Just In
- 1 hr ago
மகா கும்பமேளா பற்றி தொிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்!
- 1 hr ago
பெண்களே! இந்த காலத்தின்போது உங்க உடல் எடை அதிகரிக்குமாம்... கவனமா இருங்க..!
- 2 hrs ago
கொரோனா வைரஸ் உங்க இதயத்தை மோசமா பாதிச்சிட்டிருக்கு என்பதை சுட்டிக்காட்டும் அறிகுறிகள்!
- 2 hrs ago
பெண்கள் 'அந்த' விஷயத்துக்கு சரிப்பட்டு வரமால் போக காரணம் இந்த பிரச்சினைகள்தானாம்... பாத்துக்கோங்க...!
Don't Miss
- News
செல்போன்கள் சுவிட்ச் ஆப்.. கொரோனா தடுப்பூசியை தவிர்க்கும் சுகாதார ஊழியர்கள்.. இதுதான் தமிழக ஸ்டேடஸ்
- Automobiles
மாடர்ன் காலக்கட்டத்திற்கு ஏற்ப தன்னை மாற்றி கொள்ளும் ஜாவா!! பைக்குகளில் அலாய் சக்கரங்கள், முன்பக்க கண்ணாடி...
- Finance
ஸ்டெலான்டிஸ்.. ஆட்டோமொபைல் துறையை கலக்க வரும் புதிய நிறுவனம்.. 52 பில்லியன் டாலர் டீல்..!
- Movies
அக்ரிமென்ட்டை வைத்து மிரட்டியதா விஜய் டிவி? சுரேஷ் சக்கரவர்த்தியின் டிவிட்டல் ரசிகர்கள் ஷாக்!
- Sports
2021 ஆசியா கோப்பையிலுருந்து விலக முடிவு.. இந்திய அணி திடீர் திட்டம்.. யாருக்கு வைக்கப்பட்ட செக்!?
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
செவ்வாய் வெறும்வாயாக ஆகப்போகும் ராசிக்காரர்கள் யார் யார்?
ஒரு நாளைத் துவங்கும்போது, இன்றைக்கு முழுக்க என்ன நடக்கப்போகிறது என்பதை முன்கூட்டியே உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதற்காக அன்றைய நாளின் ராசிபலனை பார்த்துவிட்டு தான் அடுத்த காரியத்திலேயே இறங்குவார்கள்.
சிலரோ இதெல்லாம் எங்க நடக்கப்போகுது? எல்லாம் பொய் என்று சொல்வார்கள். ஆனால் சிலரோ ராசிபலன்களை முழு மனதாக நம்பி, அன்றைய தின பணிகளை தொடங்குவார்கள். அப்படி இன்றைக்கு எந்த ராசிக்காரர்களுக்கு எப்படியிருக்கும் என்பதை பார்க்கலாம். அப்படி இன்றைய நாள் உங்களுடைய ராசிக்கான பலன்களை இங்கே படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

மேஷம்
இதுவரையில் மனதில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கி, தெளிவு பிறக்கும். தடையாக இருந்து வந்த காரியங்கள் வெற்றிகரமான நிறைவேற்றுவீர்கள். குழந்தைகளின் ஆரோக்கியத்தில் சற்று கவனத்துடன் செயல்படுவது அவசியம்.இதுவரையிலும் வசூல் ஆகாமல் நிலுவையில் இருந்துவந்த பணம் யாவும் வசூல் ஆகும். உங்களுடைய சாதுர்யமான பேச்சின் மூலம் அனைவரையும் கவர்ந்துவிடுவீர்கள்.
MOST READ: மனைவியின் பிறப்புறுப்பில் பைக் கைப்பிடியை சொருகிய கணவன்... அப்புறம் என்னாச்சு?

ரிஷபம்
சாதுர்யமான வாக்குத் திறமையால் லாபத்தை பெறுவீர்கள். பொருளாதார முன்னேற்றத்திற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். அதன்மூலம் சில எதிர்காலத் திட்டங்களை வகுக்க ஐடியாக்கள் கிடைக்கும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் அன்னியோன்யம் அதிகரித்து வீட்டில் மகிழ்ச்சி பொங்கும். பேச்சுத் திறமையால் அனுகூலம் உண்டாகும்.

மிதுனம்
கலைத்துறையில் சிறந்து விளங்குவீர்கள். அரசாங்கத்தின் சார்பில் கிடைக்க வேண்டிய உதவிகள் சரியான நேரத்தில் கிடைக்கும். ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். பணியில் உள்ளவர்கள் சக ஊழியர்களிடம் அமைதியைக் கடைபிடிக்கவும். தொழிலில் அலைச்சல்கள் உண்டாகும். ஆனாலும் லாபமே ஏற்படும். வேலை வேலை என்று இருக்காமல் உடல் நலத்தில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.

கடகம்
நினைத்த காரியத்தை முடிப்பதற்குள் சிறுசிறு தடங்கல்கள் வந்து போகும். அதற்கான கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். வாகனப் பயணங்களில் நிதானம் அவசியம். உத்தியோகத்தில் உள்ளவர்கள் உடன் பணிபுரிபவர்களிடம் தேவையில்லாமல் பேசுவதையோ வாக்குவாதம் செய்வதையோ தவிர்த்து விடுங்கள். நீங்கள் எதிர்பார்த்து காத்திருந்த தன வரவுகளால் மகிழ்ச்சி உண்டாகும். தொழிலில் உண்டாகும் போட்டிகளையும் சமாளிக்க முயற்சி செய்வீர்கள்.

