Latest Updates
-
சிக்கன் வாங்குனா இந்த மாதிரி தெலங்கானா ஸ்டைலில் மசாலா செஞ்சு பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமாக இருக்கும் -
குருபகவான்-செவ்வாய் அரிய சேர்க்கையால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தென்னிந்தியாவின் சுல்தான் என்று அழைக்கப்பட்ட வலிமையான அரசர் யார் தெரியுமா? -
மட்டன் வாங்குனா.. இப்படி ஒருவாட்டி கிராமத்து ஸ்டைலில் செஞ்சு சாப்பிடுங்க.. தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 21 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப சந்தோஷமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (21 June 2026-27 June 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது..! -
உங்க ஸ்கின் டைப் சொல்லுங்க.. அரிசி மாவு வெச்சு எப்படி ஃபேஸ் பேக் போடுறது-ன்னு சொல்றோம்.. -
சர்க்கரைவள்ளிக் கிழங்கு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
Father's Day 2026:இந்த 4 ராசிக்காரங்க சிறந்த தந்தையாக இருப்பதோடு, பிள்ளைகளுக்கு ரோல்மாடலாகவும் இருப்பாங்களாம்! -
முட்டைக்கோஸை இப்படி ஒருடைம் கூட்டு செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க...
இந்த மூன்று ராசிக்காரர்களுக்கும் தான் இன்னைக்கு நினைச்சதெல்லாம் கிடைக்குமாம்?
உங்களுடைய ஆற்றலை உணர்ந்து கொண்டு செயல்பட்டால் எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும். அதுதவிர 12 ராசிகளுக்கும் இன்று எப்படி இருக்கப் போகிறது என்று பார்ப்போம்.
உங்களுடைய ஆற்றலை உணர்ந்து கொண்டு செயல்பட்டால் எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும். அதுதவிர 12 ராசிகளுக்கும் இன்று எப்படி இருக்கப் போகிறது என்று பார்ப்போம்.

ஒவ்வொரு ராசிக்குமான அதிர்ஷ்ட எண், அதிர்ஷ்ட திசை, அதிர்ஷ்ட நிறம் ஆகியவற்றைத் தெரிநது கொண்டால் பாதி பிரச்னைகள் நமக்கு நீங்கும். எந்தெந்த இடங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் முதலில் உயர்ந்து கொள்ள வேண்டும்.

மேஷம்
அரசு சம்பந்தப்பட்ட காரியங்களில் உங்களுக்கு இதுவரை இருந்து வந்த தடைகள் அத்தனையும் கொஞ்சம் கொஞ்சமாக நீங்க ஆரம்பிக்கும். உங்கள் உடன் பிறந்தவர்களின் மூலம் உங்களுக்கு அனுகூலமான பலன்கள் உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் உங்களுடன் பணிபுரிகின்ற சக ஊழியர்களிடம் உங்களுடைய மதிப்பும் மரியாதையும் அதிகரித்துக் கொண்டே போகும். உங்களுடைய உயர் அதிகாரிகளிடம் தேவையில்லாமல் வீண் விவாதங்கள் செய்வதைத் தவிர்ப்பது நல்லது. இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக வடமேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெளிர் நீலநிறமும் இருக்கும்.

ரிஷபம்
உங்களுடைய வீட்டில் உள்ளவர்களின் மூலம் உங்களுக்கு அனுகூலமான பலன்கள் ஏற்படும். சொந்த தொழில் புரிகின்றவர்களுக்கு தொழிலில் நிறைய புதிய மாற்றங்களைச் செய்யத் துணிவீர்கள். முக்கிய உத்தியோகத்தில் இருக்கின்றவர்கள் உங்களுடைய வேலையில் உங்களுக்குச் சாதகமான நிலையை அடைவீர்கள். மனதுக்குள் தேங்கியிருந்த கவலைகள் கொஞ்சம் கொஞ்சமாக விலக ஆரம்பிக்கும். தேவையற்ற வீண் செலவுகளைக் குறைத்துக் கொண்டு உங்களுடைய சேமிப்பை அதிகரிக்கத் தொடங்குங்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

