Just In
- 37 min ago
இன்னைக்கு இந்த மூன்று ராசிக்காரங்களுக்கு பெரிய ஆபத்து காத்திருக்கு... உங்க ராசியும் இதுல இருக்கா?
- 13 hrs ago
2019ஆம் ஆண்டு ட்விட்டரை தெறிக்கவிட்ட ஹேஷ்டேக்குள்… பிகிலுக்கு எத்தனையாவது இடம் தெரியுமா?
- 15 hrs ago
தண்ணீரை இப்படி குடிப்பது உங்களின் ஆயுளை இருமடங்கு அதிகரிக்குமாம் தெரியுமா?
- 15 hrs ago
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்னும் சகாப்தம்: தெரிந்ததும்...தெரியாததும்…!
Don't Miss
- News
என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிக பெருமக்களுக்கு.. ரஜினி நெகிழ்ச்சி
- Movies
ரசிகர்களை காக்க வைத்து வந்த கடைசி விவசாயி டிரைலர்.. கடைசி விவசாயி யார் தெரியுமா?
- Finance
உள் நாட்டு விமானப் பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு..!
- Sports
யாருப்பா அது? யுவராஜ் சிங்கை அடுத்து கூகுளில் அதிகம் தேடப்பட்ட இளம் இந்திய கிரிக்கெட் வீரர்!
- Automobiles
மெர்சிடிஸ்-பென்ஸ் கார்களின் விலை அடுத்த ஆண்டு முதல் அதிகரிப்பு...
- Education
TNPSC: தேர்தலுக்காக ஒத்திவைக்கப்பட்ட டிஎன்பிஎஸ்சி தேர்வுகள்!! விபரங்கள் உள்ளே..!
- Technology
2020 இலக்கு: வெளியாகும் விவோ அட்டகாச ஸ்மார்ட் போன்கள் பட்டியல்
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
இன்றைய அதிர்ஷ்ட ராசிகள் மூன்று பேர் யார் யாரென்று இதை பார்த்து கண்டுபிடிங்க பார்க்கலாம்...
உங்களுடைய ஆற்றலை உணர்ந்து கொண்டு செயல்பட்டால் எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும். அதுதவிர 12 ராசிகளுக்கும் இன்று எப்படி இருக்கப் போகிறது என்று பார்ப்போம்.
ஒவ்வொரு ராசிக்குமான அதிர்ஷ்ட எண், அதிர்ஷ்ட திசை, அதிர்ஷ்ட நிறம் ஆகியவற்றைத் தெரிந்து கொண்டால் பாதி பிரச்னைகள் நமக்கு நீங்கும். எந்தெந்த இடங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் முதலில் உயர்ந்து கொள்ள வேண்டும்.

மேஷம்
வெளியூருக்குச் செல்லுகின்ற வாய்ப்புகளும் அதிர்ஷ்டமும் உங்களைத் தேடி வரும். உங்களுடைய உடல் ஆரோக்கிய விஷயத்தில் கொஞ்சம் கவனம் செலுத்துவது நல்லது. அருள் தருகின்ற வேள்விகள் போன்றவற்றில் கலந்து கொள்வதன் மூலம் மனம் மகிழ்ச்சி அடைவீர்கள். நீங்கள் இதுவரை இழந்த பொருள்களை மீட்தற்கான பொருளாதார உதவிகள் உங்களுக்குக் கிடைக்கும். உங்களுடைய உயர் அதிகாரிகளுடைய நட்பு உங்களுக்குக் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளஞ்சிவப்பு நிறமும் இருக்கும்.
MOST READ: வழுக்கை விழற மாதிரி இருக்கா? அப்போ இந்த எண்ணெய் தேய்ங்க...

ரிஷபம்
கடல்வழிப் பயணங்கள் மூலம் உங்களுக்கு அனுகூலமான செய்திகள் வந்து சேரும். தொழில் சம்பந்தப்பட்ட முயற்சிகளை நீங்கள் எடுப்பதன் மூலம் உங்களுக்குப் பொருனாதார வரவு அதிகரிக்கும். கால்நடைகளின் மூலம் உங்களுக்கு அனுகூலங்கள் உண்டாகும். நண்பர்களின் மூலமாக உங்களுடைய தொழிலை அபிவிருத்தி செய்வதற்கான முயற்சியில் ஈடுபடுவீர்கள். பொது விவாதங்களில் கலந்து கொள்ளும் ஆற்றல் கொண்ட நீங்கள், நினைத்தபடி எண்ணங்கள் நிறைவேற ஆரம்பிக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக அடர் சிவப்பு நிறமும் இருக்கும்.

