For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த பொண்ணோட மார்பை பார்த்தீங்களா? என்னனு தெரியுதா? இத படிங்க தெரிஞ்சிடும்...

|

நாம் ஸ்பெஷல் சைல்டாக பிறந்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்று நாம் யாருமே எப்போதுமே யோசித்துப் பார்த்திருக்க மாட்டோம். அப்படி பார்த்திருந்தால் அதன் வலி யும் போராட்ட குணமும் நமக்குப் புரியும். பாதுவான சிறப்புக் குழந்தைகளாக பிறந்தால் அவர்களுக்குள்ளாகவே தான் எப்படி இருக்க வேண்டும் என்ற வரைமுறையும் தங்களுக்குள்ளாகவே முரண்பாடுகளும் அதிகமாக வந்து கொண்டே இருக்கும்.

girl finally gets rid of extra limbs on her chest

கொஞ்சம் யோசித்துப் பாருங்க. இயல்பாக இருக்கும் ஒருவருக்கு ஒரு கையோ இல்லது மூட்டுப்பகுதியோ ஒன்று அதிகமாக இருந்தால் அது அவர்களுடைய உடல் தோற்றத்தையே வேறு மாதிரியாகக் காட்டிவிடும். அதைக்காட்டிலும் பார்ப்பதற்கு வித்தியாசமாக இருப்பதைக் காட்டிலும் தங்களுடைய தினசரி வாழ்க்கையில் நிறைய சவால்களைச் சந்திக்க வேண்டியிருக்கும். அப்படி ஒரு விநோதமான பெண்ணைப் பற்றித் தான் இங்கே பார்க்கப் போகிறோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பாராசிஸ்டிக் ட்வின்

பாராசிஸ்டிக் ட்வின்

தான் பிறக்கும்போதே தன்னுடைய மார்புப் பகுதியில் மற்றொரு கை, கால்களைப் போன்று தோற்றம் கொண்ட ஒட்டுண்ணி போல ஒரு பெரிய தன் உடலின் வெளிப்பாகத்தில் சுமந்து கொண்டே பிறந்தாள் அந்த பெண். கடந்த 14 வருடங்களால் தன் மார்பில் அந்த ஒட்டுண்ணி இரட்டையைச் சுமந்து கொண்டே தன் வேலைகளைச் செய்து மிகப் பெரும் சவாலான வாழ்க்கையை வாழ்ந்து வந்தாள். அதாவது கிட்டதட்ட தன்னுடன் இன்னொரு சகோதரி தன்னுடம்பில் ஒட்டிப் பிறந்தது போல இது இருந்தது. இதில் நல்லது என்னவென்றால் இவர் வளர வளர அதுவும் வளரவில்லை. பிறக்கும்போது இருந்த அதே அளவில் தான் 14 வயதான பின்னும் இருந்தது.

வெரோனிகா என்னும் 14 வயதுடைய அந்த பெண் பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள இலிகேன் என்னும் பகுதியைச் சேர்ந்தவர். இவர் தான் பிறக்கும் போது தன்னுடைய மார்புப் பகுதியில் இரண்டு முழங்கைகளை அதிகமாகப் பெற்று பிறந்திருக்கிறார். அது அந்த பெண்ணின் மார்போடும் வயிற்றுப் பகுதியோடும் ஒட்டியது போன்று இருந்தது.

MOST READ: இந்த 2019 இல் மோடி அல்லது ராகுல் - யாரோட ஜாதகம் (நட்சத்திரம்) ஜோரா இருக்கு?

வளர ஆரம்பித்தது

வளர ஆரம்பித்தது

பிறக்கும் போது உடன் பிறந்த அந்த அதிகப்படியான உடல் பாகங்களும் ஆண்டுகள் நகர நகர வெரோனிகா வளர வளர அதுவும் அவளுடன் சேர்ந்தே வளரத் தொடங்கியது. இதில் நீங்கள் கேட்டால் வேடிக்கையான நினைப்பீர்கள். வெரோனிகா எப்போதெல்லாம் நகம் வெட்டுகிறாரோ அப்போது இந்த எக்ஸ்ட்ரா கைக்கும் நகம் வெட்டி விட்டு சுத்தப்படுத்துவாள். வயிற்றுப் பகுதியையும் லிக்விடு சுாப் பயன்படுத்தி சுத்தம் செய்து விடுவாள். இவளுடைய தொப்புள் பகுதி எப்போதுமே ஈரமாகவே இருக்கும். அந்த ஈரம் வயிற்றுப் பகுதியில் இருந்து ஏதோ திரவம் கசிவதை உணர்ந்தாள். சில சமயங்களில் இதிலிருந்து ரத்தக்கசிவு கூட ஏற்பட்டிருக்கிறது.

தீர்வு கிடைத்தது

தீர்வு கிடைத்தது

அப்படியே பெரும் கொடுமைகளை அனுபவித்துக் கொண்டிருந்த வெரோனிகா சிலருடைய உயர் மருத்துவ உதவியால் வயிற்றுப் பகுதியில் இருந்த பெரிய சதைப்பகுதி அறுவை சிகிச்சை மூலம் நீக்கப்பட்டு தற்போது அந்த கைகள் மற்றும் விரல்களுடன் மட்டும் வாழத் தொடங்கியிருக்கிறாள்.

MOST READ: 16 வருஷமா ஏ.ஆர்.ரகுமானோடு சேர்ந்து தன் பிறந்தநாளை கொண்டாடும் மற்றொரு நபர் யார் தெரியுமா?

கிராமமே செய்த உதவி

கிராமமே செய்த உதவி

இப்படி வெரோனிகா தான் பட்ட கஷ்டங்களில் இருந்து விடுதலை பெற்று, தன்னுடைய இயல்பான நிலைக்கு வந்ததற்கு அவளும் அவளுடைய குடும்பமும் மட்டுமே காரணம் அல்ல. அவள் கிராமத்தில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவள் என்பதால் அவள் பல்வேறு மருத்துவ உதவிகளைப் பெற்று தன்னுடைய இயல்பான நிலைக்கு வருவதற்கு அவளுடைய ஒட்டுமொத்த கிராமமெ அவளுக்கு பல உதவிகளைச் செய்தது. இன்று மற்ற எல்லோரையும் போல தன்னுடைய இயல்பு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறாள் வெரோனிகா.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

girl finally gets rid of extra limbs on her chest

Check out the story of the girl who is born with extra parts as it belonged to a parasitic twin.
Story first published: Tuesday, January 8, 2019, 18:10 [IST]
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more