12 ராசிகளும் இன்னைக்கு எந்தெந்த விஷயத்துல கவனமா இருக்கணும்? தெரிஞ்சிகிட்டு கவனமா இருங்க...

உங்களுடைய ஆற்றலை உணர்ந்து கொண்டு செயல்பட்டால் எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும். அதுதவிர 12 ராசிகளுக்கும் இன்று எப்படி இருக்கப் போகிறது என்று பார்ப்போம்.

By Mahibala

உங்களுடைய ஆற்றலை உணர்ந்து கொண்டு செயல்பட்டால் எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும். அதுதவிர 12 ராசிகளுக்கும் இன்று எப்படி இருக்கப் போகிறது என்று பார்ப்போம். ஒவ்வொரு ராசிக்குமான அதிர்ஷ்ட எண், அதிர்ஷ்ட திசை, அதிர்ஷ்ட நிறம் ஆகியவற்றைத் தெரிநது கொண்டால் பாதி பிரச்னைகள் நமக்கு நீங்கும்.

horoscope

எந்தெந்த இடங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் முதலில் உணர்ந்து கொள்ள வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

தொழிலை அடுத்தகட்டத்துக்கு நகர்த்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். உங்களுடைய உயர் அதிகாரிகளின் மூலம் உங்களுக்கு அனுகூலங்கள் உண்டாகும். மனதுக்குள் தோன்றிய எண்ணங்களை தைரியத்துடன் நடைமுறைப் படுத்துங்கள். வீட்டில் குழந்தைகளுடைய எதிர்பார்ப்புகளை நிறைவேற்றிக் கொடுப்பீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட திசையாக தென்கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சிவப்பு நிறமும் இருக்கும்.

ரிஷபம்

ரிஷபம்

ஆராய்ச்சிப் பணிகளில் ஈடுபடுகின்றவர்களுக்கு நல்ல முடிவுகள் கிடைக்கும். தொழில் பங்குதாரர்களுடன் விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் வாய்ப்பு ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம்ஏற்படும். வீட்டில் உள்ளவர்களின் தேவைகளை அறிந்து கொண்டு அதற்கு ஏற்றபடி நிவர்த்தி செய்வீர்கள். உங்களுடைய எண்ணங்களில் தெளிவு பிறக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

மிதுனம்

மிதுனம்

உங்களுடைய அமைதியான செயல்பாடுகளினால் மகிழ்ச்சியான சூழல்கள் உருவாகும். வெளிவட்டாரங்களில் உங்களுக்கு செல்வாக்குகள் உயர ஆரம்பிக்கும். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு மனம் மகிழ்ச்சி அடைவீர்கள். காது சம்பந்தப்பட்ட தொற்றுகள் குறையும். மனதுக்குள் ஒருவிதமான பதற்றமான சூழல் காணப்படும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சந்தன வெள்ளை நிறமும் இருக்கும்.

கடகம்

கடகம்

வீட்டில் உங்களுக்குக் கிடைக்கும் சுப செய்திகளால் மகிழ்ச்சியான சூழல்கள் உருவாகும். நீங்கள் எதிர்புாராத இடத்திலிருந்து பண வரவு வந்து சேரும். திட்டமிட்ட பணிகள் அனைத்தையும் செய்து முடிப்பீர்கள். வியாபாரங்களில் நீங்கள் எதிர்பார்த்த லாபங்கள் உண்டாகும். பணிகளில் இருந்து வந்த கஷ்டங்கள் நீங்கும். உடன் பணிபுரியும் சக ஊழியர்களிடம் உங்களுடைய மதிப்பு உயர ஆரம்பிக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 8 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக நீலநிறமும் இருக்கும்.

சிம்மம்

சிம்மம்

உங்களுடைய சிந்தனையின் போக்கில் மாற்றங்கள் உண்டாகும். மனதுக்குள் இருந்து வந்த கவலைகள் நீங்கும். உணவு சம்பந்தப்பட்ட விஷயங்களில் கொஞ்சம் கவனமாக இருங்கள். அரசு சம்பந்தப்பட்ட பணிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். உங்களுடைய பதவியில் மாற்றங்கள் ஏற்படும். வருமான உயர்வுக்கான வாய்ப்புகள் அமையும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமும் இருக்கும்.

கன்னி

கன்னி

தொழில் சம்பந்தப்பட்ட நுணுக்கங்களை கற்றுக் கொள்ள ஆர்வம் அதிகரிக்கும். புதிய செயல் திட்டங்களைச் செயல்படுத்த முயற்சி செய்வீர்கள். வெளியூர் தொழில் முயற்சிகளினால் லாபம் அதிகரிக்கும். பணியில் பல்வேறு பிரச்சினைகளை சுமூகமாக முடிக்க முயற்சி செய்வீர்கள். ஆன்மீக எண்ணங்கள் அதிகரிக்கும். வீட்டில் பொன், பொருள் சேர்க்கைகள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சள் நிறமும் இருக்கும்.

