Latest Updates
-
பாபா வாங்கா-நோஸ்ட்ரடாமஸ் கணிப்பு படி மூன்றாம் உலகப்போருக்கு பின் எந்த நாடு சக்திவாய்ந்ததாக இருக்கும் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடைந்த குரு பகவான்: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாரெல்லாம் கவனமா இருக்கணும் தெரியுமா? -
வெயில் காலத்தில் இந்த கஞ்சியை அடிக்கடி செஞ்சு குடிங்க.. கொழுப்பும் குறையும், உடலும் குளிர்ச்சியா இருக்கும்... -
இன்றைய ராசிபலன் 12 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு நினைத்தது நடக்கும் நாளாக இருக்குமாம்...! -
30 ஆண்டுக்கு பின் சனியும்-செவ்வாயும் மீனத்தில் இணைவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
No Oil Noi Boil Recipe: அடுப்பே தேவைப்படாத ஆரோக்கியமான, சுவையான இட்லி மற்றும் சட்னி ரெசிபி...ட்ரை பண்ணுங்க...! -
1 வருடத்துக்கு பின் மேஷம் செல்லும் சுக்கிரன்: இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம்...! -
336 ஆண்டுகளுக்கு முன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாக்கு 11 மார்ச் 'இதே' நாளில் என்ன நடந்தது தெரியுமா? -
4 பிரெட், 1 கப் தயிர் இருந்தா 10 நிமிஷத்துல இந்த மாதிரி வடை சுடுங்க... மொறுமொறுனு டேஸ்ட் பிரமாதமா இருக்கும்... -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா?
குடிச்சிட்டு இருமினதும் தொண்டையில இருந்த கட்டி வெளில வந்து விழுந்துடுச்சாம்... அப்புறம்?
குடி போதையில் தொண்டைக்குள் சிக்கி இருந்த கட்டியை துப்பி விட்டு, பயத்தில் மீண்டும் அந்த கட்டியை விழுங்கிய மனிதர் பற்றிய சுவாரஸ்யமான கதை தான் இது.
குடி போதையில் தொண்டைக்குள் சிக்கி இருந்த கட்டியை துப்பி விட்டு, பயத்தில் மீண்டும் அந்த கட்டியை விழுங்கிய மனிதர். குடிப்பழக்கம் உள்ளவர்களுக்கு குடிக்கும் போது நடக்கும் செயல்கள் போதை தெளிந்த பின் மறந்து விடுவது இயல்பு. ஆனால் அது எவ்வளவு அபாயகரமானது என்பது பலரும் அறிவதில்லை. குடிபோதையில் ஏதாவது ஒரு செயலை பயந்து பொய் செய்து விட்டால் பின்பு என்ன ஆகும் என்பதை நீங்கள் அறிவீர்களா?

ஆம், இதைத்தான் ஒரு மனிதர் செய்திருக்கிறார். மது அருந்திய பின், இருமல் வந்ததால் இருமும்போது, அவர் தொண்டையில் இருந்த கட்டி ஒன்று வெளியில் விழுந்திருக்கிறது. பயத்தில் அதனை மீண்டும் விழுங்கி விட்டார் அவர். முழுத் தகவலையும் அறிந்துக் கொள்ள மேலே தொடர்ந்து படியுங்கள்.

சீனாவில் நடந்தது
சீனாவின் ஹுபெய் நகரில் நடந்த ஒரு விசித்திர வழக்கு இது. 63 வயதான ஒரு மனிதர் இந்த நகரில் வசித்து வந்தார். கடந்த சில நாட்களாக அவருக்கு தொண்டையில் ஒரு வித அசௌகரியம் இருந்து வந்தது. திட உணவுகளை உட்கொள்ளும்போது, விழுங்கும்போது ஒரு வித வலியை அவர் உணர்ந்தார். இருப்பினும், அந்த வலியின் மீது அதிக அக்கறைக் காட்டாமல் தானாக சரியாகி விடும் என்ற எண்ணத்தில் இருந்து வந்தார். இதன் காரணமாக எந்த ஒரு மருத்துவ உதவியையும் அவர் நாடவில்லை.

ஒருநாள் சரியான போதையில் இருந்தார்
ஒரு நாள் மாலைப் பொழுதில் மிகுந்த குடிபோதையில் இருந்தார் அவர். திடீரென்று அவருக்கு வாந்தி எடுக்க வேண்டும் போல் இருந்தது. அவர் வாந்தி எடுத்தவுடன் கண்ட காட்சி அவருக்கு ஒரு வித ஆச்சர்யத்தைத் தந்தது.

வாந்தியில் ஒரு இறைச்சி உருண்டையைக் கண்டார்
அவர் வாந்தி எடுக்கும்போது அவர் தொண்டையில் இருந்து திடீரென்று ஒரு உருண்டை வெளியேறியது. அதனைக் கூர்ந்து பார்த்த அவருக்கு அந்த உருண்டை ஒரு இறைச்சி உருண்டை போல் காணப்பட்டது. தனது உடலில் உள்ள ஏதோ ஒரு உள்ளுறுப்பை துப்பி விட்டதாக அவர் எண்ணினார். அதனால் தாமதிக்காமல் உடனடியாக அதனை எடுத்து விழுங்கி தண்ணீர் குடித்து விட்டார். அந்த இறைச்சி உருண்டை போல் உருவம் கொண்ட அந்த உருண்டை மீண்டும் அவர் உடலுக்குள் சென்று விட்டது.

அது ஒரு கட்டி என்று கண்டுபிடிக்கப்பட்டது
அந்த மனிதர் விழுங்கிய இறைச்சி போன்ற உருண்டையானது ஒரு கட்டி என்று மருத்துவர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. அந்தக் கட்டி, அவரின் உணவுக்குழாயின் மேல் பகுதியில் வளர்ந்து வந்ததாகக் கண்டறியப்பட்டது. இந்த கட்டி தொண்டைக்குள் வளர்ந்து மூச்சுப் பாதையை அடைக்கும் ஆபத்தும் இருந்திருக்கலாம் என்று மருத்துவர்கள் வெளிப்படுத்தினர். மருத்துவர்கள் அவருக்கு அறுவை சிகிச்சை செய்து அந்த கட்டியை வெளியேற்றி பின்பு அவரை மருத்துவமனையில் இருந்து விடுவித்தனர். இந்த பயம் கலந்த நிகழ்வில் இருந்து அந்த மனிதர் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வந்தார்.
இந்த பதிவைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதை எங்களுடன் பகிர்ந்துக் கொள்ளுங்கள்.



Click it and Unblock the Notifications











