Just In
- 3 hrs ago
இன்னைக்கு இந்த மூன்று ராசிக்காரங்களுக்கு பெரிய ஆபத்து காத்திருக்கு... உங்க ராசியும் இதுல இருக்கா?
- 15 hrs ago
2019ஆம் ஆண்டு ட்விட்டரை தெறிக்கவிட்ட ஹேஷ்டேக்குள்… பிகிலுக்கு எத்தனையாவது இடம் தெரியுமா?
- 17 hrs ago
தண்ணீரை இப்படி குடிப்பது உங்களின் ஆயுளை இருமடங்கு அதிகரிக்குமாம் தெரியுமா?
- 18 hrs ago
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்னும் சகாப்தம்: தெரிந்ததும்...தெரியாததும்…!
Don't Miss
- News
சமஸ்கிருதத்தில் பேசினால் சர்க்கரை நோய் வராது.. உடலில் கொழுப்பு குறையும்.. பாஜக எம்பி
- Movies
இதுக்குத்தானா...? மணிரத்னத்தின் பொன்னியின் செல்வனை உதறிய கீர்த்தி சுரேஷ்.
- Finance
உள் நாட்டு விமானப் பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு..!
- Sports
யாருப்பா அது? யுவராஜ் சிங்கை அடுத்து கூகுளில் அதிகம் தேடப்பட்ட இளம் இந்திய கிரிக்கெட் வீரர்!
- Automobiles
மெர்சிடிஸ்-பென்ஸ் கார்களின் விலை அடுத்த ஆண்டு முதல் அதிகரிப்பு...
- Education
TNPSC: தேர்தலுக்காக ஒத்திவைக்கப்பட்ட டிஎன்பிஎஸ்சி தேர்வுகள்!! விபரங்கள் உள்ளே..!
- Technology
2020 இலக்கு: வெளியாகும் விவோ அட்டகாச ஸ்மார்ட் போன்கள் பட்டியல்
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
இந்த ராசிகளுக்கு மறைமுக எதிரிகள் இருப்பார்களாம்... பார்த்து கவனமா இருங்க...
உங்களுடைய ஆற்றலை உணர்ந்து கொண்டு செயல்பட்டால் எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும். அதுதவிர 12 ராசிகளுக்கும் இன்று எப்படி இருக்கப் போகிறது என்று பார்ப்போம். ஒவ்வொரு ராசிக்குமான அதிர்ஷ்ட எண், அதிர்ஷ்ட திசை, அதிர்ஷ்ட நிறம் ஆகியவற்றைத் தெரிநது கொண்டால் பாதி பிரச்னைகள் நமக்கு நீங்கும். எந்தெந்த இடங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் முதலில் உயர்ந்து கொள்ள வேண்டும்.

மேஷம்
வேலை தேடிக் கொண்டிருக்கிறவர்களுக்கு நீங்கள் எதிர்பார்த்தபடியே சாதகமான பலன்கள் உண்டாகும். ஆன்மீகத்தில் உங்களுக்கான எண்ணங்கள் மேலோங்குவதை உணர்வீர்கள். உங்களுடன் பிறந்தவர்கள் மூலம் உங்களுக்குச் சாதகமான சூழ்நிலைகள் உருவாகும். முக்கிய உத்தியோகத்தில் உங்களுக்கு திருப்தியான சூழல்கள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக வடமேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

ரிஷபம்
வீட்டில் பிள்ளைகளுடைய தேவைகளைப் புரிந்து கொண்டு அதற்கு ஏற்ப அதை நிவர்த்தி செய்து கொடுப்பீர்கள். உங்களுடைய பரம்பரை சொத்துக்களின் மூலம் உங்களுக்கு ஏற்பட்ட இன்னல்கள் கொஞ்சம் கொஞ்சமாக நீங்கும். வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்த லாங்கள் உங்களுக்கு உண்டாகும். நீங்கள் பணிபுரிகின்ற இடங்களில் உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கத் தொடங்கும். புதிய நபர்களின் மூலம் உங்களுக்கு அனுகூலமான சூழல்கள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட திசையாக தென்கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளமஞ்சள் நிறமும் இருக்கும்.

மிதுனம்
இதுவரையிலும் தடைபட்டு வந்த காரியங்கள் யாவும் சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். பயணங்களின் மூலமாக உங்களுக்குப் பெரும் அனுகூலங்கள் உண்டாகும். வழக்குகளில் உங்களுக்குச் சாதகமான பலன்கள் உங்களுக்குக் கிடைக்கும். சந்தேக உணர்வின் காரணமாக மனக்கசப்பு ஏற்படலாம். பதவி உணர்வுக்கான பெரும் வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 8 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பச்சை நிறமும் இருக்கும்.

கடகம்
வியாபாரத்தில் நீங்கள் கையாளுகின்ற பல்வேறு புதிய யுக்திகளால் உங்களுக்கு லாபம் அதிகரிக்கும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் கோபப்படாமல் கொஞ்சம் அமைதியைக் கடைபிடிப்பது நல்லது. பொது காரியங்களில் ஈடுபடுகின்றவர்கள் தங்களுக்கு சாதகமான வாய்ப்புகளைப் பெறுவார்கள். வேலை செய்கின்ற இடங்களில் உங்களுக்கான பொறுப்புகள் உயர ஆரம்பிக்கும். பழைய நண்பர்களை வெகு நாட்களுக்குப் பிறகு மீண்டும் சந்தித்து மகிழ்ச்சி அடைவீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

சிம்மம்
வீட்டில் உள்ள கணவன், மனைவிக்கு இடையே சின்ன சின்ன கருத்து வேறுபாடுகளையும் மறந்து கொஞ்சம் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். இணையதளம் சம்பந்தப்பட்ட பணிகளில் உள்ளவர்களுக்கு தங்களுக்கான பொறுப்புகள் அதிகரிக்கத் தொடங்கும். சந்திராஷ்டம தினம் நடைபெற்றுக் கொண்டிருப்பதால் பயணங்களில் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். வீட்டில் உள்ள பெரியோர்களின் ஆலோசனைகளைப் பெற்று மனதுக்கு மகிழ்ச்சியை அடைவீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக அடர் சிவப்பு நிறமும் இருக்கும்.
MOST READ: இனிமேல் அன்னாசி பழத்தோலை தூக்கி வீசாதீங்க... அது எந்தெந்த நோயை தீர்க்கும் தெரியுமா?

