Latest Updates
-
துவரம் பருப்பு தோசையும், வெங்காய சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 07 மே 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு துரதிர்ஷ்டம் கதவைத் தட்டுமாம் -
100 ஆண்டுக்கு பின் மே மாதத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: இந்த 4 ராசிக்காரர்களை பணக்காரராக்கப் போகுதாம் -
கர்நாடகா ஸ்டைல் தயிர் சட்னி ரெசிபி - ட்ரை பண்ணுங்க, இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
25 லட்சம் பண மாலை... கல்வீச்சு, மோதல்! ஹரியானா திருமணத்தில் நடந்த அந்த 'ஷோ-ஷாதி' கலாச்சாரத்தின் கோர முகம்! -
இந்த 4 ராசி பெண்கள் அசாத்திய புத்திசாலிகளாம் - இவங்ககிட்ட பொய் சொல்லி தப்பிக்கவே முடியாதாம் - உங்க ராசி என்ன? -
தித்திக்கும் கர்நாடகா ஸ்டைல் மாம்பழ கேசரி ரெசிபி - செஞ்சு பாருங்க, டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
டெல்லி மழையால் மாறிய சூழல்! வீட்டை மாற்றும் அந்த 4 லக்கி செடிகள் இதோ! -
வீட்டில் இந்த செடிகள் இருந்தா போதும்… கோடை வெயிலும் தூசியும் உங்களை நெருங்கவே முடியாது! -
Mother's Day 2026: 35 வயதிற்கு பிறகு பெண்களின் எலும்புகளில் என்னென்ன மாற்றம் ஏற்படும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க
இன்றைக்கு பணமழையில் நனையப் போகும் ராசிக்காரர்கள் யார் என்று தெரியுமா?
உங்களுடைய ஆற்றலை உணர்ந்து கொண்டு செயல்பட்டால் எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும். அதுதவிர 12 ராசிகளுக்கும் இன்று எப்படி இருக்கப் போகிறது என்று பார்ப்போம்.
உங்களுடைய ஆற்றலை உணர்ந்து கொண்டு செயல்பட்டால் எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும். அதுதவிர 12 ராசிகளுக்கும் இன்று எப்படி இருக்கப் போகிறது என்று பார்ப்போம்.

ஒவ்வொரு ராசிக்குமான அதிர்ஷ்ட எண், அதிர்ஷ்ட திசை, அதிர்ஷ்ட நிறம் ஆகியவற்றைத் தெரிநது கொண்டால் பாதி பிரச்னைகள் நமக்கு நீங்கும். எந்தெந்த இடங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் முதலில் உயர்ந்து கொள்ள வேண்டும்.

மேஷம்
செய்கின்ற தொழிலில் மேன்மை உண்டாவதற்கான புதிய யுக்திகளைக் கையாளுவீர்கள். வெளிவட்டாரங்களில் உங்களுடைய செல்வாக்குகள் உயர ஆரம்பிக்கும். பூஜை சம்பந்தப்பட்ட ஆன்மீகு விஷயங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். சுய தொழில் செய்வதற்கான கடனுதவிகள் கைக்கு வந்து சேரும். பயணங்களின் வழியாக விரயச் செலவுகள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமும் இருக்கும்.

ரிஷபம்
உங்களுடைய புதிய முயற்சிகளில் காரியத் தடங்கல்கள் வந்து போகும். சுயதொழில் புரிகின்றவர்களுக்கு ஏற்பட்டு வந்த பணச்சிக்கல்கள் தீரும். தலைமைப் பொறுப்புகளில் உள்ளவர்கள் கொஞ்சம் கவனத்துடன் செயல்படுவது நல்லது. தொழில் சம்பந்தமாக அலைச்சல்கள் இருந்தாலும் அதன்வழியாக சுப செய்திகளே வந்து சேரும். சந்திராஷ்டமம் நடந்து கொண்டிருப்பதால், பெரியோர்களிடம் கொஞ்சம் அமைதியாக இருங்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 4 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக தேன் நிறமும் இருக்கும்.

மிதுனம்
வீண் அலைச்சல்களால் உங்களுக்குச் சாதகமான சூழல்கள் உருவாகும். முக்கிய உத்தியோகத்தில் உள்ளவர்கள் சக ஊழியர்களிடம் கொஞ்சம் நிதானத்துடன் நடந்து கொள்ளுங்கள். பொருள்களைக் கையாளுகின்ற பொழுது, மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படுங்கள். தொழில் சார்ந்த புதிய முதலீடுகளில் கொஞ்சம் சிந்தித்து செயல்படுங்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளம் மஞ்சள் நிறமும் இருக்கும்.

கடகம்
மனதுக்குள் தொழில் சம்பந்தமாக புதிய எண்ணங்கள் தோன்றும். உங்களுடைய அறச் செயல்களால் மனம் மகிழ்ச்சி அடைவீர்கள். கணவன், மனைவிக்கு இடையே கொஞ்சம் அனுசரித்துச் செல்லுங்கள். நீண்ட கால நண்பர்களை சந்திக்கும் வாய்ப்பினால் மனம் மகிழ்ச்சி அடைவீர்கள். அரசாங்கப் பணியில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதற்காள சூழல் உருவாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 7 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக அடர்ந்த சிவப்பு நிறமும் இருக்கும்.