துலாம்

துலாம்

உங்களுடைய உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்த ஆரம்பியுங்கள். அரசியல் துறைகளில் இருப்பவர்கள் இன்று கொஞ்சம் அமைதியானப் போக்கினைக் கடைபிடிப்பது நல்லது. நீங்கள் எதிர்பார்த்த அளவு தன வரவுகள் வந்து சேர கொஞ்சம் கால தாமதமாகும். நண்பர்களுடன் சின்ன சின்ன கருத்து வேறுபாடுகள் உண்டாகும். வழக்கு சம்பந்தப்பட்ட விஷயங்களில் நீங்கள் எதிர்பார்த்த முடிவுகள் கிடைப்பதற்கும் கொஞ்சம் காலதாமதமாகும். புதிய செயல்திட்டங்களைத் தீட்டும் போது கொஞ்சம் பொறுமையுடன் இருங்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பச்சை நிறமும் இருக்கும்.

விருச்சிகம்

விருச்சிகம்

தொழில் சம்பந்தமாக உங்களுடைய எண்ணங்கள் மேலோங்கி நிற்கும். உங்களுடைய உடன் பிறந்த சகோதரர்கள் மூலம் உங்களுக்குச் சாதகமான சூழல் உண்டாகும். பொது இடங்களில் பேசுகின்ற பொழுது உங்களுக்கு வெற்றியே கிடைக்கும். வீட்டில் கணவன் மனைவிக்கு இடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் குறைய ஆரம்பிக்கும். குடும்பத்தினுடைய பொருளாதார நிலைகள் உயர ஆரம்பிக்கும். உங்களுடைய எதிர்காலம் தொடர்பான புதிய இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளஞ்சிவப்பு நிறமும் இருக்கும்.

தனுசு

தனுசு

உங்களுடைய உடல் ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட புதிய பயிற்சிகள் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். பொது இடங்களில் உங்களுக்கு ஆதரவாக இருக்கின்ற வர்களுடைய உதவிகள் உங்களுக்குக் கிடைக்கும். அடுத்தவர்களிடம் உங்களுடைய மதிப்புகள் உயரும். உங்களுடைய உறவினர்களின் மூலமாகச் சுபச் செய்திகள் கிடைக்கும். பொன், பொருட்சேர்க்கைகள் உண்டாகும். தொழில் சம்பந்தப்பட்ட கடனுதவிகள் உங்களுக்கு எதிர்பார்த்த இடங்களில் இருந்து கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு வெள்ளை நிறமும் இருக்கும்.

மகரம்

மகரம்

உங்களுடைய முயற்சிகள் அனைத்தையும் மிகத் திறமையுடன் செயல்படுத்துவீர்கள். வெளியூர் பயணங்களால் உங்களுக்குப் பெரும் லாபம் உண்டாகும். உங்களுடைய செயல்பாடுகளில் நல்ல மாற்றங்கள் உண்டாகும். வேலையில் உங்களுக்கான பொறுப்புகள் அதிகரிக்கும். தொழில் சம்பந்தப்பட்ட அலைச்சல்களால் மேன்மை உண்டாகும். உங்களுடைய உடன் பிறப்புகளால் சுப விரயச் செலவுகள் ஏற்படும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சந்தன வெள்ளை நிறமும் இருக்கும்.

கும்பம்

கும்பம்

நீங்கள் செய்கின்ற வேலைகளில் கொஞ்சம் கூடுதல் கவனம் தேவை. உங்களுடைய உயர் அதிகாரிகளிடம் கொஞ்சம் பொறுமையுடன் நடந்து கொள்ளுங்கள். மனதுக்குள் புதுப்புது எண்ணங்கள் தோன்றி மறையும். தொழில் சம்பந்தப்பட்ட பயணங்களால் உங்களுக்கு விரயச் செலவுகள் உண்டாகும். முக்கியமான பொருள்களைக் கையாளுகின்ற பொழுது, கொஞ்சம் எச்சரிக்கையுடன் செயல்படுங்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 8 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக அடர் நீலம் நிறமும் இருக்கும்.

மீனம்

மீனம்

அரசாங்கத் தரப்பிடம் இருந்து உங்களுக்கு அனுகூலங்களும் பலன்களும் கிடைக்கும். உங்களுடைய சர்வதேச வணிகத்தில் நீங்கள் எதிர்பார்த்த லாபம் உங்களுக்கு உ்ணடாகும். நீங்கள் பணிபுரிகின்ற இடங்களில் உங்களுக்கு மேன்மையான சூழல்கள் உண்டாகும். வீட்டில் கணவன், மனைவிக்கு இடையே உறவுகள் இனிமையாக இருக்கும். வீட்டுக்கு உறவினர்கள் வந்து போவதால் மகிழ்ச்சியான தருணங்கள் உங்களுக்கு ஏற்படும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளம் மஞ்சள் நிறமும் இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Monday, April 8, 2019, 6:00 [IST]
Desktop Bottom Promotion