மிதுனம்
வீட்டில் உள்ள பெரியவர்களுடைய முழு ஆசிர்வாதமும் அனுகூலங்களும் கிடைக்கப் பெறுவீர்கள். நீண்ட தூரப் பயணங்கள் மேற்கொள்வதில் உங்களுக்கு இதுவரையில் இருந்து வந்த சிக்கல்கள் குறைய ஆரம்பிக்கும். பணியில் முக்கியப் பொறுப்புகளில் இருப்பவர்குளுக்கு மேன்மைகள் பெருகும். உங்களுடைய முயற்சிகளின் காரணமாக சேமிப்புகளை அதிகரிக்கச் செய்வீர்கள். செல்லும் இடமெல்லாம் பேரும் புகழும் வெற்றியும் கிடைக்கப் பெறுவீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளம் மஞ்சள் நிறமும் இருக்கும்.

கடகம்
எந்த வேலை செய்தாலும் அதில் கொஞ்சம் கூடுதல் கவனத்துடன் இருப்பது மிக அவசியம். வீட்டில் உள்ள குடும்ப உறுப்பினர்களின் வருகையினால் நீங்கள் பெரிதும் மனம் மகிழ்ச்சி அடைவீர்கள். நண்பர்களுடன் இணைந்து பெரும் விருந்தில் கலந்து கொள்ளும் வாய்ப்பைப் பெறுவீர்கள். புனித யாத்திரைகள் செல்வதற்கான பணிகளை மேற்கொள்ளும் வாய்ப்பு உருவாகும். வெளியூருக்குப் போகின்ற பொழுது, எச்சரிக்கையாக இருப்பது அவசியம். இன்று உங்களுக்கு அதிர்ஷ்டத்தை தரும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 4 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சாம்பல் நிறமும் இருக்கும்.

சிம்மம்
உங்களுடைய தொழிலில் நீங்கள் இழந்த பொருள்களை மீட்பதற்கு உரிய சூழல்கள் உண்டாகும். அரசு சார்ந்த விஷயங்களில் நீங்கள் எதிர்பார்த்த உதவிகளைக் கிடைக்கப் பெறுவீர்கள். பணிபுரிகின்ற இடங்களில் உங்களுக்கான செல்வாக்குகள் அதிகரிக்கும். புனித யாத்திரைகள் மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். நல்ல செய்திகள் உங்களுடைய காதுகளுக்கு வந்து சேரும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சிவப்பு நிறமும் இருக்கும்.

கன்னி
கடிதத்தின் மூலமாக உங்களுக்குச் சாதகமான செய்திகள் உங்கள் காதுகளுக்கு வந்து சேரும். ஆன்மீக ஈடுபாடு அதிகரிக்கும். இறைவழிபாட்டின் மூலம் மனம் பெரிதும் மகிழ்ச்சி அடைவீர்கள். வாகனங்களில் மேற்கொள்ளும் பயண்ஙகள் உங்களுக்கு அனுகூலமான சூழல்களை உருவாக்கும். உங்களுடைய பதவி உயர்வின் காரணமாக மனம் மகிழ்ச்சி அடைவீர்கள். வீட்டில் பொன், பொருள் சேர்க்கைகள் உண்டாகும். மனதில் உள்ள கவலைகள் குறைவதற்கான மனக்கவலைகள் குறைவதற்கான சூழல்கள் உருவாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையாகவும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமாகவும் இருக்கும்.

துலாம்
உங்களுடைய சேமிப்புகள் அதிகரிக்கத் தொடங்கும். உங்களுடைய உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்துங்கள். வேளாண்மை சம்பந்தப்பட்ட தொழில்களில் உள்ளவர்களுக்கு இருந்த தேக்கநிலைகள் கொஞ்சம் கொஞ்சமாகக் குறையும். ஆன்மீகப் பணிகளுக்கான மன நிறைவோடு பொருள் உதவி செய்வீர்கள். சொத்து சேர்க்கைகள் உங்களுக்கு உண்டாகும். பெரியோர்களுடைய ஆதரவின் காரணமாக பரம்பரை சொத்துக்களில் ஏற்பட்டு வந்த சிக்கல்க்ள குறைய ஆரம்பிக்கும்.
MOST READ: எதற்கெடுத்தாலும் பதட்டப்படுகிற ஐந்து ராசிகள் எவை? அட நீங்களும் இந்த ராசியா?

