந்தார் சீதை. அவர்கள் தங்களின் ராஜ்ஜியமான அயோத்தியை நோக்கி செல்ல முடிவெடுத்தனர். ஆனால் அவர்கள் அயோத்தியிலிருந்து மிகநீண்ட தொலைவில் இருந்ததால் புஸ்பக விமானத்தில் செல்லலாம் என்று முடிவெடுத்தனர்.

MOST READ:இந்த செடிகளை வீட்டில் வளர்ப்பது உங்கள் வீட்டிற்கு தீயசக்திகளை அழைத்துவரும் தெரியுமா?

பரதனின் சபதம்

பரதனின் சபதம்

இராமர் வனவாசம் வந்த போது காட்டில் அவரை சந்தித்த பரதன் மீண்டும் அயோத்திக்கு வரும்படியும் அரியணையில் அமரும் படியும் கூறினான். ஆனால் இராமர் அதற்கு மறுத்துவிட்டார். அதற்கு பரதன் இராமர் 14 ஆண்டுகள் முடிந்து திரும்பி வரவில்லை எனில் தான் உயிரை விட்டு விடுவதாக சபதம் எடுத்தான்.

இராமரின் கவலை

இராமரின் கவலை

பரதன் தன் மீது வைத்திருந்த ஈடு இணையற்ற அன்பையும் அதன் மகத்துவத்தையும் இராமர் நன்கு அறிவார். எனவே தான் சரியான நேரத்தில் அயோத்தியை அடையவில்லை என்றால் பரதன் நிச்சயம் தன் உயிரை மாய்த்து கொள்வான் என்று இராமர் நன்கு அறிந்திருந்தார்.

அனுமனின் தூது

அனுமனின் தூது

இராமரின் அயோத்தி வருகையை விரைவாக சென்று பரதனிடம் கூற அனுமன் தூதுவனாக நியமிக்கப்பட்டார். பரதன் அனுமன் கூறும் செய்தியை நம்புவதற்கு வாய்ப்புள்ளது,ஏனெனில் அவர்கள் இருவரும் ஏற்கனவே ருவரை இருவர் சந்தித்துள்ளனர் என இராமர் எண்ணினார்.

MOST READ: பிணங்களை ஏன் சூரியன் மறைவதற்குள் எரித்துவிட வேண்டும் என்று கூறுகிறார்கள் தெரியுமா?

அரியணையில் செருப்பு

அரியணையில் செருப்பு

தன் சகோதரன் மீதிருந்த அளவற்ற அன்பினால் பரதன் இராமரின் காலணியை அயோத்தியின் அரண்மனையில் வைத்திருந்தார். பரதனே அயோத்திக்கு வெளியே நந்திகிராமம் என்னும் கிராமத்தில் வாழ்ந்து வந்தான்.

பரதனின் மகிழ்ச்சி

பரதனின் மகிழ்ச்சி

அனுமன் மூலம் இராமரின் வருகையை அறிந்த பரதன் அளவில்லா மகிழ்ச்சி அடைந்தான். உடனடியாக அயோத்தியின் எல்லைக்குள் சென்று இந்த மகிழ்ச்சியான செய்தியை அனைவருக்கும் கூறினான். இராமரை வரவேற்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய தயாரானான்.

இராமரின் முடிசூட்டு விழா

இராமரின் முடிசூட்டு விழா

இராமர் அயோத்திக்கு வந்தபோது மொத்த நகரமும் ஆரவாரமாக இராமரின் முடிசூட்ட விழாவிற்கு தயாரானது. இந்த நாளுக்காகத்தான் அயோத்தி மக்கள் 14 ஆண்டுகள் காத்திருந்தனர். மொத்த நகரமும் அலங்கரிக்கப்பட்டு அயோத்தியே திருவிழா கோலமாக காட்சியளித்தது. மக்கள் அனைவரின் முன்னிலையிலும் இராமர் அயோத்தியின் அரசனாக முடிசூட்டப்பட்டார். சீதை அவரின் ராணியாக இடப்புறம் அமர்ந்தார்.

MOST READ: மே மாதத்தில் பிறந்தவர்களிடம் இருக்கும் நல்ல மற்றும் கெட்ட குணங்கள் என்னென்ன தெரியுமா?

விடைபெறுதல்

விடைபெறுதல்

விழா முடிந்த பிறகு ஒட்டுமொத்த வானர சேனையும் கூடியிருந்த அரசர்களும் சோகமடைந்தனர். ஏனெனில் அனைவரும் தங்கள் தாயகம் திரும்ப வேண்டியதாய் இருந்தது. இராமரை விட்டு பிரிய யாருக்குமே மனம் வரவில்லை. சுக்ரீவன், அங்கதன், ஜம்பவான் ஆகியோர் கூட கிஷ்கிந்தைக்கு செல்லும்படி அறிவுறுத்தப்பட்டனர். கிஷ்கிந்தைக்கு சேவை செய்ய இராமர் அனுமனையும் அவர்களுடன் செல்லும்படி கூறினார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How Lord Rama became a king of Ayodhya after Ravana's death?

Do you know after Ravana's death how Lord Rama became king of Ayodhya again?
Story first published: Friday, May 3, 2019, 17:49 [IST]
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more