TRENDING ON ONEINDIA
-
தொகுதி பங்கீடு.. திமுக-மதிமுக நடுவே இழுபறி.. அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கு முடிவு
-
5 கோடி ரூபாய் கார் மோதி பெண் பலி... விபத்தை ஏற்படுத்தியது யார் என தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்...
-
‘கூழுக்கும் ஆசை.. மீசைக்கும் ஆசை’.. சத்தமில்லாமல் பாய்பிரண்டுகளுக்கு பார்ட்டி வைக்கும் நடிகை!
-
எவ்வளவு சோதனை வந்தாலும் இந்த ராசிக்காரர் அசால்டா சமாளிப்பாராம்
-
10 ஆயிரம் கோடியில் 173 கோடி காலி; தீயாக வேலை செய்யும் இஸ்ரோ! எதில்?
-
ரியல் ஹீரோஸுக்கு இவ்வளவு தான் சம்பளமா? 1983 உலகக்கோப்பை பயோபிக் திரைப்படத்தில் சம்பள பிரச்சனை!
-
தம்பி இந்தியா... நீ என்ன பண்ணாலும் பாகிஸ்தான ஒன்னும் பண்ண முடியாது..? ஏன்..? அரசியல் சொல்வதென்ன..?
-
பக்தோரா பயண வழிகாட்டி - செய்யவேண்டியவை மற்றும் எப்படி செல்வது
நட்புக்காக உயிரையே கொடுக்கும் ஐந்து ராசிக்காரர்கள் யார் தெரியுமா? தெரிஞ்சி பழகுங்க...
நண்பன் பக்கத்தில் இருந்தால் போதும் நம் கவலைகளும் காணாமல் போய் விடும். அந்த அளவிற்கு நண்பர்கள் நம் வாழ்வில் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. நமக்கு நிறைய நண்பர்கள் இருக்கலாம் ஆனால் நெருக்கமான இடத்தை வகிப்பவர்கள் என்றால் சில நண்பர்கள் மட்டுமே இருப்பார்கள்.காரணம் அவர்களின் சிறந்த குணங்கள் மட்டுமே நம்மை அவர்களுடன் நெருக்கமாக்குகிறது.
இப்படி சிறந்த நண்பர்களாக இருப்பது கூட ராசி தான் காரணம் என்கிறது ஜோதிடம். சில ராசிக்காரர்கள் இயற்கையிலேயே சிறந்த நண்பர்களாக இருப்பார்கள் என்கிறது ஜோதிடம். அதைப் பற்றி தான் நாம் இப்பொழுது பார்க்க போகிறோம்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் இயற்கையாகவே நட்பின் ஆழத்தை புரிந்து கொள்பவர்கள். உண்மையான நட்பு என்பது இவர்களுக்கு பொருந்தும். இவர்கள் தங்கள் நண்பர்களின் உணர்வுகளை புரிந்து நடந்து கொள்வார்கள். நண்பர்களுக்கு என்றால் எப்போது வேண்டுமானாலும் உதவுவார்கள். நட்பில் இவர்களது அர்ப்பணிப்பு மற்றும் நம்பகத்தன்மை மிக முக்கிய இடம் வகிக்கிறது.
கடகம்
கடக ராசிக்காரர்கள் தங்கள் வாழ்க்கை மற்றும் இலக்குகளை பற்றிய புரிதல் கொண்டு சுயநலமாக காணப்பட்டாலும் அவர்கள் மற்றவர்களின் வார்த்தையின் மதிப்பை புரிந்துகொள்வார்கள். அதே மாதிரி ரெம்ப அன்பானவர்களாகவும் அக்கறையுடனும் நடந்து கொள்வார்கள். மேலும் இவர்கள் நட்பில் விசுவாசமாக நடந்து கொள்வார்கள்.
கன்னி
கன்னி ராசிக்காரர்கள் தங்களை சுற்றியுள்ள அனைவரையும் விரும்பக்கூடிய நபர்கள். அவர்கள் தங்கள் எதிரிகளையும் அணுசரித்து போகக் கூடிய வல்லவர்கள். அவர்களுடைய இரக்க குணத்தாலே மற்றவர்கள் செய்யும் தவறுகளை மன்னிக்க கூடியவர்கள். அவர்களுடைய நேர்மையான குணமும் தியாக மனப்பான்மையும் நட்பில் அவர்களது உண்மையான தன்மையை புரிய வைக்கும்.
MOST READ: வழுக்கை விழற மாதிரி இருக்கா? அப்போ இந்த எண்ணெய் தேய்ங்க...
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் உறுதியான மன வலிமை கொண்டவர்கள். இதனால் இவர்களை சில நேரங்களில் நண்பர்களாக சமாளிப்பது கஷ்டம். ஆனால் நண்பர்களுக்கு ஒன்று என்றால் முன்னால் முதலில் வந்து நிற்பது இவர்களாகத் தான் இருக்கும். நண்பர்களுக்கு உதவி என்றால் இவர்களை மாதிரி உதவ யாராலும் முடியாது. தங்களுடைய நேர்மை மற்றும் நம்பிக்கையால் சிறந்து விளங்குவார்கள்.
மீனம்
மீன ராசிக்காரர்களின் பொதுவான தன்மையால் மற்றவர்களின் இதயத்தை எளிதில் கொள்ளை அடித்து விடுவார்கள். நட்பில் அதிகப்படியான ஈடுபாட்டை கொண்டு காணப்படுவார்கள். நட்பில் ஒரு அசெளகரிய நிலை இருந்தாலும் தங்களுடைய நேர்மையான நட்பால் அதை சரி செய்து விடுவார்கள். பிறருக்கு உதவுவது கடவுள் இவர்களுக்கு கொடுத்த வரம் எனலாம். நட்பில் தங்கள் நேர்மையை எப்பொழுதும் காப்பாற்றுவார்கள்.