For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த நள - தமயந்தி கதைய படிச்சா உங்க சனிதோஷம் விலகிடுமாம்... 2 நிமிஷம் ஒதுக்கி படிக்கலாமே...

By Mahibala
|

நளன் - தமயந்தியின் காதல் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். அதேபோல் நள சக்கரவர்த்தி சமையல் கலையிலும் சிறந்த வல்லுநர் என்பது நமக்குத் தெரியும். ஆனால் நளன் தமயந்திக்கும் சனி பகவானுக்கும் இடையே ஒரு சுவாரஸ்யமா கதை இருக்கு.

அந்த கதைக்கும் ஒரு அபார சக்தி இருக்கிறது. என்னவென்றால் அந்த கதையைப் படிக்கிறவர்களுக்கு சனி தோஷம் இருந்தால் நீங்கிவிடுமாம். அப்புறம் என்ன நீங்களும் அந்த கதையைப் படிங்க. சனிதோஷத்த விரட்டுங்க.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வேட தம்பதிகள்

வேட தம்பதிகள்

ஆகுனன் மற்றும் ஆகுகி என்னும் வேட்டைத் தொழில் செய்யும் தம்பதி காட்டில் வசித்து வந்தார்கள். அவர்கள் காட்டிலேயே ஒரு சிறிய குகைக்குள் வாழ்ந்து வந்தார்கள். அப்படி இருக்கும் போது, ஒரு நாள் அந்த வழியே துறவி ஒருவர் வந்தார். இவர்களும் இந்த துறவியை உபசரித்தனர்.

MOST READ: இந்த மூனு ராசிக்காரங்களுக்கும் பரம்பரை சொத்துனாலே ஏன் பஞ்சாயத்து வருதுனு தெரியுமா?

துறவிக்காக...

துறவிக்காக...

துறவியை போதும் போதுமென்று சொல்லும் அளவுக்கு உபசரித்தார்கள். பின், இருட்டி விட்டது. குகைக்குள் இரண்டு பேர் மட்டும் தான் படுத்துத் தூங்குமளவுக்கு இடம் இருந்தது. அதனால் என்ன செய்வதென்று யோசித்த வேடன், குகைக்குள் துறவியையும் தன்னுடைய மனைவியையும் உறங்கும்படி கூறிவிட்டு, குகைக்கு வெளியில் படுத்துத் தூங்கிவிட்டான்.

உயிர்போன பரிதாபம்

உயிர்போன பரிதாபம்

அப்படி வேடன் ராத்திரி குகைக்கு வெளியே தூங்கிக் கொண்டிருந்தான். அதேசமயம் தன் மீது நம்பிக்கை வைத்து, தன் மனைவியை என்னுடன் விட்டுவிட்டு வெளியில் தூங்குவதை நினைத்து பெருமைப்பட்டார் முனிவர்.

அதேபோல தான் வேடனுக்கும். தன் மனைவி வேறொரு ஆணுடன் சேர்ந்து தூங்கிக் கொண்டிருக்கிறாள் என்ற எண்ணமே சிறிதும் இல்லாமல் தான் வெளியில் தூங்கிக் கொண்டிருந்தான்.

அன்பு மிகுதி

அன்பு மிகுதி

அப்படி இரவு தூங்கிக் கொண்டிருந்த வேடனை ஒரு கொடிய மிருகம் இரவில் தாக்கிக் கொன்று விட்டது. இந்த விஷயத்தை காலையில் எழுந்ததும் அறிந்த ஆகுகியும் அன்பு மிகுதியால் அந்த இடத்திலேயே உயிரை விட்டாள்.

மறுபிறவி ஜோடி

மறுபிறவி ஜோடி

இப்படி ஒருவருக்கொருவர் எந்த சுயநலமும் இல்லாது வாழ்ந்து வந்த வேடகுல தம்பதியினர் தான் அடுத்த பிறவியில் நளன் - தம்பதியாகப் பிறந்தார்கள். அந்த முனிவரோ அன்னப் பறவையாகப் பிறந்தார்.

நள சக்கரவர்த்தி

நள சக்கரவர்த்தி

நளன் சாதாரண குடும்பத்தில் பிறக்கவில்லை. நளன் நிடத நாட்டினுடைய இளவரசனாகப் பிறந்து பின்னர் மன்னனாக ஆனார். அப்போது திடீரென்று ஒரு அன்னப் பறவை ஒன்றைப் பார்த்தார். அப்போது அந்த அன்னப்பறவை சொன்னது, உன்னுடைய அழகுக்கு ஏற்ற அழகி விதர்ப்ப நாட்டு மன்னன் வீமனின் மகள் தமயந்தி தான் என்றும் அவளைத் திருமணம் செய்து கொள். நீ அதிர்ஷ்டம் பெறுவாய். உனக்காக நான் தூது செல்கிறேன் என்று கூறியது.

