Latest Updates
-
இந்த 3 ராசிக்காரங்க கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட அதிர்ஷ்ட ஆன்மாக்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
காய்ந்த பட்டாணி இருந்தா.. இந்த பக்குவத்துல குருமா செய்யுங்க.. சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
பெண்களின் உடல் பற்றிய ஆச்சரியப்பட வைக்கும் உண்மைகள் - இவ்வளவு ரகசியம் ஒளிஞ்சிருக்கா? -
ஒரே நாளில் நடக்கும் சூரிய-சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
புதன் கடக ராசியில் வக்ர பெயர்ச்சி அடைவதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சளி, இருமலுக்கு இப்படி கொங்குநாடு ஸ்டைலில் ரசம் வெச்சு சாப்பிடுங்க.. டக்குன்னு சரியாகும்.. -
ஐயங்கார் ஸ்டைல் புளிக்குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவை வேற லெவலில் இருக்கும் -
H1N1 Alert: கர்நாடகாவில் பன்றிக் காய்ச்சலால் ஒருவர் பலி - இதன் அறிகுறிகள் என்ன? இது எப்படி பரவுகிறது? -
சில நாடுகள் ஏன் இடதுப்புறத்தில் கார் ஓட்டுகின்றன? சில நாடுகள் ஏன் வலதுப்புறத்தில் கார் ஓட்டுகின்றன தெரியுமா? -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 45 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க வேலையில் கவனமா இருக்கணும்..
உங்க பிறந்த தேதி படி எந்த வயசுல உங்களுக்கு அதிர்ஷ்ட காத்து அடிக்கப்போகுது தெரியுமா?
பிறந்த தேதி என்பது நாம் பிறந்த நாளின் ஒட்டுமொத்த கூட்டுத்தொகையாகும். நியூமராலஜியில் இது மிகவும் முக்கியமான எண்ணாகும்.
நம்முடைய பிறந்த கிழமை அல்லது பிறந்த தேதி என்பது மிகவும் முக்கியமானதாகும். நாம் பிறக்கும் தேதி, கிழமை, நேரம், வருடம் என அனைத்துமே ஒவ்வொரு விதத்தில் தனித்துவம் வாய்ந்ததாகும். நம்முடைய எதிர்காலம், குணநலன்கள் போன்றவற்றை தீர்மானிப்பதில் இவற்றின் பங்கு மிகவும் முக்கியமானதாகும்.

பிறந்த தேதி என்பது நாம் பிறந்த நாளின் ஒட்டுமொத்த கூட்டுத்தொகையாகும். நியூமராலஜியில் இது மிகவும் முக்கியமான எண்ணாகும். ஒருவரின் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை கண்டறிய அவர்களின் பிறந்த எண்ணே போதும் என்று சாஸ்திரம் சொல்கிறது. அதன்படி எந்த வயதில் உங்கள் வாழ்க்கை வெற்றியின் பக்கம் திரும்பும் என்பதை கண்டறியலாம்.

நியூமராலஜி
ஜோதிட சாஸ்திரத்தை போலவே நியூமராலஜியும் ஒன்பது கோள்களுடன் தொடர்புடையதாகும். இந்த ஒவ்வொரு கோளுக்கும் 1 முதல் 9 வரை நிர்ணயிக்கப்படுகிறது. இந்த எண்கள் அந்த கோளின் குணங்களை பிரதிபலிக்கிறது. இதன்மூலம் ஒருவரின் எதிர்காலத்தை எளிதில் கண்டறியலாம். உங்கள் பிறந்த எண்ணின் படி உங்களுக்கு எந்த வயதில் அதிர்ஷ்டம் தொடங்கும் என்று மேற்கொண்டு பார்க்கலாம்.

பிறந்த எண் 1
பிறந்த எண் 1 ல் இருப்பவர்களுக்கான அதிர்ஷ்டமான வயது அவர்களின் 22 வது வயதாகும். இந்த வயதில் அவர்கள் பணம், பொருள் மற்றும் வெற்றியை குவிப்பார்கள். இந்த வயதில் அவர்களின் வாழ்க்கையில் பல மாற்றங்கள் ஏற்படும். அந்த மாற்றங்கள் அவர்களின் முன்னேற்றத்திற்கு உகந்ததாக இருக்கும்.

பிறந்த எண் 2
உங்களின் பிறந்த தேதி 2,11,20 மற்றும் 29 ஆக இருந்தால் உங்களின் பிறந்த எண் 2 ஆகும். இந்த எண்ணில் பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்டம் ஏற்படும் வயது அவர்களின் 24 வது வயது ஆகும். அவர்களின் உழைப்புக்கெல்லாம் பலனை அவர்கள் இந்த வயதில் அனுபவிப்பார்கள்.

பிறந்த எண் 3
3, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களின் பிறந்த எண் 3 ஆகும். இவர்களுக்கு அதிர்ஷ்டமான வயது 32 ஆகும். இந்த வயதில் இருந்து அவர்கள் தொடர்ந்து வெற்றியை குவிப்பார்கள். அதுவரை வேலை பார்த்த இவர்கள் அதற்கு பின் வேலை வாங்குவார்கள்.

பிறந்த எண் 4
4, 22,31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களின் பிறந்த எண் 4 ஆகும். இந்த எண்ணில் பிறந்தவர்களுக்கான அதிர்ஷ்டமான வயது 36 மற்றும் 42 ஆகும். இந்த வயதில் அவர்களுக்கு வெற்றி, பதவி உயர்வு, மரியாதை அனைத்தும் தேடிவரும்.

பிறந்த எண் 5
5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களின் பிறந்த எண் 5 ஆகும். இவர்களின் அதிர்ஷ்டம் தொடங்கும் வயது 32 ஆகும். இந்த வயதில் இவர்களின் வாழ்க்கை மொத்தமாக வேறு விதத்தில் மாற்றமடையும். அனைத்து செல்வங்களும் இவர்களை தேடி வரும்.

பிறந்த எண் 6
6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களின் பிறந்த எண்தான் 6 ஆகும். இவர்களுக்கு அதிர்ஷ்டம் தொடங்கும் வயது 25 ஆகும். அவர்களின் இலட்சிய வேலையை அவர்கள் இந்த வயதில் அடைவார்கள். அது அவர்களின் வெற்றிக்கான ஆரம்ப புள்ளியாக இருக்கும்.

பிறந்த எண் 7
பிறந்த எண் 7 ஆக இருப்பவர்கள் 7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்திருப்பார்கள். இவர்களின் அதிர்ஷ்ட வயது 38 மற்றும் 44 ஆகும். இந்த வயதுகளில் இவர்களின் வாழ்க்கை ஒவ்வோர் படியாக முன்னேறிக்கொண்டே செல்லும்.

பிறந்த எண் 8
பிறந்த எண் 8 ஆக இருப்பவர்களின் வாழ்க்கை மிகவும் சிக்கலானதாகும். ஏனெனில் இவர்களின் வாழ்க்கை முட்கள் நிறைந்த ரோஜா படுக்கை போல இருக்கும். இவர்களுக்கான அதிர்ஷ்ட வயது 36 மற்றும் 42 ஆகும். இந்த வயதில் அவர்கள் நினைத்த நிலையையும், செல்வத்தையும் அடைவார்கள்.

பிறந்த எண் 9
9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களின் பிறந்த எண் 9 ஆகும். இவர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டும் வயது 28 ஆகும். இந்த வயதில் அவர்கள் பெரிய புகழையும், அதிக செல்வத்தையும் அடைவார்கள்.



Click it and Unblock the Notifications