For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த குணம் உள்ள பெண் உங்கள் வாழ்க்கையை சொர்க்கமாக மாற்றுவார் என்று கூறுகிறார் சாணக்கியர்...!

அரசியல் வாழ்க்கை மட்டுமின்றி தனிப்பட்ட வாழ்க்கையிலும் சாணக்கியர் நிபுணத்துவம் பெற்றவராக இருந்தார். காதல், திருமணம் என அனைத்திலும் எவ்வாறு சிறந்து விளங்க வேண்டுமென்று சாணக்கியர் தன் நூல்களில் கூறியுள்ள

|

இந்தியாவின் இணையற்ற மேதைகளில் ஒருவர் சாணக்கியர். அரசியல், பொருளாதாரம், வாழ்க்கை நெறி என பல்துறைகளில் வல்லுனராக விளங்கியவர் சாணக்கியர். மௌரிய வம்சத்தின் ராஜகுருவான இவர்தான் மௌரிய வம்சத்தினர் அரியணையில் அமர காரணமாக இருந்தார். சாணக்கியரின் அறிவாற்றல் என்பது அளவற்றது ஆகும். அவரின் சிந்தனைகள் அக்கலாம் மட்டுமின்றி எக்காலத்திற்கும் பொருந்துபவையாக இருக்கும்.

Chanakya Niti : What Makes a Good Wife?

அரசியல் வாழ்க்கை மட்டுமின்றி தனிப்பட்ட வாழ்க்கையிலும் சாணக்கியர் நிபுணத்துவம் பெற்றவராக இருந்தார். காதல், திருமணம் என அனைத்திலும் எவ்வாறு சிறந்து விளங்க வேண்டுமென்று சாணக்கியர் தன் நூல்களில் கூறியுள்ளார். வெற்றிகரமான திருமண வாழ்க்கைக்கு கணவன், மனைவி சில தகுதிகளுடன் இருக்க வேண்டும் என்று சாணக்கியர் கூறுகிறார். இந்த பதிவில் நல்ல மனைவிக்கான தகுதிகளாக இருக்க வேண்டியவை என்னெவென்று சாணக்கியர் கூறுவது என்னவென்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நல்ல மனைவிக்கான அடிப்படை

நல்ல மனைவிக்கான அடிப்படை

சிறந்த மனைவிக்கான அடிப்படை தகுதிகளாக சாணக்கியர் கூறுவது என்னவெனில் மனைவியானவள் காலை நேரத்தில் கணவனுக்கு அம்மா போல சேவை செய்ய வேண்டும், நாள் முழுவதும் சகோதரி போல அன்பு செலுத்த வேண்டும், இரவில் விலைமகள் போல இருக்க வேண்டும் என்று கூறுகிறார்.

சாணக்கிய நீதி

சாணக்கிய நீதி

சாணக்கிய நீதி மனைவியின் தகுதியை நிர்ணயிக்கும் புத்தகம் அல்ல. திருமணத்தை பற்றி விவரிக்கும் புத்தகமும் அல்ல, ஆனால் அதில் பல இடங்களில் திருமணத்தை பற்றியும், மனைவியின் தகுதியை பற்றியும் பல குறிப்புகளை கூறியுள்ளது. உண்மையில் திருமணம்தான் நமது சமூக வாழ்க்கையின் அடையாளமாக விளங்குகிறது, மனைவியுடன் வெற்றிகரமான திருமண வாழ்க்கை வாழும்போது அது உங்களுக்கு சமூகத்தில் உரிய அந்தஸ்தை பெற்றுத்தரும்.

அழகான மனைவி Vs. நல்ல குடும்பம்

அழகான மனைவி Vs. நல்ல குடும்பம்

புத்திசாலி மனைவியை பற்றி சாணக்கியர் தன் சாணக்கிய நீதியில் பல இடங்களில் குறிப்பிட்டுள்ளார். ஒரு பெண் அழகாக இருந்தாலும் அவள் நல்ல குடும்பத்தில் இருந்து வரவில்லை என்றால் அவளை திருமணம் செய்து கொள்ளக்கூடாது என்று சாணக்கியர் கூறுகிறார். அழகில்லாத பெண் நல்ல குடும்பத்தில் இருந்து வந்திருந்தாலும் அவளை தாராளமாக திருமணம் செய்து கொள்ளலாம் என்கிறார் சாணக்கியர். தங்கள் குடும்பத்திற்கு சமமான குடும்பத்தில் மட்டுமே சம்பந்தம் செய்து கொள்ளவேண்டும் என்று சாணக்கியர் கூறுகிறார்.

