Just In
- 3 hrs ago
இன்றைய ராசிப்பலன் (26.02.2021): இன்று இந்த ராசிக்காரங்க ஆரோக்கியத்துல ரொம்ப கவனமா இருக்கணும்...
- 13 hrs ago
இந்த அறிகுறிகள் உங்க கணவன் அல்லது காதலனிடம் இருந்தால் அவர் உங்களுடன் வாழும் ஆர்வத்தை இழந்துட்டாராம்!
- 14 hrs ago
நிச்சயிக்கப்பட்ட திருமணம் செய்வது உண்மையில் நல்லதா? அதிலிருக்கும் நன்மைகள் மற்றும் ஆபத்துகள் என்ன?
- 17 hrs ago
பெண்களின் முக்கியமான முடி பிரச்சினையை குணப்படுத்த உதவும் வீட்டு வைத்தியங்கள் என்னென்ன தெரியுமா?
Don't Miss
- News
இன்று பாரத் பந்த்.. அகில இந்திய வர்த்தக கூட்டமைப்பு நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டம்
- Automobiles
விற்பனைக்கு வரவிருக்கும் 3 புதிய சீன எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்கள்!! சூப்பர் சோகோ பிராண்டில் வருகின்றன...
- Movies
48வது பிறந்தநாள் காணும் கௌதம் மேனன்..குவியும் வாழ்த்து !
- Finance
Mphasis நிறுவன பங்குகள் விற்பனை.. தனி ஆளாக களத்தில் இறங்கும் கார்லைல்..!
- Sports
2 நாளில் முடிவிற்கு வந்த டெஸ்ட்.. இங்கிலாந்தை தூசி தட்டிய இந்திய அணி.. அசர வைக்கும் "ஸ்பின்" வெற்றி!
- Education
ரூ.67 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
பிள்ளையாரை வீட்டில் வைத்து வழிபடுபவர்கள் இப்படி வழிபடுவது அவர்களின் வேண்டுதலை விரைவாக நிறைவேற்றுமாம்
இந்து மதத்தின் முழுமுதற் கடவுள் என்றால் அது விநாயகர்தான். மகிழ்ச்சியையும், வெற்றியையும் வழங்கும் கடவுளான பிள்ளையார் தன்னை வழிபடுபவர்களுக்கு அதிர்ஷ்டத்தையும் வழங்குகிறது. நம் வாழ்வில் தடைகள் ஏற்படும் போதெல்லாம் நம்மை காப்பாற்ற அங்கு பிள்ளையார் இருப்பார். அதனால்தான் எந்த செயலையும் தொடங்குவதற்கு முன் அந்த செயல் வெற்றிகரமாக முடிய பிள்ளையாரை வழிபட்டு தொடங்குகிறோம்.
பிள்ளையாரை கோவிலில் மட்டுமின்றி வீட்டில் வைத்தும் வழிபடுவார்கள். பிள்ளையாரை வீட்டில் வைத்து வழிபடும்போது அவரை எப்படி வழிபட வேண்டும், எங்கு வைத்து வழிபட வேண்டும் என்று பலருக்கும் தெரிவதில்லை. இந்த பதிவில் வாஸ்து சாஸ்திரத்தின் படி பிள்ளையார் சிலையை எந்த இடத்தில் வைத்து எப்படி வழிபட வேண்டும் என்று பார்க்கலாம்.

முதல் விதி
உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சி, அமைதி மற்றும் செழிப்பு வேண்டுமென்று விரும்பினால் உங்கள் இல்லத்தில் வெள்ளை பிள்ளையாரை வைத்து வழிபட வேண்டும். இல்லையெனில் வெள்ளை பிள்ளையாரின் படத்தை வீட்டில் வைத்து வழிபடலாம்.

இரண்டாம் விதி
ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் தனிப்பட்ட முன்னேற்றம் என்பது மிகவும் அவசியமானதாகும் . எனவே சுய முன்னேற்றம் வேண்டுமென்று விரும்புபவர்கள் தங்கள் வீட்டில் குங்கும நிற பிள்ளையாரை வைத்து வழிபடுவது நல்லது.

மூன்றாம் விதி
பொதுவாக அமர்ந்திருக்கும் நிலையில் இருக்கும் பிள்ளையாரை வழிபடுவது நல்லது. நின்று கொண்டிருக்கும் பிள்ளையாரை விட அமர்ந்திருக்கும் பிள்ளையார் அதிக பலன்களை வழங்கக்கூடியவர். இந்த பிள்ளையார் அதிர்ஷ்டத்தையும், மகிழ்ச்சியையும் வழங்கும்.

நான்காம் விதி
விநாயகரின் துதிக்கை அவரது இடது கை பக்கமாக இருக்கும் சிலையை வீட்டில் வைத்து வழிபட வேண்டும். விநாயகரின் துதிக்கை வலது பக்கமாக இருக்கும் விநாயகரை வழிபடுவது மிகவும் கடினமாகும்.

ஐந்தாம் விதி
உங்கள் வீட்டில் வைத்து வழிபட அமர்ந்திருக்கும் விநாயகர் சிலையை வைக்க வேண்டும். அதுவே பணியிடங்களில் வைத்து வழிபட நிற்கும் நிலையில் இருக்கும் பிள்ளையார் சிலையை வைக்க வேண்டும். இது ஆற்றலையும், உற்சாகத்தையும் வழங்கும்.

ஆறாம் விதி
விநாயகர் சிலையை வீட்டில் வைத்து வழிபடும் போது அதனுடன் எலி மற்றும் கொழுக்கட்டை ஆகியவையும் கண்டிப்பாக இருக்க வேண்டும். இது மிகவும் புனிதமானதாகும்.

ஏழாம் விதி
உங்கள் பூஜையறையில் எப்பொழுதும் ஒரே ஒரு பிள்ளையார் சிலையை வைத்து வழிபடுங்கள். ஒன்றுக்கு மேற்பட்ட பிள்ளையார் சிலைகளை வைத்து வழிபடுவது அவரது மனைவிகளின் கோபத்தை தூண்டும்.

எட்டாம் விதி
ஸ்வஸ்திக் விநாயகரின் சின்னம் என்று நம்பப்படுகிறது. எனவே உங்கள் வீட்டில் ஏதாவது வாஸ்து தோஷம் இருந்தால் உங்கள் வீட்டின் வாயிலில் ஸ்வஸ்திக் சின்னத்தை மாட்டி வையுங்கள்.

ஒன்பதாவது விதி
வீட்டில் பிள்ளையாரை வைத்து வழிபடுபவர்கள் தினமும் சிலைக்கு அருகம்புல் வைத்து வழிபட வேண்டும். ஒருநாள் வைத்த அருகம்புல்லை அடுத்த நாள் வைக்கக்கூடாது. தினமும் அருகம்புல்லை மாற்றிக்கொண்டே இருக்க வேண்டும்.