Latest Updates
-
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம் -
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
Snake Wine என்றால் என்ன? சீன மக்கள் இதை ஏன் விரும்பி குடிக்கிறார்கள் தெரியுமா?இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? -
வாஸ்துப்படி கிருஷ்ண ஜெயந்தி நாளில் இந்த பொருட்களை வாங்கி கடை/ஆபீஸில் வையுங்க.. தொழில் களைகட்டும்.. -
நீலகிரி வெஜ் குருமா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - தோசை. சப்பாத்திக்கு செமையா இருக்கும -
இந்த 4 ராசிக்காரங்க தலையே போனாலும் அவங்க செஞ்ச தப்பை ஒத்துக்க மாட்டாங்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
மதியம் இந்த மாதிரி ரசம் வையுங்க.. குழம்பே கேக்கமாட்டாங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செவ்வாய்-சந்திர சேர்க்கை உருவாக்கும் மகாலட்சுமி ராஜயோகம்: நாளை முதல் இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டும்! -
பூமியின் எல்லை எந்த நாட்டில் உள்ளது? இந்த இடத்தில் என்ன இருக்கு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் பன்னீர் பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமான டேஸ்ட்ல இருக்கும்
திருமணமாகாத பெண்கள் ஆஞ்சநேயரை வழிபடலாமா? வழிபட்டால் என்ன நடக்கும்?
சில மரபுகளின் படி ஆஞ்சநேயரை வழிபடுவது, அவருடைய மந்திரத்தை கூறுவது போன்றவற்றை பெண்கள் செய்யக்கூடாது. குறிப்பாக, திருமணமாகாத பெண்கள் செய்யக்கூடாது.
இந்து மத வழிபாடுகள் என்பது மிகவும் சிக்கல்கள் நிறைந்தவையாகும். ஏனெனில் இங்கு கடவுள்கள் எவ்வளவு அதிகமோ அதைவிட வழிபாட்டு முறைகளும், சடங்குகளும் அதிகம். ஒவ்வொரு காலக்கட்டத்திலும் வித்தியாசமான வழிபாட்டு முறைகள் இருந்து வந்துள்ளது. அதில் இப்பொழுதும் விவாதத்திற்குரிய ஒரு தலைப்பு திருமணமாகாத பெண்கள் ஆஞ்சநேயரை வழிபடலாமா என்பதுதான்.

இந்தியாவில் அனைத்து கடவுள்களும் ஆண்கள் மற்றும் பெண்கள் இருவராலும் வழிபடபடுகின்றனர். மேலும் கடவுள்களை பல வடிவங்களிலும் நாம் வழிபடுகிறோம். இந்த பதிவில் பெண்கள்திருமணமாகாத பெண்கள் அனுமனை வழிபடலாமா? கூடாதா? என்ற கேள்விக்கு பதிலை பார்க்கலாம்.

அனுமன்
ஆஞ்சநேயர் என்று அழைக்கப்படும் வாயுபுத்திரன் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் பலகோடி மக்களால் வழிபடப்படுகிறார். சில மரபுகளின் படி ஆஞ்சநேயரை வழிபடுவது, அவருடைய மந்திரத்தை கூறுவது போன்றவற்றை பெண்கள் செய்யக்கூடாது. குறிப்பாக, திருமணமாகாத பெண்கள் செய்யக்கூடாது. ஆனால் உலகம் முழுவதும் பல பெண்கள் ஆஞ்சநேயர் கோவிலுக்கு செல்வதை நாம் பார்த்து கொண்டுதான் இருக்கிறோம்.

ஏன் அனுமதிக்கப்படவில்லை?
புராணங்களின் படி ஆஞ்சநேயர் தீவிர பிரம்மச்சாரியாயத்தை கடைபிடிப்பவர் ஆவார். திருணம் செய்து கொள்ளாமல் வாழ்க்கை முழுவதும் தனியாக வாழ வேண்டுமென்று விரும்புபவர்கள் ஆஞ்சநேயரை வழிபடலாம் என்று புராணங்கள் கூறுகிறது. ஆனால் காலப்போக்கில் இந்த முறை மாறி அனைவரும் ஆஞ்சநேயரை வழிபடும் முறை கொண்டுவரப்பட்டது.

அனுமன் உருவச்சிலை
பெண்கள் ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்றாலும் அங்கு அனுமனின் உருவச்சிலையை தொடமால் இருப்பது நல்லது என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். இதற்கு காரணம் பிரம்மச்சரியத்தை கடைபிடிக்கும் அனுமன் பெண்கள் தன்னை தீண்டுவதை விரும்பமாட்டார்.

அனுமன் மந்திரம்
பெண்கள் அனுமனுடைய சிலையை தீண்ட கூடாதே தவிர ஆஞ்சநேயருக்கு மலர் வைத்து வழிபடுவது, அனுமன் மந்திரம் கூறி வழிபடுவது போன்றவற்றை தாராளமாக செய்யலாம்.

பாலினம் முக்கியமல்ல
கடவுள் வழிபாட்டை பொறுத்தவரையில் வழிபாட்டிற்கோ அல்லது மந்திரங்களை கூறி வழிபடுவதற்கோ பாலினம் முக்கியமல்ல. ஆண், பெண் இருவருமே அனைத்து கடவுள்களையும் வழிபடலாம். கடவுள் அனைவருக்கும் பொதுவானவர்.

வழிபட வேண்டிய கிழமை
வாழ்க்கையில் பல தடைகளால் அவதிப்படுபவர்கள் செவ்வாய் மற்றும் சனிக்கிழமையில் சனிபகவானை வழிபடுவது அவர்கள் வாழ்க்கையில் இருக்கும் இன்னல்களை போக்கும்.



Click it and Unblock the Notifications