Latest Updates
-
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது... -
கேஸ் அதிகம் தேவைப்படாத அட்டகாசமான சாம்பார் சாதம் ரெசிபி..இந்த மாறி செஞ்சு பாருங்க... டேஸ்ட் செமயா இருக்கும்... -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய பச்சப்புளி ரசம் - செஃப் மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்டைலில் எப்படி செய்றதுன்னு பாருங்க.. -
கேது-சந்திரன் உருவாக்கும் கிரகண யோகம் 2026: இந்த 3 ராசிக்காரங்க கோடிகளை குவிக்கப்போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
இந்த ஒரு மூலிகை டீயை தொடர்ந்து 14 நாட்கள் குடித்தால் சிறுநீரக கல் கரையுமாம் - கூறும் ஆயுர்வேத டாக்டர்! -
பாபா வாங்கா-நோஸ்ட்ரடாமஸ் கணிப்பு படி மூன்றாம் உலகப்போருக்கு பின் எந்த நாடு சக்திவாய்ந்ததாக இருக்கும் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடைந்த குரு பகவான்: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாரெல்லாம் கவனமா இருக்கணும் தெரியுமா? -
வெயில் காலத்தில் இந்த கஞ்சியை அடிக்கடி செஞ்சு குடிங்க.. கொழுப்பும் குறையும், உடலும் குளிர்ச்சியா இருக்கும்... -
இன்றைய ராசிபலன் 12 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு நினைத்தது நடக்கும் நாளாக இருக்குமாம்...! -
30 ஆண்டுக்கு பின் சனியும்-செவ்வாயும் மீனத்தில் இணைவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம்
எப்போதும் கவனத்தை சிதறவே விடாம ஸ்டெடியா இருக்கிற 4 ராசிகள் எது தெரியுமா? இவங்கதான்...
உங்களுடைய ஆற்றலை உணர்ந்து கொண்டு செயல்பட்டால் எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும். அதுதவிர 12 ராசிகளுக்கும் இன்று எப்படி இருக்கப் போகிறது என்று பார்ப்போம்.
உங்களுடைய ஆற்றலை உணர்ந்து கொண்டு செயல்பட்டால் எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும். அதுதவிர 12 ராசிகளுக்கும் இன்று எப்படி இருக்கப் போகிறது என்று பார்ப்போம்.

ஒவ்வொரு ராசிக்குமான அதிர்ஷ்ட எண், அதிர்ஷ்ட திசை, அதிர்ஷ்ட நிறம் ஆகியவற்றைத் தெரிநது கொண்டால் பாதி பிரச்னைகள் நமக்கு நீங்கும். எந்தெந்த இடங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் முதலில் உணர்ந்து கொள்ள வேண்டும்.

மேஷம்
அரசாங்கத்திடம் இருந்து நீங்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த அனுகூலமான பலன்கள் உங்களுக்குக் கிடைக்கும். உங்களுக்குப் பதவி உயர்வு கிடைப்பதற்கான முயற்சிகளை எடுப்பீர்கள். மனதில் உள்ள கவலைகள் நீங்கி, மனம் மிகழ்ச்சி அடைவீர்கள். உங்களுடைய சக ஊழியர்களைக் கொஞ்சம் அனுசரித்துச் செல்லுங்கள். உங்களுடைய தொழில் சார்ந்த செயல்பாடுகளினால் கொஞ்சம் பொறுமையைக் கடைபிடிப்பது நல்லது. சுரங்கப் பணிகள் சம்பந்தப்பட்ட வேலை செய்கின்றவர்கள் கொஞ்சம் கவனமாகச் செயல்படுவார்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எ்ணணாக எண் 7 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஊதா நிறமும் இருக்கும்.

ரிஷபம்
புதிதாக வீடு மற்றும் மனைகள் வாங்குவதற்கான வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். பொது காரியங்களில் சபைத் தலைவராகவும் அமர வைக்கும் அளவுக்கு மரியாதை கிடைக்கும். அனைவரின் ஒத்துழைப்பும் உங்களுக்குக் கிடைக்கும். தண்ணீர் சம்பந்தப்பட்ட தொழில்களில் இருக்கிறவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்குமு். வாகனங்களில் பயணங்கள் மேற்கொள்கின்ற பொழுது மனம் மகிழ்ச்சி உண்டாகும். போட்டிகளில் ஈடுபட்டு வெற்றி அடைவீர்கள். பொருள் வரவின் காரணமாக உங்களுடைய சேமிப்பு உயரும். தெரியாத அறிமுகமில்லாத நபர்கள் மூலம் லாபம் அதிகரிக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சாம்பல் நிறமும் இருக்கும்.

மிதுனம்
வீட்டில் கணவன், மனைவிக்கு இடையே இருந்து வந்த சின்ன சின்ன கருத்து வேறுபாடுகள் ஒரு முடிவுக்கு வரும். உங்களுடைய புதிய முயற்சிகளில் நீங்கள் நினைத்த வெற்றி உங்களுக்குக் கிடைக்கும். உங்களுடைய செயல் வேகங்கள் அதிகரரிக்கும். முக்கிய உத்தியோகத்தில் உள்ள மறைமுக எதிரிகளைக் களையும் ஆற்றல் கொண்டிருப்பீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சந்தன வெள்ளை நிறமும் இருக்கும்.

கடகம்
உங்களுடைய குடும்பத்தில் கொஞ்சம் கலகலப்பான சூழல் அமையும் வாய்ப்பு உண்டாகும். உங்களுடைய வாக்குத் திறமையினால் தொழிலில் லாபம் உண்டாகுமு். பணியில் உங்களுடைய உயர் அதிகாரிகளால் உங்களுக்குச் சாதகமான சூழல்கள் உண்டாகும். உங்களுடைய பெற்றோர்களின் ஆசைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். குடும்ப உறுப்பினர்களுடைய ஆதரவு உங்களுக்குக் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமும் இருக்கும்.