விருச்சிகம்
தொழில் சார்ந்த விஷயங்களில் நீங்கள் மேற்கொள்கின்ற புதுவிதமான யுக்திகளைப் பயன்படுத்தி சாதகமான சூழல்கள் ஏற்படும். நீங்கள் பணிபுரிகின்ற இடங்களில் உங்களுடைய சக ஊழியர்களைக் கொஞ்சம் அனுசரித்துச் செல்வது நல்லது. வீட்டை பராமரிப்பு செய்ய முற்படுவீர்கள். இறைவழிபாட்டில் ஆர்வம் கொள்வீர்கள். மனதுக்குள் தோன்றுகின்ற பலவிதமான எண்ணங்களின் மூலம் உங்களுக்குப் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

தனுசு
உங்களுக்கு மனதுக்குள் புதிய சிந்தனைகள் தோன்றி மறையும். போட்டிகளில் ஈடுபடுகின்ற பொழுது, கொஞ்சம் கூடுதல் கவனத்துடன் நடந்து கொள்ளுங்கள். நீங்கள் எதிர்பார்த்த கடன் உதவிகள் உங்களுக்குக் கிடைக்கும். தொழில் பங்குதாரர்களிடம் தேவையற்ற விவாதங்களைத் தவிர்ப்பது தான் உங்களுக்கு நல்லது. நீங்கள் திட்டமிட்ட முயற்சிகளினால் நீங்கள் எதிர்பார்த்த லாபம் உங்களுக்குக் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 8 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக நீலநிறமும் இருக்கும்.

மகரம்
உங்களுடைய பேச்சுக்களின் மூலம் நீங்கள் பெரும் லாபத்தை அடைவீர்கள். வீட்டில் உள்ள கணவன், மனைவிக்கு இடையே உள்ள உறவில் மேம்பாடும் நெருக்கமும் உண்டாகும். உங்களுடைய உறவுகளினால் உங்கள் வீட்டிலும் மகிழ்ச்சியான சூழல்கள் ஏற்படும். உங்களுடைய சம வயதினருடன் கொஞ்சம் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். தொழில் சம்பந்தப்பட்ட பயணங்களின் மூலமாக உங்களுக்கு அனுகூலமான சூழ்நிலைகள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 7 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பல வண்ண நிறங்களும் இருக்கும்.

கும்பம்
நீங்கள் மன தைரியம் மற்றும் கூடுதல் நிதானத்துடன் மனதுக்குள் நீங்கள் நினைத்த காரியங்களை வெற்றிகரமாகச் செய்து முடிப்பீர்கள். நீங்கள் எந்த வேலை செய்தாலும் அதில் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டியது அவசியம். வீட்டில் உள்ள பெரியோர்களுடைய முழு ஆதரவும் உங்களுக்குக் கிடைக்கும். விலையுயர்ந்த பொருள்களைக் கையாளுகின்ற பொழுது கொஞ்சம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். நீங்கள் எதிர்பார்த்த இடங்களில் இருந்து உங்களுக்கு நினைத்தபடி கடன் உதவிகள் உங்களுக்குக் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளம் மஞ்சள் நிறமும் இருக்கும்.
MOST READ: இனிமேல வெறும் டீக்கு பதிலா அதுல இப்படி ஒரு பட்டையை போட்டு குடிங்க... ஏன்னு தெரியுமா?

மீனம்
பெற்றோர்களின் வழியிலான உறவுகளிடம் கொஞ்சம் நிதானமாகவே நடந்து கொள்ளுங்கள். கடல்வழிப் பயணங்களின் மூலம் உங்களுக்கு லாபங்கள் உண்டாகும். பெரிய மகான்களுடைய ஆசிர்வாதங்களைக் கிடைக்கப் பெறுவீர்கள். ஆராய்ச்சி பணிகளில் ஈடுபடுகின்றவர்கள் நினைத்த முடிவு உங்களுக்குக் கிடைக்க கொஞ்சம் கால தாமதம் ஏற்படும். நண்பர்களிடத்தில் தேவையில்லாத வீண் விவாதங்களைத் தவிர்ப்பது மிக நல்லது. இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளம்பச்சை நிறமும் இருக்கும்.