MOST READ: உங்க வீட்டு ரோஜா செடியில் இப்படி கொத்து கொத்தா பூக்கணுமா? இத மட்டும் போடுங்க போதும்...

காதலில் விழுந்த நள தமயந்தி

காதலில் விழுந்த நள தமயந்தி

அன்னத்தின் பேச்சைக் கேட்ட நளனுக்கு தமயந்தி மீது ஆர்வம் அதிகரித்தது. தூது போன அன்னப் பறவையின் பேச்சைக் கேட்ட தமயந்தியும் நளனின் மீது தீராத காதல் கொண்டாள்.

சனி எங்கிருந்து வந்தார்?

சனி எங்கிருந்து வந்தார்?

தமயந்தி மிக அழகானவள். அதனா்ல தேவர்களும் பலர் அவள் மீது ஆசை கொண்டனர். அதில் சனிபகவானும் அடங்குவார். அந்த சமயத்தில் தமயந்திக்கு அவளுடைய தந்தை சுயம்வரம் ஏற்பாடு செய்திருந்தார். அதில் நளனை தமயந்தி காதலிப்பது தெரிந்து சனி பகவான் உள்ளிட்ட அத்தனை பேரும் நளனைப் போலவே வேடம் அணிந்து கொண்டு சுயம்வரத்தில் கலந்து கொண்டார்கள். அந்த சுயம்வரத்துக்கு ஒரிஜினல் நளனும் வந்திருந்தார்.

திருமணமும் குழந்தைகளும்

திருமணமும் குழந்தைகளும்

என்னதான் எல்லோரும் வேடம் அணிந்திருந்தாலும் தமயந்தியோ உண்மையான நளனுக்கு மாலை சூட்டி திருமணம் முடித்தாள். அவர்களுக்கு இந்திரசேனன், இந்திரசேனை என்ற இரண்டு குழந்தைகளும் பிறந்தார்கள்.

சனி தோஷம்

சனி தோஷம்

தமயந்தியை அடைய முடியாத தேவர்கள் பெரும் விரக்தி அடைந்தார்கள். அதனால் கோபமடைந்து, சனிபகவானிடம் சென்று உன்னுடைய சக்தியால் நீ நளனைப் பிடித்துக் கொள்ள வேண்டும். அவனை ஆட்டிப் படைக்க வேண்டும் என்று சொன்னார்கள்.

சனியின் சிறப்பு

சனியின் சிறப்பு

சனி பகவானைப் பொருத்தவரையில், கடமை உணவு மிக்கவர்களை எதுவும் செய்ய மாட்டார்கள். ஆனால் கடமை தவறினால் அதை ஒருபோதும் பொருத்துக் கொள்ளவே மாட்டார். ஆனால் நளனோ மிகவும் நல்லாட்சி செய்து வைந்தான். இப்படிப்பட்ட ஒருவனை எப்படி அவரால் பிடிக்க முடியும்.

MOST READ: எகிப்துல வாழ்க்கையோட எல்லா விஷயத்துக்கும் எந்த மூலிகைய பயன்படுத்தறாங்க தெரியுமா?

சனி பிடித்த தருணம்

சனி பிடித்த தருணம்

எப்படி பிடிக்கலாம் என்று காத்திருந்த தேவர்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைத்தது. ஒரு முறை நளன் பூஜை செய்வதற்காகத் தயாராகிக் கொண்டிருந்தான். அந்த சமயத்தில் தான் தன்னுடைய கால்களைச் சரியாகக் கழுவாமல் போயிவிட்டார். கால் கழுவுவதைக் கூட சரியாகச் செய்யாத மன்னன் ஒரு நாட்டை எப்படி சிறப்பாக சுத்தமாக ஆளுவான் என்று நினைத்த சனிபகவான் அவரைப் பிடித்துக் கொண்டார்.

சூதாட்டம்

சூதாட்டம்

அதன்பின்னர், புட்கரன் என்பவனிடம் சூதாட்டத்தில் ஈடுபட்ட நளன் தன்னுடைய பொன், பொருள் எல்லாவற்றையும் இழந்தான். குடும்பத்தோடு நாட்டை விட்டே வெளியேறிவிட்டான். தன்னுடைய மனைவியும் குழந்தைகளும் படுகின்ற கஷ்டத்தை நினைத்து ஒரு அந்தணர் ஒருவரின் மூலம் தன்னுடைய குழந்தைகளை தன்னுடைய மாமனார் வீட்டுக்கு அனுப்பி வைத்து விட்டார்.

