Latest Updates
-
உருளைக்கிழங்கு முந்திரி மசாலா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - செம சைடிஷா இருக்கும் -
இதுல உங்க கையில் உள்ள இதய ரேகை எந்த டைப்-ன்னு சொல்லுங்க.. நீங்க காதலில் எப்படி-ன்னு சொல்றோம்.. -
Ganesh Chaturthi 2026: விநாயகர் சதுர்த்தி எப்போது வருகிறது? வீட்டிலேயே எப்படி விநாயகரை வழிபடுவது? -
12 ஆண்டுகள் கழித்து கடகத்தில் நிகழும் குரு-சந்திர சேர்க்கை: இந்த 4 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கும்.. -
இந்தியாவின் முதல் IAS அதிகாரி யார்? அவருடைய பெயர் என்ன தெரியுமா? அவரு யாருனு தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
2 முருங்கைக்காயை இருந்தா.. இப்படி ஒருவாட்டி பிரியாணி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
4-ல் 3 இந்திய பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு: உடலில் இரும்புச்சத்தை அதிகரிக்க சிம்பிளான 6 டிப்ஸ் இதோ! -
ஐயங்கார் ஸ்டைல் பொரிச்ச ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா?
இந்த 3 ராசிககாரங்களும் வாய தொறந்தாலே அது கலவரத்துல தான் போய் முடியுமாம்... யாருனு தெரியுமா?
உங்களுடைய ஆற்றலை உணர்ந்து கொண்டு செயல்பட்டால் எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும். அதுதவிர 12 ராசிகளுக்கும் இன்று எப்படி இருக்கப் போகிறது என்று பார்ப்போம்.
ஒரு நாளைத் துவங்கும்போது, இன்றைக்கு முழுக்க என்ன நடக்கப்போகிறது என்பதை முன்கூட்டியே உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதற்காக அன்றைய நாளின் ராசிபலனை பார்த்துவிட்டு தான் அடுத்த காரியத்திலேயே இறங்குவார்கள். சிலரோ இதெல்லாம் எங்க நடக்கப்போகுது? எல்லாம் பொய் என்று சொல்வார்கள். ஆனால் சிலரோ ராசிபலன்களை முழு மனதாக நம்பி, அன்றைய தின பணிகளை தொடங்குவார்கள். அப்படி இன்றைக்கு எந்த ராசிக்காரர்களுக்கு எப்படியிருக்கும் என தெரிந்து கொள்வது அவசியம்.

மேஷம்
முக்கிய உத்தியோகத்தில் இருக்கின்றவர்களுக்கு பணி சம்பந்தமான அலைச்சல்கள் உண்டாகும். தொழிலில் கொஞ்சம் பதட்டமான சூழல் உருவாகும். மாணவர்களுடைய புத்திக் கூர்மை வெளிப்படும். பெற்றோர்களிடம் கொஞம் பொறுமையாக நடந்து கொள்வது நல்லது. பணியில் முக்கியப் பொறுப்புகளிலோ தலைமைப் பொறுப்புகளிலோ உள்ளவர்கள் உங்களுடைய பணிக்கு ஒத்துழைப்பு தருவார்கள். உங்களுக்கும் பணியில் பொறுப்புகள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 4 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

ரிஷபம்
நீங்கள் எதிர்பார்த்த பண உதவிகள் உங்களுக்குக் கிடைக்கும். மனைவியின் விருப்பங்களை நிறைவேற்றுவதில் ஆர்வம் கொண்டிருப்பீர்கள். தொழிலில் பங்குதாரர்களால் உங்களுக்குச் சாதகமான சூழல்கள் உண்டாகும். முக்கியப் பணியல் உள்ளவர்களுக்கு பொருளாதார உயர்வு உண்டாகும். வாகனங்களில் பயணங்கள் மேற்கொள்கின்ற பொழுது, மனம் மகிழ்ச்சி அடைவீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளம்பச்சை நிறமும் இருக்கும்.

மிதுனம்
உங்களுடைய சொத்துக்கள் சம்பந்தப்பட்ட விஷஙயங்களில் இருந்து வந்த இடைஞ்சல்கள் சரியாகும். பொருளுாதாரம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் மேன்மை உண்டாகும். தொழிலில் உங்களுக்கு இருந்த தடைகள், போட்டிகளைக் கடந்து வெற்றி பெறுவீர்கள். உயர் அதிகாரிகளிடம் கொஞ்சம் அனுசரித்துச் செல்வது நல்லது. தொழிலில் உங்களுடைய அனுபவத்தால் சில நுட்பமான விஷயங்களைக் கற்றுக் கொள்ள முயற்சி செய்வீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஊதா நிறமும் இருக்கும்.

