2018- இல் பெரிய மாற்றத்தைக் காணவிருக்கும் ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா?

Posted By:
Subscribe to Boldsky

நம் அனைவருக்குமே வாழ்வில் மாற்றம் ஏற்படாதா என்ற எண்ணம் இருக்கும். அதிலும் இதுவரை வாழ்வில் வெறும் பிரச்சனைகளையே சந்தித்து வந்தவர்களுக்கு இந்த வருடமாவது மாற்றம் ஏற்பட்டால் நன்றாக இருக்கும் என்று தோன்றும். இந்த 2018 ஆம் ஆண்டு ஒருசில ராசிக்காரர்களுக்கு பெரிய மாற்றம் ஏற்படப் போவதாக ஜோதிடர்கள் கணித்துள்ளனர். அதிலும் ஒரு 5 ராசிகளின் விதியில் இந்த வருடம் மாற்றம் ஏற்படப் போவதாகவும் கூறுகின்றனர்.

2018 ஆம் ஆண்டு இந்த 5 ராசிக்காரர்களது வாழ்வில் மறக்க முடியாத அளவிலான பெரிய மாற்றம் ஏற்படப் போகிறது. அந்த 5 ராசிக்காரர்கள் யார் மற்றும் எம்மாதிரியான மாற்றம் 2018 ஆம் ஆண்டு நடைபெறப் போகிறது என்று தெரிந்து கொள்ள வேண்டுமா? அப்படியானால் தொடர்ந்து படியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ரிஷபம்

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்கள் தங்களைச் சுற்றி நடக்கும் மாற்றங்களை ஏற்றுக் கொள்ள விரும்பமாட்டார்கள். இருப்பினும், நாளாக அவர்கள் அந்த மாற்றத்துடன் சுலபமாக இணக்கிவிடுவார்கள். இந்த 2018 ஆம் ஆண்டு இந்த ராசிக்காரர்களது வாழ்வில் மிகப்பெரிய மாற்றங்கள் நிறைந்திருக்கும். இதனால் இவர்கள் தங்களது தினசரி செயல்களைப் பற்றி மறுபரிசீலனை செய்ய வேண்டியிருக்கும்.

இந்த வகையான மாற்றத்துடன், தங்கள் எண்ணங்களில் மறுபரிசீலினை செய்து நடந்தால், இதன் நல்ல விளைவாக இந்த வருடம் இவர்கள் வலிமையானவராகவும், தன்னம்பிக்கை நிறைந்தவராகவும் காணப்படுவர்.

சிம்மம்

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்கள் இந்த வருடம் தத்துவ கருத்துக்களில் பெரும் மாற்றத்தைக் காண்பார்கள். இந்த மாற்றத்தைக் கண்டு இவர்கள் பயப்படாமல் இருந்தாலும், இந்த மாற்றத்தால் இவர்கள் அனைத்து நேரங்களிலும் சௌகரியமாக உணரமாட்டார்கள். ஆனால் வருடத்தின் இறுதியில், இந்த உலகத்தை முற்றிலும் வேறுபட்ட கண்ணோட்டத்தில் பார்க்க நேரிடுவதால், அதன் விளையாக எதிலும் அவர்கள் எதிர்பார்க்கும் வெற்றியைக் காண்பார்கள்.

கன்னி

கன்னி

இந்த வருடம் கன்னி ராசிக்காரர்களின் குணாதிசயங்களில் பெரும் மாற்றம் ஏற்படும். இருந்தாலும் இது அவர்களுக்கு நல்லது தான். இந்த மாற்றத்தால், எப்பேற்பட்ட பிரச்சனையையும் சமாளிக்கும் சக்தி அதிகரித்திருக்கும். மேலும் இதுவரை உணர்ந்த பாதுகாப்பற்ற நிலைகள் மறைந்திருப்பதையும் காண்பார்கள்.

மகரம்

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு மாற்றங்களை அணைத்துக் கொள்ளும் வாய்ப்பு இருப்பதால், அவர்கள் இந்த ஆண்டு வரவிருக்கும் மாற்றங்கள் பற்றி வெட்கப்பட வேண்டிய அவசியம் இல்லை. இந்த ராசிக்காரர்களின் உறவுகளிலும், தொழில்முறை வாழ்விலும் மாற்றங்களைக் காணக்கூடும். அதன் விளைவாக, அவை உங்களுக்கான ஆறுதல் மண்டலங்களை விரிவாக்கும்.

