Latest Updates
-
2 முருங்கைக்காயை இருந்தா.. இப்படி ஒருவாட்டி பிரியாணி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
4-ல் 3 இந்திய பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு: உடலில் இரும்புச்சத்தை அதிகரிக்க சிம்பிளான 6 டிப்ஸ் இதோ! -
ஐயங்கார் ஸ்டைல் பொரிச்ச ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா? -
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா?
உங்கள் குடும்பத்தை வதைக்கும் தீயசக்திகளை விரட்ட இந்த எளிய பொருட்களே போதும்...!
இந்து மதத்தை பொறுத்த வரை தண்ணீர் அசாதாரணமான இடத்தை வகிக்கிறது. ஏனெனில் இது ஆன்மாக்களை சுத்தப்படுத்துவதாக நம்பப்படுகிறது.
இந்த உலகம் இயங்க காற்று எவ்வளவு அவசியமானதோ அதேபோல தண்ணீரும் இன்றியமையாதது. ஏனெனில் உணவின்றி கூட மனிதனா சில நாட்கள் உயிர் வாழ்ந்து விட முடியும். ஆனால் நீர் இன்றி ஒரு நாளை கடப்பது என்பது மிகவும் கடினமான ஒன்றாகும்.அதனால்தான் நம் முன்னோர்கள் " நீரின்றி அமையாது உலகு " என்று கூறியுள்ளனர். மனித வாழ்விற்கு மிகவும் பயனுள்ள தண்ணீர் அவர்களின் வாழ்க்கையை செம்மையாகக்கவும் பயன்படுகிறது.

இந்து மதத்தை பொறுத்த வரை தண்ணீர் அசாதாரணமான இடத்தை வகிக்கிறது. ஏனெனில் இது ஆன்மாக்களை சுத்தப்படுத்துவதாக நம்பப்படுகிறது. இந்து மத மட்டுமின்றி மற்ற மதங்களிலும் அவரவர் வழிபாட்டு தளங்களில் தண்ணீரை உள்ளதை சுத்தப்படுத்தும் பொருளாக கருதி உபயோக்கிறார்கள். இது மட்டுமின்றி தண்ணீர் உங்கள் வாழ்க்கையில் உள்ள எதிர்மறை சக்திகளை விரட்டி உங்கள் வாழ்வில் நல்ல நேரத்தையும், அதிர்ஷ்டத்தையும் கொண்டுவரும். இந்த பதிவில் தண்ணீரை எப்படி உபயோகப்படுத்தினால் உங்கள் வாழ்க்கையில் அதிர்ஷ்டம் அதிகரிக்கும் என்று பார்க்கலாம்.

புனித நீர்
இந்துக்களை பொறுத்த வரையில் அனைத்து தண்ணீரும் புனிதமானதுதான், குறிப்பாக ஆறுகள். இந்தியாவில் மொத்தம் ஏழு ஆறுகள் புனித ஆறுகளாக கருதப்படுகிறது. அவை கங்கை, யமுனை, கோதாவரி, சரஸ்வதி, நர்மதா, சிந்து மற்றும் காவேரி. அனைத்து ஆறுகளுக்கும் பெண்களின் பெயர் வைக்க காரணம் மனித வாழ்விற்கு நீர் எவ்வளவு முக்கியமோ அந்த அளவிற்கு பெண்களும் முக்கியம். இரண்டையுமே போற்றி பாதுகாக்க வேண்டியது நம் கடமையாகும்.

தண்ணீரின் முக்கியத்துவம்
நம் வாழ்க்கையில் நாம் கற்றுக்கொண்ட ஒரு முக்கியமான பாடம் என்னவெனில் தண்ணீர் குடிப்பதற்கு மட்டுமில்லை, தண்ணீர் பல புனித காரியங்களுக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக இது செல்வம், நல்ல நேரம், அதிர்ஷ்டம் ஆகியவற்றையும் ஈர்க்கும். பழங்கால வேதங்களில் தண்ணீரை பயன்படுத்தி எவ்வாறு துரதிர்ஷ்டத்தை வாழ்க்கையில் இருந்து விரட்டலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பரிகாரம் 1
ஒரு பாத்திரத்தில் தண்ணீரை நிரப்பி அதனை சூரிய ஒளி படும்படி திறந்த வெளியில் வைத்து விடுங்கள். அதன்பின்னர் அந்த தண்ணீரை மா இலைகளை கொண்டு வீட்டு முழுவதும் தெளியுங்கள். இவ்வாறு செய்யும்போது விஷ்ணு மற்றும் சூரிய மந்திரத்தை கூற வேண்டும். இதை செய்து முடித்தவுடன் அந்த நொடியில் இருந்து உங்கள் வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றல்கள் விரட்டப்படும்.