கடகம்
நீங்கள் எதிர்த்த கடன் உதவிகள் கைக்கு வந்து சேரும். அதனால் தொழிலை அபிவிருத்தி செய்யும் முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். திருமணத்திற்கான பேச்சு வார்த்தைகள் நன்மைகளில் முடியும். உங்களுடைய உடல் நலத்தில் ஏற்பட்ட பிரச்சினைகள் நீங்கி, ஆரோக்கியம் பெறுவீர்கள். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். பயணங்களின் மூலம் அனுகூலங்கள் அடைவீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

சிம்மம்
வேலை தேடிக் கொண்டிருப்பவர்குளுக்கு நல்ல செய்திகள் வந்து சேரும். எந்த காரியமாக இருந்தாலும் அதை நிதானத்துடன செய்து முடிப்பது நல்லது. பொன், பொருள் சேர்க்கின்ற எண்ணங்கள் அதிகரிக்கும். வேலை நிமித்தமாக பயண அலைச்சல்கள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 4 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஊதா நிறமும் இருக்கும்.

கன்னி
கல்வித்துறையில் உள்ளவர்களுக்கு நல்ல முன்னேற்றங்கள் உண்டாகும். வீட்டில் கணவன் மனைவிக்கு இடையே புரிதல் உணர்வு அதிகரிக்கும். நீங்கள் செய்கின்ற புதிய காரியங்களால் பெரும் வெற்றி கிடைக்கும். பொது காரியங்களில் ஈடுபடுபவர்குளுக்கு புகழ் கிடைக்கும். போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி அடைவீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக அடர் பச்சை நிறமும் இருக்கும்.

துலாம்
உங்களுடைய உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டும். எதையும் தைரியத்துடன் செய்து முடிப்பீர்கள். உங்களுடைய நெருங்கிய நண்பர்குளுடன் பேசும் போது, கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். மனதுக்குள் இருந்த நீண்ட நாள் கவலைகள் தீர்ந்து மனதில் புத்துணர்ச்சி ஏற்படும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 4 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக காவி நிறமும் இருக்கும்.

விருச்சிகம்
நிலுவையில் இருந்த கடன்களை அடைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். கால்நடைகள் மூலம் நீங்கள் எதிர்பார்த்த லாபம் உங்களுக்குக் கிடைக்கும். முக்கிய உத்தியோகத்தில் உள்ளவர்கள் பணி உயர்வுக்கான வாய்ப்புகளைப் பெறுவீர்கள். உங்களுடைய சக ஊழியர்களிடம் உங்களுக்கு நெருக்கம் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக தென்மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சந்தன வெள்ளை நிறமும் இருக்கும்.

தனுசு
அடுத்தவர்களுக்கு உதவி செய்கின்ற பொழுது, கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். வாகனங்களைப் பழுது பார்க்க நேரிடலாம். நீண்ட நாள் நண்பர்களுடன் சேர்ந்து பேசி மகிழ்வீர்கள். வேலைவாய்ப்பு சம்பந்தப்பட்ட விஷயங்களில் உங்களுக்குச் சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். கேளிக்கை சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஈடுபட்டு மனம் மகிழ்ச்சி அடைவீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 7 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

மகரம்
தொழிலில் புதிய அணுகுமுறைகளைக் கையாண்டு அதில் வெற்றியும் லாபமும் அடைவீர்கள். குடும்பத்தில் கொஞ்சம் கலகலப்பான சூழல்கள் உருவாகும். நீங்கள் நினைத்த செயல்களில் வெற்றி உண்டாகும். சொந்த ஊர் பயணங்களால் உங்களுக்கு உறவினர்களின் ஆதரவு பெருகும். உங்களுடைய புத்திக்கூர்மையால் அனைவராலும் பாராட்டப்படுவீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமும் இருக்கும்.

கும்பம்
வழக்கு சம்பந்தப்பட்ட விஷயங்களில் உங்களுக்குச்ச ாதகமன முடிவுகள் உண்டாகும். விலையுயர்ந்த பொருள்களை கவனமாகக் கையாளுங்கள். அதில் கூடுதல் எச்சரிக்கை வேண்டும். உங்களுடைய சம வயதினருடன் சேர்ந்து தேவையில்லாத விவாதங்களில் ஈடுபடாதீர்கள். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சள் நிறமும் இருக்கும்.

மீனம்
உங்களுடைய உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். பெரியோர்களுடைய ஆலோசனைப்படி நடந்து கொள்வீர்கள். உங்களுடைய நீண்ட நாள் பிரச்சினைகளுக்கு சுமூகமான தீர்வு கிடைக்கும். முக்கிய உத்தியோகத்தில் உள்ளவர்கள் தங்களுடைய உழைப்புக்கான முன்னுரிமையைப் பெறுவார்கள். அரசு சம்பந்தப்பட்ட காரியங்கள் உங்களுக்குச் சாதகமாக முடியும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளஞ்சிவப்பு நிறமும் இருக்கும்.



Click it and Unblock the Notifications