கன்னி
உங்களுடைய உயர் அதிகாரிகளால் உங்களுக்கு அனுகூலமான பலன்கள் உண்டாகும். வீட்டில் வந்து சேரும் சுப நிகழ்ச்சிகளால் பெரும் மகிழ்ச்சி உண்டாகும். போட்டி போன்ற விஷயங்களில் நீங்கள் எதிர்பார்த்த வெற்றி உங்களுக்குக் கிடைக்கப் பெறுவீர்கள். தொழிலில் உங்களுடைய பங்கு தாரர்களின் மூலம் உங்களுக்கு லாபம் உண்டாகும். சர்வதேசம் சம்பந்தப்பட்ட வணிகத்தில் நீங்கள் எதிர்பார்த்த மேன்மை நிறை உங்களுக்கு உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 7 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பிங்க் நிறமும் இருக்கும்.

துலாம்
பெற்றோர்கள் வழி உறவினர்களிடம் கொஞ்சம் கனிவுடனும் அனுசரணையோடும் நடந்து கொள்ளுங்கள். நீங்கள் செய்கின்ற காரியங்கள் எதுவாகினும் அதில் கொஞ்சம் அமைதியுடன் செயல்படுங்கள். அடுத்தவர்களுக்கு உதவுகின்ற பொழுது, கொஞ்சம் சிந்தித்துச் செயல்படுங்கள். மனதில் சோர்வு உண்டாகும். உங்களுடன் பணிபுரிகின்றவர்களிடம் உங்களுடைய மரியாதை கூடிக்கொண்டே போகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 8 ம் அதிர்ஷ்ட திசையாக தென்மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பழுப்பு நிறமும் இருக்கும்.

விருச்சிகம்
இணையதளம் சம்பந்தப்பட்ட பணிகளில் இருக்கின்றவர்களுக்கு கொஞ்சம் இழுபறியான சூழல்களே உருவுாகும். நீங்கள் எதிர்பார்த்த உதவிகளில் உங்களுக்குக் கொஞ்சம் காலதாமதம் ஏற்படலாம். பழைய கடன்களைத் திருப்பிச் செலுத்துவதற்கான தனவரவுகள் கிடைக்கப் பெறுவார்கள். நீங்கள் செய்யும் செயல்களின் மூலம் எந்த பதட்டமும் இன்றி கொஞ்சம் நிதானத்துடன் செயல்படுங்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக வடகிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சந்தன வெள்ளை நிறமும் இருக்கும்.

தனுசு
உங்களுடைய உடல் ஆரோக்கியத்தில் இருந்து வந்த சின்ன சின்ன இன்னல்களும் குறைந்து போகும். வீடு மற்றும் மனை சம்பந்தமான விவகாரங்களில் உங்களுக்குச் சாதகமான சூழல்கள் அமையும். மனதில் புத்துணர்ச்சியுடன் செயல்படத் துவங்குவீர்கள். உங்களுடைய எண்ணங்கள் தெளிவாகும். உங்களுக்குப் புதிய நட்புகள் உங்களுக்குக் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக தென்மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக நீல நிறமும் இருக்கும்.

மகரம்
பொன் மற்றும் பொருள், ஆடை சேர்க்கைகள் உண்டாகும். உங்களுடன் பிறந்த உடன் பிறப்புகளின் மூலம் உங்களுக்கு ஆதாயங்கள் உண்டு. கலைத்துறையில் உள்ளவர்களுக்கு அவர்குளுடைய திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சாதகமான வாய்ப்புகள் அமையப் பெறுவீர்கள். பொருளாதார மேன்மைக்கான உதவிகள் உங்களுக்குக் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட திசையாக வடமேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சிவப்பு நிறமும் இருக்கும்.

கும்பம்
தொழில் சம்பந்தமான புதிய முடிவுகளை எடுக்கத் துணிவீர்கள். உங்களுடைய திறமைக்கேற்ற அங்கீகாரம் உங்களுக்குக் கிடைக்கும். மன தைரியத்துடன் நீங்கள் நினைத்த செயலைச் செய்து முடிப்பீர்கள். உங்களுடைய உத்தியோகத்தில் இருந்து வந்த மறைமுக எதிர்ப்புகள் விலகி ஓடும். அடுத்தவர்களுடைய விமர்சனங்களைப் பொருட்படுத்தாமல் பணியில் கொஞ்சம் கவன்துடன் செயல்பட வேண்டும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஊதா நிறமும் இருக்கும்.

மீனம்
தொழிலில் சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். அரசாங்கம் சம்பந்தப்பட்ட பணிகளில் நீங்கள் எதிர்பார்த்த உங்களுக்கு ஆதரவான சூழல்கள் உண்டாகும். வேலையாட்களின் மூலமாக உங்களுக்கு அனுகூலங்கள் உண்டாகும். பயணங்களின் மூலம் மனதில் மகிழ்ச்சி ஏற்படும். உங்களுடைய உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சள் நிறமும் இருக்கும்.