Latest Updates
-
இந்த 4 எழுத்துக்களில் பெயர் தொடங்குபவர்கள் ராஜவாழ்க்கை வாழ பிறந்தவர்களாம் - உங்க பெயரின் முதல் எழுத்து என்ன? -
கர்நாடகா ஸ்டைல் கசப்பே இல்லாத பாவக்காய் புளிக்குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
வீட்டில் இந்த செடிகள் இருந்தா போதும்… காற்று சுத்தமாகும், பணமும் அதிர்ஷ்டமும் தானாக வரும்! -
பணத்தின் வரலாறு: பணம் கண்டுபிடிப்பதற்கு முன் எதை வைத்து மக்கள் பொருட்களை வாங்கினார்கள் தெரியுமா? -
சம்பளம் வந்ததும் மணி பிளாண்ட் வாங்குறீங்களா? பணத்தை அள்ளிக் கொடுக்கும் அந்த ரகசிய திசை இதுதான்! -
May 2026 Monthly Horoscope: மே மாதத்தில் வெற்றிப்படிக்கட்டில் வேகமாக ஏறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
மசாலா பன் தோசையும், உளுந்து சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க... -
இன்றைய ராசிபலன் 30 ஏப்ரல் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு கேட்டது கிடைக்கும் நாளாக இருக்குமாம் -
புதன் மேஷ ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
1/4 கப் வேர்க்கடலை இருந்தா தேங்காய் சேர்க்காத இந்த சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும்
இந்த ரெண்டு ராசிக்காரங்களுக்கும் பரம்பரை சொத்து மூலமா பெரிய லாபம் கிடைக்க வாய்ப்பிருக்கு
உங்களுடைய ஆற்றலை உணர்ந்து கொண்டு செயல்பட்டால் எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும். அதுதவிர 12 ராசிகளுக்கும் இன்று எப்படி இருக்கப் போகிறது என்று பார்ப்போம்.
நம்மில் பெரும்பாலானோருக்கும் நாளைத் துவங்கும்போது, இன்றைக்கு முழுக்க என்ன நடக்கப்போகிறது என்பதை முன்கூட்டியே உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதற்காக அன்றைய நாளின் ராசிபலனை பார்த்துவிட்டு தான் அடுத்த காரியத்திலேயே இறங்குவார்கள். சிலரோ இதெல்லாம் எங்க நடக்கப்போகுது? எல்லாம் பொய் என்று சொல்வார்கள். ஆனால் சிலரோ ராசிபலன்களை முழு மனதாக நம்பி, அன்றைய தின பணிகளை தொடங்குவார்கள். அப்படி இன்றைக்கு எந்த ராசிக்காரர்களுக்கு எப்படியிருக்கும் என்பதை பார்க்கலாம்.

மேஷம்
முக்கியப் பொறுப்புகளில் இருப்பவர்களுக்கு வேலையில் முன்னேற்றமான சூழல் உண்டாகும். உறவினர் மற்றும் சுற்றத்தாரின் முழு ஆதரவும் உங்களுக்குக் கிடைக்கும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். நீங்களே எதிர்பாராமல், வரும் சுப செய்திகளால் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட நிறமாக பச்சை நிறமும் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் இருக்கும்.

ரிஷபம்
வீட்டில் பிள்ளைகளுடைய கல்வியில் கொஞ்சம் அக்கறை செலுத்த வேண்டியது மிக அவசியம். பூர்வீக சொத்துக்களால் கொஞ்சம் சுப விரயச் செலவுகள் உண்டாகும் வாய்ப்புண்டு. வீட்டில் உள்ள மூத்தோர்களின் முழு ஆதரவும் கிடைக்கும். பொது காரியங்களில் தேவையான உதவிகளைச் செய்வீர்கள். வெளிநாட்டுப் பயணங்களால் மகிழ்ச்சி அடையும் வாய்ப்புகள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 4 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமும் இருக்கும்.

மிதுனம்
மந்த நிலையில் நினைவாற்றலில் இருந்து வந்த சிக்கல்கள், சிறு சிறு குறைகள் நீங்கி, மாணவர்கள் தெளிவு பெறுவார்கள். உடன் பணிபுரிகின்ற சக பணியாளர்குளுடைய முழு ஆதரவும் உங்களுக்குக் கிடைக்கும். உங்களுடைய பேச்சுத் திறமையினால் மற்றவர்களுடைய பாராட்டைப் பெறுவீர்கள். அரசாங்கத் தரப்பினரிடமிருந்து நீங்கள் எதிர்பார்த்திருந்த அனுகூலமான பலன்கள் உங்களுக்குக் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட நிறமாக நீல நிறமும் இருக்கிறது.

கடகம்
பதவி உயர்வுக்கான முயற்சிகள் கை கூடி வரும். ஆடை ஆபரணச் சேர்க்கைகள் உண்டாகும். எதிர்பாராத தன வரவுகளால் உங்களுடைய சேமிப்பு கிடுகிடு வென்று உயர ஆரம்பிக்கும். வீட்டில் மனைவியினுடைய ஆதரவினால் தன லாபங்கள் உண்டாகும். மனதில் உள்ள கவலைகள் நீங்கி, மகிழ்ச்சி அடைவீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 7 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சாம்பல் நிறமும் இருக்கும்.

