For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

எப்பவும் பஞ்சமே வராம ஜாலியா இருக்கும் ரெண்டு ராசிக்காரர்கள் யார் தெரியுமா? இவங்கதான்

உங்களுடைய ஆற்றலை உணர்ந்து கொண்டு செயல்பட்டால் எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும். அதுதவிர 12 ராசிகளுக்கும் இன்று எப்படி இருக்கப் போகிறது என்று பார்ப்போம்.

By Mahibala
|

உங்களுடைய ஆற்றலை உணர்ந்து கொண்டு செயல்பட்டால் எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும். அதுதவிர 12 ராசிகளுக்கும் இன்று எப்படி இருக்கப் போகிறது என்று பார்ப்போம்.

horoscope

ஒவ்வொரு ராசிக்குமான அதிர்ஷ்ட எண், அதிர்ஷ்ட திசை, அதிர்ஷ்ட நிறம் ஆகியவற்றைத் தெரிநது கொண்டால் பாதி பிரச்னைகள் நமக்கு நீங்கும். எந்தெந்த இடங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் முதலில் உயர்ந்து கொள்ள வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

வெளிவட்டாரங்களில் உங்களுடைய செல்வாக்கு அதிகரிக்கும். முக்கிய உத்தியுாகத்தில் உள்ளவர்களான உங்களுக்கு நீங்கள் எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கும். மற்றவர்களுடைய செயல்பாடுகளை குறை சொல்வதைத் தவிர்த்துவிடுங்கள். வழக்கு சம்மந்தப்பட்ட முடிவுகள் உங்களுக்குச் சாதகமாக முடியும். வியாபாரங்களில் உங்களிடம் வேலை செய்யும் வேலையாட்களிடம் கொஞ்சம் கனிவுடன் நடந்து கொள்ளுங்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 4 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஊதா நிறமும் இருக்கும்.

MOST READ: தேனை இப்படி சாப்பிட்டிருக்கீங்களா? சாப்பிடுங்க இத்தனை நோயும் பறந்துடுமாம்...

ரிஷபம்

ரிஷபம்

மனதுக்குள் தோன்றுகின்ற பலவிதமான சிந்தனைகளின் மூலமாக உங்களுக்கு மனதில் குழப்பமும் சோர்வும் உண்டாகும். நீண்ட நாட்களாக நீங்கள் எண்ணிக் கொண்டிருந்த பிரார்த்தனைகள் அனைத்தும் நிறைவேற ஆரம்பிக்கும். முக்கிய உத்தியோகத்தில் உள்ளர்கள் தங்களுடைய உயர் அதிகாரிகளிடம் கொஞ்சம் கவனம் வேண்டும். குடும்பத்தினருடன் கலந்து ஆலோசித்து சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஊதா நிறமும் இருக்கும்.

மிதுனம்

மிதுனம்

நீங்கள் நினைத்த காரியங்களில் சின்ன சின்ன கால தாமதங்கள் ஏற்படும். நண்பர்களுடன் விருந்து போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மனம் மகிழ்ச்சி அடைவீர்கள். நீங்கள் எடுத்துச் செல்கின்ற உடைமைகளில் கொஞ்சம் கூடுதல் கவனம் தேவை. புதிதாக ஆடை மற்றும் ஆபரணங்கள் வாங்க முயற்சி செய்வீர்கள். பயணங்கள் உங்களுக்கு சாதகமாக முடியும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக தென்கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக காவி நிறமும் இருக்கும்.

கடகம்

கடகம்

முக்கிய உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உங்களுக்கான பொறுப்புகள் அதிகரிக்கத் தொடங்கும். மனதுக்குள் பலவிதமான சிந்தனைகள் தோன்றி மறையும். ஆன்மீகம் சம்பந்தப்பட்ட காரியங்களில் ஈடுபடுவதின் மூலமாக உங்களுக்கு நிம்மதியான சூழல்கள் உருவாகும். இன்று சந்திராஷ்டம தினம் என்பதால் நீங்கள் செய்கின்ற செயல்களில் பதட்டம் ஏதுமின்றி நிதானமாகச் செயல்படுவது நல்லது. இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 4 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பிங்க் நிறமும் இருக்கும்.

சிம்மம்

சிம்மம்

உங்களுடைய வியாபாரத்தில் புதுப்புது மாற்றங்களை செய்ய முயற்சி செய்வீர்கள். உங்களுடைய உத்தியோகத்தின் பலனாக உடன் பணிபுரிகின்றவர்கள் அனைவராலும் பாராட்டப்படுவீர்கள். தாய்மாமன் சம்பந்தப்பட்ட உறவினரின் வகையில் உங்களுக்கு ஆதாயங்கள் உண்டாகும். உங்களுடைய வியாபாரத்தில் உடன் வேலை செய்கின்ற வேலையாட்களுடைய முழு ஒத்துழைப்பும் உங்களுக்குக் கிடைக்கும். நண்பர்களின் மூலம் தொழில் சம்பந்தப்பட்ட அறிமுகங்கள் உங்களுக்கு உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

கன்னி

கன்னி

மற்றவர்களிடம் பேசுகின்ற பொழுது கொஞ்சம் கூடுதல் நிதானம் தேவைப்படுகிறது. உங்களுடைய உறவினர்களால் புதிய பயணங்களை மேற்கொள்ள துணிவீர்கள். உங்களுடைய வீட்டில் உள்ள கணவன் மற்றும் மனைவிக்கு இடையே அன்பும் நெருக்கமும் அதிகரிக்கும். உங்களுடைய உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் கொஞ்சம் அனுசரித்துச் செல்வது நல்லது. வாகனப் பராமரிப்பை மேற்கொள்வீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பச்சை நிறமும் இருக்கும்.

