Latest Updates
-
உங்க முழங்கால் கருப்பா இருக்கா? வெள்ளையாக்க இந்த 5 வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
கேஸ் அதிகம் தேவைப்படாத காய்கறி கூட தேவைப்படாத கொத்தல்லி கார குழம்பு ரெசிபி... ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க...! -
1 கப் அரிசி மாவு இருந்தா.. காரடையான் நோன்பு இனிப்பு அடையை இப்படி சிம்பிளா செய்யுங்க.. -
Karadaiyan Nombu 2026: தேதி, சடங்குகள் மற்றும் எந்த நேரத்தில் மஞ்சள் சரடு கட்டுவது கணவரின் ஆயுளை அதிகரிக்கும்? -
Panguni Month 2026: பங்குனி மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா? -
120 ஆண்டுக்கு பின் ஏப்ரலில் உருவாகும் திரிகிரக யோகம் 2026: இந்த 3 ராசிகளை கோடீஸ்வரராக்குவது உறுதியாம்...! -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய தக்காளி வெங்காய பச்சடி - சூடான சாதத்துக்கு டக்கரா இருக்கும்.. ட்ரை பண்ணுங்க.. -
இந்தியாவில் முதலில் தொடங்கப்பட்ட வங்கி எது? அது தமிழ்நாட்டில் எந்த ஊரில் அந்த வங்கி தொடங்கப்பட்டது தெரியுமா? -
கோடையில் தினமும் ராகி ரொட்டி சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
சிங்கம் போல வலிமையும், தைரியமும் கொண்ட 4 பெண் ராசிகள் இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா?
எந்தெந்த ராசிக்காரர்கள் ஓஹோனு இருக்கப் போறாங்க... யாரெல்லாம் புலம்பப் போறாங்க...
உங்களுடைய ஆற்றலை உணர்ந்து கொண்டு செயல்பட்டால் எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும். அதுதவிர 12 ராசிகளுக்கும் இன்று எப்படி இருக்கப் போகிறது என்று பார்ப்போம்.
உங்களுடைய ஆற்றலை உணர்ந்து கொண்டு செயல்பட்டால் எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும். அதுதவிர 12 ராசிகளுக்கும் இன்று எப்படி இருக்கப் போகிறது என்று பார்ப்போம்.

ஒவ்வொரு ராசிக்குமான அதிர்ஷ்ட எண், அதிர்ஷ்ட திசை, அதிர்ஷ்ட நிறம் ஆகியவற்றைத் தெரிந்து கொண்டால் பாதி பிரச்னைகள் நமக்கு நீங்கும். எந்தெந்த இடங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் முதலில் உயர்ந்து கொள்ள வேண்டும்.

மேஷம்
தைரியத்துடன் புதிய முயற்சிகளில் ஈடுபட்டு பெரும் புகழ் பெறுவீர்கள். உங்களுக்கு உங்கள் மீதான தன்னம்பிக்கை அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களால் கலகலப்பான மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். எதிர்காலம் சம்பந்தப்பட்ட எண்ணங்கள் அதிகரிக்கும். புதிய லட்சியத்தை அடைவதற்கான பணிகளை மேற்கொள்வீர்கள். இன்று உங்களுக்கு அதிர்ஷ்டத்தைத் தரக்கூடிய எண்ணாக 4 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கும் அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும் நிறமாக நீலநிறமாகவும் இருக்கப்போகிறது.

ரிஷபம்
பொருள் சேர்க்கை உண்டாகும். தொழிலில் புதுப்புது சிந்தனைகள் மேலோங்கும். அந்நியர்களால் வருமானம் அதிகரிக்கும். தொழில் சம்பந்தப்பட்ட பல புதிய முடிவுகளை எடுப்பதில் கவனத்துடன் செயல்படுங்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். புதிய முயற்சிகளால் சில சுப விரயங்கள் உண்டாகும். இன்றைக்கு உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும் எண்ணாக 3 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கும் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சளும் இருக்கும்.