சிம்மம்
செய்கின்ற தொழிலில் மேன்மையான சூழல்கள் அமையும். நினைத்த காரியங்களுக்கு செயல் திட்டங்கள் தீட்டி அதை நோக்கி, முன்னேறிச் செல்வார்கள். முக்கியப் பொறுப்புகளில் இருப்பவர்கள் சக பணியாளர்களை அனுசரித்துச் செல்லுவது நன்மையைத் தரும். வாகனப் பயணங்களினால் மன மகிழ்ச்சி ஏற்படும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ஆகவும் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சள் நிறமாகவும் இருக்கும்.

கன்னி
வீட்டில் உள்ள குடும்ப உறுப்பினர்களுடைய முழு ஆதரவும் உங்களுடைய தொழிலுக்குக் கிடைக்கும். வர்த்தகத் துறையில் மேம்பாட்டுக்கான முளற்சிகளை மேற்கொள்வீர்கள். பதவி உயர்வைப் பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். புதிய தொழில் சம்பந்தப்பட்ட முயற்சிகளில் வெற்றியும் புகழும் உண்டாகும். பொது இடங்களில் உங்களுடைய பேச்சுக்களுக்கு ஆதரவுகள் பெருகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

துலாம்
மாணவர்களுக்கு உயர் கல்வியில் நல்ல முன்னேற்றமான சூழல்கள் அமையும். தொழில் சார்ந்த எண்ணங்கள் மேலோங்கி நிற்கும். வீட்டில் உள்ள பெரியோர்களுடைய ஆசிர்வாதம் உங்களுக்கு அனுகூலமான பலன்கள் கிடைக்கும். பொருளாதாரத்தில் உண்டாகும் முன்னேற்றத்துக்கான உதவிகள் கிடைக்கும். தொழில் போட்டிகளில் உங்களுக்கு வெற்றி உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 8 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஊதா நிறமாகவும் இருக்கிறது.

விருச்சிகம்
புதிய வீடு, மனை வாங்குவதற்கான வாய்ப்புகள் அமையும். பேசும் போது உங்களுடைய பேச்சுக்களில் கவனம் செலுத்த வேண்டும். பணியில் உங்களுடைய பொறுப்புகள் அதிகரிக்கும். உடன் பிறந்த சகோதரர்களின் மூலமாக உங்களுக்கு சாதகமான சூழல்கள் அமையும். புதிய புதிய முயற்சிகளில் எதிர்பார்த்து காத்திருந்த முடிவுகளை அடைய கொஞ்சம் கால தாமதமாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெளிர் பழுப்பு நிறமும் இருக்கிறது.

தனுசு
தொழிலில் பங்கு தாரர்களிடம் இதுவரை இருந்து வந்த சிறு சிறு பிரச்னைகள், கருத்து வேறுபாடுகள் நீங்கும். வீட்டில் மனைவியின் உறவினர்கள் மூலம் கொஞ்சம் சுப விரயச் செலவுகள் உண்டாகும். தொழில் மேம்பாட்டுக்கான செயல்பாடுகளுக்கு நண்பர்களின் உதவிக்ள கிடைக்கும். வெளியூா் பயணங்களினால் உங்களுக்கு அனுகூலமான பலன்கள் உண்டாகும். உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக அடர் சிவப்பு நிறமும் இருக்கும்.

மகரம்
தொழில் சம்பந்தப்பட்டவர்களிடம் தேவையற்ற பேச்சுக்களைத் தவிர்ப்பது நல்லது. கடன் தொல்லையால் சிறிது மனக் கஷ்டங்கள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்துவது நல்லது. தொழில் சம்பந்தமாக அலைச்சல்கள் ஏற்பட்டாலும் அதன்மூலம் லாபமே உண்டாகும். ஆன்மீக, புண்ணிய காரியங்களுக்கு நன்கொடைகள் கொடுத்து மனம் மகிழ்ச்சி அடைவீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பச்சை நிறமும் இருக்கும்.

கும்பம்
மனதில் உறுதியுடனும் தன்னம்பிக்கையுடனும் புதிய செயல்களில் ஈடுபடுவீர்கள். தொழில் சம்பந்தமாக புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். தொழில் சம்பந்தமாக பயணங்களை மேற்கொள்வீர்கள். புதிய நபர்குள் மூலமாக தொழிலில் லாபங்கள் உண்டாகும். உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளஞ்சிவப்பு நிறமும் இருக்கும்.

மீனம்
வீட்டுக்கு சொந்தங்கள், உறவினர்களுடைய வருகையினால் மனதில் மகிழ்ச்சி உண்டாகும். பொன், பொருள், ஆபரணச் சேர்க்கைகள் உண்டாகும். நீங்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த உதவிகளால் உங்களுக்கு சாதகமான பலன்கள் ஏற்படும். ஆன்மீகத்தில் நாட்டமும் ஈடுபாடும் அதிகரிக்கும். கடல்வழிப் பயணங்களின் மூலம் நன்மைகள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 7 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.



Click it and Unblock the Notifications