For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இரத்த காட்டேரிகளின் பிறப்பிடமாக இந்தியா இருந்தது என வரலாறு கூற காரணம் என்ன தெரியுமா?

முதன் முதலாக இரத்த காட்டேரிகள் போன்ற உயிரினங்கள் இந்தியாவில்தான் கண்டறியப்பட்டது, அதை தொடர்ந்து திபெத்திலும், சீனாவிலும் கண்டறியப்பட்டது.

|

உலக வரலாற்றை எடுத்து பார்த்தால் மனிதர்களை விட வலிமையான சக்திவாய்ந்த தீயசக்திகள் வாழ்ந்த வரலாறு உலகம் முழுவதும் உள்ளது. அதிலும் சில தீய உயிரினங்கள் மனிதர்களை போலவே இருந்து கொண்டு மனிதர்களை வேட்டையாடிய வரலாறுகளும் உள்ளது. இன்றும் மக்கள் கேட்டவுடனே அச்சத்தில் நடுங்கும் பெயர் என்றால் மனிதர்களின் இரத்தத்தை குடித்து உயிர்வாழும் வேம்பயர் என்று அழைக்கப்படும் இரத்த காட்டேரிகள்தான்.

Did vampires exist in India? What Research says

இந்த மனிதர்களின் இரத்தத்தை குடிக்கும் உயிரினங்கள் இந்தியாவில்தான் முதலில் தோன்றியது என்பதற்கான நிறைய சான்றுகள் உள்ளது. ஆய்வுகளின் படி இந்த இரத்த காட்டேரிகள் இந்தியாவில் இருந்துதான் உலகம் முழுவதும் பரவியது என்று கூறப்படுகிறது. இந்த பதிவில் இரத்த காட்டேரிகள் பற்றியும் வேறு சில தீயசக்திகள் பற்றியும் விரிவாக பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எப்போது தொடங்கியது?

எப்போது தொடங்கியது?

முதன் முதலாக இரத்த காட்டேரிகள் போன்ற உயிரினங்கள் இந்தியாவில்தான் கண்டறியப்பட்டது, அதை தொடர்ந்து திபெத்திலும், சீனாவிலும் கண்டறியப்பட்டது. அங்கிருந்து அவை மேற்கத்திய நாடுகள் முழுவதும் பரவ தொடங்கியது. அதற்கு பின் பல நாடுகளில் அவை காணப்பட்டதாக வரலாறு கூறுகிறது. இந்தியர்களின் நம்பிக்கைப்படி இப்பொழுதும் அவை இந்தியாவில் இருந்து கொண்டுதான் இருக்கிறது.

இதிகாசங்கள்

இதிகாசங்கள்

இந்திய இதிகாசங்களின் படி இரத்த காட்டேரிகளை போன்ற பல உயிரினங்கள் இந்தியாவில் வசித்து வந்தது. அவற்றை பற்றி மேற்கொண்டு பார்க்கலாம். தமிழ் சமூகத்தில் மிகவும் பிரபலாமான ஒன்று பேய் ஆகும். இது இறந்த உடல்களில் இருக்கும் இரத்தத்தை குடித்துவிட்டு நடனமாடுமாம்.

வேதாளம்

வேதாளம்

வேதாளம் என்பது இந்தியாவில் மிகவும் பிரபலமான மற்றொரு காட்டேரி வகையாகும். நாட்டுப்புற நம்பிக்கைகளின் படி இதற்கு மனித உடலுக்குள் நுழையும் சக்தி இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் உயிருள்ளவர்களின் உடலில் கூட நுழைந்து தனது விருப்பத்திற்கு ஏற்ப அவர்களை செயல்பட வைக்க இவற்றால் முடியும். இவை பேரழிவை ஏற்படுத்தக்கூடியவை ஆகும்.

MOST READ:பெண்களின் கன்னித்தன்மை போன பிறகு அவர்கள் உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் தெரியுமா?

ராட்சஷன்

ராட்சஷன்

ராட்சஷன் என்ற வார்த்தை சமஸ்கிருதத்தில் இருந்து வந்ததாகும், அதன் அர்த்தம் அசுரன் என்பதாகும். இந்து புராணங்களின் படி இவர்களும் காட்டேரி வகைகளை சார்ந்தவர்கள் என்றும் இவர்கள் இரக்கமற்றவர்களாகவும், தந்திரமானவர்களாகவும் இருப்பார்கள். இவர்கள் மக்களை பயமுறுத்தி கொன்று கொண்டிருந்தார்கள். இவர்கள் பெரும்பாலும் இரவில் மட்டுமே வெளியே வருவார்கள்.

பிசாசு

பிசாசு

பிசாசுகள் காட்டேரிகளின் மற்றொரு வகையாகும் இவை மனித மாமிசங்களை திண்பதுடன் பெண்மைத்தன்மை உள்ளவையாக இருக்கும். அவர்கள் சிவந்த வீங்கிய கண்கள் மற்றும் நரம்புகளுடன் காணப்படுவார்கள். இவர்கள் சுடுகாட்டை சுற்றி வாழ்வதுடன் தங்கள் தோற்றத்தை எளிதில் மாற்றிக்கொள்ளும் சக்தி கொண்டவராக இருந்தார்கள். பிரபலமான நம்பிக்கையின் படி பிசாசை பார்ப்பவர்கள் அடுத்த 9 மாதத்தில் இறந்து விடுவார்கள்.

காட்டேரிகள்

காட்டேரிகள்

காட்டேரிகள் இறந்தவர்களின் உடலில் வாழக்கூடிய தீயசக்திகள் என்று கூறப்படுகிறது. சில புராதான குறிப்புகளின் படி இவை பாதி வௌவால் உருவத்திலும், பாதி மனித உருவத்திலும் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதன்மூலம்தான் வௌவால்கள் காட்டேரிகளுக்கு நெருக்கமானதாக மாறியதாக கூறப்படுகிறது.

மற்ற நாடுகளில்

மற்ற நாடுகளில்

மேற்கத்திய நாடுகளில் குறிப்பாக கிறிஸ்துவ புராணங்களில் இரத்த காட்டேரிகள் கொல்லப்படும் வரை நித்திய வாழ்க்கையை வாழும் என்று கூறப்படுகிறது. இந்து புராணங்களின் படி இரத்த காட்டேரிகள் கொல்லப்பட்டாலும் அவை மீண்டும் பிறக்கக்கூடும் என்று கூறப்படுகிறது, அதிலும் அவர்கள் மனிதர்களாக பிறக்கும் வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது. அதனால்தான் மனிதர்களில் சிலர் ஆபத்தானவர்களாக இருக்கிறார்கள்.

MOST READ:76 வயசுல பிளஸ் 2 படிக்கிற பெண் கேட்குதா? 50 பெண்களுக்கு மேல் சீரழித்த தொழிலதிபர்

மற்ற கலாச்சாரங்கள்

மற்ற கலாச்சாரங்கள்

அனைத்து மத கலாச்சாரங்களிலும் இரத்த காட்டேரிகள் இருக்கத்தான் செய்கிறது. குறிப்பாக பழங்கால மெசபடோமியா அருகே அதிகளவில் இவை காணப்பட்டன. மெசபடோமியாவில் டைகிரிஸ் மற்றும் யுரோபேட்ஸ் நதி அருகில் இவை இருந்ததாக வரலாறு கூறுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: ghost history வரலாறு
English summary

Did vampires exist in India? What Research says

According to the research, the blood sucking beast then travelled from India to other countries.
Desktop Bottom Promotion