தமயந்தியின் நிலை

தமயந்தியின் நிலை

பின்னர் தன்னுடைய மனைவி தமயந்தியையும் காட்டில் பிரிந்தான். நடுக்காட்டில் தனியாக இருந்த தமயந்தியை ஒரு பெரிய மலைப்பாம்பு சுற்றிக் கொண்டது. அப்போது அந்த வழியு வந்த வேடன் ஒருவன் அவளைக் காப்பாற்றினான். ஆனால் அவள் மீது ஆசை கொண்டு அவளைத் துரத்திக் கொண்டே இருந்தான். இவனிடம் இருந்து தப்பிச்சென்ற தமயந்தி சேதிாட்டை அடைந்து அங்கு பணிப்பெண்ணாக வேலை பார்த்து வந்தாள்.தன் பேரக்குழந்தை வந்துவிட்டார்கள். மனைவி கஷ்டப்படுகிறாள் என்று அறிந்த தமயந்தியின் தந்தை தன் மகளைத் தேடிக் கண்டுபிடித்து தன்னுடன் அழைத்துச் சென்றுவிட்டார்.

தேரோட்டி நளன்

தேரோட்டி நளன்

தமயந்தியைப் பிரிந்து சென்ற நளன் காட்டில் கார்கோடன் என்கின்ற பாம்பு கடித்து கருப்பாக மாறிவிட்டான். ஆனால் அந்த பாம்பு ஒரு அற்புதமான ஆடையை வழங்கிச் சென்றது. தன்னுடைய அழகை இந்தபின், அயோத்தி மன்னன் ரிதுபன்னனின் தேரோட்டியாக வேலைக்குச் சேர்ந்து வந்தான். தன்னுடைய கணவன் அங்கிருப்பதை அறிந்த தமயந்தி தன் கணவர் நளனை வரவழைக்க தனக்கு மறுசுயம்வரம் நடப்பதாக அறிவித்தாள். ரிதுபன்னனும் சுயம்வரத்துக்குக் கிளம்ப அவருக்குத் தேரோட்டியாக நளனும் உடன் வந்தார்.

MOST READ: பணக்கார குபேரனுக்கே பணக்கஷ்டம் வந்தபோது என்ன செய்தார் தெரியுமா? தெரிஞ்சிகங்க... நீங்களும் ட்ரை பண்ணு

சனிதோஷம் நீங்க...

சனிதோஷம் நீங்க...

மீண்டும் நளன் இங்கு வந்து சேர்ந்த நளனை விட்டு சனிபகவான் நீங்கினார். தேரோட்டிய இருந்த நளனையும் தமயந்தி அடையாளம் கண்டுகொண்டார். அந்த சமயத்தில் கார்கோடன் அளித்த ஆடையை அணிந்து கொண்டு தன்னுடைய அழகான சுய உருவத்தை மீண்டும் பெற்றான்.

இவர்கள் திருநள்ளாறு தலத்தை அடைந்த போது, ஏழரைச் சனி நீங்கிவிட்டது. சனீஸ்வரன் நளனின் முன் தோன்றி, தன்னால் ஏற்பட்ட கஷ்டங்களுக்குப் பரிகாரமாக வரம் தருவதாகவும் கூறினார். உடனே நளன் அவரிடம், சனிபகவானே! நான் பட்ட கஷ்டம் யாருக்கும் நேர்ந்துவிடக்கூடாது. என்னுடைய கதையைப் படிப்பவர்களைத் துன்புறுத்தக்கூடாது. என் மனைவி பட்ட துன்பம் எந்த பெண்ணுக்கும் ஏற்படக்கூடார் என்று வரம் கேட்டான். சனிபகவானும் அருள் புரிந்தாராம். அதனால் தான் இந்த கதையைப் படிப்பவர்களுக்கு சனி தோஷம் இருந்தாலும் அது நீங்கிவிடும் என்ற ஐதீகம் உண்டானது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Ardhastama shani and story of Nala - Damayanthi

During Gochara when saturn traverses Fourth house from natal moon , inavariably man leaves his existent place of stay. Many a great kings had to face exile during this period. Rama went to forest in ardhastama,.Pandavas went to vanavas when saturn was in aquarius. When in vanavas Yudhisthira meets Sage Bharadhwaj and relates to him his plight.
Story first published: Thursday, June 20, 2019, 17:10 [IST]