MOST READ: இந்த குணங்களில் ஒன்று இருந்தாலும் நீங்கள் மிகவும் அதிசயமானவர்களாம் தெரியுமா?

புத்திசாலி மற்றும் நேர்மையான மனைவி

புத்திசாலி மற்றும் நேர்மையான மனைவி

கணவன் மற்றும் மனைவிக்கு இடையேயான காதல்தான் வெற்றிகரமான திருமண வாழ்க்கைக்கு அடிப்படை என்று சாணக்கியர் கூறுகிறார். மனைவியின் உண்மையான மகிழ்ச்சி என்பது அவள் கணவருக்கு செய்யும் சேவையில்தான் இருக்கிறது என்கிறார் சாணக்கியர், மனைவி மீது அன்பு செலுத்துவதே கணவனின் கடமை எனவும் சாணக்கியர் கூறுகிறார். புத்திசாலி மற்றும் நேர்மையான மனைவி எப்பொழுதும் வெற்றிகரமான மனைவியாக இருப்பார்.

அன்பான மனைவி

அன்பான மனைவி

ஒரு மனைவி தன் கணவனை நேசிக்க வேண்டும் எப்பொழுதும் உண்மையை மட்டுமே பேசவேண்டும். இதுபோன்ற மனைவியின் நடத்தை குடும்பத்தில் மகிழ்ச்சியை கொண்டுவரும். ஒரு மனைவி தன் கணவரின் ஒப்புதலுடன் செய்யும் எந்த காரியமும் அவர்கள் வாழ்விற்கும், குடும்பதிற்கும் நன்மையை விளைவிப்பதாக இருக்க வேண்டும்.

வாக்குவாதத்தில் ஈடுபடக்கூடாது

வாக்குவாதத்தில் ஈடுபடக்கூடாது

நல்ல மனைவி ஒருபோதும் வாக்குவாதத்தில் ஈடுபட மாட்டார்கள். மனைவி காரணம் இன்றி ஒருபோதும் தன் கணவனுடன் சண்டையில் ஈடுபடக்கூடாது. சூழ்நிலைக்கு ஏற்றவாறு கணவனுக்கு பணிவிடை செய்யும் மனைவிகள் அழகாக இல்லாவிட்டாலும் தங்கள் கணவரின் அன்பை முழுமையாக பெறுவார்கள் என்று சாணக்கியர் கூறுகிறார்.

MOST READ: விந்து வங்கிக்கு போகாம வீட்லயே உங்க விந்துவை சேகரிச்சு வெக்கணுமா? அது ரொம்ப ஈஸிதான்...

நல்ல குடும்பம்

நல்ல குடும்பம்

நல்ல மனைவி என்பவள் புத்திசாலி மற்றும் நேர்மை நிறைந்தவளாக இருக்க வேண்டும். அன்பு செலுத்தி உண்மை பேசும் மனைவிகள் கிடைப்பது என்பது ஒரு கணவனுக்கு கிடைக்கும் அதிர்ஷ்டம் ஆகும். அழகில்லாத நல்ல குடும்பத்தை சேர்ந்த பெண்ணை கண்ணை மூடிக்கொண்டு திருமணம் செய்து கொள்ளலாம். ராஜா, குரு மற்றும் நண்பனின் மனைவியை தாய் போல பார்க்க வேண்டும், அவர்களின் மீது தவறான கண்ணோட்டத்தை வைப்பவர்கள் கொடிய பாவிகளாக கருதப்படுகிறார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Chanakya Niti : What Makes a Good Wife?

Chanakaya has defined the qualities of a good wife in many places in Chanakaya Niti.
Desktop Bottom Promotion