Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஒருவாட்டி கிராமத்து ஸ்டைலில் செஞ்சு சாப்பிடுங்க.. தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 21 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப சந்தோஷமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (21 June 2026-27 June 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது..! -
உங்க ஸ்கின் டைப் சொல்லுங்க.. அரிசி மாவு வெச்சு எப்படி ஃபேஸ் பேக் போடுறது-ன்னு சொல்றோம்.. -
சர்க்கரைவள்ளிக் கிழங்கு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
Father's Day 2026:இந்த 4 ராசிக்காரங்க சிறந்த தந்தையாக இருப்பதோடு, பிள்ளைகளுக்கு ரோல்மாடலாகவும் இருப்பாங்களாம்! -
முட்டைக்கோஸை இப்படி ஒருடைம் கூட்டு செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க... -
International Yoga Day 2026: தினமும் யோகா செய்வதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
புதன் பெயர்ச்சியால் ஜூன் 22 முதல் இந்த 4 ராசிக்காரங்க பண மழையில் நனையப்போறாங்க.. உங்க ராசியும் இதுல இருக்கா? -
1 கப் ஜவ்வரிசி இருந்தா.. காலையில் 5 நிமிடத்தில் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட..
இன்னைக்கு இந்த ஒரு ராசிக்காரருக்கு தான் தங்கம் வாங்கற யோகம் இருக்கு... மத்தவங்க வாங்காதீங்க
உங்களுடைய ஆற்றலை உணர்ந்து கொண்டு செயல்பட்டால் எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும். அதுதவிர 12 ராசிகளுக்கும் இன்று எப்படி இருக்கப் போகிறது என்று பார்ப்போம்.
ஜோதிடம் என்பது இந்து மதத்தில் மிக முக்கிய இடத்தைப் பெற்றிருக்கிறது. 12 கோள்களின் நகர்வையும் தங்களுடைய எதிர்காலத்தைச் சொல்பவை என மக்கள் நம்புகின்றனர். அதிலும் சிலருக்கு தினசரி காலையில் ராசிபலனைப் பார்த்தபின் தான் அன்றைய நாளையே தொடங்குவார்கள். அதில் ஒருவகையான மன திருப்தி அவர்களுக்கு உண்டாகும். அப்படி இன்றைய உங்களுடைய ராசிப்படி உங்களுக்கு இன்று எப்படி இருக்குமென்று பார்க்கலாம்.

மேஷம்
முக்கிய உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் மேன்மையான சூழல் உண்டாகும். தொழில் சம்பந்தமான பணிகளை பயணங்களை மேற்கொள்வீர்கள். தாய்மாமன் உறவுகளிடம் நிதானம் தேவை. புதிய பொருள்கள் வாங்கி மகிழ்வீர்கள். தடைகளைக் களைவீர்கள். மூத்த உடன்பிறப்புகளின் ஆதரவு கிடைக்கும். இன்று உங்களுடைய
அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

ரிஷபம்
பிள்ளைகளிடம் அனுசரித்துச் செல்லவும். தொழில் சம்பந்தமான முடிவுகளை எடுக்கும்போது நிதானம் வேண்டும். தொழிலில் புதிய யுக்திகளை கையாள்வீர்கள். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். எஞ்சிய பணிகளை செய்து முடிப்பீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட நிறமாக சிவப்பு நிறமும் இருக்கும்.

மிதுனம்
பிரபலமானவர்களின் நட்பு கிடைக்கும். நண்பர்களின் உதவியால் தொழில் வாய்ப்புகள் உண்டாகும். கணவன் மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்கள் உயர் அதிகாரிகளை அனுசரித்து செல்லவும். எண்ணங்களில் தெளிவு உண்டாகும். பயணங்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட நிறமாக இளம் பச்சை நிறமும் இருக்கும்.