மீனம்

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இந்த வருடம் மிகப்பெரிய மாற்றம் ஏற்படப் போகிறது. இவர்கள் முக்கிய முடிவுகளை எடுக்கும் போது, இதுவரை இருந்த அச்சத்தைக் களைந்து தைரியமாக முடிவெடுப்பார்கள். அதோடு, இந்த வருடத்தில் இவர்களது வலிமையான தன்னம்பிக்கை குணத்தால், எதிலும் நேர்மறையான நல்ல தீர்வைக் காண்பார்கள்.

வெற்றியை அடைய எதையும் செய்யும் ராசிகள்

வெற்றியை அடைய எதையும் செய்யும் ராசிகள்

ஒவ்வொருவருக்கும் எதிலும் வெற்றியாளராக இருக்க தான் ஆசை இருக்கும். ஆனால் சிலவகையான ராசிக்காரர்கள் தாங்கள் எதிலும் வெற்றிக் காண வேண்டுமென எந்த எல்லைக்கும் செல்ல தயங்கமாட்டார்கள். கீழே அப்படி வெற்றிக்காக எதையும் துணிந்து செய்யும் 4 வகையான ராசிகள் பட்டியலிடப்பட்டுள்ளது. உங்களது ராசியும் அதில் உள்ளதா என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

மேஷம்

மேஷம்

ஜோதிடத்தின் படி மேஷ ராசிக்காரர்கள் எதிலும் ஆடம்பரமாக இருக்கவே விரும்புவார்கள். ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்வதற்காக இந்த ராசிக்காரர்கள் எந்த எல்லைக்கும் செல்லக்கூடியவர்களாகவும் இருப்பார்களாம். மறுபுறம், சில நேரங்களில் தங்களது அதிகப்படியான லட்சியத்தால், தங்களது சாதாரண வாழ்க்கையை மறந்துவிடுவார்களாம்.

மகரம்

மகரம்

12 ராசிகளுள் மிகவும் கடுமையாக உழைக்கக்கூடிய ராசி தான் மகரம். இந்த ராசிக்காரர்கள் கடுமையான உழைப்பால் எப்போதும் சோர்ந்து போகமாட்டார்கள். பழங்கால வோ ஜோதிடத்தின் படி, ஆடுகள் மிகவும் தன்மூப்புள்ளது. எனவே இந்த ராசிக்காரர்கள் எதையும் சிறப்பாக செய்து முடிக்க விரும்புவர். இவர்கள் நல்ல வேலையாட்கள் மற்றும் எந்த வகையான வேலையையும் மனப்பூர்வமாக விரும்பு செய்பவர்களாக இருப்பர்.

கும்பம்

கும்பம்

நீர் அடையாளத்தைக் கொண்ட கும்ப ராசிக்காரர்களின் கனவு சில நேரங்களில் மிகவும் பெரியதாகவும், முடியாத ஒன்றாக இருக்கும். இருப்பினும் இந்த ராசிக்காரர்கள் தங்களது நோக்கத்தை அடைவதற்கு முடிந்த அளவு முயற்சிகளை மேற்கொள்வார்கள். ஒருவேளை இயலாத ஒன்றாக இருந்தாலும், தன் முயற்சியை மட்டும் கைவிடமாட்டார்களாம்.

மீனம்

மீனம்

மீன ராசிக்காரர்கள் தங்கள் கனவுகளால் உந்தப்படுவார்கள். அவர்கள் கற்பனையிலிருந்து பின்வாங்க மாட்டார்கள். இந்த ராசிக்காரர்கள் தங்களை தாங்களே உந்துவிக்கிறார்கள். இந்த ராசிக்காரர்கள் தங்கள் கனவு மெய்பட, முயற்சிகளை தொடர்ந்து எடுப்பார்கள். சில நேரங்களில் தங்கள் கனவை நினைவாக்கும் முயற்சியில் இருந்து விலகினாலும், இடைவெளி விட்டு மீண்டும் அந்த கனவை நினைவேற்ற முற்படுவார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Zodiac Signs That Will Experience The Biggest Change This Year

These 5 zodiac signs are expected to undergo some of the life-changing experiences in 2018. These changes are based on zodiac signs. Find out yours…
Story first published: Saturday, February 3, 2018, 14:23 [IST]
Subscribe Newsletter