MOST READ: ஒயிட் ஒயின் - ரெட் ஒயின் ரெண்டுல எது ஆரோக்கியம்? தெரிஞ்சிக்கங்க...

துலாம்

துலாம்

உங்களுடைய தொழில் பங்குதாரர்களின் மூலம் உங்களுக்கு அளவுக்கு அதிகமான பணவரவு உண்டாகும். உங்களுடைய உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீட்டு விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மகிழ்ச்சி அடைவீர்கள். மனைவி வழியில் உங்களுக்கு சுப செய்திகள் உண்டாகும். உங்களுடைய சகோதரர்களுடன் சின்ன சின்ன கருத்து வேறுபாடுகள் மறைய ஆரம்பிக்கும். உங்களுடைய முயற்சிக்கேற்ற முன்னேற்றங்கள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 8 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக காவி நிறமும் இருக்கும்.

விருச்சிகம்

விருச்சிகம்

உங்களுடைய குடும்பத்தில் அனைவருக்கும் கலகலப்பான சூழல்கள் உண்டாகும். வீட்டில் உள்ள உங்களுடைய பிள்ளைகளின் விருப்பம் போல செயல்படுவார்கள். ஏதேனும் ஆடம்பரப் பொருள்களை வாங்கி மகிழ்ச்சி அடைவீர்கள். வியாபாரத்தில் புதிய நபர்களுடைய அறிமுகமும் ஆலோசனையும் உங்களுககுக் கிடைக்கும். குடும்பத்தில் உள்ளவர்களுடைய நீண்ட கால ஆசையை நிறைவேற்றிக் கொடுப்பீர்கள். சில முக்கியமான முடிவுகளை தைரியமாக எடுப்பீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக வடகிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக மயில் நீல நிறமும் இருக்கும்.

தனுசு

தனுசு

உங்களுடைய உடலும் மனமும் புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். உங்களுடைய உயர் அதிகாரிகளின் மூலமாக உங்களுக்கு அனுகூலங்கள் உண்டாகும். நண்பர்களின் மூலமாக நீங்கள் எதிர்பார்த்த சில காரியங்கள் உங்களுக்குச் சாதகமாக முடியும். வெளிநாடுகளில் இருந்து நீங்கள் எதிர்பார்த்த சுப செய்திகள் உங்களுக்கு வந்து சேரும். மனதுக்குள் புதிய இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 7 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பிங்க் நிறமும் இருக்கும்.

மகரம்

மகரம்

வீட்டில் கணவன், மனைவிக்கு அடையே அன்பும் நெருக்கமும் அதிகரிக்கும். முக்கிய உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உடன் பணிபுரிகின்ற சக ஊழியர்களுடைய ஆதரவினால் உங்களுக்கான பொறுப்புகள் குறைய ஆரம்பிக்கும். மனதுக்குள் இருந்து வந்த தாழ்வு மனப்பான்மை நீங்கி தைரியம் பிறக்கும். தேவையற்ற செலவுகளைக் குறைத்து சிக்கனமாக இருக்க முயற்சி செய்வீர்கள். வியாபாரத்தில் உங்கனளுக்கு இருந்து வந்த போட்டிகளைச் சமாளித்து வெற்றி பெறுவீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

கும்பம்

கும்பம்

உங்களுடன் பிறந்த சகோதரர்களின் மூலமாக நீங்கள் பெரும் நன்மைகளைப் பெறுவீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் செல்வதற்கான சூழல்கள் அமையப் பெறுவீர்கள். முக்கிய உத்தியோகதஸ்தர்களுக்கு உங்களுடைய செயல்வேகங்கள் அதிகரிக்கத் துவங்கும். உங்களுடைய வீட்டில் உள்ள கணவன், மனைவிக்கு இடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் மறைய ஆரம்பிக்கும். முக்கிய உத்தியோகத்தில் உள்ளவர்கள் உங்களுடைய சக ஊழியர்களிடம் கொஞ்சம் கனிவுடன் நடந்து கொள்ளுங்கள். உங்களுடைய பலம் மற்றும் பலவீனத்தை அறிந்து கொள்வீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட திசையாக வடமேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சிவப்பு நிறமும் இருக்கும்.

MOST READ: உயிர எடுக்கிற குழி முதல்தடவ ஒரு உயிரை காப்பாத்திருக்கு... என்ன நடந்தது தெரியுமா?

மீனம்

மீனம்

வியாபாரத்தில் நீங்கள் செய்கின்ற சின்ன சின்ன மாற்றங்களின் மூலம் உங்களுக்கு லாபம் அதிகரிக்கும். குடும்பத்தில் உள்ளவர்களுடைய தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். உங்களுடைய வியாபாரம் தொடர்பான சில முக்கிய பிரபலங்களின் அறிமுகங்கள் உங்களுக்குக் கிடைக்கும். முக்கிய உத்தியோகத்தில் உள்ளவரான உங்கள் மீது எல்லோருக்கும் நம்பிக்கையும் அதிகரிக்கும். உங்களுடைய உயர் அதிகாரிகளின் மூலமாக காரிய சித்தி உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பிங்க் நிறமும் இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Daily Horoscope For may 5 2019 Sunday

Each horoscope article on the Boldsky astrology section will cover all aspects of your life, right from career, personal life, finances, health to even travel and education. While the daily horoscopes will provide you with all the information you need to know ahead of your day. It will also help you take business or job-related decisions. see your Daily Horoscope For may 5 2019 sunday.
Story first published: Saturday, May 4, 2019, 17:01 [IST]
Desktop Bottom Promotion