Latest Updates
-
தென்னிந்தியாவின் அம்பானி என்று கூறப்படும் இந்த நடிகருக்கு புர்ஜ் கலீஃபாவில் சொந்த வீடு இருக்காம்-யார் தெரியுமா -
அக்டோபர் மாத கிரக பெயர்ச்சிகளால் இந்த ராசிக்கெல்லாம் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா? -
ரோட்டுக்கடை தக்காளி குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 28, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினைகளை சந்திக்கப் போறாங்களாம் -
அக்டோபரில் நிகழும் சுக்கிரனின் வக்ர பெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
கொங்கு ஸ்பெஷல் பீர்க்கங்காய் கடலை சட்னி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - இட்லி, தோசைக்கு அருமையா இருக்கும் -
உலகின் மிகவும் விலையுயர்ந்த அரிசி எது? அதன் விலை என்ன தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
4 முட்டை இருந்தா இந்த சைனீஸ் ஸ்டைல் தவா வறுவலை செஞ்சு பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
கப்பல்கள் என்ன எரிபொருளை பயன்படுத்துகின்றன தெரியுமா? பெட்ரோலும் இல்லையாம், டீசலும் இல்லையாம்... -
முகலாய ஸ்டைல் வெஜ் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - அசைவ பிரியாணியை விட சூப்பரா இருக்கும்
குபேரனின் ஆசி பெற்று பணமழையால் நனையப் போகும் ராசிக்காரர் இவர்தான்...
உங்களுடைய ஆற்றலை உணர்ந்து கொண்டு செயல்பட்டால் எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும். அதுதவிர 12 ராசிகளுக்கும் இன்று எப்படி இருக்கப் போகிறது என்று பார்ப்போம்.
ஒரு நாளைத் துவங்கும்போது, இன்றைக்கு முழுக்க என்ன நடக்கப்போகிறது என்பதை முன்கூட்டியே உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதற்காக அன்றைய நாளின் ராசிபலனை பார்த்துவிட்டு தான் அடுத்த காரியத்திலேயே இறங்குவார்கள்.

சிலரோ இதெல்லாம் எங்க நடக்கப்போகுது? எல்லாம் பொய் என்று சொல்வார்கள். ஆனால் சிலரோ ராசிபலன்களை முழு மனதாக நம்பி, அன்றைய தின பணிகளை தொடங்குவார்கள். அப்படி இன்றைக்கு எந்த ராசிக்காரர்களுக்கு எப்படியிருக்கும் என தெரிந்து கொள்வது அவசியம்.

மேஷம்
வேலை தேடிக் கொண்டிருக்கிறவர்களுக்கு நீங்கள் எதிர்பார்த்த உங்களுக்குச் சாதகமான பலன்கள் உங்களுக்குக் கிடைக்கும். ஆன்மீக எண்ணங்கள் உங்கள் மனதில் அதிகரிக்கும். உங்களுடன் பிறந்தவர்களுடைய முழு ஆதரவும் உங்களுக்குக் கிடைக்கும். முக்கிய உத்தியோகத்தில் இருக்கின்றவர்களுக்கு முழு திருப்தியான சூழல்கள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் அதிர்ஷ்ட திசையாக வடமேற்கு திசையாகவும் இருக்கும்.

ரிஷபம்
வீட்டில் உங்களுடைய பிள்ளைகளின் தேவைகளை அறிந்து கொண்டு அதை முழு மனதோடு நிறைவேற்றி வைப்பீர்கள். பரம்பரை சொத்துக்களில் ஏற்பட்டிருக்கும் இன்னல்கள் நீங்கும். வியாபாரம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் நீங்கள் எதிர்பார்த்த லாபம் உங்களுக்குக் கிடைக்கும். நீங்கள் பணிபுரிகின்ற இடங்களில் உங்கள் மீதான முழு நம்பிக்கையும் அதிகரிக்கும். புதிய நபர்களின் மூலமாக உங்களுக்கு அனுகூலமான சூழல்கள் அமையும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட நிறமாக இளம் மஞ்சள் நிறமும் அதிர்ஷ்ட திசையாக தென்கிழக்கு திசையாகவும் இருக்கும்.

மிதுனம்
இதுவரைக்கும் தடைபட்டு வந்த காரியங்களைச் சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். ஆனாய வழிப் பயணங்களால் உங்களுக்கு அனுகூலமான பலன்கள் உண்டாகும். இதுவரைக்கும் நிலுவையில் இருந்து வந்த வழக்குகளில் உங்களுக்குச் சாதகமான முடிவுகள் கிடைக்கும். உங்களுடைய சந்தேக உணர்வினால் மனக்கசப்புகள் ஏற்பட வாய்ப்புண்டு. உங்களுடைய பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 8 ம் அதிர்ஷ்ட நிறமாக பச்சை நிறமும் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையாகவும் இருக்கும்.

கடகம்
வியாபாரத்தில் உங்களுடைய புதிய யுக்திகளைக் கடைபிடிப்பதன் மூலம் உங்களுக்கு லாபம் அதிகரிக்கும். குடும்ப நபர்களிடம் கொஞ்சம் அமைதியை கடைபிடியுங்கள். பொதுப் பணிகளில் ஈடுபடுகின்றவர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் உங்களுக்கு உண்டாகுமு். நீங்கள் பணிபுரியும் இடங்களில் உங்களுக்கான பொறுப்புகள் அதிகரிக்கும். உங்களுடைய பழைய நண்பர்களைச் சந்திப்பதன் மூலம் மனம் மகிழ்ச்சி அடைவீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையாகவும் இருக்கும்.

