Latest Updates
-
செப்டம்பர் இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு தொழில் வளரும்.. வருமானம் அதிகரிக்கும்.. -
கன்னி ராசிக்குள் சூரியன் நுழைவதால் துரதிர்ஷ்டத்தை அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சரவணபவன் பச்சை பயறு குருமா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - பூரி, சப்பாத்திக்கு செமையா இருக்கும் -
பூமியின் வயது என்ன தெரியுமா? அடேங்கப்பா இத்தனை கோடி வருஷமா? ஷாக் ஆகாதீங்க -
எப்பவும் பளிச்சுன்னு இருக்கணுமா? அப்ப 2 ஸ்பூன் கடலை மாவு இருந்தா இப்படி யூஸ் பண்ணுங்க.. -
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் இனிப்பு பிடிக்கொழுக்கட்டை - 15 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க. -
இந்த 4 ராசிக்காரங்கள துரதிர்ஷ்டமும், தோல்வியும் எப்பவும் துரத்திக்கிட்டே இருக்குமாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
இரத்தப் புற்றுநோயின் 3 முக்கிய வகைகள் என்ன? அதன் அறிகுறிகள் மற்றும் காரணங்களை விளக்கும் டாக்டர்! -
செரிமான பிரச்சனைக்கு குட்-பை சொல்லும் புதினா வெற்றிலை ரசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
கொத்தமல்லி பருப்பு கடையல் ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - வேற லெவலில் இருக்கும்
இந்த மாசத்துல கல்யாணம் பண்ணுனீங்க உங்க வாழ்க்கை அவ்வளவுதான் தெரிஞ்சுக்கோங்க...!
திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்க அன்பும், நம்பிக்கையும்தான் அடிப்படையாகும். ஆனால் இந்த காலத்தில் திருமண வாழ்க்கை என்பது பலருக்கும் சில ஆண்டுகள் மட்டுமே இருக்கிறது.
அனைவரின் வாழ்க்கையிலும் திருப்பத்தை ஏற்படுத்தும் நிகழ்வு என்றால் அது திருமணம்தான். ஒருவரின் வாழ்க்கையை அடியோடு மாற்றிப்போடும் வல்லமை திருமணத்திற்கு மட்டுமே உண்டு. திருமண வாழ்க்கை சரியாக அமையவில்லை எனில் அவர்களின் வாழ்க்கையின் மீதமுள்ள காலம் மிகவும் கஷ்டம்தான்.ஒரே மாதிரியான குணம் கொண்ட இருவர் திருமணம் செய்து கொள்ளும் போது மற்றவர்களின் வாழ்க்கையை விட அவர்களின் வாழ்க்கை சிறப்பாக இருப்பதாக வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்க அன்பும், நம்பிக்கையும்தான் அடிப்படையாகும். ஆனால் இந்த காலத்தில் திருமண வாழ்க்கை என்பது பலருக்கும் சில ஆண்டுகள் மட்டுமே இருக்கிறது. அதற்கு காரணம் அவர்களுக்கிடையே இருக்கும் புரிதலின்மைதான். வேதங்களின் படி திருமணம் செய்யும் காலம் என்பது அவர்கள் மணவாழ்க்கையில் முக்கியமான பங்கை வகிக்கிறது. சொல்லப்போனால் நீங்கள் திருமணம் செய்து கொள்ளும் காலமும், நேரமும்தான் உங்கள் மணவாழ்க்கையின் எதிர்காலத்தை தீர்மானிப்பதாக இருக்கிறது. நீங்கள் திருணம் செய்து கொள்ளும் மாதம் உங்கள் திருமண வாழ்க்கையில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் இந்த பதிவில் பார்க்கலாம்.