மிதுனம்
மிக எளிதாக செய்து விடலாம் என்று நீங்கள் இதுவரையிலும் நினைத்துக் கொண்டிருந்த காரியங்களை இப்போதும் மிக தாமதமாகவே செய்து முடிப்பீர்கள். நண்பர்களுக்கு இடையே இருக்கின்ற சின்ன சின்ன கருத்து வேறுபாடுகள் நேர்ந்து விடும். உங்களுடைய பரம்பரை சொத்துக்களின் மூலம் உங்களுக்குத் தேவையில்லாத வீண் விரயச் செலவுகள் உண்டாகும். யாரிடமும் தேவையில்லாத வீண் வாக்குவாதங்கள் செய்வதைத் தவிர்த்து விடுங்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 8 ம் அதிர்ஷ்ட திசையாக தென்கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பச்சை நிறமும் இருக்கும்.

கடகம்
உங்களுக்கு இறைவழிபாட்டிலும் ஆன்மீகத்திலும் அதிக நாட்டம் ஏற்படும். நீங்கள் செய்கின்ற வேலையில் கொஞ்சம் கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது. உங்களுடைய தொழில் கூட்டாளிகளால் நீங்கள் எதிர்பார்த்த காரியங்கள் ஒவ்வொன்றாக நிறைவேற ஆரம்பிக்கும். உங்களுடைய தொழிலில் உங்களுக்கு நிறைய புதிய நபர்களுடைய அறிமுகங்கள் கிடைக்கும். முக்கிய உத்தியோகத்தில் இருப்பவர்கள் உடன் பணிபுரிகின்ற சக ஊழியர்களுடன் கொஞ்சம் நிதானமாக இருக்கக் கற்றுக் கொள்ளுங்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சள் நிறமும் இருக்கும்.

சிம்மம்
வீட்டில் உள்ளவர்களுடைய தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். உங்களுடைய மனதுக்குள் இருந்து வந்த குழப்பங்கள் தீர்ந்து போகும். வீடு மற்றும் மனை விருத்திக்கான செயல் திட்டங்களின் மூலம் உங்களுக்கு சாதகமான சூழல்களை உருவாக்கிக் கொள்வீர்கள். நீங்கள் எதிர்பார்க்காத எந்தவிதமான சுப செய்திகளாலும் தேவையில்லாத வீண் விரயங்கள் உண்டாகும். உங்களுடைய முயற்சிகளுக்கு ஏற்றபடி உங்களுக்குப் பாராட்டுக்கள் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பிங்க் நிறமும் இருக்கும்.

கன்னி
முக்கிய உத்தியோகத்தில் உள்ளவர்கள் தங்களுடைய பதவியில் உயர்வு பெறுவதற்கான முயற்சி பலிக்கும். முக்கியமான தலைமைப் பொறுப்பில் இருக்கின்றவர்களுக்கு அனுகூலமான நாளாக இமையும். திருமணம் சம்பந்தப்பட்ட பேச்சு வார்த்தைகள் உங்களுக்குக் கைகூடி வரும். வியாபார ரீதியில் உங்களுக்கு இருக்கின்ற போட்டிகளைச் சமாளித்து மேல் எழுந்து வருவீர்கள். அடுத்தவர்களுக்கு உதவுகின்ற பொழுது, கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 4 ம் அதிர்ஷ்ட திசையாக தென்மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக நீலநிறமும் இருக்கும்.

துலாம்
தொழிலில் இதுவரை இருந்த நீண்ட நாள் பிரச்சினைகளுக்குத் தீர்வு உண்டாகும். உங்களுடைய குடும்பத்தில் கொஞ்சம் கூடுதல் கலகலப்பான சூழல்கள் உங்களுக்குத் தான் உண்டாகும். தொழிலில் உங்களுக்குப் புதிய நபர்களுடைய அறிமுகங்கள் உங்களுக்குக் கிடைக்கும். பொது காரியங்களில் ஈடுபடுகின்றவர்களுக்கு உங்களுக்கான சாதகமான சூழல்கள் உருவாகும். உங்களுடைய நண்பர்களுடன் விருந்து போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மகிழ்ச்சியும் குதூகலமும் அடைவீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட திசையாக வடகிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பச்சை நிறமும் இருக்கும்.