சிம்மம்
சுய தொழில் செய்வதற்கான திட்டங்களையும் முயற்சிகளையும் மேற்கொள்வீர்கள். உங்களுடைய வேலை நிமித்தமான பயணங்களின் போது கொண்டு செல்லும் ஆவணங்களில் கொஞ்சம் கவனமாக இருங்கள். தொழில் சம்பந்தமான முடிவுகளை எடுக்கின்ற பொழுது கொஞ்சம் நிதானமாக இருங்கள். பெரியோர்களுடைய முழு ஆதரவும் உங்களுக்குக் கிடைக்கும். வீட்டில் பிள்ளைகளைக் கொஞ்சம் அனுசரித்துச் செல்லுங்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளம் மஞ்சள் நிறமும் இருக்கும்.

கன்னி
முக்கிய உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உங்களுக்கான பொறுப்புகள் அதிகரிக்கும். தொழில் முனைவோருக்கு கொஞ்சம் கூடுதல் பணி உண்டாகும். முக்கிய உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு கொஞ்சம் மேன்மையான சூழல் உண்டாகும். இதுவரை பணியில் இருந்த தடைகளைக் களைவீர்கள். வீட்டில் கணவன், மனைவிக்கு இடையே இருந்த நெருக்கம் அதிகரிக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 8 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக நீல நிறமும் இருக்கும்.

துலாம்
பெற்றோர்களின் உறவினர்களின் வழியில் உங்களுக்கு அனுகூலமானப் பலன்கள் கிடைக்கும். உங்களுடைய முழு திறமைகளையும் வெளிப்படுத்தவதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு அமையும். வீடு மற்றும் மனைகளின் வழியாக சேமிப்புகள் அதிகரிக்கும். தொழிலில் நீங்கள் எதிர்பார்த்த லாபம் உங்களுக்கு உண்டாகும். பயணங்களால் உங்களுக்கு ஆதாயங்கள் உண்டாகும். உங்களுடைய எண்ணங்களினால் தெளிவு பிறக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளம் மஞ்சள் நிறமும் இருக்கும்.

விருச்சிகம்
நீங்கள் செய்கின்ற வேலையில் கொஞ்சம் நிதானத்துடன் இருக்க வேண்டியது அவசியம். வீட்டில் உள்ள குடும்ப உறுப்பினர்களிடம் பேசுகின்ற பொழுது கொஞ்சம் நிதானமாக இருங்கள். பங்குச் சந்தைகளில் சம்பந்தப்பட்டவர்கள் புதிதாக முதலீடுகள் போடும் முன் கொஞ்சம் நிதானத்துடன் செயல்படுங்கள். வாகனங்களில் பயணங்கள் செய்கின்ற பொழுது கொஞ்சம் எச்சரிக்கை தேவை. இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளம் ஆரஞ்சு நிறமும் இருக்கும்.

தனுசு
உங்களுடைய மனதுக்குள் தோன்றுகின்ற தேவையில்லாத எண்ணங்களினால் உங்களுக்கு நெருங்கிய நபர்களை நீங்கள் இழக்க நேரிடும் வாய்ப்பு ஏற்படும். தொழில் சம்பந்தப்பட்ட போட்டிகளைச் சமாளிப்பீர்கள். முக்கிய உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் உள்ள மிஞ்சிய வேலைகளைச் செய்து முடிப்பீர்கள். உங்களுடைய புதிய சிந்தனைகளால் நிறைய மாற்றமான சூழல்கள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

மகரம்
உங்களுடைய உறவினர்களிடம் இருந்து நீங்கள் எதிர்பார்த்த அனுகூலமான பலன்கள் கிடைக்கும். பொது காரியங்களில் ஈடுபடுகின்றவர்களுக்கு வெற்றி உண்டாகும். திருமணம் சம்பந்தப்பட்ட பேச்சு வார்த்தைகளில் உங்களுக்குச் சாதகமான முடீவுகள் கிடைக்கும். உங்களுடைய நீண்ட கால உறவினர்களின் வருகையினால் உங்களுடைய
மனம் மகிழ்ச்சி அடைவீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பச்சை நிறமும் இருக்கும்.

கும்பம்
தொழில் சம்பந்தப்பட்ட புதிய முயற்சிகளில் நீங்கள் எண்ணிய பலன்கள் உங்களுக்குக் கிடைக்கும். நீங்கள் எதிர்பார்த்த பண வரவுகளை உண்டாக்கும். தொழில் சம்பந்தமான பயணங்கள் மேற்கொள்ள வேண்டிய சந்தர்ப்பம் உண்டாகும். உறவினர்களின் ஆதரவு உங்களுக்குக் கிடைக்கும். உங்களுடைய எண்ணங்கள் முழுமையாக ஈடேறும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சிவப்பு நிறமும் இருக்கும்.

மீனம்
தொழில் சம்பந்தப்பட்ட புதிய திட்டங்களைச் செயல்படுத்துவீர்கள். புதிய ஆட்களுடைய அறிமுகத்தினால் உங்களுக்குச் சாதகமான பலன்கள் கிடைக்கும். உங்களுடைய குடும்ப உறுப்பினர்களால் உங்களுக்கு மேன்மை உண்டாகும். நிலங்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளில் உங்களுக்குச் சுமூகமான முடிகள் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.



Click it and Unblock the Notifications