பரிகாரம் 2
உங்கள் வீட்டின் நுழைவாயிலில் எப்போதும் ஒரு பாத்திரத்தில் தண்ணீருடன் சிறிது கடல் உப்பை கலந்து இரவு முழுவதும் வைத்து விடவும், தினமும் காலையில் இந்த தண்ணீரை மாற்றுவதில் உறுதியாய் இருங்கள். இது உங்கள் வீட்டில் உள்ள எதிர்மறை சக்திகளை துரத்தும். உங்கள் வீட்டில் உள்ள தீயசக்திகளை விரட்டும் மேலும் சில வழிகளை மேற்கொண்டு பார்க்கலாம்.

பரிகாரம் 3
தினமும் காலையில் சாம்பிராணி மற்றும் பசுமாட்டு சாணத்தை எரித்து அந்த புகை வீட்டு முழுவதும் வீட்டில் உள்ள அனைத்து மூலைகளுக்கும் செல்லும்படி செய்யுயவும். இது உங்கள் வீட்டில் உள்ள தீயசக்திகளை விரட்டுவதோடு உங்கள் வீட்டிற்கு பாதுகாப்பையும் வழங்கும்.

பரிகாரம் 4
நெய்யில் ஒரு கற்பூரத்தை போட்டு அதனை வீட்டில் இருக்கும் அனைத்து அறைகளின் வாசல்களிலும் தீபமாக ஏற்றி வையுங்கள். இது உங்கள் இல்லத்திற்குள் ஒருபோதும் எதிர்மறை சக்திகளை அனுமதிக்காது, மேலும் இது இன்சொமேனியாவிற்கு சிறந்த மருந்தாகவும் இருக்கிறது.

பரிகாரம் 5
நீங்கள் விரும்பும் ஒருவரிடம் இருந்து எதிர்மறை சக்திகளை விரட்ட விரும்பினால், சங்கில் தண்ணீரை ஊற்றி அதை வீடு முழுவதும் தெளிக்கவும். அதன்பின்னர் தினமும் மாலை நேரத்தில் சங்கை பக்தியுடன் ஒலிக்க செய்யுங்கள்.

பரிகாரம் 6
திடீரென எதிர்பாராத தோல்விகள் மற்றும் நஷ்டத்தை நீங்கள் சந்திக்க நேர்ந்தால் அதனை சரிசெய்ய இந்த பரிகாரத்தை செய்யுங்கள். மாலை நேரங்களில் ஒரு வெள்ளை காகிதத்தில் சிறிது உப்பை போட்டு மடித்து கொள்ளவும், பின்னர் உங்கள் வீட்டின் எத்தனை மூலைகள் உள்ளதோ அத்தனை காகிதத்தை தயார் செய்துகொள்ளவும், பின்னர் அந்த காகிதத்தை அனைத்து மூலைகளிலும் வைக்கவும். பின்னர் அதிகாலையில் மற்றவர்கள் எழும் முன் எழுந்து யாரிடமும் பேசாமல் அந்த காகிதங்களை எடுத்து ஓடும் தண்ணீரில் விட்டுவிடவும். இது உங்கள் துரதிர்ஷ்டத்தை விரட்டுவதுடன் உங்கள் அதிர்ஷ்டத்தை பன்மடங்கு அதிகரிக்கும்.

பரிகாரம் 7
வாஸ்து சாஸ்திரத்தின் படி இறந்த முன்னோர்களின் படங்களை வீடு முழுவதும் வைக்க கூடாது. அனைத்து படங்களும் ஒரே இடத்தில மட்டுமே வைக்கப்பட வேண்டும் குறிப்பாக வீட்டின் நுழைவாயிலை எதிர்கொள்ளும் திசையில் வைக்க வேண்டும். அவர்கள் இறந்த பிறகு அவர்களின் உடமைகளை வீட்டில் வைத்துக்கொள்ள கூடாது. அந்த பொருட்கள் எதிர்மறை சக்திகளை ஈர்க்கக்கூடும், மேலும் சீரான இடைவெளியில் வீட்டிற்கு பெயிண்ட் அடித்து இல்லத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

கோவில் குளங்கள்
பெரும்பாலான இந்து கோவில்களில் வெளிப்புறத்திலோ அல்லது உட்புறத்திலோ நீரை தேக்கி வைக்கும் குளங்கள் இருப்பதை பார்க்கலாம். அதுமட்டுமின்றி சில கோவில்கள் ஆற்றங்கரையின் ஓரத்தில் கட்டப்பட்டிருக்கும். அப்படிப்பட்ட கோவில்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவையாகும். இந்த கோவில்கள் உங்கள் பாவத்தை குறைப்பதோடு உங்கள் வாழ்க்கையை செம்மைப்படுத்தவும் உதவும்.



Click it and Unblock the Notifications
