For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

புராணங்களின் படி இப்படி குளிப்பது நீங்கள் உங்கள் வாழ்க்கையில் செய்யும் மிகப்பெரிய பாவமாகும்...!

இந்து நீதி சாஸ்திரத்தின் படி இந்த ஐந்து பழக்கங்கள் இருப்பவர்கள் ஒருபோதும் அவர்கள் வாழ்க்கையில் செல்வந்தராக மாற முடியாது.

|

இந்த உலகத்தில் ஒருவரின் வெற்றி என்பது அவர்களிடம் இருக்கும் பணத்தை பொறுத்துதான் நிர்ணயிக்கப்படுகிறது. வசதி, பணம், ஆடம்பரம் போன்றவையே மகிழ்ச்சியையும், மனஅமைதியையும் தரும் என்று நினைத்து கொண்டிருக்கிறோம். ஆனால் பணமும், ஆடம்பரமும் மட்டுமே ஒருவருக்கு மகிழ்ச்சியை தந்துவிடாது.

habits that will ensure you remain poor all your life

அமானுஷ்ய விஞ்ஞானங்களின்படி நமது கைரேகைகள் நமது விதியை பற்றிய ரகசியங்களை கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் உங்கள் கைரேகை உங்களை செல்வந்தராக்க முயற்சித்தாலும் உங்களிடம் இருக்கும் குணங்களும், பழக்கவழக்கங்களும் உங்களை செல்வந்தராக ஆகவிடாது. இந்து நீதி சாஸ்திரத்தின் படி இந்த ஐந்து பழக்கங்கள் இருப்பவர்கள் ஒருபோதும் அவர்கள் வாழ்க்கையில் செல்வந்தராக மாற முடியாது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சோம்பேறித்தனம்

சோம்பேறித்தனம்

இந்து நெறிமுறையின் படி சோம்பேறித்தனம்தான் ஒருவரின் தனிப்பட்ட மிகப்பெரிய எதிரி ஆகும். ஓய்வெடுப்பதையே வேலையாக கொண்டிருப்பவர்களை மஹாலக்ஷ்மிக்கு ஒருபோதும் பிடிக்காது. அப்படிப்பட்டவர்களுக்கு ஒருபோதும் லக்ஷ்மியின் அருள் கிடைக்காது.

செல்வந்தராக கடுமையாக உழைக்க வேண்டும்

செல்வந்தராக கடுமையாக உழைக்க வேண்டும்

ஏழையாக இருப்பவர்கள் அவர்களின் ஏழ்மையை போக்க கடினமாக உழைக்கும் போது விரைவில் ஏழ்மை அவர்களை விட்டு விலகும். மகாலக்ஷ்மி கடின உழைப்பிற்கு பரிசாக செல்வத்தை வழங்குவார்.

மது பழக்கம்

மது பழக்கம்

இந்து புராணங்களின் படி குடிகாரன் சமூகத்தின் பெரிய ஆபத்தாகும். மது குடிப்பவர்கள் தங்கள் ஞானத்தையும், செல்வத்தையும் தங்கள் கைகளால் தாங்களே அழித்து கொள்கின்றனர். மேலும் மது ஒருவரின் வாழ்க்கையில் ஆணவத்தையும், அழிவையும் ஏற்படுத்தும்.

MOST READ: சாணக்கியரின் கூற்றுப்படி இந்த ஐந்து தகுதிகள் இருப்பவர்கள் மட்டுமே வாழ்க்கையில் வெற்றிபெறுவர்களாம்...

குடிப்பழக்கத்தின் ஆபத்து

குடிப்பழக்கத்தின் ஆபத்து

குடிப்பழக்கம் இருப்பவர்கள் நிறைய பணம் சம்பாதிக்கலாம் ஆனால் அவர்களால் அதனை பராமரிக்க முடியாது. மேலும் அவர்களால் ஒருபோதும் வாழ்க்கையில் வெற்றிபெற முடியாது. இதனால் ஒருவர் அவரின் சமூக அந்தஸ்தை இழப்பார்கள்.

ஏமாற்றுவது

ஏமாற்றுவது

ஆண் மற்றும் பெண்ணாக யாராக இருந்தாலும் சரி திருமணத்திற்கு வெளியே தவறான உறவில் ஈடுபடுவது அவர்களின் அழிவுக்கான பாதையாகும். இதனால் அவர்களின் நிகழ்கால வாழ்க்கை மட்டுமின்றி மரணத்திற்க்கு பிறகான வாழ்க்கையிலும் அவர்கள் துன்பங்களை அனுவபவிக்க வேண்டியிருக்கும்.

பகல் தூக்கம்

பகல் தூக்கம்

இந்து புராணங்களின் படி பகல் நேரம் என்பது உழைப்பதற்கான நேரம் ஆகும், அந்த நேரத்தில் தூங்குபவர்கள் தங்களின் செல்வத்தையும், வெற்றியையும் தானே அழித்து கொள்கிறார்கள். பகல் நேரத்தில் நீண்ட நேரம் தூங்குபவர்களுக்கு ஒருபோதும் லட்சுமி தேவி ஆசி வழங்கமாட்டார். மேலும் அவர்கள் லக்ஷ்மியின் கோபத்திற்கு ஆளாக நேரிடும்.

சூதாட்டம்

சூதாட்டம்

சூதாட்டம் அழிவிற்கான நேரடி பாதையாகும். இதற்கு மிகசிறந்த உதாரணம் மகாபாரதம் ஆகும். சூதாட்டத்தால்தான் பாண்டவர்கள் தங்களின் இராஜ்ஜியத்தை இழந்து வனவாசம் சென்றார்கள். திரௌபதி அனைவரின் முன்னிலையிலும் மானபங்க படுத்தப்பட்டார். சூதாட்டத்தை எந்த வகையில் செய்தாலும் அது அழிவையே ஏற்படுத்தும்.

MOST READ: முட்டை சாப்பிட்ட பிறகு தெரியாம கூட இந்த பொருட்களை சாப்பிடாதீங்க... இல்லனா பிரச்சினைதான்...!

ஆடைகள் இன்றி குளிப்பது

ஆடைகள் இன்றி குளிப்பது

குளிக்கும்போது உடலில் எந்த ஆடையும் இன்றி குளிப்பது நீங்கள் வாழ்க்கையில் செய்யும் மிகப்பெரிய தவறாகும். ஏனெனில் பகவத் கீதை மற்றும் பத்ம புராணத்தில் கூறியுள்ளபடி ஒருபோதும் ஆடையின்றி குளிக்கக்கூடாது. கோபியர்கள் ஆடைகளை களைந்து நதியில் நீராடியபோது கிருஷ்ணர் அவர்களின் உடைகளை கவர்ந்து சென்றார். அவர்கள் குளித்து முடித்தபிறகு எவ்வளவு தேடியும் ஆடைகள் கிடைக்கவில்லை. அதன்பின் கிருஷ்ணர் அந்த ஆடைகளை அருகில் இருந்த மரத்தில் வைத்துவிட்டு அவர்களுக்கு ஆடையில்லாமல் குளிக்கக்கூடாது என்று அறிவுறுத்தினார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

These 5 habits will ensure you remain poor all your life

According to Shastras these five habits will ensure you remain poor all your life.
Story first published: Thursday, July 11, 2019, 11:30 [IST]
Desktop Bottom Promotion