For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த சிலைகளை வீட்டில் வைத்து வழிபடுவது உங்கள் திருமண வாழ்க்கைக்கு நல்லதல்ல...!

வீட்டு பூஜையறையில் கடவுளை வழிபடும்போது மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டியது அவசியம்.

|

கடவுளை வழிபடுபவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமானது. கடவுளை வழிபடும் முறைகள் இடத்திற்கு ஏற்ப மாறினாலும் கடவுள் மீதிருக்கும் நம்பிக்கை பொதுவானதுதான். கடவுளை வழிபடும் அனைவருமே தங்கள் வீட்டில் பூஜையறையை வைத்திருப்பார்கள்.

Dont do these things in your home temple

வீட்டு பூஜையறையில் கடவுளை வழிபடும்போது மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டியது அவசியம். ஏனெனில் நீங்கள் பூஜையறையில் செய்யும் சில தவறுகள் உங்கள் மீது கடவுளுக்கு கோபத்தை ஏற்படுத்தலாம். இந்த பதிவில் பூஜையறையில் செய்யக்கூடாத தவறுகள் என்னென்ன என்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வாடிய பூக்கள்

வாடிய பூக்கள்

அனைத்து கடவுள்களுக்குமே பூக்கள் பிடிக்கும். பூக்கள் கடவுளுக்கு உங்கள் மீது இருக்கும் பக்தியையும், அன்பையும் வெளிப்படுத்துவதாகும். வாடிய பூக்கள் உங்கள் வீட்டில் எதிர்மறை ஆற்றலையும் உங்கள் மீது கடவுளுக்கு கோபத்தையும் ஏற்படுத்தும். வாடிய பூக்களை முடிந்தளவு விரைவில் பூஜையறையில் இருந்து அகற்றிவிடுங்கள்.

துளசி செடி

துளசி செடி

சாஸ்திரங்களின் படி துளசி செடி உங்கள் வாழ்க்கையை பற்றிய அனைத்து செய்திகளையும் முன்கூட்டியே கூற இயலும். உங்கள் வீட்டில் இருக்கும் துளசி செடி திடீரென வாடி போனாலோ அல்லது கருகி விட்டாலோ உங்கள் இல்லத்தில் விரைவில் மரணம் அல்லது மோசமான உடல்நிலை கோளாறுகள் ஏற்படப்போகிறது என்று அர்த்தம்.

என்ன செய்ய வேண்டும்?

என்ன செய்ய வேண்டும்?

உங்கள் வீட்டில் இருக்கும் துளசி செடியை நன்கு கவனித்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகும். தினமும் அதற்கு தண்ணீர் ஊற்றி அதனை வாடாமல் பார்த்து கொள்ளுங்கள். ஏனெனில் வாடிய துளசி உங்கள் வீட்டில் எதிர்மறை ஆற்றலை பரப்பும்.

MOST READ: இந்த இடத்தில் மச்சம் இருப்பவர்களின் திருமண வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சிகரமானதாக இருக்கும் தெரியுமா?

விளக்கேற்றுங்கள்

விளக்கேற்றுங்கள்

உங்கள் பூஜையறையில் காலையும், மாலையும் விளக்கேற்றி வழிபடுங்கள். விளக்கில் தூய நெய் இருக்க வேண்டும் மேலும் அது உங்கள் பூஜையறைக்கு சமநிலையில் இருக்க வேண்டும். அதைவிட உயரத்திலோ அல்லது கீழ்நிலையிலோ இருக்கக்கூடாது.

சிலைகள்

சிலைகள்

உங்கள் வீட்டு பூஜையறையில் பெரிய கடவுள் சிலைகளை வைத்து வழிபடுவதை தவிர்க்கவும். இவ்வாறு பெரிய சிலைகளை வைத்து வழிபடுவது திருமண வாழ்க்கைக்கு நல்லதல்ல என்று சாஸ்திரங்கள் கூறுகிறது. அதற்கு பதில் பெரிய கடவுள் படங்களையோ அல்லது சிறிய உருவ சிலைகளையோ வைத்து வழிபடலாம்.

சிலைகளை சுத்தம் செய்தல்

சிலைகளை சுத்தம் செய்தல்

உங்கள் பூஜையை தொடங்குவதற்கு முன் தெய்வங்களின் சிலைகளை ஒரு ஈரத்துணியால் நன்கு சுத்தம் செய்ய வேண்டும். மேலும் பூஜையறையில் சிறிது தண்ணீரை தெளித்து வைப்பது நல்லது.

MOST READ: இந்த நாட்களில் அசைவ உணவு சாப்பிடுவது உங்கள் வாழ்க்கையில் நிரந்தர வறுமையை ஏற்படுத்தும் தெரியுமா?

தீபம்

தீபம்

சுத்தம் செய்த பிறகு கடவுளுக்கு முன் விளக்கை ஏற்றி வைக்கவும். உங்கள் விளக்கு எளிமையானதாக இருந்தாலே போதும் ஆடம்பரமாக இருக்க வேண்டுமென்ற அவசியமில்லை. இஹல அவற்றில் இருந்து அதிக புகை வெளியேறாது. ஒரே விளக்கை தினமும் பயன்படுத்தினால் திரியை அடிக்கடி மாற்றுவது நல்லது.

இரண்டு விளக்குகள்

இரண்டு விளக்குகள்

இரண்டு விளக்கு ஏற்றி வைக்கும் பழக்கம் உங்களுக்கு இருந்தால் இரண்டையும் ஒரே திசையில் வைக்காதீர்கள். ஒரு விளக்கை கிழக்கு நோக்கியும் மற்றொரு விளக்கை வடக்கு நோக்கியும் ஏற்றி வைக்கவும்.

இரண்டு திரிகள்

இரண்டு திரிகள்

நீங்கள் திருமணம் ஆனவராக இருந்தால் விளக்கேற்ற எப்போதும் இரண்டு திரியை உபயோகியுங்கள். இது கணவன், மனைவியின் ஒற்றுமையை உணர்த்துவதோடு உங்கள் வாழ்க்கையில் அமைதி மற்றும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.

MOST READ: பெண்களின் சருமத்தை என்றும் இளமையாக வைத்திருக்க இந்த ஊட்டச்சத்து இருக்கும் உணவுகளே போதும்...!

பிரசாதம்

பிரசாதம்

கடவுளுக்கு படைக்கும் பிரசாதம் எப்பொழுதும் பழங்களாகவோ அல்லது இனிப்புகளாகவோ இருப்பது நல்லது. அதேசமயம் பிரசாதத்தை படைக்கும் போது வலது கையில் மட்டும் மட்டும் படைக்க வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Don't do these things in your home temple

According to Shastras never do these things in your home temple.
Story first published: Tuesday, June 25, 2019, 11:34 [IST]
Desktop Bottom Promotion