ஜனவரி
இந்த மாதத்தில் நடக்கும் திருமணங்கள் கும்ப ராசியால் பாதிக்கப்படுகிறது. ஆனால் இந்த மாதத்தில் திருமணம் செய்து கொள்பவரின் திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும். இந்த காலகட்டத்தில் திருமணம் செய்து கொள்பவர்கள் மகிழ்ச்சியான திருமண பந்தத்தை அனுபவிப்பார்கள். உங்களின் வாழ்க்கைத்துணை ஆச்சரியப்படுத்தும் விதத்தில் காதலை வெளிப்படுத்தி கொண்டே இருப்பார்கள். இந்த மாதத்தில் திருமணம் செய்பவர்கள் பிரிய மிகக்குறைந்த அளவே வாய்ப்புள்ளது.

பிப்ரவரி
இந்த மாதத்தில் திருமணம் செய்து கொள்பவர்கள் பெரும்பாலும் உணர்ச்சிமிகுந்த உறவு பயணத்தை அனுபவிப்பார்கள். உங்களின் வழிகாட்டி மீனமாகும், எனவே தம்பதியினர் இருவரும் சுயநலமற்ற அன்பை ஒருவர் மீது ஒருவர் வெளிப்படுத்துவார்கள். இருவரில் ஒருவர் எப்பொழுதும் தான் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் உறுதியாக இருப்பார்கள், இதுவே இவர்கள் உறவில் அன்பை நிலைத்திருக்க செய்யும்.

மார்ச்
இந்த காலக்கட்டத்தில் திருமணம் செய்து கொள்பவர்களின் வழிகாட்டி மேஷமாகும். இவர்கள் வாழ்க்கையில் ஆச்சரியங்களும், இன்பமும், துன்பமும் கலந்திருக்கும். தங்களை துணையை புரிந்து கொள்வது இவர்களுக்கு சற்று சிரமமாக இருக்கும். ஒருநாள் புரிந்து கொண்டு நடப்பவர்கள் அடுத்தநாளே புரிந்து கொள்ளாமல் சண்டை போடுவார்கள். சண்டைகள் இருந்தாலும் இவர்களின் அன்பில் குறை இருக்காது.

ஏப்ரல்
இந்த மாதத்தில் திருமணம் செய்து கொள்பவர்கள் ரிஷப ராசியால் பாதிப்பிற்குள்ளாவார்கள். இந்த மாதத்தில் திருணம் செய்து கொள்வது இந்திய ஜோதிடத்தின் படி மிகவும் புத்திசாலித்தனமான ஒன்றாகும். இந்த மாதத்தில் திருமணம் செய்து கொள்பவர்களின் திருமண வாழ்க்கை காதல் நிறைந்ததாக இறுதிவரை இருக்கும், இவர்களின் பாலியல் வாழ்க்கையும் சிறப்பாக இருக்கும்.

மே
இந்த மாதத்தில் திருமணம் செய்து கொள்பவர்கள் மிதுன ராசியால் வழிநடத்தப்படுவார்கள். இவர்களின் திருமண வாழ்க்கையில் இருபக்கங்கள் இருக்கும். இந்த மாதத்தில் செய்யப்படும் திருமணம் வெற்றிபெற எவ்வளவு வாய்ப்புள்ளதோ தோல்வியடையவும் அவ்வளவு வாய்ப்புள்ளது. இந்த மாதத்தில் திருமணம் செய்து கொள்ளும் தம்பதிகளில் ஒருவராவது மோசமான குணமுடையவராக இருப்பார், மேலும் பொறுமையும் இல்லாதவராக இருப்பார். இவர்கள் பிரிவதற்கு எவ்வளவு வாய்ப்புள்ளதோ சேர்ந்து வாழ்வதற்கும் அவ்வளவு வாய்ப்புள்ளது.

ஜூன்
இந்த மாதத்தில் நடக்கும் திருமணங்கள் கடக ராசியால் வழிநடத்தப்படுவதாகும். அன்பும், அக்கறையும் நிறைந்த இவர்களின் மணவாழ்க்கை மற்றவர்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டாக இருக்கும். இவர்கள் எப்பொழுதும் தங்கள் துணை மீது அக்கறை செலுத்துவதில் கவனமாக இருப்பார்கள். தங்களின் துணை மீது மட்டுமின்றி அவர்கள் குடும்பத்தின் மீதும் இவர்கள் அதிக அக்கறை செலுத்துபவராக இருப்பார்கள்.

