Latest Updates
-
சனி நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபரில் மகரம் உள்ளிட்ட 3 ராசிக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கப்போகுது! -
ரவா பன் தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 26, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டும் நாளாக இருக்குமாம் -
அக்டோபரில் வக்ரமடையும் சுக்கிரன்: நவம்பர் வரை இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
October 2026 Horoscope: அக்டோபர் மாதத்தில் ராஜவாழ்க்கை வாழப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி என்ன? -
முட்டையை ஒரே மாதிரி செய்யாம.. ஒருடைம் இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்! -
உடுப்பி ஸ்டைல் கற்பூரவல்லி தம்பிலி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சளி, காய்ச்சல் டக்குனு காணாம போயிரும் -
October Matha Rasipalan 2026: அக்டோபரில் இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்! உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த 4 ராசி ஆண்கள் அழகான பெண்களை விட அறிவான பெண்களைத்தான் விரும்புவார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
2 உருளைக்கிழங்கும், வேர்க்கடலையும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸ் ட்ரை பண்ணி பாருங்க..
தெரியாம கீழே விழுந்த பையன் கண்ணுல பென்சில் குத்தி கண்பார்வையே போன பரிதாபத்த பாருங்க...
தெரியாமல் கீழே விழுந்த பையனின் கண்ணில் பென்சில் குத்தியதால் கண்பார்வை போகும் பரிதாபம் பற்றி தான் இந்த கட்டரையில் உங்களிடம் பகிர்ந்து கொள்ளப் போகிறோம். அப்படி என்ன நடந்தது என்பது குறித்து தான் இந்த தொக
குழந்தைகளை கவனிப்பது என்பது பெரிய காரியம். அம்மாமார்கள் என்ன தான் அலர்ட் ஆக இருந்தாலும் எதாவது சேட்டைகளையும் விபரீதங்களையும் பண்ணிக் கொண்டு தான் இருப்பார்கள். பொதுவாக ஆபத்தான விபத்துகள் எல்லாம் குழந்தைகள் சிறிய பொருட்களைக் கொண்டு விளையாடும் போது, கூர்மையான பொருட்கள், எலக்ட்ரானிக் பொருட்கள் இவற்றால் ஏற்படும்.

அப்படித்தான் இங்கே ஒரு பையனுக்கு நடந்த விபரீதத்தை பாருங்க. விளையாட்டின் போது தடுமாறி கீழே விழுந்ததால் பென்சில் கண்களில் குத்தி கண்பார்வை போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த சோகமான நிகழ்வு எப்படி நடந்தது என்பதை பார்க்கலாம்.

சைனாவில் நடந்த விபரீதம்
இந்த விபரீதம் தெற்கு சைனாவில் நடந்துள்ளது. அந்த 6 வயது குழந்தையின் கண்ணில் பென்சில் பலமாக குத்தியதால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.

பென்சிலுடன் ஓடிய பையன்
இதில் ஷாக் அளிக்கும் விஷயம் என்னவென்றால் இந்த நிகழ்ச்சி கான்சஃவ் என்ற மழலையர் பள்ளியில் நடந்துள்ளது. பள்ளியில் அந்த சிறுவன் 12 செ. மீ நீளமுள்ள பென்சிலை தூக்கி கொண்டு ஓடி இருக்கிறான். அப்பொழுது தான் எதிர்பாராத விதமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. பையனின் கண்ணில் பலமாக பென்சில் குத்தியுள்ளது.

ஏதோ அதிர்ஷ்டம்
நல்ல வேளை அந்த பையனுக்கு அதிர்ஷ்டவசமாக பெரிய விளைவுகள் ஏற்படவில்லை. காரணம் பென்சில் அவனின் இடது கண்ணின் கீழ் பகுதியில் குத்தி இருந்தது என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதனால் அதிர்ஷ்டவசமாக அந்த பையனின் பார்வை பறி போவது காப்பாற்றப்பட்டுள்ளது. கருவிழி 1 மி. மீ இடைவெளியில் தப்பியுள்ளது என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

அறுவை சிகிச்சை மூலம் பென்சிலை எடுத்தல்
இருப்பினும் அந்த பையனின் கருவிழியில் லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளன. குத்தி இரத்தம் கசிந்ததால் பாக்டீரியா தொற்று ஏற்பட்டுள்ளது. தொற்று தீவிரமடைந்ததால் எண்டோஆப்தாலமிட்ஸ் (தீவிர தொற்று) ஏற்பட வாய்ப்புள்ளது . அறுவை சிகிச்சை மூலம் அந்த பென்சிலை ரிமூவ் செய்து விட்டோம். இருப்பினும் தொற்று சரியாகவில்லை என்றால் அந்த பையன் பார்வையை இழக்க நேரிட்டு இருக்கும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும்
எனவே வீட்டில் பெற்றோர்களும் சரி பள்ளியில் ஆசிரியர்களும் சரி குழந்தைகளை கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள். குழந்தைகளுக்கு விளையாடும் மும்பரத்தில் எதுவும் தெரியாது. சிறிய விளையாட்டு பொருட்கள், கூர்மையான பொருட்கள் போன்றவற்றை வைத்து விளையாடுவதை தவிருங்கள். பென்சில் கொண்டு எதாவது எழுத வேண்டும் என்றால் அருகில் இருந்து எழுத வையுங்கள். அதை விளையாட்டு போக்காக கையாளுவதை தவிர்த்து அதன் பயனை எடுத்துக் கூறுங்கள்.

என்ன செய்ய வேண்டும்?
சரியாக கையாளும் விதத்தை கற்றுக் கொடுங்கள். விளையாட்டு போக்கால் என்ன விபரீதம் நடக்கும் என்பதை எடுத்துக் கூறுங்கள். முடிந்த வரை விவரம் தெரியாத குழந்தைகளுக்கு கிரையான்ஸ் போன்றவற்றை எழுத கொடுக்கலாம். ஸ்கெட்ச் போன்றவற்றை பயன்படுத்துங்கள்.
குழந்தைகளை கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொள்வது ஒவ்வொரு பொற்றோர் மற்றும் ஒவ்வொரு ஆசிரியரின் கடமையாகும் என்பதை மறவாதீர்கள்.



Click it and Unblock the Notifications
