For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மலச்சிக்கல் வந்து இந்த பொண்ணுக்கு 10 வருஷமா என்ன நடந்ததுனு மறந்து போச்சாம்... அடப்பாவமே!

ஹாங்காங்கில் ஒரு பெண்மணிக்கு பத்து ஆண்டுகள் என்ன நடந்தது என்றே மறந்து விட்டது. அதற்கான காரணம் தெரிய வந்தால் வியந்து போவீர்கள்.

|

பல்வேறு உடல் நல கோளாறுகளின் காரணமாக கொஞ்ச நேரம் எல்லாம் மறந்துபோனது போன்ற உணர்வு ஏற்படும். குறுகிய கால மறதி பிரச்னைக்கான காரணங்களை புரிந்துகொள்வது கடினமான ஒன்று.

Hong Kong Woman Loses 10 Years Of Memory Due To Constipation

ஹாங்காங்கில் ஒரு பெண்மணிக்கு பத்து ஆண்டுகள் என்ன நடந்தது என்றே மறந்து விட்டது. அதற்கான காரணம் தெரிய வந்தால் வியந்து போவீர்கள்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மலச்சிக்கலின் பின் விளைவுகள்

மலச்சிக்கலின் பின் விளைவுகள்

அதிக சிரமப்பட்டு மலம் கழிப்பதால் பக்க விளைவுகள் இருக்கும் என்பது அநேகருக்குத் தெரியும். இலேசான தலைசுற்றல் மற்றும் தலைவலி ஆகியவை ஏற்படக்கூடும். அரிதாக சிலருக்கு மூளைக்குச் செல்லும் இரத்தக் குழாய்களில் அடைப்பு (ஸ்ட்ரோக்) போன்ற வாழ்நாள் பிரச்னைகள் ஏற்படும். சீன சமூக ஊடகங்களில் மலச்சிக்கலால் வித்தியாசமான விதத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணைப் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

MOST READ: நாளை சந்திர கிரகணம்... உலகம் முழுக்க சொல்லப்படும் கட்டுக்கதைகள் என்னென்ன?

மறந்துபோன நினைவுகள்

மறந்துபோன நினைவுகள்

மலச்சிக்கலால் அதிக நேரம் கழிப்பறையில் செலவழிக்கும் பழக்கம் கொண்டவர் ஹாங்காங்கை சேர்ந்த பெண்மணி. ஒருநாள், கழிப்பறைக்குச் சென்று வந்தவருக்கு ஞாபக மறதி ஏற்பட்டுள்ளது. அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, மருத்துவர்கள், அரியவகை ஞாபக மறதியால் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளனர்.

அப்பெண்மணிக்கு கடந்த பத்து ஆண்டுகள் தன் வாழ்க்கையில் என்ன நடந்தது என்றே நினைவில் இல்லை. மலச்சிக்கல் காரணமாக மிகவும் சிரமப்பட்டு, முயற்சி செய்து மலம் கழித்ததினால் ஞாபக மறதி ஏற்பட்டுள்ளதாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

மூளை செயல்பாடு

மூளை செயல்பாடு

மூளையின் சில பகுதிகளுக்கு குறைவான ஆக்ஸிஜன் கிடைத்துள்ளதால், குறுகிய கால மறதியான அம்னீஷியாவால் அப்பெண் பாதிக்கப்பட்டுள்ளார்.

அதிர்ஷ்ட வசமாக இந்த மறதி எட்டு மணி நேரம் மட்டுமே நீடித்தது. பல்வேறு பரிசோதனைகளை செய்த மருத்துவர்கள், அப்பெண்ணின் மூளை செயல்பாடு இயல்பாக இருப்பதாக தெரிவித்தனர்.

MOST READ: சந்திர கிரகணத்தின் போது உடலுறவு வைத்துக் கொள்ளக்கூடாது ஏன்னு தெரியுமா?

கதையா? உண்மையா?

கதையா? உண்மையா?

இந்தச் செய்தி ஆன்லைனில் பகிரப்பட்டபோது, பலர் இது பொய்யான செய்தி என்று கருத்து தெரிவித்தனர். ஆனால், மலங்கழிக்கும்போது உருவாகும் அழுத்தம் மூளைக்குச் செல்லும் ஆக்ஸிஜனை தடுப்பதால் இதுபோன்ற விபரீத விளைவுகள் ஏற்படக்கூடும் என்று நரம்பியல் மருத்துவ வல்லுநர்கள் விளக்கியுள்ளனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Hong Kong Woman Loses 10 Years Of Memory Due To Constipation

According to China media, a woman who had a bad experience of constipation two weeks ago, is believed to have lost her memory of 20 years.She recovered after 8 hours.
Story first published: Tuesday, July 16, 2019, 17:21 [IST]
Desktop Bottom Promotion