சிம்மம்
குடும்ப உறுப்பினர்களுடைய ஆதரவினால் உங்களுக்கு ஆதாயங்கள் உண்டாகும். உங்களுடைய புதிய முயற்சிகளால் தன லாபங்கள் உண்டாகும். எல்லாவற்றிலும் உங்களுககுச்சாதகமான சூழல்களே உருவாகும். வீட்டில் உள்ள பிள்ளைகளின் வழியாக உங்களுக்குச் சாதகமான சூழல்களே உருவாகும். பயணங்களின் போது கொஞ்சம் கூடுதல் கவனத்துடன் செயல்படுங்கள். நினைத்தபடி எண்ணங்கள் ஈடேறும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக அடர் மஞ்சள் நிறமும் இருக்கும்.

கன்னி
தொழிலில் புதிய நபர்களுடைய அறிமுகத்தினால் உங்களுக்குச் சாதகமான பலன்கள் கிடைக்கும். உங்களுடைய சாதுர்யமான பேச்சுக்களால் லாபம் அடைவீர்கள். நண்பர்களுடைய உதவியினால் மனம் மகிழ்ச்சி ஏற்படும். கணவன், மனைவிக்கு இடையே ஒற்றுமை அதிகரிக்கும். பயணங்களின் மூலமாக உங்களுக்கு லாபங்கள் கிடைக்கும். கால்நடைகளை வளர்க்கின்றவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளஞ்சிவப்பு நிறமும் இருக்கும்.

துலாம்
புதிய எண்ணங்களுக்கு செயல்திட்டங்களைத் தீட்டி, அதனை நிறைவேற்றி வைக்க முயற்சி செய்வீர்கள். முக்கியப் பணியில் உள்ளவர்கள் தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்துவதற்கு உங்களுக்குச் சாதகமான சூழல்கள் அமையும். உங்களுடைய இளைய உடன் பிறப்புகளால் நன்மைகள் உண்டாகும். போட்டியில் நினைத்தபடி, வெற்றி கிடைக்கும். புனித யாத்திரைகள் செல்வதற்காக திட்டமிடுவீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 8 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஊதா நிறமும் இருக்கும்.

விருச்சிகம்
புதிய நபர்களிடம் பேசுகின்ற பொழுது, கொஞசம் கவனம் தேவை. குடும்ப உறுப்பினர்களுடன் கேளிக்கைகளில் ஈடுபட்டு மனம் மகிழ்ச்சி அடைவீர்கள். உங்களுடைய கூட்டாளிகளிடம் கொஞ்சம் அனுசரித்துச் செல்லுங்கள். பொன், பொருள் சேர்க்கைகள் உண்டாகும். சிறிய தூரப் பயணங்களா் மாற்றங்கள் உண்டாகும். இன்று உங்களுஐடய அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட எண்ணாக எ்ண 6 ம் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

தனுசு
உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றங்கள் உண்டாகும். வசதி, வாய்ப்புகளால் மனம் மகிழ்ச்சி அடைவீர்கள். உங்களுக்கான புதிய இலகககுகளை நிர்ணயம் செய்வீர்குள். பொருளாதாரத் மேம்படுத்துவதற்காகக் சிந்திக்க ஆரம்பிப்பீர்கள். பணிபுரியும் இடங்களில் உங்களின் மீதான நம்பிக்கை அதிகரிக்கத் தொடங்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சந்தன வெள்ளை நிறமும் இருக்கும்.

மகரம்
புதிய பயிற்சிகளை தொழிலுக்கான முயுற்சி செய்வீர்கள். நீங்கள் செய்யும் அறப் பணிகளால் உங்களுக்கு வெற்றி உண்டாகும். உயர் பதவிகளில் இருப்பவர்குளிடம் இருந்து உங்களுக்குச் சாதகமான செய்திகள் கிடைக்கும். ஞான உபதேசங்களால் மனதுக்குள் இருந்து வந்த குழப்பங்கள் தீரும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 8 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இள நீலநிறமும் இருக்கும்.

கும்பம்
வழக்குகளில் உங்களுக்கு வெற்றி கிடைக்கப் போகிறது. சமூக சேவை புரிகின்றவர்களுக்கு பெரும் புகழ் உண்டாகும். மனதில் கொஞ்சம் தன்னம்பிக்கையுடன் செயல்படத் தொடங்குவீர்கள். கலைஞர்களுக்கான திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையப் போகிறது. கொடுக்கல் வாங்கலில் கொஞ்சம் நிதானத்துடன் நடந்து கொள்ளுங்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக தென்மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளம் பச்சை நிறமும் இருக்கும்.

மீனம்
வீட்டி்ல உள்ள கணவன் மனைவிக்கு இடையே புரிதலும் நெருக்கமும் அதிகரிக்கும். தொழில் சம்பந்தமான பழைய கடன்களை வசூலிக்கப் புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். பெரிய பெரிய மகான்களின் தரிசனங்கள் கிடைக்கும். தொழில் சார்ந்த துறைகளில் உங்களுடைய மதிப்புகள் அதிகரிக்கத் தொடங்கும். உங்களுடைய உடன் பிறந்த சகோதரர்கள் மூலம் உங்களுக்கு ஆதாயங்கள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பச்சை நிறமும் இருக்கும்.



Click it and Unblock the Notifications