கடகம்
சுயதொழில் செய்வதற்கான திட்டங்களை வகுப்பீர்கள். உத்தியோகத்தில் உள்ள மறைமுக எதிரிகளை கண்டறிவீர்கள். சக ஊழியர்களால் பணிகளில் சில பிரச்னைகள் உண்டாகும். பணியில் கவனத்துடன் செயல்படவும். பெரியோர்களின் ஆதரவு கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

சிம்மம்
குடும்பத்தில் கலகலப்பான சூழல் அமையும். செயல்பாடுகளில் வேகம் அதிகரிக்கும். பணியில் உயர் அதிகாரிகளால் சாதகமான சூழல் உண்டாகும். வாக்கு வன்மையால் தொழில் வகை லாபம் கிடைக்கும். புதிய முயற்சிகளில் எண்ணிய வெற்றி கிடைக்கும். பொருள் சேர்க்கை உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட நிறமாக சந்தன வெள்ளை நிறமும் இருக்கும்.

கன்னி
கணவன், மனைவிக்கிடையே சில கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். தொழிலில் புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள். குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்து செல்லவும். புதியவர்களின் அறிமுகத்தால் சாதகமான பலன்கள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 7 ம் அதிர்ஷ்ட நிறமாக பல வண்ண நிறமும் இருக்கும்.

துலாம்
உறவினர்களின் மூலம் சாதகமான சூழல் அமையும். தொழிலில் புதிய யுக்திகளை கையாண்டு வெற்றி அடைவீர்கள். மனை வாங்குவதற்கு சதகமான சூழல் அமையும். பிரபலமானவர்களின் நட்பு கிடைக்கும். அவர்களின் மூலம் முன்னேற்றத்திற்கான சூழல் அமையும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட நிறமாக இளஞ்சிவப்பு நிறமும் இருக்கும்.

விருச்சிகம்
பெற்றோர்களின் ஆசைகளை நிறைவேற்றுவீர்கள். வெளிவட்டாரங்களில் உங்கள் செல்வாக்கு உயரும். உறவினர்களின் வருகையால் மனம் மகிழ்வீர்கள். நிலம் சம்பந்தமான பிரச்னைகளுக்கு சுமூகமான முடிவு கிடைக்கும். ஆபரணச் சேர்க்கை உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட நிறமாக பச்சை நிறமும் இருக்கும்.

தனுசு
எதிர்பாராத தனவரவு உண்டாகும். ஆராய்ச்சி பணியில் உள்ளவர்கள் புதிய கண்டுபிடிப்புகளில் உள்ள இடர்பாடுகளைக் களையும் சாதகமான சூழல் உண்டாகும். புதிய நபர்கள் நட்பு கிடைக்கும். இளைய உடன்பிறப்புகள் மூலம் விரயச் செலவுகள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 7 ம் அதிர்ஷ்ட நிறமாக பல வண்ண நிறமும் இருக்கும்.

மகரம்
பணியில் பொறுப்புகள் அதிகரிக்கும். உறவினர்களிடம் இருந்து எதிர்பார்த்த அனுகூலமான பலன்கள் கிடைக்கும். தொழில் முனைவோருக்கு கூடுதல் பணி உண்டாகும். பொதுத்தொண்டில் ஈடுபடுபவர்களுக்கு கீர்த்திகள் உண்டாகும். மனைகள் மூலம் சேமிப்பு உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட நிறமாக இளம் மஞ்சள் நிறமும் இருக்கும்.

கும்பம்
தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகளால் அனுகூலமான நிலை உண்டாகும். தொழிலுக்கு பிள்ளைகளின் ஆதரவு கிடைக்கும். தாய்வழி உறவினர்களால் நன்மைகள் உண்டாகும். புதிய வாய்ப்புகள் கிடைக்கும். முயற்சிகள் ஈடேறும். இன்று உங்களுடைய
அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமும் இருக்கும்.

மீனம்
மனதில் உள்ள பல்வேறு எண்ணங்களால் சரியான முடிவு எடுக்க முடியாமல் குழப்பமான சூழல் உருவாகும் வாய்ப்புண்டு. உயர் அதிகாரிகளிடம் அனுசரித்துச் செல்லவும். சந்திராஷ்டமம் நடைபெறுவதால் முக்கிய முடிவுகள் எடுப்பதில் கால தாமதம் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 8 ம் அதிர்ஷ்ட நிறமாக மயில் நீல நிறமும் இருக்கும்.



Click it and Unblock the Notifications