மிதுனம்
தொழிலில் புதிய நபர்களின் முதலீடுகளினால் மகிழ்ச்சி உண்டாகும். இழந்த பொருள்களை மீட்பதற்கான வாய்ப்புகள் அமையும். கோப்புகளைக் கையாளுவதில் கவனமாக இருக்க வேண்டும். எண்ணிய காரியங்களில் சில தடங்கல்கள் உண்டாகும். நண்பர்களிடம் தேவையற்ற வாக்குவாதத்தைத் தவிர்க்கவும். இன்று உங்களுக்கு அதிர்ஷ்டத்தை தரக்கூடிய எண்ணாக 4 ம் அதிர்ஷ்டத்தை தரக்கூடிய திசையாக தெற்கும் அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும் நிறமாக சாம்பல் நிறமாகவும் இருக்கும்.

கடகம்
சுய தொழிலில் ஈடுபடுவர்கள் தொழிலில் புதுவிதமான யுக்திகளைக் கையாளுவீர்கள். தாய்வழி உறவினர்களின் மூலம் எதிர்பார்த்த நல்ல செய்திகள் வந்து சேரும். விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். எதிர்பாலின மக்களிடம் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். இன்றைக்கு உங்களுக்கு அதிர்ஷ்டத்தைத் தருகிற எண்ணாக 3 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக அடர் மஞ்சள் நிறமாகவும் இருக்கும்.

சிம்மம்
புதிய நண்பர்களின் அறிமுகத்தால் தொழிலில் பல மடங்கு லாபம் அதிகரிக்கும். உறவினர்களுக்கு இடையே இருந்து வந்த உறவுநிலையில் நல்ல மாற்றங்கள் உண்டாகும். உயர் அதிகாரிகளிடம் உங்களைப் பற்றிய நம்பிக்கை மேலோங்கிக் காணப்படும். பணியில் உள்ளவர்களுக்கு இன்று மேன்மையான நாளாக அமையும். இன்று உங்களுக்கு அதிர்ஷ்டத்தை தரக்கூடிய எண்ணாக 5 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கும் அதிர்ஷ்ட நிறமாக இளம்பச்சை நிறமாகவும் இருக்கும்.

கன்னி
பொது சேவையில் உள்ளவர்களுக்கு சாதகமான சூழல் அமையும். ஆன்மீகத்தில் உங்களுக்கு ஈடுபாடு அதிகரிக்கும். நீங்கள் எதிர்பார்த்த இடங்களில் இருந்து உங்களுக்குத் தேவையான உதவிகள் கிடைக்கும். உயர் அதிகாரிகளால் உங்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும். சக ஊழியர்களிடம் உங்களுடைய செல்வாக்கு உயரும். நீண்ட நாட்களாக மனதில் நினைத்த காரியங்களைச் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். இன்று உங்களுக்கு அதிர்ஷ்ட எண்ணாக 2 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

துலாம்
நண்பர்கள் மூலமாக நல்ல செய்தி உங்கள் காதுகளுக்கு வந்து சேரும். பணியில் உங்களுக்கான பொறுப்புகள் அதிகரித்துக் கொண்டே போகும். நிலுவையில் இருந்த வழக்குகள் மற்றும் பஞ்சாயத்துக்கள் உங்களுக்கு சாதகமாக வெற்றியில் முடியும். இன்று உங்களுக்கு வெற்றிகரமான நாளாக அமையும். இன்று உங்களுக்கு அதிர்ஷ்டத்தைத் தரக்கூடிய எண்ணாக 1 ம் அதிர்ஷ்டத்தை உண்டாக்கும் திசையாக மேற்கும் அதிர்ஷ்டத்தை கொடுக்கக்கூடிய நிறமாக சிவப்பு நிறமும் உங்களுக்கு சாதகமாக அமையும்.