சிம்மம்
வீட்டில் கணவன், மனைவிக்கு இடையே கொஞ்சம் கூடுதலாக அனுசரித்துச் செல்லுங்கள். இணையதளம் தொடர்பான பணிகளில் உள்ளவர்களுக்குப் பொறுப்புகள் அதிகரிக்கும். வாகனங்களில் பயணங்கள் மேற்கொள்கின்ற பொழுது அதில் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். வீட்டில் பெரியோர்களின் ஆலோசனைகள் மனதிற்கு மகிழ்ச்சியை அளிக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட நிறமாக அடர் சிவப்பு நிறமும் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையாகவும் இருக்கும்.

கன்னி
தொழில் சம்பந்தமான புதிய முடிவுகளை நீங்கள் எடுப்பீர்கள். உங்களுடைய திறமைக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும். தைரியத்துடன் நீங்கள் நினைத்த செயலை செய்து முடிப்பீர்கள். முக்கிய உத்தியோகத்தில் இருந்து வந்த மறைமுக எதிர்ப்புகளைக் களைவீர்கள். அடுத்தவர்களுடைய விமர்சனங்களைப் பொருட்படுத்தாமல் முக்கிய வேலையில் கவனம் செலுத்துவது நல்லது. இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 7 ம் அதிர்ஷ்ட நிறமாக பிங்க் நிறமும் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையாகவும் இருக்கும்.

துலாம்
தொழில் சம்பந்தமான சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். அரசாங்கம் சம்பந்தப்பட்ட பணிகளில் நீங்கள் எதிர்பார்த்த உங்களுக்கு ஆதரவான சூழல்கள் உண்டாகும். உங்களுடைய வேலையாட்களின் மூலம் உங்களுக்கு அனுகூலங்கள் உண்டாகும். முக்கியப் பயணங்களால் உங்களுக்குமனம் மகிழ்ச்சி ஏற்படும். உங்களுடைய உடல் ஆரோக்கியத்தில் உங்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 8 ம் அதிர்ஷ்ட நிறமாக பழுப்பு நிறமும் அதிர்ஷ்ட திசையாக தென்மேற்கு திசையாகவும் இருக்கும்.

விருச்சிகம்
பெற்றோர்களின் வழியிலான உறவினர்களிடம் கொஞ்சம் கனிவுடன் நடந்து கொள்ளுங்கள். நீங்கள் செய்யும் செயல்களில் கொஞ்சம் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும். அடுத்தவருக்கு உதவுவதில் கொஞ்சம் சிந்தித்துச் செயல்படுங்கள். மனதுக்குள் தோன்றுகின்ற ஒருவித எண்ணங்களால் உங்களுக்குச் சோர்வு உண்டாகும். உங்களுடன் பணிபுரிகின்றவர்களால் உங்களுடைய மரியாதை உயர ஆரம்பிக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட நிறமாக சந்தன வெள்ளை நிறமும் அதிர்ஷ்ட திசையாக வடகிழக்கு திசையாகவும் இருக்கும்.

தனுசு
உங்களுடைய உயர் அதிகாரிகளின் மூலமாக உங்களுக்கு அனுகூலமான பலன்கள் கிடைக்கும். போட்டிகளில் நீங்கள் எதிர்பார்த்த வெற்றி உங்களுக்குக் கிடைக்கும். குடும்பத்தில் ஏற்படும் சுப செய்திகளால் உங்கள் மனதில் பெரும் மகிழ்ச்சி உண்டாகும். தொழிலில் உங்களுடைய கூட்டாளிகளின் மூலமாக உங்களுக்கு லாபம் அதிகரிக்கும். சர்வதேச வணிகம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் நீங்கள் எதிர்பார்த்த மேன்மை உங்களுக்குக் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட நிறமாக நீல நிறமும் அதிர்ஷ்ட திசையாக தென்மேற்கு திசையாகவும் இருக்கும்.

மகரம்
உங்களுடைய உடல் ஆரோக்கியத்தில் இருந்து வந்த இன்னல்கள் நீங்கும். வீடு மற்றும் மனை சம்பந்தப்பட்ட விவகாரங்களில் உங்களுக்குச் சாதகமான சூழல்கள் அமையும். மனதுக்குள் புதுவிதமான புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள். உங்களுடைய எண்ணங்கள் தெளிவாகும். புதிய நட்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட நிறமாக சிவப்பு நிறமும் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையாகவும் இருக்கும்.

கும்பம்
வியாபாரங்கள் சம்பந்தப்பட்ட பணிகளில் கொஞ்சம் இழுபறியான சூழல்கள் உருவாகும். நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் உங்களுக்குக் கிடைக்க கொஞ்சம் காலதாமதமாகும். கடன் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளில் கொஞ்சம் கூடுதல் நிதானம் தேவை. நீங்கள் செய்கின்ற செயல்களில் கொஞ்சமும் பதட்டம் இன்றி, செயல்படுவது நல்லது. புதிதாக ஏதேனும் முயற்சி செய்தால் கொஞ்சம் சிந்தித்து செயல்படுங்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட நிறமாக ஊதா நிறமும் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையாகவும் இருக்கும்.

மீனம்
வீட்டில் பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். பொருளாதார மேன்மைக்காக உதவிகளைப் பெறுவீர்கள். உங்களுடன் பிறந்த உடன் பிறப்புகளால் உங்களுக்கு ஆதாயங்கள் உண்டாகும். கலைத்துறையில் இருக்கின்றவர்களுக்கு திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையப் பெறும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சள் நிறமும் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையாகவும் இருக்கும்.



Click it and Unblock the Notifications