ஜூலை
இந்த மாதங்களில் நடக்கும் திருமணங்கள் சிம்ம ராசியால் வழிநடத்தபடுபவையாகும். தங்களின் திருமண வாழ்க்கையை அழகாக்க இவர்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் வெற்றிகரமானதாக அமையும். இந்த மாதத்தில் திருமணம் செய்து கொள்பவர்கள் தங்கள் துணை மீது தீராக்காதலுடன் இருப்பதுடன் தங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொள்வதிலும் சிறந்து விளங்குவார்கள். இவர்கள் நீண்ட கால திருப்திகரமான வாழ்க்கை வாழ்வார்கள்.

ஆகஸ்ட்
இந்த மாதத்தில் திருமணம் செய்து கொள்ளும் ஜோடிகள் பெரும்பாலும் கன்னி ராசியால் வழிநடத்தப்படுகிறார்கள். இவர்களின் திருமண வாழ்க்கையில் நிறைய தடைகள் வந்தாலும் அதனை ஒன்றாக சேர்ந்து தகர்ப்பார்கள். ஒருவரின் ஆசைகளை மற்றவர்கள் புரிந்து கொண்டால் இவர்கள் வெற்றிகரமான வாழ்க்கையை வாழ்வார்கள்.

செப்டம்பர்
இந்த மாத திருமணங்கள் துலாம் ராசியால் வழிநடத்தப்படுகிறது. இவர்கள் சிறந்த தம்பதிகளாக இருப்பதுடன் எப்படி மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்ற ரகசியமும் தெரிந்தவர்கள். உறவில் எப்படி சமநிலையை கடைபிடிக்க வேண்டும் என்று இவர்கள் நன்கு அறிவார்கள். இவர்கள் கடுமையான சண்டைகளில் அடிக்கடி ஈடுபடுவார்கள், ஆனால் விரைவில் மீண்டும் இனைந்து விடுவார்கள்.

அக்டோபர்
இந்த மாதத்தில் திருமணம் செய்பவர்கள் சிம்ம ராசியால் வழிநடப்படுகிறார்கள். இவர்களின் சிறந்த பாலியல் வாழ்க்கையே இவர்களுக்குள் எழும் பிரச்சினைகளை தீர்த்து வைக்கும். இவர்களின் ஒவ்வொரு சண்டையும் இவர்களுக்கு இடையே இருக்கும் காதலை அதிகரித்து கொண்டே செல்லும். இவர்கள் பொறுமையாகவே குழந்தை பெற்றுக்கொள்ள திட்டமிடுவார்கள்.

நவம்பர்
இந்த மாதத்தில் திருமணம் செய்து கொள்பவர்களின் வாழ்க்கை தனுசு ராசியால் வழிநடத்தப்படும். இவர்களின் திருமண வாழ்க்கை மிகவும் மென்மையானதாக இருக்கும், இருவரின் மகிழ்ச்சிக்கும் முக்கியத்துவம் கொடுப்பார்கள். ஒருவரின் வெறுமையை மற்றவர் பூர்த்தி செய்ய முயலுவார்கள், அனைத்து சவால்களையும் இருவரும் சேர்ந்தே எதிர்கொள்வார்கள்.

டிசம்பர்
இவர்கள் மகர ராசியால் வழிநடத்தப்படுவார்கள். இவர்கள் தங்கள் வாழ்க்கையை பகிர்ந்து கொள்வதோடு, எதிர்காலதிற்காக திட்டங்களை இவர்கள் சேர்ந்தே நீட்டுவார்கள். ஒருவரின் தேவையை பூர்த்தி செய்து தங்களுடைய தேவையை பெற்றுக்கொள்வார்கள். இவர்கள் குடும்பத்தின் பொருளாதாரத்தை உயர்த்துவதில்தான் எப்பொழுதும் கவனம் செலுத்துவார்கள். இவர்கள் பிரிவதற்கும் அதிக வாய்ப்புகள் உள்ளது.



Click it and Unblock the Notifications