விருச்சிகம்
பெற்றோர்களின் உடல் நலத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். பயணங்களின் மூலம் எண்ணிய எண்ணங்கள் நிறைவேறும். பரம்பரை சொத்துக்களினால் நன்மை உண்டாகும். செய்யும் தொழிலில் பல புதிய புதிய யுக்திகளைக் கையாளுவீர்கள். கால்நடைகளால் எதிர்பார்த்த லாபங்களை சம்பாதிப்பீர்கள். இன்று உங்களுக்கு வெற்றியைத் தருகின்ற அதிர்ஷ்ட எண்ணாக 5 ம்அதிர்ஷ்ட திசையாக கிழக்கும் அதிர்ஷ்ட நிறமாக பச்சை நிறமும் இருக்கும்.

தனுசு
கணவன், மனைவிக்கு இடையே அன்பும் நெருக்கமும் அதிகரிக்கும். மனைவியால் சேமிப்புகள் உயரும். பணியில் உள்ளவர்களுக்கு பல்வேறு விமர்சனங்களை சந்திக்க வேண்டியிருக்கும். உடன் பிறந்தவர்களால் சுப விரயங்கள் உண்டாகும். பணி நிமித்தமாக பயணங்கள் மேற்கொள்வீர்கள். அந்த பயணத்தில் உங்களுக்கு சாதகமான முடிவினை எட்டுவீர்கள். இன்று உங்களுக்கு அதிர்ஷ்டத்தை தரக்கூடிய நிறமாக ஆரஞ்சு நிறமாகவும் அதிர்ஷ்ட எண்ணாக 1 ம் அதிர்ஷ்ட திசையும் வடக்கும் இருக்கும்.

மகரம்
உள்ளூர் வாணிகம் கொஞ்சம் மந்தமாகவே இருக்கும். வெளிமாநில, வெளிநாட்டு வாணிகத்தில் லாபம் உண்டாகும். உடன் பிறந்த சகோதரர்களால் அனுகூலமான சூழல் அமையும். புதிய தொழில் சம்பந்தப்பட்ட திட்டங்களைத் தீட்டுவீர்கள். நண்பர்களின் ஒத்துழைப்பால் சாதகமான பலன்கள் கிடைக்கும். நீங்கள் கற்ற கலைகளால் நீங்களே எதிர்பார்க்காத லாபங்கள் உங்களை வந்து சேரும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண் 6, அதிர்ஷ்ட திசை மேற்கு, அதிர்ஷ்ட நிறம் வெள்ளையாக இருக்கும்.

கும்பம்
உயர் அதிகாரிகளிடம் உங்களைப் பற்றிய நம்பிக்கையை அதிகப்படுத்துவீர்கள். ஆராய்ச்சி சம்பந்தப்பட்ட பணியில் எண்ணிய பலன்கள் உண்டாகும். பெற்றோர்களின் உடல் நிலையில், கவனமாக இருக்க வேண்டும். அரசாங்கப் பணியில் இருந்த இடர்பாடுகள் நீங்கும். இன்று உங்களுக்கு அதிர்ஷ்டத்தைத் தரக்கூடிய எண்ணாக 7 ம் அதிர்ஷ்டத்தை உண்டாக்கும் திசையாக தெற்கும் அதிர்ஷ்டத்தை தரும் நிறமாக பழுப்பு நிறமாகவும் இருக்கும்.
MOST READ: இந்த மாதிரி வர்றது எதோட அறிகுறினு தெரியுமா? தெரிஞ்சிக்கங்க... இப்படி சரிபண்ணுங்க

மீனம்
கல்வி சம்பந்தப்பட்ட பணியில், ஈடுபடுபவர்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும். வாதத்தினுடைய திறமையால் லாபம் உண்டாகும். விளையாட்டு வீரர்கள் பயிற்சியின் போது, கவனத்துடன் ஈடுபடுவது அவசியம். பணியில் உள்ளவர்களுக்கு உயர் அதிகாரிகளால் சாதகமான சூழல்கள் உண்டாகும். இன்று உங்களுக்கு அதிர்ஷ்டம் தரக்கூடிய எண்ணாக 3 ம் அதிர்ஷ்டம் தரும் திசையாக மேற்கும் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சள் நிறமாகவும் இருக்கும்.



Click it and Unblock the Notifications