விருச்சிகம்
நீங்கள் வேலை செய்கின்ற இடங்களில் உங்கள் மீதான நம்பிக்கையும் மதிப்பும் அதிகரிக்கும். உயர் கல்வி பயில்கின்ற மாணவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் உண்டாகும். பெற்றோருடைய உடல் நலத்தில் இருந்து வந்த கஷ்டங்கள் குறைய ஆரம்பிக்கும். உங்களுடன் பிறந்த சகோதரர்களுக்கு சாதகமான பலன்கள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட திசையாக வடகிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பிங்க் நிறமும் இருக்கும்.

தனுசு
வீட்டில் இருக்கின்ற குழந்தைகளின் துறுதுறு சுறுசுறுப்பான செயல்பாடுகளினால் உங்களுக்கு மகிழ்ச்சியான சூழல்கள் உண்டாகும். நீங்கள் நினைத்த காரியங்களை சின்ன சின்ன தடைகளுக்குப் பிறகு செய்து முடிப்பீர்கள். பயணங்களின் மூலம் உங்களுக்கு லாபங்கள் உண்டாகும். வீடு மற்றும் மனை சம்பந்தப்பட்ட பிரச்சினைகளினால் உங்களுக்குச் சுமூகமான முடிவுகள் உண்டாகும். வீட்டில் உள்ள பெரியோர்களிடம் கொஞ்சம் கூடுதல் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக காவி நிறமும் இருக்கும்.

மகரம்
உங்களுடைய புதிய இலக்குகளை நிர்ணயம் செய்து அதற்கேற்ப உங்களுடைய முயற்சிகளைச் செய்வீர்கள். நீங்கள் எடுக்கின்ற முக்கிய முடிவுகளுக்குப் பெரியோர்களுடைய ஆசிர்வாதம் உங்களுக்குக் கிடைக்கும். குடும்பத்தில் பொருளாதார முன்னேற்றம் உண்டாகும். புதிய நபர்களின் மூலமாக உங்களுக்கு அனுகூலமான வாய்ப்புகள் உங்களுக்கு உண்டாகும். உங்களுடைய வியாபாரத்தில் உங்களுக்கான புதிய தொழில் நுணுக்கங்களைக் கற்றுக் கொள்வீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 4 ம் அதிர்ஷ்ட திசையாக தென்மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஊதா நிறமும் இருக்கும்.

கும்பம்
கணவன் மனைவிக்கு இடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி, அன்பும் நெருக்கமும் ஒற்றுமையும் அதிகரிக்கச் செய்யும். உங்களுடைய வெகு நாளைய நண்பர்களைக் கண்டு மனம் மகிழ்ச்சி அடைவீர்கள். நீங்கள் எதிர்பார்த்த கடன் வாய்ப்புகள், தொழில் வாய்ப்புகள் உங்களுக்குச் சாதகமாக இருக்கும். வெளிநாட்டுக்குப் பயணங்கள் மேற்கொள்வதால் உங்களுக்கு அனுகூலமான சூழல்கள் உருவாகும். தொழிலில் உங்களுக்குப் பங்காளிகளின் முழு உதவியும் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 7 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமும் இருக்கும்.

மீனம்
உங்களுடைய உடல் ஆரோக்கியத்தில் இருந்து வந்த சிறுசிறு பிரச்னைகள் நீங்கி முன்னேற்றம் அடைவீர்கள். பெரியவர்களின் ஆலோசனைகள் கிடைக்கும். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு சுமூகமான தீர்வை எட்டுவீர்கள். உங்களுடைய உழைப்புக்கேற்ற முன்னேற்றம் நிச்சயம் உண்டாகும்.அரசு சம்பந்தப்பட்ட தாமதமாகி வந்த பணிகள் விரைவில் முடியும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 4 ம் அதிர்ஷ்ட நிறமாக காவி நிறமும் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் இருக்கும்.



Click it and Unblock the Notifications