சிம்மம்
குடும்ப உறுப்பினர்களுடைய தேவைகளை அறிந்து அதை நிறைவேற்ற முயற்சி செய்வீர்கள். வெளிவட்டாரங்களில் உங்களுடைய செல்வாக்கு அதிகரிக்கும். நண்பர்களின் மூலம் பொருளாதாரம் மேன்மை அடைய வாய்ப்புண்டு. வியாபாரத்தில் புதிய நண்பர்கள் மற்றும் கூட்டாளிகளின் அறிமுகம் கிடைக்கும். வீடு, மனைகள் மூலம் நல்ல லாபம் கிடைக்கும்.

கன்னி
தொழிலில் உங்களுக்கு முன்னோடியாகத் திகழும் பெரும் புள்ளிகளிள் அறிமுகம் கிடைக்கும். திருமணத்துக்கான மேற்கொள்ளப்படும் முயற்சிகள் வெற்றியில் சென்று முடியும். நீங்கள் பணிபுரியும் இடத்தில் உயர் அதிகாரிகளுக்கு உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். அருகில் வசிப்பவர்கள் மூலம் அனுகூலங்களைப் பெறும் வாய்ப்புகள் உங்களுக்குக் கிடைக்கும்.
MOST READ: கல்யாணத்துக்கு முன்னாடியே கர்ப்பமான பத்து நடிகைகள் யார் யார் தெரியுமா?

துலாம்
உங்களுடைய தேவைகள் அனைத்தும் நிறைவேற ஆரம்பிக்கும் அதிர்ஷ்ட நாள் இன்றிலிருந்து தான் உங்களுக்குத் துவங்குகிறது. ஆனாலும் நீங்கள் வெளியிடங்களில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்க கொஞ்சம் கால தாமதமாகலாம். அதேபோல், வீட்டுக்கு புதிய எதிர்பாராத சொந்தங்கள் வந்து சேருவார்கள். உடல் ஆரோக்கியம் பாதிக்கும். ஆணாக இருந்தால் பெண்ணின் மூலமாகவும் பெண்ணாக இருந்தால் ஆணின் மூலமும் ஆதாயங்கள் உண்டாகும். பயணங்களின் மூலம் உங்களை நீங்களே புத்துணர்வாக வைத்துக் கொள்வீர்கள்.

விருச்சிகம்
இதுவரை தள்ளிப்போட்டுக் கொண்டிருந்த சில விஷயங்களில் சில முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கும். வீட்டில் உடன் பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்கும். தன்னம்பிக்கையுடன் புதிய முயற்சிகளை செய்து பார்க்கத் துணிவீர்கள். மனதில் இதுவரை இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி, தெளிவு பெறுவீர்கள். நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றுவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். இழுபறியாக இருந்து வந்த வழக்குகள் ஒரு முடிவுக்கு வரும்.

தனுசு
கணவன் மற்றும் மனைவிக்கு இடையே அனுசரித்துச் செல்ல வேண்டியது அவசியம். யாருக்கும் வாக்குறுதிகள் தேவையில்லாமல் கொடுக்க வேண்டாம். வாக்குறுதிகளைத் தவிர்ப்பது நல்லது. உறவினர்களின் வழியில் நடைபெறும் சுப காரியங்களுக்கு வீண் விரயச் செலவுகள் செய்ய வேண்டியிருக்கும். வாதத் திறமையால் பாராட்டப்படுவீர்கள். வெளியூர் பயணங்களால் அனுகூலமான சூழலும் லாபமும் உண்டாகும். அடுத்தவர்களுக்கு உதவி செய்து அதன்மூலம் மனம் மகிழ்ச்சி அடைவீர்கள்.

மகரம்
மனதுக்குள் நினைத்த காரியங்கள் அனைத்தும் நீங்கள் நினைத்ததை விட சிறப்பாக நடந்து முடியும். தொழிலில் இருக்கும் போட்டியைச் சமாளித்து வெற்றியை நோக்கி நகர, புதிய யுக்திகளையும் அணுகுமுறைகளையும் கையாளுவீர்கள். மாணவர்களுக்குச் சாதகமான நாளாக இருக்கும். நீங்கள் செய்யும் தொழிலில் நல்ல சூழலும் வாடிக்கையாளர்களும் அமைவார்கள். வீட்டில் குழந்தைகளின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள்.

கும்பம்
வீட்டில் பிள்ளைகளின் செயல்பாட்டினால் உங்களுக்கு லாபம் உண்டாகும். பழைய நண்பர்களை சந்தித்து மனம் மகிழ்ச்சி அடைவீர்கள். வியாபாரம் சம்பந்தமான சில நுணுக்கங்களைக் கற்றுக் கொள்வதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். பெரியோர்களுடைய ஆசிர்வாதங்கள் உங்களுக்குக் கிடைக்கும். உயர் கல்வி பயில்கின்ற மாணவர்களுடைய நினைவாற்றல் மேலோங்கத் தொடங்கும். வீடு மற்றும் மனை வாங்குவதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். உங்களுக்கு சாதகமான நாளாக இன்று அமையும்.
MOST READ: கர்ப்பப்பை கட்டியை கரைக்க செம்பருத்தி டீ எப்படி குடிக்க வேண்டும்?

மீனம்
வியாபாரிகளிடம் பேசும்போது கொஞ்சம் கவனமாகப் பேசுங்கள். பணியில் உள்ளவர்களுக்கு பணி உயர்வு கிடைப்பதற்கான சூழல்கள் உருவாகும். பெரியோர்களுடைய உபதேசங்களால் மனதுக்குள் இருந்து வந்த குழப்பங்கள் தீர்ந்து தெளிவு பிறக்கும். நீங்கள் எதிர்பார்த்த உதவிகளால் உங்களுக்கு லாபங்கள் உண்டாகும். மனைகளில் வீடு கட்டும் பணியைத் தொடங்குவீர்கள்.